கமல் ஹாசனுக்கே தெரியவில்லையா ?

சகிப்புத்தன்மை குறைந்து வருவதல் போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அறிவுப்பூர்வமாகத்தான் தோற்கடிக்க வேண்டும்  - செய்தி.

கமல் திருப்பித் தருவில்லை என்பதிலெல்லாம் வருத்தமில்லை. அவர் திருப்பித் தந்திருந்தால் அது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கும் என்பது மட்டும் உண்மை. உண்மையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்காத, அலட்சியமான போக்கிலேயே இருக்கிறது அவரது பதில். பாவம் அவர் மட்டும் என்ன செய்வார். அவருக்கே கருத்து சுதந்திரம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவரது படங்களில் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்வதற்காக நம்பிக்கையாளர்களிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை எந்தளவு குரூரமாக எள்ளப்படுகிறார். அதுவும் கருத்து சுதந்திரம் அற்ற தன்மை, பிறருடைய பண்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத, தெரியாத அற்பர்களின் சகிப்பின்மைதான். அதன் வேறுவடிவம்தான் இது. இதை எப்படி கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிப்பது ?

சரி விடயத்திற்கு வருவோம். கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிக்க வேண்டும் என்கிறார். எப்படி அறிவுப்பூர்வமகாத் தோற்கடிப்பது? எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பது எவ்வளவு அறிவுப்பூர்வமான செயல். இப்படித் திருப்பி அளித்ததன் மூலம் தாங்கள் உழைத்துப் பெற்ற பெறுமதியை தானே இழக்கத் துணிவது பிறர் துன்பம் கண்டு வெதும்பி தன் இயலாமையைக் காட்டக் கிடைத்த ஒரே ஜனநாயக, அறிவுப்பூர்வமான வழிதானே இந்த விருதைத் திருப்பிக் கொடுத்தல். இது அறிவுப்பூர்வமான செயலன்றி வேறென்ன ஆயுதப் பூர்வமான செயலா ?

இதைப் புரியாத ஓநாய்க் கூட்டம் எழுத்தாளர்களைக் கொக்காணி காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் ராவணன் சீதையத் தூக்கிச் சென்றபோதே திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற ரீதியில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதையே கமலும் செய்கிறார். கமலுக்குத்தான் இந்தியா என்றால் ரொம்பவும் பிடிக்குமே !! இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைக் கூடவா அறியாமல் இருக்கிறார் ?

இவரது முன்னாள் துணைவரின் படம் ஃபர்ஜானியா ஏன் தடை செய்யப்பட்டது ?

இவரது நண்பர் ஷாருக்கான் கமல் தற்போது சந்தித்து விட்டு வந்தாரே தாக்கரேவின் புதல்வர், அவர்களின் கூட்டத்தினரால் எவ்வாறெல்லாம் ஏசப்படுகிறார் ?  உதாரணத்திற்கு இப்போதும் கூட ஒன்று

ஏன் கமல்ஹாசனுக்குத் தெரியாதா, தான் இயக்கிய முதல் படமான ஹேராமிலேயே , ஏணி மேல் ஏறி முஸ்லிம்களுக்காக இந்துக்களை துப்பாக்கியால் சுட்ட சாகேத் ராமன் கமல்தானே.

அவ்வை சண்முகியில் மாட்டை வெட்டுகிறவனையா நம்மா ஆத்துக்கு சமயக்காரன் என்று கேட்ட மாமனாரிடம், நீங்களும் அதே மாட்டை வெட்டித்தான் தோலை எக்ஸ்போர்ட் பண்றேள் என்ற கேட்ட பாண்டியனும் கமல்தானே ?

கமலுக்கு இதெல்லாம் தெரியாதா ?. ஓ இப்போதுதான் கமல் "உன்னைப் போல் ஒருவன்" என்றாகி "விஸ்வரூபம்" எடுத்துவிட்டார் என்கிறீர்களா ?? சரிதான். 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அடடே மதி மீண்டும் அசத்தல்


தினமணியின் கேலிச்சித்திர ஓவியர் அடடே மதி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள முதல் பக்க கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். ஏதோ ஒரு காங்கிரஸ் காரன் பேசுவதைப் போன்று வரைந்துள்ளார். சும்மா எதற்கெடுத்தாலும் இந்துத்துவா இந்துத்துவா என்று கத்துகிறார்களாம். நக்கலடிக்கிறார் அடடே மதி. காங்கிரஸ் காரர்கள் மட்டுமா கத்துகிறார்கள், இடது சாரிகள் வலது சாரிகள் என எல்லா சாரிகளும்தானே கத்துகிறார்கள் புலம்புகிறார்கள். இந்த நக்கலின் மூலம் நடப்பது இந்துத்துவா ஆட்சி இல்லை என்று சமாளிக்கிறாராம்.


இவர் நேற்றைக்கு வரைந்த கேலிச்சித்திரத்தைப் பார்க்கலாம். இது தினமணியின் நடுப்பக்கத்தில் வந்தது. வழக்கமாக முதல் பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்தில்தான் நீண்ட வசனம் இருக்கும். நடுப்பக்கத்தில் படமே ஒரு கருத்துச் சொல்வது போல் இருக்கும். இப்போது நடுப்பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்திலும் ஒரு நீண்ட வசனத்தை புகுத்தியுள்ளார். என்ன செய்ய ? கேலிச்சித்திரத்திலேயே கருத்துச் சொல்லும் அளவிற்கு மதிக்கு மதி நுட்பம் போதவில்லை போலும். தின மாடு என்ற நாளிதழ் வருமளவிற்கு நாடே மாட்டைப் பற்றி விவாதிக்கிறதாம். இந்தப் படத்தில் மட்டும் ஒரு சராசரிக் குடிமகனைப் போல் அலுத்துக் கொள்கிறார். ஏன் உலகத்திலேயே மாட்டிறைச்சி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கு இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று ஏகத்துக்கும் ரகளை செய்து, கொலை செய்து அசிங்கப்பட்டு நிற்கும் RSS பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார். மாட்டுக்கறி விற்கும் பாஜக அரசியல்வாதியாலேயே மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டு நாடே காறித்துப்பிய போதும், இரண்டு பேர் சண்டையை வேடிக்கை பார்க்கும் வழிப்போக்கனாக மாறி அசத்துகிறார்  அடடே மதி. எப்படிப் பேசுவார் அவருக்கு பிடித்த இயக்கத்தைப் பற்றி அவரே எப்படி விமர்சிப்பார் என்கிறீர்களா ? மறைமுகமான மாட்டுக்கறி எதிர்ப்பு, மறைமுகமான மோடி விமர்சன எதிர்ப்பு, மறைமுகமான இந்தித் திணிப்பு ஆதரவு என்று அனைத்தும் பாஜகவிற்கு மறைமுகமான ஆதரவு தரும் தேன்தடவிய விசக் கருத்துக்களையே கட்டுரைகளாக நடுப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது தினமணி.
அடுத்தது அப்துல் கலாம் பற்றிப் பார்ப்போம். அப்துல் கலாம் மறைவின்போது அடடே மதி வெளியிட்ட கருத்து மிகவும் பிரபலமானது.  ஒரு கடையடைப்பு இல்ல, கல்வீச்சு இல்ல, சாலை மறியல் இல்ல அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததை பெருமைப்படுத்திப் போட்டிருந்தார். எப்போதும் இல்லாதவகையில் தினமணியில் ஒரு நாள் அப்துல் கலாம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். அதே போல் அப்துல் கலாமின் பிறந்த நாளின் போதும் ஒரு சிறந்த கருத்து வெளியிட்டார். அதுவும் பெரும்பான்மையினரால் ஏற்குமளவிற்கு இருந்தது. அப்பேர்ப்பட்ட அப்துல் கலாமின் ரசிகரான பக்தரான அடடே மதி அப்துல் கலாமிற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பொங்கியது இவ்வளவுதான். ஆயிரம் இருந்தாலும் அப்துல் கலாம் இல்லையா என்று நினைக்காதீர்கள். அப்துல் கலாமாகவே இருந்தாலும் பிறப்பால் அவர் முஸ்லிம் இல்லையா ? என்று கேட்காமல் கேட்கிறது பாஜக அரசு. அதற்குக் கோபப்பட வேண்டிய மதி, அந்த நிலையில் கூட பாஜகவின் மதவெறியைப் பற்றிப் பேசாமல் ஜாதிக் கட்சித் தலைவர் என்று ரிவர்ஸ்கியர் போடுகிறார். இதே காங்கிரஸ் செய்திருந்தால் பேயாட்டம் போட்டிருப்பார். ஸ்டாலின் குறித்த மீம்ஸ் வரை சமூக நிகழ்வுகளின் அப்டேட் ஆக இருக்கும் அடடே மதி ராகுல், கருணாநிதி, கெஜ்ரிவால் போன்ற பாஜக அல்லாத தலைவர்கள், கட்சிகளை பெயர் சொல்லியே நக்கலடிப்பார். ஆனால் பாஜகவை மட்டும் பெயரையே சொல்ல மாட்டார். மோடியின் பெயரை சொல்லி கேலிச் சித்திரம் வரைந்தாலும் மக்கள் மோடியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைப் போலவே வரைவார். நாடே மோடியை மீம்ஸ்களில் வெளிநாட்டுப் பிரதமர் என்று கிண்டலடிப்பதையெல்லாம் அவர் அறியாமலா இருப்பார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மறைக்கவே, அப்துல் கலாமை புகழ்ந்தார்கள், மோடியை அவருடன் ஒட்ட வைத்து இணையதளங்களில் வருங்காலா பிரதமரும், வருங்கால ஜனாதிபதியும் என்று ஆரம்பித்தார்கள். அப்துல் கலாமைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயரை வைத்தார்கள். அப்துல் கலாம் வேலை முடிந்ததும் கலாம் வசித்த வீட்டை, ஒரு சுற்றுலாத் துறை அமைச்சருக்கு ஒதுக்கிவிட்டு, அப்துல் கலாம் பயன்படுத்திய பொருட்களை விமானத்தின் மூலமாக அப்துல் கலாமின் சகோதரரிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். அந்த சுற்றுலாத்துறை அமைச்சர் யார் தெரியுமா ? மகேஸ் சர்மா, அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டவர், அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும் "தேசபக்தர்" என்று வெறியைக் கக்கியவர். முஸ்லிமாக இருந்தாலும் தேசபக்தனாக இருப்பவர் என்பது எவ்வளவு பெருமை இல்லையா ?  எத்தனை தேசவிரோத செயல்களைச் செய்தாலும் இந்துவாக இருந்தாலே போதும், தேசபக்தன்தான். இப்பேர்ப்பட்ட ஆளுக்குத்தான் அப்துல் கலாமின் இல்லம். இவ்வளவுதான் இவர்களின் இலட்சணம் எல்லாம். பாஜகவின் தீவிர ஆதரவு நாளிதழான தினமணி இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறது. 

மகேஸ் ஷர்மா
என்ன செய்வது தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் சரி அடடே மதியும் சரி. காந்தியவாதிகளாக இருக்கிறார்கள், ஆனால் கோட்ஸே கட்சியைத்தான் ஆதரிக்கிறார்கள். பிறகெங்கே இருக்கும் நடுநிலையும் நேர்கொண்ட பார்வையும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழகத்தில் மதவெறியர்களை வளர்த்து விடும் ஊடகங்கள்



நேற்று நடந்த தந்தி டிவி விவாதத்தைப் பார்த்தபின்பு எனக்கு இருந்த ஐயம் பல மடங்கு உறுதியாகிவிட்டது. இந்த ஒரு நிகழ்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது போல என்று சொல்லலாம். 

எந்த விவாதமென்றாலு பாஜகவைச் சேர்ந்த இருவரோ ஒருவரோ வந்து விடுகிறார்கள். இல்லையென்றால் இந்து இயக்கம் என்ற பெயரில் ஏதாவது ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர் ஒருவர் வந்து அமர்ந்து கொள்கிறார்கள்.
கொஞ்சம் கருத்து நிறைய சத்தம் என்பதே இவர்கள் கொள்கை. ஆனால் கடைசி வரையில் விவாதத்தின் மையப்பொருள் அல்லது கேள்விக்கு இவர்களிடம் பதில் இருக்காது. இதற்கு முன்னர் நடந்த ஒரு விவாதத்தில் எழுத்தாளர் ஞாநியிடம் ஒரு இந்து மதவெறியர் முகத்தில் கரியைப் பூசுவதாக மருட்டினார். அதன் பிறகு ஞாநி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்காவிட்டால் இனிமேல் விவாதத்தில் பங்கேற்க இயலாது என்று பதிந்தார்.

நேற்று ஞாநி, இன்று மனுஷ்ய புத்திரன். இந்த விவாத நிகழ்ச்சிகளில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், நீயா நானா நிகழ்ச்சியின் பாணியில் ஒரு விடயம் தெளிவாக இருந்தாலும் அதை வேண்டுமென்றே குழப்பியடிப்பதற்கு ஒரு மொன்னைத்தனமான கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்பது, இல்லையென்றால் அது சரியா இது சரியா என்று எதுகை மோனையாகக் கேட்டு விவாதத்தினிடையே மாற்றுக் கருத்தாளர்களை மோத விட்டு தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வது இந்தத் தொலைக்காட்சிகளின் தந்திரமாக இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மன்னிக்கணும் நேரம் முடிந்து விட்டது என்று இடைமறிக்கும் நெறியாளர்கள், இடையிடையே விளம்பரங்கள், பின்பு அவசர அவசரமாக முடிவுரை எழுதுவது என்று தொடர்கிறது. நாட்டிற்குத் தேவையான ஒரு விடயம் பற்றி சில நிபுணர்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு மொத்தமே அரைமணி நேரம்தான் போலும், அதே நேரம் திரைப்படக்குப்பைகளை வணிகம் செய்வதற்கென்றே தினுசு தினுசான பெயர்களில் நிகழ்ச்சிகளை வழங்கவும், செய்திகளை வழங்கவும் இவர்கள் தவறுவதில்லை.

தாலியைப் பற்றிய விவாதம் என்றவுடனேயே புதிய தலைமுறை அலுவலகத்தில் இந்துவெறிப் பயங்கரவாதிகள் குண்டு வீசினார்கள். (இவர்களால் பயங்கரவாதிகள் என்று ஏசப்படும் முஸ்லிம்களே கூட பர்தா விவாதம் என்றபோது விஜய் டிவிக்கெதிராக ஆர்ப்பாட்டம்தான் ஜனநாயக முறையில் நடத்தினார்கள்.) இருந்தாலும் பெருந்தன்மையாக அதே பயங்கரவாதக் கருத்துக்களை ஆதரிக்கும் கூட்டத்தினரைக் கூட்டி வந்து விவாதம் நடத்துகிறார்கள் நம் ஊடக வணிகர்கள். இவர்களிடம் எந்த விதமான சமூக ஆர்வமும் இல்லை. நடக்கும் நிகழ்வுகளை மசாலா தடவி அதை ஒரு பொழுதுபோக்குச் சரக்காக மாற்றி மனிதர்களை அசை போட வைத்து மனிதாபிமான உணர்வின்றி அதை ரசிக்கவோ, சிரிக்கவோ வைப்பதுதான் இவர்களின் நோக்கம். எனவேதான், கார் மோதல் பத்துப் பேர் பலி, இன்டர்நெட்டில் நடிகையின் வீடியோ, 2 வயதுச் சிறுமி கற்பழிப்பு என்றெல்லாம் தலைப்பு வைத்து நாளிதழ்களையும் வார இதழ்களையும் விற்கிறார்கள். இந்த வகை செய்திகளில் நிபுணத்துவம் பெற்ற தந்தி நாளிதழின் காட்சி ஊடகமான தந்தி டிவியில்தான் இந்தக் கூத்து நடக்கிறது. சிவசேனா என்ற பெயரில் இயக்கம் நடத்துகிறவரையெல்லாம் கூப்பிட்டுக் கும்மியடிக்கிறார்கள். ஏன் இப்படி ? இந்த மாதிரி கிறுக்குப் பயல்கள் கத்துவதால் பலபேர் என்னவென்று சேனலை மாற்றாமல் பார்ப்பார்கள். இன்னும் சில பேர் அவர்களைப் போலவே மதவெறியனாக மாறுவார்கள் தவிர வேறு என்ன நடந்து விடப் போகிறது.

இந்த நிகழ்ச்சியில் கூட என்ன நடக்கிறது பாருங்கள். மூன்றாவதாகப் பேசிய பாஜகவின் வெங்கடேசனிடம் கொஞ்சம் இடையிடையே மறித்து தொல்லை செய்து விட்டும், மனுஷ்யபுத்திரன் பேசும் போது ஆல் அவுட் அட்டாக் செய்யும் ஹரிஹரனின் தந்திரம் பாருங்கள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முற்படும் போதும், அல்லது அந்த பதிலைப் புரிந்து கொண்ட போதும் திரும்பத் திரும்ப மொன்னையான கேள்வியைக் கேட்டு விவாதிப்பவனின் பொறுமையை சோதித்து அவனைக் கத்த வைக்கும் தந்திரம். பார்க்கும் நமக்கே பற்றிக் கொண்டு வருகிறது.

இந்த இந்துத்தவாதிகள் ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பார்கள். தாத்ரி கொலை, எழுத்தாளர் கல்புர்கி கொலை போன்ற தொடர்ந்த மதவெறிப் பயங்கரவாதக் கொலைகளைக் கண்டித்து தனது விருதுகளைத் திருப்பித் தந்து அமைதியான, அதே நேரம் மூக்குடைக்கும் விதமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இடது சாரிகள், இந்துக்களை மட்டும் எதிர்ப்பார்கள், இஸ்லாமியர்களை எதிர்ப்பதில்லை, மத்திய அரசைக் குறை சொல்வதே வாடிக்கை. இது வரை எத்தனையோ கொலை நடந்திருக்கிறது அப்போதெல்லாம் யாரும் எதுவும் செய்யவில்லை என்று லாவணி பாடிவிட்டு என்னவோ பயங்கரமாக மடக்கிவிட்டதைப் போல இறுமாப்புச் சிரிப்புடன் சாய்ந்தமர்கின்றனர். அதற்கு அவ்வப்போது வெவ்வேறு விதங்களில் எதிர்ப்பு பதியப்பட்டு வந்திருக்கிறது என்று சொல்ல முனையும் மனுஷ்யபுத்திரனை எப்படியெல்லாம் மடக்குகிறார்கள் பாருங்கள். எப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளை நாமும் வெவ்வேறு வகையில் எதிர்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். போன காங்கிரஸ் அரசையும், திமுகவையும் எப்படியெல்லாம் போட்டுத் தாக்கினோம். இந்த உத்தமசிகாமணிகளும் அதை செய்தவர்கள்தானே ?

ஏன் நாம் கேட்கலாமே ? இதுவரை RSS பயங்கரவாதிகள் பாபர் மசூதியை இடித்தார்கள், குஜராத்தில் 2 ஆயிரம் பேர்களைக் கொன்றார்கள் வேறு எதுவும் செய்யவில்லை ஏன் என்று ? அதற்கு காவி பயங்கரவாதிகள் என்ன சொல்வார்கள் ? இல்லையே நாங்கள் மசூதியை இடித்தோம் ? குஜராத்தில் இனப்படுகொலை செய்தோம் வேறு எதையும் செய்ய வில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். எப்போதும் பொதுக்கூட்டம் போட்டு முஸ்லிம்களைத் திட்டினோம், அவர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பு வரச் செய்தோம், அவர்கள் மீது பல கலவரங்கள் நடத்தினோம், மாலேகானில் குண்டு வைத்தோம், கேரளாவில் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஃபேஸ்புக், ட்விட்டரில் இன்னும் வெறுப்புப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறோம். இப்படிப் பல வகையில் படு பாதகச் செயல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து குஜ்ராத், பாபர் மசூதி மட்டுமே செய்தோம் என்று சொன்னால் எங்கள் மனம் புண்படாதா என்று கண் கலங்கிவிடுவார்கள் இல்லையா ?

அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் உளறுவதிலிருந்து, மதவெறியைத் தூண்டுவதிலிருந்து, கொலை செய்வது வரை எல்லாவற்றையும் கவனித்து வரும் எங்களை போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களை எதிர்த்தே வந்திருக்கிறோம். இப்போதும் எதிர்க்கிறோம். இன்னும் புரியும்படி சொன்னால் RSS பயங்கரவாதிகளின் பசுவதை எதிர்ப்பு, மதவெறி போன்ற கருத்துக்களின் விளைவாகத்தான் இந்தக் கொலைகள் நடக்கின்றன. இதை செய்கிறவர்கள் இந்து மதவெறிப் பயங்கரவாதிகள் என்ற போது பின் யாரை எதிர்க்க வேண்டு என்கிறார்கள். கோமாதாவைக் வதைப்பவனைக் கொலை செய்ய வேண்டும், பாகிஸ்தானுக்குத் துரத்த வேண்டும், இந்து மதத்தைப்பழிப்பவனை நாக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பகிரங்கமாகப் பேசி ஜனநாயக்த்தையே கேவலப்படுத்தும் ஆட்கள் இந்த பயங்கரவாதிகள்தான். அதனால்தான் இந்த எதிர்ப்பு. இவர்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பெயர் வைத்து சமாளிக்கும் சல்லித்தனம்தான்  இவன் முஸ்லிம் பயங்கரவாதி, இவன் இடது சாரி, இவன் கிறிஸ்தவ மிஷனரி  என்று திட்டி விட்டு பதில் சொல்லாமல் மழுப்புவார்கள். இதைத்தவிர இவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. எடுத்துக்காட்டாக தனது மதப்பெயர், அடையாளமின்றி ஒரு சம்ஸ்கிருதப் புனைப்பெயரில் இயங்கும் மனுஷ்யபுத்திரனை அப்துல் ஹமீது என்றுதான் விளிப்பார்கள் (அவர் முஸ்லிம் என்பதால்தான் இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று புரியவைக்கிறார்களாம்). பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் விளிப்பார்கள்(அவர் நாயக்க ஜாதிவெறியராம். பெரியார் என்று சொல்லப் பிடிக்கவில்லையென்றால் ஈவெரா என்று சொன்னால் போயிற்றா பின்பெதற்கு இத்தனை வன்மம்)

படாத பாடு பட்டு முக்கியும் இவர்களால் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. எனவே எல்லாவிதக் கேவலங்களையும் செய்து இங்கே காலூன்றப் பார்க்கிறார்கள். தமிழ் ஆர்வலர் தருண் விஜய் - திருக்குறள் புராணம் ஒரு உதாரணம். இதற்கு ஊடக வணிகர்கள் பக்கபலமாக நின்று ஒத்து ஊதுகிறார்கள். நாளிதழ்கள் என்று பார்த்தால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வாசகர்களைக் கொண்டிருக்கும் தினத்தந்தி. அதற்கடுத்து தினமலம் என்று அழைக்கப்படும் தினமலர். இது பாஜக ஆதரவாளர்களே வெட்கப்படுமளவிற்கு பாஜக ஆதரவு நாளிதழ். அடுத்து நடுநிலைபோர்வையில் வரும் தினமணி- அதன் ஆசிரியர் வைத்தியநாதனும் இந்துத்துவா-பாஜக ஆதரவு நாளிதழ். இதில் இந்து முன்னணிப்பிரமுகருக்கு ஆண் குழந்தை என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்து இயக்கங்களுக்கு அவ்வளவு வெளிச்சம் கொடுக்கும் நாளிதழ். இதைப்படிக்கும் வாசகர்களுக்கு இவர்கள் எந்தளவுக்கு இந்துத்துவா நஞ்சை ஊட்டியிருப்பார்கள்.

இல்லாத ஒன்றை மோடி அலை வீசுவதாகப் புரளி பரப்பிய புதிய கொலைமுறையின் மீதே குண்டு வீசினர் பயங்கரவாதிகள். கள்ளக்காதல் செய்திகளை வெளியிட்டு கல்லாக் காட்டிய தந்தி, தனது தொலைக்காட்சியில் இது போன்ற ஆட்களை வைத்து விவாதம் நடத்துகிறது. அய்யா ரங்கராஜ் பாண்டேவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இனி தமிழ்நாட்டில் இந்த பயங்கரவாதிகள் வளர்ந்து அவர்களால் விளையும் வன்முறைகளுக்கு இந்த ஊடகங்களும் முழுப்பொறுப்பாவார்கள். அப்போது நடுநிலையாக செய்திகளைச் சொல்வார்கள். கலவரத்தில் இத்தனை பேர் பலி என்று ரன்னிங்க் கமேன்ட்ரி கொடுத்து டி ஆர்பி ரேட்டிங்க் ஏற்றிக் கொண்டிருப்பார்கள்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மதவெறி என்பது ?

மதவெறி என்பது ஒருவனையும் அவன் கூட்டத்தையும் எப்படியெல்லாம் மனிதத்தன்மையற்றவனாக்கிவிடும் என்பதற்கு இது ஓர் உதாரணம்

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் சொல்லிவிடலாம்தானே இவர்கள் எந்தக் கட்சியை ஆதரிப்பவர்கள் எந்தக் கொள்கையைக் கொண்டவர்கள் என்று. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்திய விடுதலை நாளில் - இந்தியிடமிருந்து விடுதலை வேண்டி - ‪#‎StopHindiImposition‬

நேற்று இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா முழுவதும், இந்தியர் வாழும் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அதே நேரம் ட்விட்டரில்  ஹிந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துக்களைத் தாங்கிய சுட்டுரைகள்/கீச்சுகள்/ட்விட்டுகள் ‪#‎StopHindiImposition‬ என்ற ஹாஷ்டாக் மூலமாக தொடர்ந்து பகிரப்பட்டு, அது ட்விட்டர் ட்ரென்டில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் "பரபரப்பான" தலைப்பாக வைக்கப்பட்டது. பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள், வெளியிடுவதற்கென்றே சேமித்து வைக்கப்பட்டு பின்பு பகிரப்பட்டன. சிலர்  சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்தனர்.


இதன் மூலம் மக்கள் தொடர்பு ஊடகங்களில் செய்தியாகவும் எதிர்பார்த்தபடி வந்தது. இதன் மூலம் ஹிந்தி தேசிய மொழி, இந்தியா முழுவதும் ஹிந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், இதன் மூலம்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும், கலாச்சாரம் காக்கப்படும் என்றெல்லாம் உளறி வரும் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவிலிகள் முதல் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவாளிகள் வரை எல்லாரிடமும் சிறு சலனத்தை ஏற்படுத்த முடிந்தது.


இன்னொரு முக்கியமான சேதி, இந்த இத்துப்போன தமிழன்தான் இந்தி எதிர்ப்பு பேசி நாசமானான், மற்றவர்கள் (தமிழல்லாத மற்ற தென்னிந்திய மாநிலங்கள்) எல்லாம் ஹிந்தி படித்து வளமாக வாழ்கிறார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு - இந்தி ட்விட்டரில் அதிகமாக பங்கெடுத்தவர்கள் கன்னட ட்விட்டர்கள். இவர்கள்தான்  ஹிந்தித் திணிப்பால் அதிகமான பாதிப்படைந்த மாநிலக்காரர்கள். பெரும்பாலும் படித்த இளைஞர்கள்தான் இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் ட்விட்டியவர்கள்.

Promote Linguistic Equality: Hindi is Not the National language of India - மொழிச் சமத்துவத்தை பரப்பு - ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அன்று என்பதே இந்த ஃபேஸ்புக் குழுவின் பெயர். இதில் இந்தியா முழுவதுமிருந்தும் சில ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் ஹிந்தித் திணிப்பு குறித்தும், "இந்தி"ய அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்தும் விமரசனங்களும், விவாதங்களும் நடக்கின்றனர். பிராந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.  இது ஹிந்தி மொழியின் மீது வெறுப்பை வளர்ப்பதற்காகவோ, ஹிந்தி பேசும் மக்களின் மீதான இனவெறியை வளர்ப்பதற்காகவோ இல்லை. தாய்மொழியைக் காக்கும் தற்சார்பு, தற்காப்பு உணர்வின் காரணமாகவே ஹிந்தி மொழி பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் திணிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அனைத்து மொழிகளையும் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்தி பேசுவோர்க்கு மட்டும் இருக்கும் சிறப்புரிமை ஆகியவை டிவிட்டரில் வந்த கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

பஞ்சாபியர்கள் எப்படி ஹிந்தி பேசியதால் மொழியினை இழப்பார்கள் என்று விளக்கும் படம். நாமே சீக்கியர்களை ஹிந்தி பேசுவோர் என்றுதானே நினைக்கிறோம்.



ஊடகங்களில் இது குறித்து வந்த செய்திகள்

தி ஹிந்து வில் வந்த செய்தி

ஐபிஎன்லைவ் - இல் வந்த செய்தி

பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள் அனைத்தும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் (கன்னடம், தெலுங்கு, மராத்தி) வெளியிட்டவை அடங்கும். 

(படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்-லிருந்து எடுக்கப்பட்டவை)
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

எமனின் வாகனங்கள்


வளர்ந்து விட்டது மனித இனம்
வகையின்றிப் பெருகின வாகனங்கள்
வரையறையின்றிப் போகின்றன விற்பனையகங்கள்
வன்முறையை நினைவுறுத்துகின்றன வேகங்கள்
உடல்வலியின்றிக் கொண்டு சேர்க்கின்றன மனிதனை
வழியின்றி தவிக்கின்றன வழித்தடங்கள்
வழிமாறித் தவிக்கின்றன வனஇனங்கள்
வழிகொடுக்காமல் செல்கின்றன சிலஇனங்கள்
சமிக்ஞையை சட்டை செய்யாத சாகசங்கள்



எங்கெங்கு காணினும் வாகனமே
அதன் மேலே செல்லுது எல்லாக் கணமுமே
சாலையில் செல்பவனுக்கு எப்போதும் வரும் திவசம்
இருப்பினும் அணியான் தலைக்கவசம்


பேருந்துகளில் பிதுங்கித் தொங்குகின்றனர்
வல்லுந்துகள் வர்ரென்று போகின்றன
சர்ரென்று போகின்றன சரக்குந்துகள்
சீரற்றுப் போகும் சீருந்துகள்
மளமளவென்று மறையும் மகிழுந்துகள்

மாதமொரு மாதிரிகள் மன்றத்திலே
மகிழ்வுடன் அறிமுகப்படுத்தும் மாதர்கள்
மனமயக்கத்தில் வாங்கித் தள்ளும் மானிடர்கள்

நடப்பதெல்லாம் முற்காலம்
தடுக்கிவிழும் தூரமும் வண்டியிற்
கடப்பதெல்லாம் இக்காலம்

குளிர் மோர் குடித்தே முப்பாட்டன்
கலைப்பையுடன் களமாடிய காட்டினை
கண்டமாக்கி விற்றுக் காசாக்கி
குளிரூட்டி மகிழுந்து வாங்கி ஆயாசத்
தற்படமெடுக்கும் தற்காலத் தலைமுறை

அமெரிக்க தயாரிப்பை அம்மன் துணையும்
ஜப்பானின் தயாரிப்பை ஜாதிக்கொடியும்
ஜெர்மனியின் தயாரிப்பை கட்சிக் கொடியும்
அழகூட்டி உலாச் செல்லும் அழகும்
விபத்து இயற்கையின் முடிவுபோல்
எதிலும் முடியும் யாருடைய விதி
இன்று இதுதான் நீதி

நடப்பன ஊர்வன பறப்பன
உயிர்களின் உயிரில்லா உடல்களும்
சாலையில் நசுங்கிக் கிடக்கின்றன
என்னை எச்சரித்து
உச் கொட்டியபடியே
என் நாள் எந்நாளோ என்று இதயம்
உடைந்து கடந்து கொண்டிருக்கிறேன்
எல்லா இறப்புகளையும்

ஆம் எருமையில் மட்டுமல்ல
எமன் எல்லா வாகனங்களிலும்
கண்ணுக்குத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறான்





Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

போர்னோகிராஃபி - மனிதத் தன்மையற்ற செயல்

இது குறித்து  எழுத வேண்டும் என்று நெடுநாட்களாக அன்று வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். போர்ன் படங்களை ஆதரித்துப் பேசவும் என்னிடம் காரணங்கள் உண்டு. ஆனால் அது நேர்மையாகாது. என்னுடைய தேவையைப் பொறுத்து, என்னுடைய விருப்பங்களைப் பொறுத்து எனது கருத்து இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். அதனால் பிறிதொருவர் சீரழியக் காரணமாக இருப்போம் என்ற உணர்விலிருந்து சொன்னால் போர்னோகிராஃபி என்பது மனிதத் தன்மையற்ற செயலே ஆகும். ஃபேஸ்புக்கில் படித்த இரண்டு இடுகைகளை இங்கே கொடுக்கிறேன். இதில் ஒன்று போர்ன் தடை செய்யத் தேவையில்லை என்று வாதிடுகிறது எனினும் அதன் மற்ற கருத்துக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அதை இங்கே பதிகிறேன். இதை விடச் சிறப்பாக என்னால் சொல்லிவிட முடியாது. 

இடுகை ஒன்று - எழுத்தாளர் ஷோபா ஷக்தி

இந்தியாவில் 'போர்ன்' இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பனர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது. போர்ன் இணையங்களில் வெளியாகும் காட்சிகளில் இவ்வாறாகக் கடத்திக்கொண்டு வரப்படும் பெண்களே பெரிதளவில் நடிக்கவைக்கப்படுகிறார்கள். இணையங்களின் வருகையோடு போர்ன் தொழிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப கடத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகரித்துள்ளார்கள்.
சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் பண்டங்களாகக் காட்சிப்படுத்தும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றை அரசுகளால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாமலேயே இருக்கின்றது. சிறுவர் பாலியல் இணையங்களும் பல்லாயிரக்கணக்கில் புதிது புதிதாகத் தோன்றியவண்ணமேயுள்ளன.
போர்னோவில் 'அடிமைகள்', 'அடித்தல்', 'அவமானப்படுத்தல்', 'விலங்குகளோடு புணர்ச்சி' என்றெல்லாம் ஏராளம் வகைப்பாடுகளுள்ளன. சட்டவிரோதமாக அல்லது ஏமாற்றி அழைத்துவரப்படும் பெண்களும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் உண்மையாகவே பெண்கள் மீது சித்திரவதையை நடத்தி அதை இரத்தமும் பாலும் வழிய இணையங்களில் போடுகிறார்கள்.
பாலியல் விடுதிகளிலே அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மத்தியில் 'வன்முறை செக்ஸ்' குறித்த அச்சத்தைப் போக்கவும் வாடிக்கையாளரின் எந்த விருப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே என்பதைச் சிறுமிகளின் மனதில் படியச் செய்யவும் போர்ன் படங்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. இத்தகைய அடிமைச் சிறுமிகள் இருக்கும் விடுதிகளில் இந்தப் போர்னோ படங்கள் இடைவிடால் ஓடவைக்கப்படுகின்றன.
போர்னோவில் நாம் காணும் காட்சிகள் பெரிதும் மிகையானவை மற்றும் போலியானவை. இத்தகைய காட்சிகளில் வன்முறை இருப்பது பொதுவானது. இக்காட்சிகள் மெதுமெதுவாக மனித மனதில் பாலுறவு குறித்த இயல்புக்கு மாறான வன்முறைச் சித்திரத்தைப் பதிய வைக்கிறது. அது குடும்ப வன்முறையாக நீட்சியும் பெறுகிறது. போர்ன் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது மனச்சமநிலையைச் சரித்துவிடுகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இவ்வகைப் போர்னோ இணையத்தளங்கள் எல்லாமே 'Hidden camera' என்றொரு வகையை வைத்துள்ளார்கள். குளியலறைகளில், படுக்கையறைகளில், தங்குவிடுதிகளில், மசாஜ் சென்டர்களில், ஆடை அங்காடிகளில் சம்மந்தப்படவர்களிற்குத் தெரியாமலேயே எடுக்கப்படும் படங்கள் இப்பிரிவில் இணையங்களில் பதிவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் குடும்பங்களும் தூக்கிலே தொங்கியிருக்கின்றன. அவமானத்தால் உயிருடன் செத்தவர்கள் பல இலட்சம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
போர்ன் இணையத்தளங்களிற்குப் பின்பு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது போர்ன் இணையங்களைத் தடைசெய்யக்கூடாது எனச் சொல்வதில் ஏதும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய சில நிமிட காட்சியின்பத்திற்காக பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் வதைக்கப்படுவதும் மனநிலை சரிவதும் மறுபுறத்தில் மாஃபியாக்களும் இணைய முதலாளிகளும் கொழிப்பதும் எதுவிதத்திலும் நியாயமற்றதென்றே நினைக்கிறேன்.
நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.

இடுகை 2 - உமாமகேஸ்வரன் பன்னீர் செல்வம் 

ரயில் ரோடு ஓரம் மலம் கழித்த அனுபவம் இருக்கிறதா ?குறைந்தபட்சம் திறந்தவெளியில் ? பதறவேண்டாம் .சத்தியமாக nostalgia போஸ்ட்டோ , melodrama போஸ்ட்டோ இல்லை.
1.மதுரை, சென்னை போன்ற ஊர்கள், சில சிறுநகரங்களில் ரயில்ரோடு நுழையும் முன்பு சேரிகள், அதிகமாக முன்னேறாத ஊர்கள் வழியாக கடந்து வரும் . அதிகாலை வேளைகளில் அங்கே ரயில்ரோடு ஓரம் மலம் கழிக்க வரும் ஆண்கள் பெரும்பாலும் ரயில் கடக்கும்போது எவ்வித பிரச்சினையுமின்றி மலம் கழிப்பார்கள். புட்டத்தை ரயில்போகும் பாதை பக்கம் திருப்பி அமர்ந்துகொண்டால் போதுமானது. யார் பாக்கிறார்கள் என்ற கவலை எல்லாம் பெரிதாகத் தோன்றாது. பெண்களின் பாடு அப்பேர்பட்டது அல்ல. என்னதான் அதிவேகமாகக் கடக்கும் எக்ஸ்ப்ரெஸ் ரயிலாக இருந்தாலும் , மலம் கழித்துக்கொண்டிருக்கும் பெண்கள் ரயில் கடக்கும்வரை மலம் கழிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நிற்பார்கள்.
போனா போவுது.. கொஞ்ச நேரம் தானே என்று எந்த பெண்ணும் காட்டிக்கொண்டு இருந்து நான் பார்த்ததில்லை.இவ்வளவு இருந்தும் ஏன் மீண்டும் ரயிலடி ஓரம் கலைக்கடனுக்கு ஒதுங்குகிறார்கள் என்றால் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உருப்படியான கழிப்பிட வசதி இருக்காது. இருந்தாலும் சரியாக பராமரிக்கப்பட்டிருக்காது. கழிப்பிடவசதி குன்றியிருக்கும் ஊர்களில் பெரும்பாலும் இத்தகைய இடர்பாடு சாதாரணம்.
2. மூன்று வருடங்களுக்கு முன்பு வேலைவெட்டி இல்லாமல் வீட்டில் இருந்த காலத்தில் மதியம் ஒருமணி வாக்கில் வீட்டு காலிங் பெல்லை ஊதுபத்தி , வாசனைத் திரவியங்கள் விற்கும் பெண்ணொருவர் அடித்தார். உள்ளூர “ இவிங்க யாராச்சும் ஆட்டைய போடுற க்ரூப்பா இருப்பாய்ங்களோ ?” என்ற பயம் எனக்கு எப்பவும் இருப்பதால் ஊதுபத்தி, அனாதை ஆசிரமம், வாய்ப்பேசாத குழந்தைகள், encyclopedia ஆட்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பெரியதாக பேச்சு குடுக்கவோ, பொருட்கள் வாங்கவோ மாட்டேன். அன்றும் அதே போல் அந்த பெண்மணி எவ்வளவோ கேட்டும் எதையும் வாங்கவில்லை. கொஞ்சம் தண்ணி கெடைக்குமா என்று கேட்டவர் , தயங்கியபடி “ சார் உங்க பாத்ரூம் கொஞ்சம் யுஸ் பண்ணிக்கட்டுமா ?” என்றார். கண்டிப்பா பண்ணிக்கோங்க என்று சொல்லவும் பயன்படுத்திக்கொண்டார். பின்பு யோசித்துப் பார்த்தபோது யாரென்று தெரியாத ஆளிடம், அதுவும் விற்பனைக்கு சென்ற இடத்தில், ஆடவரிடம் “உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கவா “ என்று கேட்க எவ்வளவு சங்கோஜப் பட்டிருப்பார் என்று யோசித்தேன். சேல்ஸ் ஆட்கள் என்றாலே திருடர்கள், வீட்டில் என்ன இருக்கிறது, வீட்டு blue pint எப்படி என்று உளவு பார்க்க வருகிறவர்கள், போன்ற நம்பிக்கைகள் “ மயக்க மருந்தடித்து 13 சவரன் நகைகள் கொள்ளை “, தனியே இருந்த மூதாட்டியின் காதை அறுத்து பாம்பாடம் களவு “ போன்ற செய்திகள் உலவுவதை விற்பனைப் பிரதிநிதிகளும் அறிந்திருப்பார்கள். படாரென சாத்தப்படும் கதவுகளையும் சேர்த்து “ இது திருட்டு கேசோ ? “என்ற பார்வையையும் அவர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ரத்த சம்பந்தங்களிடமே மலம் கழிக்கவோ , சிறுநீர் கழிக்கவோ செல்கிறேன் என்று சொல்லாமல் “பாத்ரூம் போறேன் “ என்று சொல்லும் ஆட்கள் அனேகம்.இப்படி எல்லாம் இருக்க யாரோ ஒரு அந்நியனிடம் உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா ? என்று ஒரு பெண் கேட்கிறார் என்றால் காரணம் சிம்பிள்.
பொதுவெளியில் ஆண்கள்போல் பெண்கள் ஜாலியாக நினைத்த நேரத்தில் சிறுநீர் கழிக்க இயலாது. டிரான்ஸ்பார்மர் ம் சுவர் என தோணும் இடத்தில் எல்லாம் “M A G E S H “ என்று சிறுநீரால் எழுதி எல்லாம் விளையாட முடியாது..என் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் 3 கிலோ மீட்டர்கள். பஸ் ஸ்டாண்டில் மட்டுமே பொதுக்கழிப்பிடம் உண்டு.. அதில் கிமு.4 ஆம் நூற்றாண்டில் யாரோ பொழிந்துவிட்டு போன மலம் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் அங்கே சென்று மலம் கழிப்பது சாத்தியமில்லை. வேறு வழியே இல்லாமல் வெட்கத்தைவிட்டு கேட்டார் .ஓருவேளை எங்காவது கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கும் மூஞ்சி தேடி பல வீட்டு கதவுகளைத் தட்டிக்கொண்டு வந்தாரோ என்றும் யோசித்தேன்.
3.சென்னை- திருச்சி- மதுரை அரசு பேருந்தில் செல்பவராக இருந்தால் விக்கிரவாண்டி அல்லது தொழுதூர் இரண்டில் ஒரு ஊரில் கட்டாயம் வண்டி நிறுத்தப்படும். அரிஸ்டோ, ஹில்டா என ஏதாவது ஒரு ஹை ஃபை பெயரில் ஆளும்கட்சி புள்ளி ஒருவரால் நடத்தப்படும்.தோசை 60, பரோட்டா 80 ரூபாய்,,100 ரூபாய் கொடுத்தால் மீதி 20 வராது என்பதை எல்லாம் விடுங்கள். அங்கே இருப்பது போல் கேவலமான கழிப்பிடங்களை வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை.அனேகமாக நாஜி கட்சியினர் விக்கிரவாண்டி , தொழுதூர் மோட்டல் டாய்லெட்டில் புகுந்தபின்னரே வதைமுகாம்களில் holocaust செய்து யூதர்களை விஷவாயு மூலம் சாகடிக்கும் யோசனை பெற்றிருப்பார்கள். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசும் இடங்கள். Perfume என்ற அயல்தேசப் படத்தில் கதாநாயகன் மோப்பம் பிடித்துக்கொண்டே அலையும் காட்சி பார்க்கும்போதெல்லாம் “கண்டார ஓ நாயே உன்னைய எல்லாம் விக்கிரவாண்டி மோட்டல் கக்கூஸ்ல மோப்பம் பிடிக்க விடனும்டா “ என்று நக்கல் அடித்திருக்கிறோம் என்றால் விக்கிரவாண்டி, தொழுதூர் கழிவறைகள் எவ்வளவு கீழ்த்தரமானவை என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
அங்கே இருக்கும் சில கழிவறைகளின் வடிவமைப்பு ஆச்சரியமானதாக இருக்கும். ஆண்கள் பெண்கள் என bifurcation இருந்தாலும், outlet இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். அதாவது ஆண்கள் இந்த பக்கம் சிறுநீர் கழித்தால் , நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால்வழியோடி புல்லுக்கும் அங்கே பொசிவதைப்போல் பெண்கள் கழிவறை பகுதிக்கு சிறிய outlet வழியாக சென்று பின்பு வெளியே போகும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். ஆண்களைப்போல் பெண்கள் அனைவரும் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கும் ஆட்கல்லல ( புடவைக் கட்டிய சில பெண்கள் தவிர்த்து ). சல்வார், ஜீன்ஸ் அணிந்திருந்தால் குத்த வைத்துதான் கழித்தாக வேண்டும். இருக்கும் ஒரே ஒரு மூடிய கழிவறையும் vacant ஆக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால் வேறு வழியும் இருக்காது. பெண்ணுறுப்பு இப்பேர்ப்பட்ட சுகாதாரமற்ற இடங்களில் எந்த அளவுக்கு அசுத்தமான outlet அருகில் expose ஆகும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். சரி இதுதான் இப்படி, வெளியே எங்காவது நைசாக நகர்ந்து போய்விடலாம் என்றால் , அங்கே ஆள் வைத்து விசில் ஊதி லத்தி வைத்து விரட்டுவார்கள். எல்லோர் முன்பும் மானம் போகும் என்பதால் இங்கே தான் கழித்தாக வேண்டும். அல்லது அடக்கிக்கொண்டு இருந்தாக வேண்டும்.
சில சிடுமூஞ்சி கண்டக்டர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்த மாட்டார்கள். குளிர் காலத்தில் முட்டிக்கொண்டு வரும்போதுகூட ஒருமுறை மட்டுமே வண்டி நிறுத்துவார்கள். சில வேளைகளில் காலி பிஸ்லரி பாட்டில் எடுத்துக்கொண்டு கடைசி சீட்டில் அமர்ந்து “ஸ்பீடு பிரேக்கர் வரக்கூடாது ஆண்டவா “என்று வேண்டிக்கொண்டே வேலையை முடித்திருக்கிறேன். இந்த இடங்களில் தான் சாப்பிட்டு ஆகவேண்டும். நீ வெளியில் மூத்திரம் அடிக்கக்கூடாது. நான் காட்டும் கேவலமான இடத்தில் தான் நீ ஜிப்பை அவுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அரச பயங்கரவாததில் கண்டிப்பாக சேரும். இப்படி டாய்லட் பிரச்சனையால் தண்ணீரே குடிக்காமல் பயணம் செய்யும் பெண்டிர் ஏராளம். தண்ணீர் குறைவாக பருகினால் உடம்பில் எனென்ன வளர்சிதை மாற்றங்கள் நடக்கும் என்பதை கூகிள் செய்துகொள்ளுங்கள். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்த என் ஊர்க்காரர் “ சூப்பர்வைசர் வேணும்னே எல்லார் முன்னாடியும் வச்சி என்னா பாப்பா அவ்ளோ நேரம் கக்கூஸ்ல என்ன பண்ணுற ?”ன்னு கேட்டு அசிங்கப்படுத்துறான்” என்றார். இப்படிப்பட்ட ஆட்களையும் பெண்கள் சமாளித்து தான் ஒன்றுக்கு செல்லவேண்டிய சூழல் இருக்கிறது.
இந்தியாவை diabetic capital of the world என்று ஜாலியாக குறிப்பிடுவார்கள். அத்தனை சக்கரை நோயாளிகள் உண்டு. அவர்களுக்கு மூத்திரம் அடக்குவது என்பது அத்தனை சிரமம். ஆனால் இவ்வளவு நோயாளிகள் இருந்தும், இத்தனை மக்கள்தொகை இருந்தும் people to Toilet ratio கண்டிப்பாக அதலபாதாளத்தில் தான் இருக்கும். பிட்டு படங்கள் சரளமாக புழங்கும் மேலை நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பிரத்யேக கழிவறைகள் உண்டு. யாருடைய உதவியும் இன்றி ஜம்மென்று அவர்கள் கழிப்புக்கு சென்றுவிட்டு வரலாம். தனியான கழிப்பறைகள், தனி பேருந்து இருக்கைகள் , லிப்ட் வசதி, ramp என மாற்றுத்திறனாளிகளுக்கு என்று எல்லாமும் உண்டு. நமது ஊரில் மாற்றுத்திறனாளிகள் கழிவறை sophisticated mall களில் கூட வந்த பாடில்லை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய employer என சுட்டப்படும் இந்தியன் ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகள் கழிவறையைப் பயன்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறது? கக்கூசை விடுங்கள். Elevated stairs இருப்பதால் கை கால் நன்றாக இருக்கும் ஆட்களே முக்கி மேலேறும்போது மாற்றுத் திறனாளிகள் எந்த அளவுக்கு சுயமாக ஏறுவார்கள்.ரயிலில் கழிவறை என்பது ஒரு மாற்றுத்திறனாளிக்கு எவ்வளவு பெரிய Nightmare?. மாற்றுத்திறனாளி பெண்ணாய் இருக்கும் பட்சத்தில் இந்த ரயில்வே கழிவறை பயன்பாட்டின் இடர்பாடு magnify ஆகுமா ஆகாதா ?
மேற்கூறிய அனைத்தும் பிட்டு படங்களை எல்லாம்விட பெண்களை கேவலப்படுத்தும் சமாச்சாரம். பிட்டு படங்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என்றால் மேலே இருக்கும் சமாச்சாரங்கள் A** F*** செய்கிறதா இல்லையா ? 
சராசரி குடிமகனின் குஞ்சாமணிக்கு , பெண்ணின் யோனிக்கு அரசு தரும் மதிப்பு இவ்வளவு தான் என்கையில் Porn வெப்சைட் எல்லாம் சமூகட்ட்தைக் கெடுக்கின்றன என்று சொல்வது சூ வில் சிரிப்பு வரவைக்கும் நகைமுரண் இல்லையா ?
காரமான ஆந்திரா மிளகாயைக் கடித்ததைப் போல் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு yes yes yes, oh god, oh yeah என்பதை விதவிதமான permutations னில் கத்தும் பெண். ஆஆஆஆஆஅர்ர்ர்ர என்று பிரசவ வேதனையில் கத்துவது போல் கத்தும் ஆண் இதையெல்லாம் பார்த்து சிரிப்பு வரல ?


aunty, bhabi, போன்ற வார்த்தைகள் சும்மா தேடினால்கூட இந்திய பிட்டுகள் எல்லாம் தான் வரும். கேவலமான 1 MP camera இருக்கும் செல்போனை வைத்துக்கொண்டு எப்படியாவது எதையாவது பிட்டு விடியோ ஆக்கவேண்டும் என்று அலைவது இந்திய சிங்கங்கள் தான். அப்பேர்ப்பட்ட இந்திய பிட்டு சைட்டுகள் எல்லாம் சுதந்திரமாக உலாவவிட்டு, அயல்தேச பிட்டு மட்டுமே தடை செய்வது இன்னொரு நகைமுரண். 


Sylvia saint, Terra Patrick, Rocco Siferedi போல் “செய்து” பார்த்தவர்களைவிட WWE மூவ் எல்லாம் செய்து பார்த்தவர்கள் தான் ஏராளம்.பிட்டு பாக்குறவன் எல்லாருமே ரேப் செய்கிறான் என்றால் இந்நேரம் WWE பார்த்த அனைவரும் ரோட்டு சண்டையில்கூட Rock Bottom போட்டுக்கொண்டு இருக்கவேண்டும். எல்லாருமே John cena, Brock lesnar போல் திரிந்துகொண்டு இருக்கவேண்டும். கொஞ்ச நாள் முன்னர் ஹீரோயின் அம்மாவை செம்ம கட்டை, வீட்டுக்காரன் வாழ்ந்திருக்கான், centering வேல இப்பதான் பாத்தாங்களா என வில்லன் நடிகர் பேசுவது போல் ஒரு பிரபல டிவியின் சீரியலில் ஓடியது. குழந்தைகள் எளிதில் பார்க்கும் இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கண்காணிக்க ஆளே இல்லை. “A “ என சர்டிபிகேட் வாங்கிய படத்துக்கு எளிதில் சிறுவர்களை நாம் அழைத்துசென்று படம் பார்த்துவிட்டு வரமுடியும். A என்றால் பிட்டு இல்லை. வன்முறைக் காட்சிகள் நிறைந்த படம். பிட்டு தாரளமாக புழங்கும் மேலை நாடுகளில் இப்படி சிறுவர்கள் எல்லாம் A படம் பார்க்க முடியாது. பெற்றோர்களும் அழைத்து செல்ல மாட்டார்கள் இங்கே தியேட்டரில் அப்படி எந்த regulation இருக்கிறதா ? PG எனப்படும் Parental Guidance பற்றி தீவிரமான ஆலோசனை இங்கே உண்டா? சிறுவர்கள் பார்க்கும் சீரியல், Hip Gyrating songs with pseudo sexual movements பற்றிய கவலை எல்லாம் இங்கே இல்லை. இதில் Porn மட்டும் தடை செய்கிறேன் என்பது மிகப்பெரிய காமெடி.
Sex, Porn எல்லாம் எங்கு எளிதில் கிடைக்க வாய்ப்பில்லையோ அங்கே தான் அடக்கி வைக்கப்பட்ட இச்சை வெறியாக மாறுகிறது. உலகமெங்கும் உள்ள military troops எங்காவது வேறு நாட்டுக்குள் நுழையும்போது இதெல்லாம் அசால்ட்டாக வெளியே ஓடிவந்து வன்கலவி, சிறுமிகளை வன்கலவி செய்வது என வெளிப்பட்டுவிடுகிறது. Special mention to Indian Army.
கொசுறு : பெண் சிசுக்கொலைகள் பரவலாக செய்து Male: Female gender ratio வை காமெடி ஆக்கிவிட்டு , எஞ்சியுள்ள ஆண்களுக்கு pornனும் கிடையாது என்றால் அவர்கள் கதி என்ன என்பது குடையும் கேள்வியாக இருக்கிறது


4. கடந்த சில மாதங்களாக (6 மாத அளவில் ), பிரபல பிட்டு இணையதளங்கள் ஒரு காரியத்தை செய்திருக்கின்றன. Drunk , passed out, druged, date rape, rape போன்ற keyword போட்டு பிட்டு வீடியோக்கள் தேடினால் result not found , no videos matching your search என்று காட்டத்தொடங்கி நெடுநாட்கள் ஆகிவிட்டன. அதாவது வன்புணர்வு எங்கெல்லாம் சாத்தியம் , எத்தகைய தேடுதல்கள் வன்கலவியை ஊக்குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாய்ந்து அத்தகைய வீடியோ பதிவுகளை ஏற்கனவே தடுத்து நிறுத்திவிட்டன பிட்டு இணையதளங்கள். 80 களில் மிகவும் பரபரப்பாக இருந்த snuff movies ( கொடூரமான, கலவிக்குப் பின்னர் பெண்ணைக் கொல்லுதல் போன்ற பிட்டு வகையறா. இன்டர்நெட் பிரபலமாகாத 90 களில் கூட அத்தகைய படங்கள் சுலபமாக கிடைப்பதில்லை என்று ஹாய் மதன் சொல்லியிருந்தார் ) ஒன்றே ஒன்றுகூட இன்றைய பிட்டு வெப்சைட்டில் பார்க்க முடியாது. கொஞ்சம் ட்ரெஸ் குறைந்த சினிமா இண்டஸ்ட்ரி போல் தான் பிட்டு இண்டஸ்ட்ரி செயல்படுகிறது.
மேலும் பிட்டு வீடியோக்களில் “ the people involving in these scenes are over 18 “ என்ற டிஸ்க்ளைமர் இல்லாமல் இல்லை. Child Pornography யை அதிகரிக்க செய்வதாக பிட்டு வெப்சைட் மீது குற்றம் சொல்கிறார்கள். உண்மை யாதனில் child sex, child porn, sex with children,போன்ற keyword குடுத்து google search செய்தால் கூட வெளியூர்களில் அந்த IP Track செய்யப்படும். மேலும் Child pornography யை பப்ளிஷ் செய்வதோ, கடைபிடிப்பதோ காட்டுத்தனமான தண்டனையைப் பெற்றுத் தரும். எந்தவொரு பிட்டு சைட்டிலும் குழந்தைகளுடன் செய்யும் செக்ஸ் மறைமுகமாக கூட இருக்காது.Live Cams, Glory holes, என என்னெனவோ pop ups வந்தாலும் child, children என பிட்டு இணையதளங்களில் பார்க்கவே முடியாது. பார்ன் இண்டஸ்ட்ரி மக்களின் மூளையுடன் விளையாடும் சமாச்சாரம்.Dancing to the tunes of people s fantasies. பல நேரம் கலவி, கொடூரமான ட்ரெஸ், எல்லாம் , 18 இன்ச் ஆணுறுப்பு , Bukkake எல்லாம் அச்சு அசலான உண்மை என்று நம்பினால் அவர் WWF உண்மை என்று நம்பும் ஆளாகத் தான் இருக்கவேண்டும். மனசை தொட்டு சொல்லவேண்டுமானால் இணைய பிட்டுப்படங்கள் அனைத்தும் சிரிப்பை வரவைக்கும் ரகம். 
பிட்டு படங்களில் மிகவும் கவனிக்கவேண்டிய அம்சம் Homemade, amateur , hidden cam என்ற Tag வைத்து வரும் படங்கள் தான் . தனிமனித சுதந்திரத்தை கொச்சைப் படுத்தியோ, கலவியில் ஈடுபடும் நபருக்குத் தெரியாமல் எடுத்து பப்ளிஷ் செய்யப்படுவது எல்லாம் இந்த கேட்டகரியில் தான். முன்னது Porn என்றால் பின்னது scandal. சவால் விட்டு சொல்கிறேன். எந்த பிட்டு சைட்டுக்கு நீங்கள் சென்றாலும் இந்த கேட்டகரியில் அதிகம் வீடியோ அப்லோடு செய்திருப்பது இந்தியர்கள் தான். வெள்ளைக்காரன் லவ்வர்கள் கில்மாவாக இருக்கும் வீடியோவை ரிலீஸ் செய்தால் “ with tuition student, prof doing school girl “ என சைல்ட் பார்ன் என்கரேஜ் செய்வது இந்தியர்கள் தான். 
5. நியாயப்படி வெறிகொண்டு, சேர், ஏணி, கார்ல கட்டை, செம்ம கட்டை , நாட்டு கட்டை என கையில் எது கிடைத்தாலும் எடுத்து அடித்து ரத்தக்களறி ஆக்கும் WWE சாதரணமாக புழங்குகிறது. பிட்டு சைட் பார்க்கத்தொடங்கும் முன்னரே WWE பார்த்து அதை இமிடேட் செய்யும் சிறுவர்கள் அநேகம் . Rock Bottom, Stone cold stunner, Hitman ‘s Boston crab, DDT, Suplex choke slam , Spear எல்லாம் முயன்று பார்க்காத ஆள் யார் ?. 
சான்ஸ் கிடைத்தால் Mussolini’s Barber (Graeme Donald ) புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதோடு மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரில் French விலைமாதர்களிடமிருந்து Syphilis நோய் தொற்றை நாஜிப்படையினர் வேகமாக வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைத் தடுக்கும்பொருட்டு Siliconeனால் செய்யப்பட்ட Blow up sex dolls , அதாவது காற்று நிரப்பினால் பெண்போல் தோற்றமளிக்கும் பொம்மைகள் சப்ளை செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார். இதன்மூலம் பிரெஞ்ச் விலைமாதர்களிடமிருந்து நோய்த்தொற்று வாங்காமல் நாஜிவீரர்கள் தப்பிப்பார்கள், அடக்கிவைத்த காம இச்சை காரணமாக வீடுபோய் சேரவேண்டும் என்று எண்ணம் வந்து போரில் சோடை போகமாட்டார்கள் என்றும் ஹிட்லர் எண்ணியதாக குறிப்பு உண்டு. 1940 களில் அனேக வீரர்களின் உயிரைக் காப்பாற்றியதில் penicillin னுக்கு நிகரான பங்கு செக்ஸ் பொம்மைகளுக்கும் உண்டு. அடக்கிவைக்கப்பட்ட காமத்தைக் கண்டு அரசாங்கங்களே அஞ்சிய கதைகள் அவை.
சில யோகா ஆசிரமங்கள், பாதிரி கோஷ்டிகள் எல்லாம் கில்மா கைவரிசைக் காட்டுவது இப்படி ஆசையை அடக்கி நாங்கள் celibates என்று உட்டாலக்கடி விடுவதால் தான். வெளியே நடக்கும் Porn விட இத்தகைய ஆட்கள் மூளைக்குள் நொடிக்கு நொடி porn தான் ஓடிக்கொண்டே இருக்கும். அத்தகைய கோஷ்டிகள் எல்லாம் ஜாலியாக இங்கே உலாத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். Good touch Bad touch பத்தி தெரியும் முன்னரே சிறுவர்கள் எங்கையாவது ஒரு யோகா மாஸ்டரின் எவ்வித கண்காணிப்புமின்றி summer camp பில் விடப்படுகிறார்கள். சிறுவர்களுடன் வேலை செய்யும் எந்த பணியாக இருந்தாலும் அவர் மேல் proven criminal, proven paedophilic ரெக்கார்ட்ஸ் இருக்கிறதா என்று வெளியூர்களில் அதிதீவிரமாக பரிசோதிப்பார்கள். அத்தகைய பரிசோதனை எல்லாம் அரசு செய்கிறதா ? அரசை விடுங்கள் எங்காவது யோகா கிளாசுக்கு போவட்டும் என்று அனுப்பும் சமூகம் செய்கிறதா ?
6. முஜ்ரா நடனங்கள், ரெக்கார்ட் டான்ஸ். ஜாக்கெட்டில் காசு குத்துவது, பபூன் ஜோக்ஸ் என இவர்கள் காலம் காலமாக வேடிக்கை பார்த்தபோது ஒன்றுமே தடை செய்யப்படவில்லை. அப்பொழுது எல்லாம் பிட்டு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அண்மைக்காலங்களில் பெண்களும் பிட்டு பார்க்கிறார்கள் , பிட்டு குறித்து சரளமான உரையாடல்கள் பெண்கள் மத்தியில் இருக்கின்றது, தனக்கு வரவேண்டிய துணைவன் எப்படி எல்லாம் செய்ய வேண்டும், Orgasm, oral sex என்று பெண்கள் அதிகமாக பேசத் தொடங்கியவுடன் பிட்டு படங்கள் எல்லாம் தடை ஆகின்றன என்றால் isn’t that fishy ? Rings a bell ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். 



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சில உண்மைகள்

ஒரு இணையதளத்தை எதேச்சையாகக் காண நேரிட்டது. அதில் கிடைத்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பொய்யை பொய்யென்று உண்மையுரைப்பது நமது கடமையல்லவா ?

ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்று எல்லோரும் பழி வாங்கினால் உலகில் எல்லோரும் குருடாகிவிடுவார்கள் என்று காந்தி சொன்னதாக அங்கங்கே படிக்க நேர்கிறோம் இல்லையா ! அது காந்தி சொன்னதாக எந்தக் குறிப்பிலும் இல்லை. காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி பேசிய வசனம்தானாம் நாம் காந்தி சொன்னதாக நம்பிக் கொண்டிருப்பது.

பல நாட்களாக இது இணையத்தில் உலா வந்து கொன்டிருக்கின்ற புகைப்படம். இதில் இருப்பது காந்திதான் என்று நானும் நம்பிக் கொண்டிருந்தேன். இதில் நடனமாடுகிறவர் (காந்தி வேடமணிந்த) ஒரு ஆஸ்திரேலிய நடிகராம். சற்று உற்று நோக்கினால் கூட விளங்கி விடும். அந்நபரின் கையைப் பாருங்கள். வலுவான உடல்வாகுடையவர் என்பது புரியும். காந்தி மிகவும் ஒடிசலான உடலுடையவர். காந்தியின் கை படத்திலிருப்பவரின் கையைப் போல் இருக்காது.



காந்தியை விமர்சிப்பவர்கள் அதிகமாக இப்படத்தையும், நேரு எட்வினாவுக்கு சிகரெட் பற்ற வைப்பதையும் சேர்த்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் பெண்ணுடன் நடனமாடுவதையும், சிகரெட் பற்ற வைப்பதையும் கொண்டு விமர்சனம் செய்வதும், கேலி செய்து இன்பம் அடைவதும் அவரவர் தரத்தைப் பொறுத்தது.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஹாக்கியும் தேசிய விளையாட்டு இல்லையாம். ஆனால் ஹாக்கியை வளர்க்க அதை தேசிய விளையாட்டு ஆக்கினாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிரிக்கெட்டை விடவும் பல மடங்கு சிறந்த விளையாட்டு ஹாக்கி.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

எழவூடு

ஜாதி என்பது எப்படி இயங்குகிறது. ஒரே ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது முதல் விதி. பிறகு, சில ஜாதிகளுடன் குறிப்பிட்ட எல்லை வரை பழகலாம், இயங்கலாம், உண்ணலாம் உறங்கலாம் என்று நீளும். ஜாதி பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்றுதான் இறப்பு வீட்டில் தாழ்த்தப் பட்டவர்கள் துக்கம் கேட்கும் விதம்.

எழவு வீடு என்றால், வயதாகி இறந்தவர் என்றால் பெரிய அளவில் துக்கம் வழிந்தோடாது. வீட்டிற்குள் மட்டும் பெண்களின் அழுகைச் சத்தம் கேட்கும். ஆண்கள் யாரும் வரும் உறவினர்களிடம் கட்டிப் பிடித்து அழுவதில்லை. வெளியே உட்கார்ந்து கொண்டு அன்றைய சூடான அரசியல் விவாதங்களையும், வேறு ஏதாவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

துக்கம் விசாரிக்க யாரேனும் வந்தால், இறந்தவரின் மகனோ அல்லது அவரது உடன் பிறந்தவரின் மகனோ, தம்பியோ முன்னால் அமர்ந்து வருபவருக்கு வணக்கம் சொல்லி விசாரிப்பார்கள். வணக்கம் சொல்வது எப்படியென்றால், இழவு கேட்க வருபவர், இழவு வீட்டாரின் கையைத் தொட்டு வணங்கிக் கொள்வார்கள். அவர் கையைத் தொடும்போது இவர் (இறப்பு வீட்டுக்காரர்) கையை ஏந்தியவாறு வைப்பார் (துக்கம் கேட்க) வருபவர் அதைத் தொட்டுக் கும்பிடுவார்கள். பின்பு இருவரும் அருகருகே அமர்ந்து என்ன ஏது எப்படி நடந்தது, இறந்தவர் எத்தனை நாட்களாகப் படுக்கையில் இருந்தார், எந்தெந்த மருத்துவமனைக்குச் சென்றீர்கள், எத்தனை செலவாச்சு என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பின்பு பேச்சு அவரவர்களின் சொந்தப் பிரச்சனை குறித்தோ, அல்லது தொழில் குறித்தோ திரும்பி விடும். முதல் நாள் இழவு வீட்டில் இருக்கும் துக்கம் இரண்டாவது நாள் இருக்காது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பு முடிந்த பின்னர் இருப்பது போல்தான் இருக்கும்.

இப்படி ஒரு நாளில்தான் நானும் சென்றேன். கெக்கே பிக்கே என்று அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். இறந்தவரின் தம்பிதான் துக்கம் கேட்க வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் வந்தார். வந்தவர் அழுகையுடன் இறந்தவரின் தம்பியின் காலில் விழுந்து அழுதார்.

"அந்த மகராசன் எங்களுக்கு எத்தனை பண்ணினார், கேக்கறப்பெல்லாம் எத்தனை தடவை எங்களுக்குக் காசு குடுத்தார்"  என்றெல்லாம் என்று என்னென்னவோ சொல்லி, இழுத்து இழுத்து  அழுதார். (காலில் விழுந்தவாறேதான்). அதற்கு அந்த மனிதரோ,  "சரி சரி விடு விடு, வயசாயிடுச்சு போயிட்டார். எல்லாரும் ஒரு நாளு சாகறதுதானே. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்' என்றார். பின்பு அதே போல் இன்னும் ஒரு மொக்கையான வசனத்தைப் பேச அதையும் நகைச்சுவையென்று ஆதரித்து இரண்டொருவர் சிரித்து வைத்தனர். பின்னர் அந்தப் பெண் போய் அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? அந்த வீடு ஒரு மேல்ஜாதிக்கார (கொங்கு வேளாளக்கவுண்டர்கள்) வீடு. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். இப்படி இழவு வீட்டிலும் அந்தப் பெண் வந்து செத்துப் போனவனின் சொந்தக்காரன் காலில் விழுந்துதான் "துக்கம் கேட்க" வேண்டியிருக்கிறது.  என்ன கேவலம். இப்படி துக்கம் கேட்க வருவோரே காலில் விழுந்துதான் எழவேண்டும் என்பது என்ன வகை உணர்வு ? சடங்கு சம்பிரதாயம் ? ஆண்ட பரம்பரைக் கனவில் மிதப்பவர்கள் இது போன்ற இழிசெயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள். இந்த மேல் ஜாதி உணர்வு என்பது ? இப்படி அடுத்த மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் தள்ளி வைத்து, அவனை அவமானப்படுத்து உணர்வே ஜாதி. 

நன்றி - புகைப்படம்  ஃபேஸ்புக்கில் சங்ககிரி ராஜ்குமார் (திரைப்பட இயக்குநர்) பகிர்ந்தது. இந்தப்படத்திற்கும் நான் எழுதியிருக்கும் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜாதி என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இந்த இழிபிறவிகளின் வக்கிர உணர்வே ஆண்ட பரம்பரைப் பெருமையெல்லாம். இல்லாதப் பட்டவர்களை அதிகாரம் செய்து திரியும் இவர்கள் தங்களை மேல் ஜாதியினர் என்று பீற்றீக் கொள்கிறார்கள். எல்லா மேல் ஜாதிகளின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. இந்த "உணர்வு"க்குப் பேரும் "உணர்வுதான்". இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஜாதி என்பது எந்தக் கோணத்திலும் மன்னிக்க இயலாதது. இவர்களுடன்தான் நானும் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது எனக்கொரு தண்டனை.

ஆனால் எந்தக் கவுண்டரும் (மற்றெல்லா மேல் ஜாதிக்காரர்களும்தான்), கீழ்ஜாதிக்காரன் விவசாய வேலை செய்து விளைந்த காய்கறிகளை நான் உண்ண மாட்டேன், அவன் தொட்ட பணத்தை
தொட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். தனக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் முற்போக்காக நடப்பான். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதனை மட்டும் மனிதனாகவே மதிக்க மாட்டான்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கேட்கிறார்கள் கேட்கிறார்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில் வீட்டுக்கு வருகின்றவர் போகின்றவர் எல்லோரும் இப்படிக் கேட்பார்கள்

எத்தனாவது படிக்கற ? எத்தனாவது ரேங்க் வாங்கற ?

நல்லாப் படிக்கணும் என்ன !! ? ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் உங்கம்மாப்பா எவ்வளவு சிரமப்பட்டுப் படிக்க வைக்கிறாங்க. படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும், அப்பறம் எங்கள மாதிரி கஷ்டப்படத் தேவையில்லை. இதெல்லாம் எங்கள் காலம்.

பதில் : ??!!!

இப்போது இக்கேள்விகள் இப்படி மாறியிருக்கும்.

எந்த ஸ்கூல்ல படிக்கற ?  சிபிஎஸ்சியா இல்ல மெட்ரிக்கா ? (இப்பல்லாம் யார் அரசுப் பள்ளியைத் தேடுகிறார், இல்லாதப்பட்டவர்களைத் தவிர) ஹாஃப்ஏர்லில என்ன க்ரேடு வாங்கின ?

அடுத்து கல்லூரிக்குப் போகும் வயதில், வந்து அப்பாவிடம் கேட்பார்கள். அப்படியே நம்மிடமும்.

பையன எந்த கோர்ஸ்ல சேத்தீங்க ? எந்த காலேஜ் ? அது படிச்சா ஃப்யூச்சர் நல்லா இருக்குமா ? ஸ்கோப் இருக்குமா ? வெளிநாடெல்லாம் போக முடியுமா ? என்ன மாதிரி வேலை கிடைக்கும் ?

பதில்: ஃபைனல் இயர்லதான் தெரியும்.

எவனுக்குத் தெரியும் அதெல்லாம், இப்போதைக்கு இதுதான் வளரும் துறை என்று "நம்பி" அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறோம். வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். என்று நினைத்துக் கொள்ள முடியும் வெளிய சொல்ல முடியாது.

படித்து முடித்தவுடன் வந்து கேட்பார்கள்.

இன்னும் வேலைக்குப் போகலையா ? கேம்பஸ்ல செலக்ட் ஆகலையா ? எத்தனை அரியர் இன்னும் இருக்கு ? பார்ட்டைமா போலாம்ல ? இல்ல அப்பா பிஸினஸையே பாத்துக்கப் போறயா ?

பதில்: தேடிக்கிட்டே இருக்கேன், ஒரு கம்பெனில கூப்டறேன்னு சொல்லிருக்காங்க. பாக்கணும் !

வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பிறகும், அல்லது தெரிந்து கொண்டபின்னும் இத்தனை வீச்சுக்கள் !

தக்கி முக்கி ஒரு அடிமை வேலையில் சேர்ந்த பின் வருவார்கள்.

எந்த கம்பெனி ? என்னா மாதிரி வேலை ? எவ்வளவு சம்பளம் ? போகப் போக சம்பளம் ஏறுமா ? வேலை பர்மனென்ட்டா ?

பதில்: ஒரு டொன்டி(20) வரும் என்று பொய் சொன்னால்,

இவ்வளவுதானா ? ரொம்பக் கம்மியா இருக்கே ? இத்தன படிச்சும் இவ்வளவுதான் குடுக்கிறானா ? இதுக்குப் பேசாம தொழிலையே பார்த்துக்கலாமே ? என்பார்கள்

சம்பளம் ஐந்திலக்கத்திற்குக் குறைவு என்றால் கௌரவக் குறைவு என்பதால், பெரும்பாலும் வாங்கும் ஊதியத்தின் இருமடங்காகவே சொல்வார்கள் இளைஞர்கள். இருந்தாலும் கேள்வி கேட்கும் சொந்தக் காரரோ, பக்கத்து வீட்டுக் காரரோ அல்லது வேறு யாருமோ என்ன சொல்வார்கள் தெரியுமா ? எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் இந்த வேலையில் இருக்கிறான். அவனுக்கு சம்பளம் ஒரு இலட்சத்துக்கும் மேலையாம் என்று சொல்வார்கள். நமக்கோ வருடாந்திரமே அதை விட குறைவாக இருக்கும். விப்ரோ மாதிரி நிறுவனங்களிலேயே அப்ரசண்டிகளாக குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்.

வாலிப வயது நெருங்கியவுடன் மீண்டும் வருவார்கள்.

பையனுக்கு/பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி எண்ணமே இல்லையா ? வயசாயிட்டே போகுதுல்ல ? அப்பறம் கொஞ்சம் வயசு தாண்டிட்டா கல்யாணம் நடக்கறது கஷ்டமாயிடும்.

திருமணம் நடந்த பின்னரும் வருவார்கள். விட மாட்டார்கள்

கல்யாணம் ஆயி இத்தன நாள் ஆயிடுச்சு ஒரு விசேசமும் இல்லையா என்று ஆரம்பிப்பார்கள்.

பிறகு குழந்தை பிறந்து வளர்ந்தவுடன் முதலிலிருந்து தொடங்கும் கேள்விகள். ஒரு நாள் வந்து நீ இன்னும் சாகவில்லையா என்று கூட கேட்பார்களாயிருக்கும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உலக அன்னையர் நாள்

என்னிடம் ஒரு நண்பர்(பெண்) கூறினார். "என்ன இருந்தாலும் எனக்கு ஜெயலலிதாவை ஒரு விசயத்தில் பிடிக்கும்." எத்தனை ஆம்பளைகளை கால்ல விழ வைக்கிறா !. அதுக்கு எத்தனை கெத்து இருக்கணும் என்றார்.  அது தவறு என்று சொல்ல நினைத்து பின்பு அமைதியாகி விட்டேன். அவர் ஒரு கோணத்தில் சொல்கிறார். அது சரியாகவே தோன்றியது. எல்லா இடத்திலும் அவர்கள்தான் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மூலம் அவர்கள் தங்கள் "எதிரிகளை" பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும், நாமெல்லாம் திரைப்பட நடிகனை நாமாகக் கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறோமே அது போல. இதற்கும் அன்னையர் தினத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் உண்மையில் அன்னையர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறோம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அம்மா என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆத்திரத்தையும் காட்டலாம். அவர்கள் அருகாமையை நாம் இழக்கும் போதுதான் தெரிகிறது. நாமெல்லாம் எதற்கும் உதவாதவர்கள் என்று. வீட்டில் ஒரு பொருளை நம்மால் தேடி எடுக்க முடிகிறதா ?

ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கூறினார். நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் குடும்பத் தலைவிதான்" (just housewife) என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லத்தரசிதான் என்று சொல்கிறீர்கள் ?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவன் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒரு போதும் "எனக்கு உன்மேல் கொள்ளை பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார். அவருக்கு எங்கள் மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்தக் கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காகச் செய்திருப்பதில் முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதி செய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்கும். அவர்கள் (அம்மாக்கள்தான்) என்ன செய்கிறார்கள் என்பதையே நாம் கவனிக்கத் தேவையில்லை. அம்மா செய்யும் எல்லாச் செயல்களுமே குடும்பத்துக்காக அன்றி அவளுக்காக இல்லை. இன்னும் சோறாகலையா என்று கேட்கத்தான் நமக்குத் தெரியும். ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது ?

அன்னைகளுக்குத் தெரியவில்லை
நமக்கான நாளை "உலகமே" கொண்டாடுகிறது
மற்றவர்க்கான தினங்களைப் போல மற்றவர்களைப் போல
இன்றும் அவர்களுக்கு விடுமுறை கிடையாது
அன்றாட வேலைகளையே இன்றும் செய்கிறார்கள்
அன்னையர்களின் புதல்வர்களோ
அன்னையர் தினமென்று தொலைக்காட்சிகளில் வாழ்த்துகிறோம்
வெட்கச்சிரிப்புடைய அம்மாவுடன் எடுத்த கைப்படத்தையும் பகிர்கிறோம்
நிலைத்தகவல் போடுகிறோம்
கவிதை புனைகிறோம்
அடுக்களையில் இருக்கும் அம்மாவிடம்
அலட்டலாக ஒரு தேநீரும் கேட்கிறோம்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment