7.5 விழுக்காடுகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு ட்வீட் போட்டதைத் தவிர்த்து என்ன செய்தார் சூர்யா ? - ரவிசங்கர்

இப்போதும் சரி அப்போதும் சரி ட்வீட் போட்டதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆதரிக்கும் முன்பு வரை சூர்யா செய்தது தவறாக இருந்தது. இப்போது சூர்யா என்ன செய்துவிட்டார் என்று கேள்வி வருகிறது. உங்க தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவன் அருகதையைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது ?

நடிகர் சூர்யா 8 கோடி பேருடன் கோட்டைக்கு ஊர்வலம் சென்று முதலமைச்சருக்கு நன்றி சொல்லவில்லை. அவர் போட்ட ஒரே ட்வீட்டை வைத்துத்தான் என்னவோ தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்ததாக சித்தரித்தனர் சில திமுகவினர்.  தமிழ்நாடே சூர்யாவின் ட்வீட்டைப் பார்த்துத்தான் அதிமுகவை ஆதரிப்பது போன்றும் இல்லையென்றால் அப்போதே புரட்சி வெடித்து அதிமுக அரசு கலங்கியிருக்கும் என்பது போல பேசினார்கள். ஜோதிகா பேசியதை வைத்து காவிகள் கூத்தடித்ததைப் போலவே இவர்களும் செய்தனர்.

யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னவர், ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்துத் தொலையுங்கள் என்றால் பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்கலாமா ? உங்கள் கட்சியை ஆதரிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன உங்கள் கட்சியின் குறைகள்தானேயன்றி நாங்கள் அல்லவே. 

NEET எதிர்ப்பாளர் என்றாலே அது திமுக சார்பாகத்தான் பார்க்கப்படும். எப்படி திமுக சாராத மற்றவர்களின் தவறுகளும், அவதூறுகளும் திமுகவின் மீது திருப்பப்படுகிறதோ அது போலவே NEET உட்பட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்த ஒரு அரசியலுமே திமுக சாராதவர்கள் பேசினாலும் போராடினாலும் அது திமுகவின் ஆதரவாக மாறும், திமுகவின் மீதான பொதுபுத்தி வெறுப்பின் ஒரே நன்மை இதுதான்.

அதிமுகவை நேரடியாகக் கண்டிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தூய்மைவாதம் பேசினால் எப்படி ? திமுகவை ஆதரித்து விட்டோ, திமுகவில் இருந்து கொண்டோ திமுக கொள்கைக்கு நேர் எதிரான அரசியலை/செயல்களைச் செய்தால் அது ஒரு பொருட்டே இல்லாதது போலவும், கட்சிசாராதவன் திமுக ஆதரவு கொள்கையைப் பேசினால் அவனை எதிரியிடம் தள்ளி விடுவது ஏன் ?

ஒரு முறை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே தவறென்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் ஆதரவை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று சொல்லியிருந்தார் ரவிசங்கர். ஆனால் யாருடைய ஆதரவை யார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? அதன் விளைவுகள் என்ன என்பதையும் நாம் இன்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ? 

எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபடும் உங்கள் கட்சிக்குக் குறிப்பிட்ட எல்லைகள் உள்ளனவோ அது போலத்தான் அரசியலிலும் பொதுவாகக் கருத்து சொல்லும் கட்சி சாராத நபர்களுக்கும் சில எல்லைகளும் தொல்லைகளும் உள்ளன, அவர்களால் ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரித்தோ எதிர்த்தோ பேச முடியாது. இது உங்களைப் போன்றவர்கள் அறியாததன்று என்றாலும் நீங்கள் இப்படி குற்றம் சொல்லிப் பேசுவது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெரியாமலில்லை. 

நாளை NEET ஆதரவு நிலைப்பாடு எடுத்து, NEET பயிற்சி நிலையங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றும் சொல்வார் போலிருக்கிறது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆரிய உதடும் திராவிட உதடும் பேசுவது என்ன ?

                                              

திராவிடத் திருமகனின் திருவாய்மொழிகளும், மோடியையே கலாய்க்கும் பார்பன சதிகாரியும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனியத்தையே வெட்கப்படுமளவுக்கு மாற்றி விட்ட நமது திமுக திராவிடப் புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

காவி பயங்கரவாதி இராமகோபாலன் இறந்ததற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவிக்கும் வைரமுத்து. 

பாலியல் வன்முறையைக் கண்டிக்க பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தையே பகிர்ந்து கிண்டல்/விமர்சனம் செய்யும் பாடகர் சின்மயி. 

அவருக்கு இருந்தது எல்லாம் கொள்கை அதில் குன்றாது கண்ணியம் காத்தாராம். அவர் செத்ததால் வருத்தப்படுகிறவர்களுக்கு இவர் இரங்கல் தெரிவிக்கிறாராம். இதன் மூலம் யாரை செருப்பால் அடித்தார் என்று யாருக்கும் தெரியாத மாதிரி இருப்போம் திராவிடப் புரட்சியாளர்களே !

இதில் யார் திராவிடம் பேசுகிறார்கள், யார் பார்ப்பனியம் பேசுகிறார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசும் இல்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பக்தர்களின் பகுத்தறிவும் பகுத்தறிவுகளின் மூடநம்பிக்கையும்


ஏம்பா பக்தர்கள் கோயிலுக்குப் போகும் போது வீடு வண்டி எல்லாம் பகுத்தறிவோட பூட்டிட்டு போறீங்களா இல்ல கடவுள் பாத்துக்குவார்ன்னு அப்படியே விட்டுட்டு போயிருவீங்களா?

பக்தர்கள் மட்டும் 100 % பகுத்தறிவோட இருக்கலாம். பெரியாரியர்களுக்கு மட்டும் பக்தி கொஞ்சம் இருக்கப் படாதோ?

என்னவோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி வட்டம் போட்டு காட்றீங்க ! திமுககாரன் கோயிலுக்கு போனா பல்லிளிக்கும் பகுத்தறிவும்பீங்க இல்ல ?!

இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக இந்துக்களின் எதிரின்னும் சொல்வீங்க ?

உலகத்திலேயே கோயிலுக்குப் போனாலும் திட்டும் போகாவிட்டாலும் திட்டும் ஒரே இழிபிறவிகள் இவர்கள்தான். 

ஒரு பயங்கரவாதியை, கொலைகாரனை, பாலியல் வன்கொடுமை செய்தவனை, ஊழல் செய்தவனை, கொள்ளை அடிப்பவனைப் பார்த்து என்ன நீ இன்னும் பாஜகவில் சேரவில்லையா என்று கேட்பது எப்படி இயல்பாக இருக்கிறதோ அது போலத்தான் ஒரு கடவுள் நம்பிக்கை உடையவன் திமுகவில் இருப்பதும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அரசை எதிர்த்துப் போராடக்கூடாது - காவிகளின் கயமை


பிரதமர் வீட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் முன் அமர்ந்து ஒரு இடதுசாரித் தோழர் போராடுகிறார் என்று காவிகள் இதை ஒரு பெரிய இது போல பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். ஊதியம் தரும் முதலாளிக்கு எதிராகவே போராடுவதுதான் பொதுவுடமைத் தத்துவமே.

இந்தத் திருட்டுப் பயல்கள் மத்தவன் உருவாக்கி வைத்த துறைகளை தன்னுடைய முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டே அதை உருவாக்கியவனைத் திட்டுகின்றவர்கள். உங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பேச அருகதை உண்டா ? இந்த உத்தமர்களின் தரம் என்னவென்று பார்ப்போமா ?

பிரதமர் திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டால் பிரதமரையோ பாஜகவையோ எதிர்க்கக் கூடாது என்பது என்ன எழவெடுத்த கருத்தியலில் வரும் ? சரி அதன் படியே வைத்துக் கொண்டாலும் காவி பயங்கரவாதிகள் தாங்கள் இதுவரையிலும் ஆட்சியைப் பிடிக்காத பல மாநிலங்களில் கட்சி நடத்துகிறான்கள் இல்லையா ?

குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜக பயங்கரவாதிகள் பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு கிடப்பான்கள். இவன்கள் எல்லாம் யார் ? தமிழ்நாட்டில் திராவிட அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில் தொந்தியை வளர்த்துத் திரியும் இழிபிறவிகள்தானே ? அதே போல கேரளாவிலும் பேராயக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் கொண்டு வந்த நலத்திட்டங்களில் வயிறை வளர்த்தும் தினவெடுத்துத் திரியும் கும்பல்கள்தான். 

இவனுகள் இப்படி மற்ற கட்சிகளின் நலத்திட்டங்களை ஆட்சியின் நன்மைகளை இரண்டு தலைமுறைகளாக துய்த்துக் கொண்டு அக்கட்சிகளை எதிர்த்துக் கொண்டு அரசியல் கட்சியை நடத்தும்போது பொதுவுடமைக் கட்சி நடுவண் அரசை எதிர்த்துப் போராடக் கூடாதா ? அந்த வீடு என்ன மோடியின் பரம்பரைச் சொத்தா இல்லை உழைத்துப் பெற்றதா ? இல்லையே மாநில அரசின் பணமும்தான் அதில் இருக்கிறது. அரசின் பணம் என்றாலே அது மக்களின் வரிப் பணம்தான் இதில் என்ன மயிரு இருக்குதுன்னு நீ கேள்வி கேக்கற திருட்டுக் காவியே ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் யூட்யூப் இன் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் போடப்போகிறார்களாம். கடவுளின் அவற்றின் கதைகளைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்கு இச்சட்டமெனில், இந்தக் கதையைப் பரப்பி மனிதர்களை முட்டாளாக்கும் கூட்டத்திற்கு இந்த ஜனநாயக அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. உண்மையைச் சொன்னவனுக்கு தண்டனை எனில் இது மதச்சார்பற்ற நாடா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 


எப்படி கடவுள் இருக்கிறது என்று சொல்ல உரிமையிருக்கிறதோ அது போன்றே கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறது. எப்படிக் கடவுள் கதைகளை கண்டபடிக்கு எழுதி அதை வெளியிட்டு கோடிக்கணக்கானோரை நம்ப வைத்து பணம் கறக்கவும் இன்ன பிறவும் செய்ய உரிமை இருக்கிறதோ அது போன்றே அக்கதைகளைக் கட்டுக் கதை என்று விளம்பவும் உரிமை இருக்கிறது. 

கொலை மருட்டல் விடுப்பவன், , கலவரத்தைத் தூண்டுகிறவன், அமைதியைக் குலைக்க போலிச் செய்தியைப் பரப்புகிறவன், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வெறுப்பை விதைப்பவன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு நிகரான செய்கையை செய்யச் சொன்னவன், தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசுகிறவன், தமிழ்நாட்டின்/இந்தியாவின் பெரிய தலைவர்கள் சிலைகளை உடைத்து இழிவு செய்தவன், அவற்றைத் தூண்டி விடுகிறவன், ஜனநாயக நாட்டை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்று செயல்படுகிறவன், ஆணவக் கொலையைத் தூண்டுகிறவன், கலவரம் செய்து உடமைகளை அழித்தவன்கள், உயிரோடு எரித்தவன்கள், காவல்நிலையத்தில் கொட்டடிக் கொலை செய்தவன்கள், தன் வீட்டில் தானே குண்டு வீசிக் கொண்டு நாடகமாடுகிறவன்கள், தன் வாகனத்திற்குத் தானே தீ வைத்துக் கொண்டு புரளியைக் கிளப்புகிறவன்கள் இன்னும் பல கொடிய பிறவிகள். 

இவனுங்க எல்லாம் வெளிய இருக்கும்போது சுரேந்தரன் மேல் குண்டர் சட்டம்தானே பாய வேண்டும் ?  
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் திமுக

 மோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.

                                   

கொள்கையைப் பேசினால் காவிகள் கட்டம் கட்டி திசைதிருப்பி இந்து விரோதப் பட்டம் கட்டுவார்கள். இந்துக்களுக்காகப் பேசினால் நம்மளை மாதிரி போராளிகள் திமுகவிற்கு கொள்கை போதவில்லை/கைவிட்டுவிட்டது என்று மொத்துவார்கள். ஆக என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் திமுகவுக்கு அடிதான்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணியே கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவில்லை என்று சொன்ன பிறகும் திமுக காசு கொடுத்துத்தான் கறுப்பர் கூட்டம் நடக்கிறது என்று சொல்வார்கள்.

திமுககாரன், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களோ கோயிலுக்குப் போனால் ஆகா இந்து மதத்தைப் பின்பற்றுகிறான் என்று சமாதானமாக மாட்டார்கள்.
பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்பார்கள்.

ரம்ஜான்/கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னால், இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் இந்து விரோதி, கிறித்தவக் கைக்கூலி என்றுதான் சொல்வார்கள்.

முருகனை அவமதித்ததற்காகக் திமுக கண்டிக்கிறது என்ற செய்தியை 99 % காவிகள் வேண்டுமென்றே பார்க்காததுபோல் இருந்து விட்டு திருட்டு திமுக இந்து விரோத திமுக என்பார்கள்.

திராவிடம், கடவுள் மறுப்புப் பேசாமலேயே இந்துக்கள் மனதை புண்படுத்தாமலேயே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்த முடியும். அவர்கள் பாணியிலேயே போய் அவர்களைத் திரை கிழிக்க முடியும்.

பாஜக ஆட்சி நடத்தும் இலட்சணம் இந்துக்களுக்குத் தெரியாதா ? பிடி எதுவும் கிடைக்காமல்தான் இவர்கள் திமுக எதிர்ப்பை/மதவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மருத்துவத்தில் பெரும்பான்மை இந்துக்களின் இட ஒதுக்கீடைப் பறிக்கும் பாஜக என்று சொல்லியிருக்கலாம். காவிகளின் ஓட்டை வாயை அடைத்திருக்கலாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் முழித்திருப்பார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அவன் யார் ?

எதிர்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்கும். ஆளும் கட்சியாக இருக்கும்போது விலைவாசியை உயர்த்தும்.

அது என்ன?

பாகிஸ்தான் என்றால் பாயும்.
சீனா என்றால் சிணுங்கும்.

அது என்ன ?

ஆட்சியில் இல்லாதபோது அரசைக் கேள்வி கேட்பது தேசபக்தி என்பான். ஆட்சியில் இருக்கும்போது அரசைக் கேள்வி கேட்பது தேசத்துரோகம் என்பான்.

அவன் யார் ?

அன்னம் தண்ணி புழங்க மாட்டான். மதம் மாறினால் கதறுவான்

அவன் யார் ?

எல்லாத்துக்கும் காரணம் நேருவும் காங்கிரசும்தான் என்பான்
எல்லாத்தையும் தொடங்கியது கருணாநிதியும் திமுகவும்தான் என்பான்.

அவன் யார் ?

சீன நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வான்
சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவான்.

அவன் யார் ?

ஆளுங்கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சியைத் திட்டுவான்.  
அடித்தவனை விட்டு அடிவாங்கியவனைத் திட்டுவான்.

அவன் யார் ?

எல்லா ஊடகங்களிலும் வருவான். அவர்களையே வேசி ஊடகங்கள் என்பான். 

அவன் யார் ?

ஜாதியை ஆங்கிலேய சதி என்பான் திராவிட சதி என்பான். ஜாதிதான் பண்பாடு என்பான் ஜாதிதான் மதம் என்பான். 

அவன் யார் ?

விடுதலைப்போராட்டத்தில் போராடாமல் சும்மா இருப்பான்.  விடுதலைப்போராளிகளைக் காட்டிக்கொடுப்பான். 70 வருடங்கள் கழித்து போராளியாகக் கரடி விடுவான்.

அவன் யார் ?

தேசத்துரோகிகளுக்குவெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பான்.
அவனும் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவான்.

அவன் யார் ?

பாஜக. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாத எதிர்ப்பு வேறு

இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.

                                         

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.

இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?

காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?

பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,

"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "

"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"

இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.

இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.

நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.

இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.

முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.

அதுவும் எப்படி ?

நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.

அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.

எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்துக்கள் மதம் மாற்றுவதில்லையா ?

விவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,

                                                  

என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும். 

மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.

ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.

கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?

இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?

இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

டெல்லி கலவரம் 2020








                                          

                                          

                                          

                                         

                                          

                                         

                                        

                                        

                                        

                                        

                                        

                                        

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment