ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

3 கருத்துகள்:

  1. மனதை தைத்துவிட்ட ரணத்தை
    பேசுகிறது கவிதை
    உயிர்ப்போடு!!!



    கருத்துப்பெட்டியை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு சார்! என்னை போன்ற
    l - போர்டுகளுக்ககவாவது செட்டிங்க்ஸ் போய் கமெண்ட் செட்டப்பை மாத்துவீங்களா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க. அது ஆதிகாலத்தில் வைத்த செட்டிங். எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுத்தருளுங்களேன்

      பாராட்டுக்கு நன்றிங்க ! :))

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்