இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காவிகளின் போலி அங்கலாப்பு

 சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.

"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"

இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.

கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்

Download As PDF
Bookmark and Share

Post Comment

யாரைத் தேர்ந்தெடுத்தால் சேதாரம் குறையும் ?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

குறள் - 504

மக்களுக்கு எதிராக என்ன கிறுக்குத்தனம் செய்தாலும், அவர்களின் வாழ்வையே பறித்துக் கொண்டாலும் இந்து மதம் ஆபத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் சதி, பொருளாதாரம் வளர்கிறது, ஊழல் ஒழிந்து விட்டது, ராமன் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் அடித்து விட்டால் போதும் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

மக்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்களோ அந்த அளவில்தானே கட்சிகளும் இருக்கும். 

காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஃபாசிசத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்பதை நக்கலடிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பேராயக் கட்சி (congress) என்ன யோக்கியமா அவர்களும் ஃபாசிஸ்ட்டுகள்தான் என்று அவர்களுடைய பழைய குற்றங்களை எடுத்துக் காட்டுகின்றனர். இப்போது பாஜகவில் இருப்பவர்கள் பேசுவதைப் போலத்தான் 75 வருடங்களுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்கள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் காங்கிரஸ் கட்சி அப்படியேதான் இருக்கிறதா ?. திமுகவின் காங்கிரஸ் கூட்டணிக்கும், முன்பு பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கும் எதிர்ப்பது நியாயம்தான். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது ? 

இல்லை நாம்தான் புரட்சி செய்து கொண்டிருக்கிறோமா ? இல்லையே அப்படி இருவரையும் சமமாக எதிர்ப்பதாக இருந்தால் இந்நேரம் மாஓ-இயர்களாக, நக்சல்களாக துப்பாக்கி ஏந்தி காட்டுக்குள் வாழவில்லையே. சுகமாக ஃபேஸ்புக்கில் வடிவேலு படம் போட்டு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம்தானே ? 

பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் வந்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று யாரும் நம்பவில்லை. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை சொன்னவர்களல்ல இப்போது பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை சொல்பவர்கள். காங்கிரசை எதிர்த்தனரே அன்றி பாஜகவை பரிந்துரை செய்யவில்லை. அது சில அரை வேக்காடுகள் தந்நலவாதிகள் செய்ததுதான். 

நமது அச்சம் என்ன ? நமக்கிருக்கும் சில உரிமைகளும் பண்பாடும் பறிபோய், கீழ்த்தரமான மனிதர்களால் ஆளப்படுவோம் என்பதுதான். இப்போது இருக்கும் ஆட்சி தொடர்ந்தால் என்ன ஆகும் மொழி, தேசிய இன உரிமைகள் பறிக்கப்பட்டும், சீனாவைப் போன்ற ராணுவ சர்வாதிகாரமும், முஸ்லிம் நாடுகளைப் போன்ற மதவாத அடக்குமுறைகளும், ஜாதிய அடிமைத்தனங்களும் இன்ன பிற ஒழிக்கப்பட வேண்டிய மனித குலத்திற்கு எதிரான அனைத்தும் தலைவிரித்தாடும் என்ற அச்சமும்தான். இது ஒன்றன்பின் ஒன்றாக நம் மீது கட்டப்படும். 

பாஜக/ஜாதிக் கட்சிகள் வன்முறை செய்வதற்கும் மற்ற கட்சியினரின் வன்முறைக்கு என்ன வேறுபாடு இருக்கின்றது ? பாஜக அல்லது ஜாதிக் கட்சிகள் அடையாள அரசியல் செய்பவை. நாம் அவர்கள் என்று உணர்வுப் பூர்வமாக பிரித்து அதன்மூலம் பூசல் வெறுப்புணர்வு வளர்த்து அதன் மூலம் வன்முறை செய்பவை. இது அரசியல் சாராத பொதுமக்களையும் உணர்வுரீதியாக இணைத்து மற்றொரு பிரிவினர் மீது வன்முறை செய்பவை. இந்தியாவில் பொதுவாகவே பெரும்பான்மை மக்கள் தம்மை ஜாதியுடனும் மதத்துடனும்தான் இணைத்து தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இப்படி இருக்க இவர்கள்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் திசை திருப்ப மதவாதம் ஜாதியம் தேசப்பற்று என கவர்ச்சியான காரணங்கள் போதும் இதைக் கொண்டே மற்றவர்கள் மீதும் வன்முறையை ஏவவும் முடியும். 

மதவாதம்/ஜாதி/ இனவாதம் அல்லாத கட்சிகள் செய்யும் வன்முறை என்பது அக்கட்சியின் அதிகாரப் போட்டி காரணமாக குழுக்களுக்கிடையே போட்டி பொறாமை தனி நபர்களுக்கிடையேயான போட்டி பொறாமை காரணமாக விளைவது, அல்லது தனிநபரின் பொறுக்கித்தனம் ரௌடித்தனம் காரணமாக விளைவது இதனால் மிகச்சில பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இது நியாயம் என்றோ சாதாரணம் என்றோ சொல்ல வரவில்லை. இது போன்ற கட்சியிலிருப்பவர்களும் கூட ஜாதி மத வெறியின் காரணமாக கொலைகள் செய்வதுண்டு என்றாலும், இது கட்சியின் கொள்கை காரணமாக விளைவதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.

10 வருடங்களுக்கு முன்பு ஈழப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவலாகப் போராட்டம் நடந்த போது இந்திய அரசுக்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராகவும் பரவலான முழக்கங்கள் எழுந்தன. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் படுகொலையை முதன்மைப் படுத்தியும், விடுதலைப் புலிகளுக்கு (தீவிரவாத எதிர்ப்பாம்) எதிராகவும் பேசினர். அதற்காக தமிழ்நாட்டை இழிவும் செய்தோ வெறுப்போ காட்டவில்லை. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர். 

தற்போது பாருங்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு வாழ்வாதாரப் போராட்டம் நடந்தாலும் கட்சியிலேயே இல்லாத காவி பயங்கரவாதிகள் டுமிலன், போராளீஸ் என்றெல்லாம் என்னமா நக்கலடிக்கிறார்கள் ? இத்தனைக்கும் தேர்தலில் ஈடுபடும் கட்சிகள் கூட இது போன்ற போராட்டங்களில் முன்னிறுத்தப்படவில்லை. இப்படி சராசரி மக்களின் போராட்டத்தையே இப்படி வெறுப்பு காட்டி நக்கலடிக்கும் காவி இழிபிறவிகள், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நாக்பூர் பயங்கரவாதிகளின் காலை நக்கி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் சங்கிகளை எதிர்க்க வேறு என்ன வழி ? இங்கே பெரும்பான்மை மக்களும், ஏன் படித்து முடித்த அறிவாளிகளே ஜனநாயக உணர்வற்ற, அரை வேக்காடுகளாக சங்கிகளாக ஜாதி வெறியன்களாக இருக்கும் நிலையில் நாம் வேறு என்ன செய்ய முடியும் ?

காங்கிரஸ் மட்டுமல்ல இங்கு மூன்று தேசியகட்சிகளுமே இந்தியாவின் ஏதோ ஒரு இனப்படுகொலையில் கைநனைத்தவைதான். 

இப்போது காங்கிரஸை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்னா ? காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் தேசிய இனங்கள் மீதான ராணுவ கொடூரங்கள், மாநிலங்களின் தன்னாட்சி உரிமை இன்ன பிற குறித்து காங்கிரசின் நிலையும் பாஜக நிலையும் ஒன்றுதான் என்கின்றனர். 

இந்திரா காந்தி வெறியாட்டம் போட்ட அவசர நிலை ஆட்சி, பிந்த்ரன்வாலே காலத்தில் பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, பஞ்சாப் படுகொலைகள் மற்றும் பல. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இனப்படுகொலையுடன் அரசியலில் இறங்கிய ராஜீவ் நடத்திய ஃபாசிச ஆட்சி, இந்திய அமைதிப்படை நடத்திய ஈழப்படுகொலை இப்படி எல்லாமே இருக்கின்றன. 30 ஆண்டுகள் முந்தைய நிலை இது. 

அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலையெடுக்கும் முன்பு காங்கிரஸ் ஆடிய வெறியாட்டம் இப்போது இருக்கும் பாஜகவுக்கு நிகரானது அல்லது அதிகமானது. இந்தியாவின் நிலை, இந்தியாவின் ஆளும் கட்சியின் நிலை இப்படியிருக்க இலங்கையில் சிங்கள-புத்த பேரினவாத தமிழ் வெறுப்பு நச்சு இலங்கை முழுவதும் பரவலாக ஈழத்தமிழினத்தை குதறி எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ் ஆயுதக் குழுக்கள் எழுச்சி இராணுவத் தாக்குதலையும் ஈழத்தமிழனை கொன்று குவிக்கத் தொடங்கியிருந்தது. இப்படி இலங்கையின் பயங்கரவாத ஃபாசிஸத்திற்கு எதிரான ஆயுதமேந்திய தமிழர்கள் 

ஏன் ஏன் ஏன் 

இந்தியாவின் தேசிய இனங்களை வேட்டையாடியும், அடக்கியும் வைத்துள்ள இந்தியாவிடம், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம், இந்திய ராணுவத்திடம், உளவுத் துறையிடம் வந்து, ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்றார்கள் என்பதை விளக்கினால் நலம். அப்படி வந்தவர்களிடம் ஏன் காங்கிரசின் யோக்கியதை விளக்கிக் கூறி தடுக்க வில்லை. 

ஃபாசிச எதிர்ப்பிற்காகத்தானே?

அப்படி வந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆதரிப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. இல்லை புலிகள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தலைப் புறக்கணித்து, ரணிலைத் தோற்கடித்து தனக்குத்தானே குழி தோண்டியதைப் போல பெரிய திட்டத்தோடேவா ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

கௌசல்யா - தமிழ்நாட்டின் மகள்

சமீபத்தில் திருப்பூர் நீதி மன்றம் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. நம் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள மிகச்சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக இதைப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு வராத நிலையிலும் இந்தத் தீர்ப்பை ஒரு சிறந்த முன்னோடியாகப் பார்க்க வேண்டும். எத்தனையோ ஆணவக் கொலைகள் நாளிதழ்களிலும் வருகின்றன. இந்த வாட்சப் காலத்தில் ஒரு கூட்டமே கூடி ஒருவரயோ அல்லது இருவரையுமோ அடித்துக் கொல்வதைக் கூட சுற்றி நின்று ஜாதிவெறி பிடித்த மனநோயாளிகள் கூட்டம் படம்பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கூட காண்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவிலே ஜாதிய எதிர்ப்பு சிந்தாந்தம் வலுவாக இருக்கும் (ஜாதிவெறியும் வலுவாகத்தான் இருக்கிறது) தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு மூலகாரணமாக இருந்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி வெளியான சங்கரும் கௌசல்யாவும் வெட்டப்படும் காணொலிக் காட்சிகள் மட்டுமல்ல, மறுபிறவி எடுத்து அதற்காகப் போராடிய கௌசல்யா என்ற அற்புதமான பெண்ணின் துணையும் கூட. தனது கண்ணெதிரே கணவனைப் பறிகொடுத்து, தானும் வெட்டுக்களை வாங்கி, உயிர் காப்பாற்றப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டு பெரியாரிய, தன்னார்வக் குழுக்களின் உதவியால் புது மனிதியாக மாறி தன் கணவனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த, தனது தந்தைக்கே தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் மனித நேயப் போராளியாக மிளிர்கிறார், ஆளுமையாக வரலாறு படைத்திருக்கிறார் கௌசல்யா. அவரின் செயல்களை நினைக்கையில் அவர் மேல் நமக்கு பேரன்பும், பாசமும், பெருமிதமும் பெருகி வருகிறது. 

இந்தத் தூக்கு தண்டனை அறிவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறது கௌசல்யாவின் குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தை நாசமாக்கியிருக்கிறது ஜாதி வெறி. இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் கூச்சப்படாமல் கௌசல்யாவை அசிங்கப்படுத்து வேலையை ஜாதி வெறி இழிபிறவிகள் செய்து வருகின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியிலிருக்கும் குடும்பப் பெண் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்வது உயிருக்கே உத்தரவாதமில்லாத செயலாக இன்றும் இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் ஜாதிவெறியில் ஆணவக் கொலை செய்து தூக்கு தண்டனை வாங்கியிருக்கிறது, இதற்காக கொஞ்சமும் கவலையோ துயரமோ இல்லாமல் கௌசல்யாவை இழிவு செய்து மீம்களையும் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர். 

இது மாதிரியான மன நோயாளிகள்தான் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மாதிரியான ஆட்களை தற்கொலைக்கோ அல்லது சொந்த மகளையே ஆள் வைத்து வெட்டுவதற்கோ தூண்டி விடுகிறவர்கள். இந்தமாதிரியான ஆட்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் ஜாதியை, தான் கௌரவம், குடும்ப மானம் என்றெல்லாம் கருதி அடிப்படை மனிதநேயத்தைத் தொலைத்து ஜாதிவெறி மனநோயை சரி என்று நம்பி கொலை செய்யத் துணிகிறார்கள். ஜாதிய சமூகத்தில் ஜாதிக்கு பயப்படும் மனிதர்கள், தான் சமூகம் என்றும் ஊர் உலகம் என்று நம்பும் இது மாதிரியான ஆட்கள்தான் ஜாதி வெறியை வாழவைக்கும் இழிபிறவிகள். இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், பக்கத்து ஊர்க்காரர்களாக இருக்கலாம், அங்காளி பங்காளிகளாக இருக்கலாம். இவர்கள்தான் அடுத்தவர்களை தூண்டிவிடுவது, சீர் செனத்தி கொடுப்பதை பெருமை பேசுவது, பொண்ணு வயசுக்கு வந்துட்டாளா இல்லையா என்று கேட்பது முதல், பையன் என்ன சம்பளம் வாங்கறான், பையனுக்கு இன்னும் கல்யாணமில்லையா, கல்யாணமாய் இத்தனை நாளாயும் குழந்தை இல்லையா, அந்தக் கோயிலுக்குப் போகணும், இந்த டாக்டரைப் பாக்கணும், நான் சொல்றா ஜோசியகாரரைப் பாருங்க என்றெல்லாம் ஆலோசனை சொல்வது,  அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி கிசுகிசு பேசுவது, இது போன்று பெண்ணின் தனிப்பட்ட படங்களை சமூகத்தில் தனது கழிவுக் கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்வது, போலித்தனமாக உச் கொட்டுவது இப்படிப் பல வகைப்படுவர். 

இது மாதிரியான ஊருக்கு 4 பேர்களாக இருக்கும் ஜாதிவெறி மனநோயாளிகள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? சின்னச்சாமி போன்றவர்கள் ஊர் என்ன சொல்லுமோ ?, நம்ம சனம் என்ன சொல்லுமோ ? சொந்தக்காரவுக என்ன சொல்லுவாகளோ என்றெல்லாம் மன அழுத்தம் கொள்ளாமல், சிறிது காலத்தில் கௌசல்யாவின் முடிவை அங்கீகரித்திருக்கக் கூடும். இப்போது கொலைகார சின்னச்சாமி மட்டும் தூக்கு மேடையில், சின்னச்சாமியின் ஜாதிவெறியைக் கூட்டிய ஜாதிக்காரர்கள் எல்லாம் கௌசல்யாவைத் திட்டிக் கொண்டும் சின்னச்சாமியின் ஈகத்தை மெச்சிக் கொண்டும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் தங்கள் ஜாதி சனத்துடன். 

இப்படியெல்லாம் திரியும் ஒரு பெண், தனது பெத்த தகப்பனுக்கே தூக்கு தண்டனை வாங்கித் தந்து விட்டாள் என்று பொருமுகின்றனர். அனைவரும் சங்கர் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேல் ஜாதிப் பெண்களைத் தொடுகின்றவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் அதிகமாக இருந்தனர். இப்போது கௌசல்யாவின் அப்பாவுக்கு தூக்கு உறுதியானவுடன் கௌசல்யாவை ஏசுவதற்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உண்மையென்ன ? சின்னச்சாமி தூக்குமேடைக்குச் செல்லக் காரணமே இது மாதிரி அவர் சார்ந்த சொந்தங்களும், சமூகமும்தான். இந்த எடுபட்ட ஜாதிய சமூகம்தான் அவரை அனைத்து வகையான உறவுகளையும் இப்படித்தான் இருக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகிறது. தனது மகள் அதை மீறியதால் சமூகத்தில் தனக்கு மரியாதை போய்விடும் என்று எண்ண வைக்கிறது. எனவே ஒரு தனி மனிதன் ஜாதியால், ஜாதிவெறியால், ஜாதிப்பாசத்தால் நிகழ்த்தும் வன்முறைக்கு ஜாதிதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ஜாதி இங்கே புனிதமாகி கௌசல்யாவை ஏசுகிறது. 

நம் முன்னோர்களெல்லாம் பொறியியல் படிக்கவில்லை என்பதற்காக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி கௌசல்யாவை பொறியியல் படிக்க வைக்காமல் இருக்கவில்லை. நாம்தான் படிக்காத தற்குறியாக இருந்து விட்டோம் தம் பிள்ளைகளாவது படிக்கட்டும் என்று படிக்க வைக்கிறார்கள். ஆனால் படித்து விட்டு, பட்டம் வாங்கி விட்டு வேலைக்கும் போய் விட்டு இருந்தாலும் நம்மைப் போலவே ஜாதியச் சாக்கடையில்தான் வாழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் மனநோய் விந்தையிலும் விந்தையல்லவா ?. நம் மகனோ மகளோ நம்மைப் போல் படிக்காத தற்குறியாக இருக்கக் கூடாது, ஆனால் நம்மைப் போல் ஜாதிவெறியனாகவே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ள முடியாத நம்பிக்கைகளால் நிறைந்ததுதான் ஜாதி. அதன் அடிப்படை தந்நலமும், போலிப் பெருமையும், மனிதநேயம் இல்லாமையும்தான். 

தேவர் ஜாதியினர்தான் தனது ஜாதிக்காரனுக்கு தூக்குதண்டனை வாங்கித்தந்ததால் கௌசல்யாவைத் திட்டுகின்றனர் என்று பார்த்தால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வன்னியர்கள், மாதிரி இன்ன பிற ஆண்ட பரம்பரைப் போலிப் பெருமையில் மூழ்கி இருக்கும் மனநோயாளிகளும் சேர்ந்து கௌசல்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய கீழ்மையைக் காட்டி வருகின்றனர். 

கௌசல்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இருக்கின்றன. அதை தூக்குதண்டனை வெளியான அன்று "சங்கர் இறந்ததிலிருந்து நான் நிம்மதியின்றி இருந்தேன். இத்தீர்ப்பு எனக்கு நிம்மதி அளித்தது என்று கௌசல்யா கூறியிருந்தார். இந்த செய்தியின் கீழே கௌசல்யா நிம்மதியின்றித் தவித்தபோது க்ளிக்கியது" என்று கீழ்க்காணும் படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அதை எல்லா ஜாதியிலிருக்கும் நாடகக் காதல் என்ற கதையை நம்புகிற, தலித்கள் மேல் ஜாதிப் பெண்களை மணந்து கொண்டு பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கின்றனர் என்று நம்பும் ஜாதிவெறியர்கள் தத்தமது ஃபேஸ்புக்கில், வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து தனது இழிவைப் பதிவு செய்து கொண்டனர். இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். அவர் முகத்தில் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. 

                                                      

                                                 

                                                  

அதாவது கௌசல்யா இப்போது ஜீன்ஸ் அணிகிறார். கூந்தலை வெட்டி விட்டார். அதாவது கெட்டுப்போய்விட்டாராம்.  ஆண்களுடன் ஊர் மேய்கிறார். அதற்கும் மேல் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதாவது இன்னும் முக்கால்வாசி ஆண்களுக்கு பெண்கள் ஆண் நண்பர்களுடன் பழகுவது, கைகோர்ப்பது, சேர்ந்து புகைப்படம் எடுப்பது, நெருங்கி நின்று தற்படம் (Selfie) எடுப்பது இதிலெல்லாம் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தக் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்லி அழ ?.

பின்னே என்ன ஒரு கணவனை இழந்த பெண் எப்படி இருக்க வேண்டுமாம் ? மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை உடுத்தி, முக்காடு போட்டு மூலையில் அமர்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு இருக்க வேண்டுமோ ? பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் உங்கள் புத்தி அப்படித்தானே போகும்.

அவர் பொறியியல் பயின்றவர், செத்துப் பிழைத்த பின்னர் பெரியாரியம் பயின்றவர். அவர் அப்படித்தான் இருப்பார். அப்படி மகிழ்ச்சியாக இருந்ததால்தான், துணிவாக இருந்ததால்தான், சராசரிப் பெண்களின் அடையாளமான நீண்ட கூந்தலைத் துறந்து, ஜீன்ஸ் அணிந்து மனிதநேயராக சிந்திக்கத் தொடங்கியதால்தான் இப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்து இன்று அதை நியாயப்படுத்தி பேசவும் முடிகிறது. அவர் அப்படித்தான் உடையணிவார், நண்பர்களுடன் ஊர் சுற்றுவார், சிரித்துக் கொண்டே புகைப்பத்திற்குக் காட்சி தருவார். மேடைகளில் பேசுவார், நடனம் ஆடுவார் இதற்கு மேல் அவர் திருமணமும் கூட செய்து கொள்வார். அதற்கு இப்போது என்ன ? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா ? என்ன நடந்தாலும் ஜாதிவெறியால மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருந்த முடியாது. உங்களிடம் நல்ல பெயர் எடுக்க தன் வாழ்க்கையை ஏன் அவர் வீணாக்க வேண்டும். முடிந்தால் மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். யார் யாரை காதலிக்க வேண்டும் யார் யாரை காதலிக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு பண்பாடாம் அதுதான் மதமாம் கலாச்சாரமாம். இதையெல்லாம் இவர்கள் கட்டிக் கொண்டு அழ இருப்பவர்கள் சாக வேண்டுமாம். 

இந்த மாதிரி அயோக்கியர்கள் தம் திருமண உறவுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் ? ஏங்க பொண்ணு ஏழையா இருந்தா பரவால்லை, நம்ம சாதியா இருந்தா போதும் என்றா சொல்கிறார்கள். அது தமது பையனுக்கோ/பெண்ணுக்கோ வரன் அமையாமல் பல வருடங்கள் இருந்தால் மட்டுமே இறுதியாக சொல்லும் வாக்கியம். இதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கேரளா. அங்கே போய் பெண் எடுத்தால் யாரும் ஜாதி கேட்க மாட்டார்கள், கல்யாணப் பொண்ணு கேரளா என்றால் அத்துடன் கேள்விகள் முடிந்து விடும். 

பொண்ணுக்கு எத்தனை பவுன் போட்டாங்க ? பையனுக்கு என்ன சம்பளம் ? எத்தனை ஏக்கரா தேறும்? தாய்மாமன் என்ன செய்தார் ? என்றுதானே எல்லா சாதிசனமும் கேட்கிறது. ஆக இங்கே ஜாதிக்கு மரியாதை இல்லை. பணத்துடன் கூடிய ஜாதிதான் மதிப்புப் பெறுகிறது. பணத்தால்தான் ஜாதியே மதிப்புப் பெறுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் தனது குடும்ப்பத்துடன் கந்துவட்டிக் கொடுமை தாளாமல் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் தீக்குளித்தார். குடும்பமே அழிந்தது. அந்த இறந்தவரின் குடும்பமும், கந்து வட்டி கொடுத்தவரும் ஒரே ஜாதி என்று கேள்விப்பட்டேன். இதனால் அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரின் மானம் போனதாக எந்த ஜாதிவெறியனும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் தான் விரும்பிய வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் செய்தால் மட்டும் ஜாதி மானம் போய்விடும். அதற்கு அவர்களைக் கொன்று தானும் தூக்கு மேடைக்குச் சென்று செத்தால்தான் ஜாதி கௌரவம் காப்பாற்றப்படும். அடுத்த ஜாதிக்காரன் கரு தன் ஜாதி வயிற்றில் வளர்வது கேவலம் என்றால் அடுத்த ஜாதிக்காரன் விடும் மூச்சைக் கூடத்தான் சுவாசிக்கிறார்கள். வேற சாதிக்காரன் விட்ட காத்தை நான் சுவாசிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு மூச்சை நிறுத்திப் பாருங்களேன். 

என் பங்குக்கு நானும் ஏதோ என்னால் முடிந்த மீம்கள்

                  


                  

Download As PDF
Bookmark and Share

Post Comment

தஸ்லிமா நஸ்ரின் விரட்டியடிப்பு, அப்ப ஜனநாயகம் ? அதுவும்தான் !

கடந்த மாதம் வியாழக்கிழமை வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா அஜந்தா, எல்லோரா பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்தார். அதை அறிந்த ஆல் இன்டியா மஜ்லிஸ் - இ - இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சார்ந்த சயித் இம்தியாஸ் அலி என்ற முன்னாள் என்டிடிவி இன் நிருபர்/சட்டப் பேரவை உறுப்பினர் தலைமையில் ஔரங்காபாத் விமான நிலையத்தின் வெளியே நின்று ஏறக்குறை 500 பேர்களுடன் வந்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவர் விமான நிலையத்திலேயே இருந்து அடுத்த விமானத்தில் மும்பை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இதைப் பற்றி வருந்திய தஸ்லிமா ஒரு பெரும் ஜனநாயக நாட்டில் இங்கனம் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். 

அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலும் அவர் தனது கருத்து காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் எங்கும் தனித்துச் செல்ல இயலாது. பாதுகாவலர்களுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் தம் மகிழ்ச்சிக்காக எங்கும் தனித்துச் செல்ல முடியாத துயரநிலையாகக் கருதுகிறார். 

நான் பல வருடங்களாக கனவும் கண்டேன் அது பலிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். அஜந்தாவின் சிறப்புகளையும், எல்லோராவின் மாயாஜாலங்களையும் பார்க்கபோகிறேன் என்று நினைத்தேன். நான் இந்தியா கொண்டிருக்கின்ற பல வரலாற்று அற்புதங்களை கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றைக் காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் என் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இழந்திருக்கிறேன். இங்கே இந்தியாவில் ஆயுதமேந்திய பாதுகாவலர்களைக் கொண்டிருக்கிறேன். தனிச்சிறப்பான அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 2007 இல் என் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இது தொடர்கதையானது. நான் நிகழ்ச்சிகளில் எங்காவது கலந்து கொள்ளப் போகிறேன் என்றால் அது செய்தியாகிவிடும். விளம்பரமாகி விடும். நான் தாக்குதல் அச்சமின்றி கலந்து கொண்டிருப்பேன். ஆனால் தாக்குதல் முதன் முறை நடந்த பின்னர் அது தொடர்கிறது. ஒரு தொற்று நோயைப் போலப் பரவி விட்டது. நான் எனது மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்ய முடிவதில்லை. விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. என்னுடைய பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டியிருக்கிறது. எங்கே, எதற்கு, எப்போது என்றெல்லாம்.  பின்பு அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வர். 

நான் அஜந்தா செல்வதை யாருக்கும் அறிவிக்க வில்லை. விமானப் பயணம் தொடர்பாக நான் கொடுக்க வேண்டிய அனைத்து உண்மையான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் அதை மகாராஷ்ட்ராவிற்கு அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி எனது பாதுகாப்பை உறுத் செய்தனர். நான் மகாராஷ்ட்ராவில் பாதுகாவலர்களைப் பெற்று விட்டேன். தங்குவதற்கு விடுதியிலும் பதிந்து விட்டேன் என்னுடன் வருபவரது பெயரில். துணையாக எனது பெயரை சேர்த்துக் கொண்டேன். என்னுடன் துணையாக வந்த இளம்பெண் எனது மகள் போன்றவர். ஜூலை 29 ஆம் நாள் நான் டெல்லியிலிருந்து ஔரங்காபாத் சென்றேன். அங்கே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதே ஒரு அதிகாரி என்னைத் தடுத்தார். 

"இங்கே நிலைமை சரியில்லை. உங்களுக்கு எதிராக 500 பேர் நீங்கள் தங்கப் போகிற விடுதியின் முன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய வரவு மிகவும் இரகசியமாக டெல்லி காவல்துறையால் மராட்டிய காவல்துறைக்கு அனுப்பப்பட்ட செய்தி கடும்போக்குவாதிகளுக்கு எப்படித் தெரிந்தது ?. அந்த அதிகாரிக்கும் எப்படி இந்த செய்தி கசிந்தது என்று தெரியவில்லை. தாங்க முடியாத வேதனையுடனும், உதவியற்றவளாகவும் உணர்ந்த நான் அவரிடம் நான் 

"இப்போது என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார். 

எப்போது ? எப்படி ? என்றேன். 

நாளை காலையில் டெல்லிக்கு ஒரு ஏர் இன்டியா விமானம் இருக்கிறது.

நாளைக் காலை வரை என்ன செய்வது ? நான் எங்கே தங்குவது ?"

விமான நிலையத்தில்.

பின்பு நான் ஏர் இன்டியா பயணச்சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று மும்பைக்கு இரண்டு சீட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அதற்குள் போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள்ளும் வந்து விட்டார்கள். என்னுடைய பாதுகாப்பு அதிகாரி எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். நான் அங்கிருந்து செல்லும் போது 200 பேர் காது கிழியும் அளவுக்கு "தஸ்லிமா திரும்பிப் போ" "தஸ்லிமா ஒழிக" "இறைவன் மிகப் பெரியவன்" என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். மும்பைக்குச் சென்ற பிறகு எங்காவது கலவரம் நடந்திருக்கிறதா என்று இணையத்தில் பார்த்து விட்டு இல்லையென்று நிம்மதியடைந்தேன். இது அவர் எழுதிய அஜந்தா எல்லோர அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதி. முழுவதும் படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும். 

ஒரு தனி நபர் அதுவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஒடி ஒளிய வேண்டிய நிலையில் இருக்கிறார். இங்கே கருத்துரிமைக்கான பாதுகாப்பு என்பது அந்த அளவில் இருக்கிறது . சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு வட மாநிலங்களில் தலைப்புச் செய்தி அளவுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே பெரிதாக எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. 

இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மதவாதிகள்/மதவெறியர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பவர்கள் மதவாதிகள். ஆனால் இறைமறுப்பாளர்களை மட்டும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். மதத்தை விமர்சிப்பவர்கள், மதவாதத்தை எதிப்பவர்களுக்கு படுகொலையைத்தான் பரிசளிக்கிறார்கள். 


ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதவாதிக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா ? உலகத்தின் எல்லா இஸ்லாமல்லாத நாடுகளுக்கும் செல்கிறார். அங்கே யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. அதே போல் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் இஸ்லாமல்லாத ஜனநாயக நாட்டில் கூட சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியவில்லை. நிம்மதியாக நடமாட முடிவதில்லை.

இஸ்லாமிய மதவாதிகள், விவாதத்துக்கு வா நேரடி விவாதத்துக்கு வா என்று அழைக்கிறார்கள். அதே விவாதத்தை இணையத்தில் நடத்துவது வீண் என்கிறார்கள். இணைய விவாதம் வீண் என்று சொல்கிறவர்கள் இணையத்திலிருந்து வெளியேறி களத்தில் மட்டும் இயங்குவதில்லை, தொடர்ந்து இணையத்திலேயேயும் இயங்குகிறார்கள், ஏன்?. இஸ்லாமிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே இல்லை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை இஸ்லாமிய எதிரிகள் என்று வகைப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானவராக அவரை நிறுத்தி விடுகிறார்கள். கருத்தை விமர்சனம் செய்ய முடியாத பட்சத்தில் அவர் எதிரி ஆக்கப்படுகிறார்.

ஏன் இஸ்லாமை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஏன் எங்கள் மீது வன்மம் என்றும் கூட நினைக்கக்கூடும். இஸ்லாமியர்கள் தாங்கள் உண்டு தங்கள் மதம் உண்டு என்று வாழ்வதில்லை, அதைப் பரப்புரை செய்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வெறும் மார்க்கமாக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி அறிவியல் ரீதியாக விவாதிக்கும் துணிச்சல் தங்கள் மதத்தில் இருப்பதாகக் கருதினால் எல்லாவகை எதிர்க்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய போராட்டங்களால் அல்ல. வன்முறைகளால் அல்ல. ஆனால் என்ன செய்கிறார்கள் ? எங்கே அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அங்கே விமர்சனம் செய்பவரை அவதூறு செய்கிறார், வெறுக்கிறார், விதண்டாவாதம் செய்கிறார், இஸ்லாமிய எதிரி, துரோகி என்கின்றனர். மற்றவர் மீதான வெறுப்பை விதைக்காத வரை விமர்சனம் என்பது எந்த ஒரு எல்லையும் அற்றது. 

இவர்கள் மதத்தை மட்டும் பரப்புரை செய்வதில்லை, அது சார்ந்த சட்டத்தையும் (ஷரியத்) உலகத்திற்கே பொதுவானதாகக் காட்டுகின்றனர். படைப்புக் கொள்கையை மறுக்கும் பரிணாமக் கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இப்படி அறிவியல் அறிஞர்கள் போல் விவாதம் செய்பவர்கள், அதே போல் இஸ்லாமை அறிவியல் பூர்வமாக வரலாற்றுத் தரவுகளுடன் விமர்சனம் செய்பவர்களுடன் எதிர் விவாதம் செய்யும் போது அதை எப்படி எதிர்கொள்கின்றனர். அவரை இஸ்லாமிய சமூகத்தின் எதிரியாகப் பிரகடனம் செய்து விடுகின்றனர். இறை மறுப்பாளர்களின் கருத்துக்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றது, மனதைப் புண்படுத்துகிறது, மத நிந்தனை செய்கிறது என்ற அயோக்கியத்தனமான கருத்துக்களைக் கொண்டு வந்து பாமர மக்களைத் துணைக்கு அழைத்து இறைமறுப்பாளர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியராகப் பிறந்து இறைமறுப்பாளராக மாறியவர்கள், மதவாதத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்த நிலைதான்.

யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்
ரஷ்ய கன்னிகாஸ்த்ரி இஸ்லாத்தைத் தழுவினார்
அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாத்தை ஏற்றார்
பாபர் மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை ஏற்றார்
பெரியாரியவாதி ஏகத்துவத்தை ஏற்றார்
ஐரோப்பாவில் இஸ்லாம் வளர்கிறது
அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது
ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுகிறது
இஸ்லாமை நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் பெண்கள்

என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது ? அந்தக் குறிப்பிட்ட நபர் இஸ்லாமை ஏற்பதை அந்த நாட்டின் அரசோ அல்லது சமூகமோ தடை செய்வதில்லை. யாரும் இஸ்லாத்தைப் பரப்பக்கூடாது என்று போராடவில்லை. பிறகு ஏன் இஸ்லாமிய மதவாதிகள் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு ஜனநாயகம் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் சுதந்திரத்தை இறைமறுப்பாளர்கள் பயன்படுத்தி மதத்தை விமர்சித்தால் அதற்கெதிராக போராடுவார்கள். தமக்கு அதிகாரம் உள்ள நாடுகளில், பகுதிகளில் சட்டத்தின் மூலமாகவே மத எதிர்ப்பைத் தடுத்து வைப்பார்கள். 

மதவாதம் அற்ற நாடுகளில், அதாவது சட்டத்தில் மதம் என்பது தனிமனித உரிமையாக உள்ள நாடுகளில், மதம் என்பது தனி நபர் சார்ந்தது. அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ? இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதச் சட்டம் நடைபெறும் நாடுகளில் எந்தளவுக்கு இறைமறுப்பாளர்களுக்கு இருக்கிறது. நான் கேட்பது இஸ்லாமிலிருந்து விலகி இறைமறுப்பாளராக வாழ்பவர்க்கு. இறைமறுப்பை பரப்புரை செய்பவர்க்கு. இல்லையென்றால் அதற்கு இஸ்லாமைத்தானே விமர்சிக்க வேண்டும் ? 


நான் ஃபேஸ்புக்கில் விவாதமொன்றில் ஒருவரிடம் இந்தக் கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமைப் பரப்புவதைப் போல் இஸ்லாமிய நாடுகளில் வேறு கொள்கையைப் பரப்பு முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இஸ்லாமை அவர்கள் சட்டமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் பிழைக்கபோன இடத்தில் உங்கள் சித்தாந்தத்தைச் சொன்னால் யார் சம்மதிப்பார்கள் என்றார். இஸ்லாமியர்களும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிழைக்கத்தான் சென்றார்கள். படியளக்கச் செல்லவில்லை. அங்கே அவர்கள் தமது சித்தாந்தத்தைப் பரப்பவில்லையா ? நான் கேட்பது மதவாத நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மதத்திலிருந்து விரும்பாமல் வெளிவருகிறவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை ?

இஸ்லாமியப் பரப்புரை எப்படித் தொடங்குகிறது. சிலைகள் யாவும் கடவுளல்ல. இணை வைத்தல் கூடாது. படைப்பினங்களை வணங்கக் கூடாது. இஸ்லாமைத் தவிர அனைத்து மதங்களும் சிலையை வைத்து வணங்குகின்றன. அதைத்தான் முதலில் மறுக்கிறது இஸ்லாம். இஸ்லாம் பரப்புரையே மற்றவர்களின் முதல் நம்பிக்கையான (மாற்று மதங்களின்) "அவர்களின் கடவுள்" உண்மையான கடவுள் இல்லை நாங்கள் சொல்வதுதான் உண்மையான கடவுள். ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் நடுவில் நின்று உங்கள் நம்பிக்கை பொய் நாங்கள் சொல்வதுதான் மெய் என்கிறார்கள். உங்கள் கடவுள் வெறும் சிலை அது கடவுள் இல்லை" என்கிறார்கள். பிழைக்க வந்த நாட்டில் அங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறோம் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் இஸ்லாமிய மதவாதிகள் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள்.  அது எப்படி சாத்தியமாக இருக்கிறது, மிக இயல்பாக இருக்கிறது ? அந்த நாட்டின் ஜனநாயகமும் அதனால் பண்பட்ட அந்நாட்டினரின், அச்சமயத்தவரின் சகிப்புத்தன்மையின் காரணமாகத்தானே. 

அதே நேரம் இவர்களை சுதந்திரமாக மதம் பரப்பச் செய்ய அனுமதிக்கும் ஜனநாயகத்தை, அதைப் பின்பற்றும் மேற்கத்தியப் பண்பாட்டை விமர்சனமும் செய்கிறார்கள். விபச்சாரம், அவிழ்த்துப் போட்டு அலையும் கலாச்சாரம் என்பார்கள். அவிழ்த்துப் போடும் சுதந்திரம் இருப்பதால்தானே அவர்கள் வேறுமதத்தையும் தழுவும் சுதந்திரமும் இருக்கிறது. 

இவர்கள் தமது மதக்கருத்துக்களைத்தான் எல்லா நிகழ்வுகளின் மீதும் கருத்துக்களாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. உணர்வு (இஸ்லாமிய) என்ற வார இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கல்லூரியில் விரிவுளையாளரும், கல்லூரி மாணவியும் திருமணம் செய்திருந்த செய்தியைப் போட்டு அதில் விமர்சனமும் இருந்தது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி கற்பது இதுமாதிரியான செயல்களைத் தூண்டும். எனவே இருபாலருக்கும் தனித்தனியான கல்வி நிலையங்களைக் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று முடித்திருந்தார்கள். இது மாதிரிதான் சமூகத்தில் நிகழும் பலவகையான நிகழ்வுகளில் தமது மதம் சொல்லும் கருத்துக்களைச் சொல்லி அதைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். 

காதல் தவறானது, கலப்புத் திருமணம் தவறானது போன்ற தனி மனித உரிமைகளுக்கு எதிரான மதக் கருத்துக்களை சொல்கிறார்கள்  காதலர் தினம் விபச்சாரம், கற்புக்கொள்ளை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலக் கூடாது என்கிறார்கள். ஆக இவர்கள் இப்படியெல்லாம் விமர்சனம் செய்வது தான் சாராத சமூகத்தையும் சேர்த்துத்தான். இதே போல் இஸ்லாமிய எதிர்ப்பாளர் தரப்பு பர்தாவை விமர்சனம் செய்யும் போது மொத்த சமூகத்தையும் சமூகப்பெண்களையும் வன்மம் கொண்டும் வெறுப்பு கொண்டும்வி மர்சனம் செய்கிறீர்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ?

இதே போல் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவன் நின்று கடவுள் இல்லை, முகமது தூதர் இல்லை என்று சொல்லிவிட்டு தனது விளக்கத்தைத் தொடர முடியுமா ?. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. ஒருவன் மத நிந்தனை செய்துவிட்டான் என்ற புரளியைக் கிளப்பி விட்டாலே போதும். வங்க தேசம், பாகிஸ்தான் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவன் உயிருடன் இருக்க மாட்டான். ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இஸ்லாமிய மதத்துக்கு மட்டும் இந்த சலுகை ?. உங்களை எப்படி புண்படுத்தாமல் விமர்சிக்க முடியும். நாங்கள் அறிவியல் பூர்வமானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று சொல்பவர்கள் ஏன் "மதத்தைப் புண்படுத்தும்" என்ற நேர்மையான விவாதத்திற்கு எதிரான கருத்தைப் பயன்படுத்த வேண்டும் ?

இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை. ஏனென்றால் மதவாதிகளுக்காக தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியதே இடதுசாரிகள் என்றிருக்கையில் அதற்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும். கருத்தை எதிர்கொள்ளும் பொறுமையோ பக்குவமோ மதவாதிகளுக்கு இருந்ததே இல்லை. இங்கே மதச்சார்பின்மை என்பதே போலி மதச்சார்பின்மை என்றும், மதச்சார்பின்மைவியாதிகள் என்றும், சிக்குலரிஸ்டுகள், சூடோ செக்குலரிஸ்டுகள் என்றும் நல்ல பெயர் வாங்கியவர்கள்தான் மதச்சார்பின்மை பேசுகிறவர்கள். அப்படி இருக்க மதவாதிகள் மட்டும் எப்படி இருப்பார்கள். மத உணர்வைத் தூண்டி அரசியல் செய்கிறவர்களாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் இது பெரிய செய்தியாகவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

முஸ்லிமாக இருந்தால் போதும் கொலை செய்யப்படலாம்

கடந்த வியாழக்கிழமை (22-06-2017) ஒரு கொலை நடந்திருக்கிறது. மோடியின் இந்தியாவில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும் கொலைதான். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள் அத்தகையவர்களாக இருக்கின்றனர். இதுவும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுகிற மாதிரியான நிகழ்வுதான். 

1. செப் 2015 : முஹம்மது அஹ்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனால் அவர் வைத்திருந்தது ஆட்டுக்கறி. கொன்றவனின் தந்தை ஒரு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் வைத்திருப்பவர்.

2. அக் 2015 : உத்தம்பூரில் ஜாஹித் ரசூல் பட் என்னும் 16 வயது சிறுவன் மாடுகள் ஏற்றிய வண்டியில் இருந்த குற்றத்திற்காக அடித்து கொல்லபட்டான்.

3. மார்ச் 2016 : லத்திஹரில், முஹம்மது மஜ்லும், ஆசாத் கான் இருவரும் மாடுகளை விற்பனை செய்த காரணத்திற்காக தூக்கிலிடபட்டு கொலை செய்யபட்டனர்.

4. ஏப்ரல் 2017 : அஸாம் மாவட்டம் அபூ ஹனீஃபா, ரியாஸூதீன் அலி இருவரும் மாடு விற்பனை செய்பவர்கள் என சந்தேகபட்டு அடித்தே கொலை செய்யபட்டனர்.

5. ஏப்ரல் 2017 : பெஹ்லு கான் பசு காவலர்கள்!? என்னும் பயங்கரவாதிகளால் அடித்து துன்புறுத்தபட்டு கொல்லபட்டார்.

6. மே 2017 : மாலீகன், மஹாராஸ்ட்ராவில் இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பால் பண்ணைக்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது இந்துவெறி மாட்டுவெறி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.  

(தகவல்கள் ஃபேஸ்புக்கில் சித்திக் என்பவரின் பதிவிலிருந்து)

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் கொல்லப்பட்டவன் ஒரு முஸ்லிம். கொல்லப்பட்ட காரணமும் நமக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ஏனென்றால் அவன் "தேசப்பகைவன்" அல்லது "மாட்டிறைச்சி உண்பவன்" அல்லது "முல்லா" அல்லது அம்மூன்றுமே எனக் கொள்ளலாம். அதனால் அவனைக் கொல்லலாம். இத்தனைக்கும் அவன் 16 வயதுச் சிறுவன். ரம்ஸானைக் கொண்டாடுவதற்காக பொருட்களை வாங்கி வரக் கடைக்குச் சென்றிருக்கிறான், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு. திரும்பி வருகையில் பயணியர் ரயிலில் வந்திருக்கிறான். அவனுடன் அவனது சகோதரர்கள் மூவரும் வந்திருக்கின்றனர். 

அப்போது ஒரு கும்பலும் ரயிலில் ஒரு நிறுத்தத்தில் ஏறியிருக்கிறது. இவர்களுடன் இருக்கையில் அமர்வது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது. இவர்களின் முஸ்லிம் அடையாளமான தாடியும் குல்லாவும் சேர்ந்து இவர்களை பலியாக்கியிருக்கிறது. தவிரவும் ஜுனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுடன் சண்டையிட்ட அக்கும்ப்பல் இவர்களை, இவர்களின் மதத்தை அவமானப்படுத்தி ஏசியிருக்கிறது, குல்லாவைப் பிடுங்கி வீசியது, தாடியைப் பிடித்து இழுத்திருக்கிறது. "தேசப்பகைவன்", "மாட்டிறைச்சி உண்பவன்", "முல்லா" என்றெல்லாம் அவர்களை வசைபாடிய கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது. இச்சண்டையில் இச்சிறுவனை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொடிய நிகழ்வு நடக்கும் போது சுற்றியிருந்தவர்கள் இவர்களை "தொலைத்துக் கட்டச்" சொல்லி ஆரவாரம் செய்துள்ளனர். இது ஆர் எஸ் எஸ் இயக்க பயங்கரவாதிகள் செய்ததா அல்லது அந்த கொடிய பயங்கரவாதக் கொலைக் கொள்கைகாளால் சைக்கோவான கும்பலால் செய்யப்பட்ட கொலையா என்று தெரியவில்லை. இது ஒரு வெறுப்புணர்ச்சியால் விளைந்த கொடூரக் கொலையாகும். 

இந்துக்கள் பசுக்களை வணங்குகிறார்கள், அதைக் கொல்வது பாவம் என்பது எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கையல்ல. இங்கே பசுவை வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களே அதுவும் மாமிச உணவு உண்ணாதவர்களே மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி, மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதி மூலமாக பணக்காரர்களாக விளங்குகிறவர்கள். ஆனாலும் பசு இந்துக்களின் தெய்வம் என்ற போலிக் கருத்தை உற்பத்தி செய்து அதை சமூகம் முழுவது பரவச் செய்ய முடியும், அதைக் கொல்பவர்களை, உண்பவர்களை, விற்பவர்களை, வாங்குபவர்களை கொலை செய்ய பசுக் காவலர்களால் முடியும். இதெல்லாம் ஒரு நாடா ! உண்மையில் அவர்கள் பசுக் கறியை வைத்திருக்கக் கூடத் தேவையில்லை, அப்படி ஒரு வதந்தியையும் அவர்களே உண்டாக்குவார்கள், அவர்களை அடித்தே கொல்லவும் செய்வார்கள். அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இந்த நாட்டை அப்பேர்ப்பட்ட கொள்கையுடன் ஆள்கிறார்கள். கேவலம் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரும் அவநம்பிக்கையாக உணர்கிறேன் இந்த நாட்டைப் பற்றி !

ஒரு முஸ்லிமைக் கொல்ல இனிக் காரணம் எதுவும் பெரியதாக வேண்டியதில்லை. அவன் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்று சொன்னால் போதும். இன்னும் பத்தாயிரம் முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டாலும் இந்து சமூகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் மௌனம் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவே அன்றி வேறில்லை. அந்தளவுக்கு சமூகமே வக்கற்று தந்நலமேறி, அலட்சியமயமாக உள்ளது. இந்து பயங்கரவாதமோ இந்துக்கள் பெயராலேயே அனைத்து வன்முறைகளையும் முஸ்லிம்களின் மீது செலுத்திக் கொண்டு வருகிறது. நாமெல்லாம் 2017 ஆம் ஆண்டில் இதை மௌனசாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி துலுக்கனுக்கு பாடம் புகட்டினார் என்றுதானே பாஜகவை ஆதரிக்கும் மனநிலை பலருக்கு, அவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் என்ன செய்ய முடியும் ?

ஜுனைத்

ஜுனைத் பிணமாக
ஜுனைத்தின் இல்லத்தில்

நன்றி - http://www.newsjs.com/url.php?p=http://www.hindustantimes.com/delhi-news/how-could-they-hate-us-so-much-family-in-shock-after-16-year-old-muslim-boy-stabbed-to-death-on-train/story-TEzAfE9atfWv0EHaXJm6JJ.html
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜாதி

ஜாதி என்பது இந்து மதத்திற்குச் சொந்தம் என்பதெல்Ýgr¨?லாம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இந்தியாவைத் தாண்டியும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. இன்னும் மனுதர்மத்திலிருந்துதான் பார்ப்பனர்களிடமிருந்துதான் ஜாதியை அனைவரும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது ?   
ஜாதி வெறியற்ற மிகச்சில இந்துக்களையும் மதவெறியர்களாக்கி, இந்துத்துவாவாதிகளிடம் தள்ளிவிட்டதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள் சாதனை. பெரும்பான்மை இந்துக்களால் நிராகரிக்கப்படும் பாரதிய ஜனதாக் கட்சியை வளர்த்துவிடுவதற்கு இந்தப் போக்கும் ஒரு காரணம். 
இதை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஜாதி உணர்வில்லாத மத நம்பிக்கை அதிகமாக உள்ள முஸ்லிம்களை எந்தவொரு நெருடலுமில்லாமல் இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இஸ்லாமியர்களைத் தோழர் என்றே அழைக்கிறார்கள். அவர்களின் மதப்பரப்புரைகளையும் மதப்பெருமிதங்களையும் மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அதே வழிமுறையை இந்துக்களிடம் அவர்கள் செய்வதில்லை. 
இஸ்லாமிய மதவாதத்தை ஒரு விமர்சித்தாலே அவரைக் "காவிகள்" என்னுமளவிற்கு அவர்கள் இஸ்லாமியர்களை வளர்த்து விட்டுள்ளனர். சமீபத்தில் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய, விமர்சித்த பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அம்மதத்தைச் சேர்ந்த ஐந்தாறு காட்டுமிராண்டிகள் படுகொலை செய்தனர். அதைக் கூட கண்டிக்காத முற்போக்கு பெரியாரியவாதிகள் இருக்கின்றனர். கொல்லப்பட்டவன் பெரியாரிய இயக்கத்தில் இருந்தால் கூட அம்மதத்தை விமர்சிப்பது தீட்டுப் பட்டுவிடும் போலும். 
மற்றபடிக்கு, அவர்கள் இண்டு இடுக்கெல்லாம் இந்துத்துவ அடையாளங்களை நோண்டியெடுத்து அடையாளங்காட்டுகிறவர்கள். இதெல்லாம் எங்கு போய் முடியும் ? 
Download As PDF
Bookmark and Share

Post Comment

கமல் ஹாசனுக்கே தெரியவில்லையா ?

சகிப்புத்தன்மை குறைந்து வருவதல் போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அறிவுப்பூர்வமாகத்தான் தோற்கடிக்க வேண்டும்  - செய்தி.

கமல் திருப்பித் தருவில்லை என்பதிலெல்லாம் வருத்தமில்லை. அவர் திருப்பித் தந்திருந்தால் அது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கும் என்பது மட்டும் உண்மை. உண்மையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்காத, அலட்சியமான போக்கிலேயே இருக்கிறது அவரது பதில். பாவம் அவர் மட்டும் என்ன செய்வார். அவருக்கே கருத்து சுதந்திரம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவரது படங்களில் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்வதற்காக நம்பிக்கையாளர்களிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை எந்தளவு குரூரமாக எள்ளப்படுகிறார். அதுவும் கருத்து சுதந்திரம் அற்ற தன்மை, பிறருடைய பண்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத, தெரியாத அற்பர்களின் சகிப்பின்மைதான். அதன் வேறுவடிவம்தான் இது. இதை எப்படி கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிப்பது ?

சரி விடயத்திற்கு வருவோம். கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிக்க வேண்டும் என்கிறார். எப்படி அறிவுப்பூர்வமகாத் தோற்கடிப்பது? எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பது எவ்வளவு அறிவுப்பூர்வமான செயல். இப்படித் திருப்பி அளித்ததன் மூலம் தாங்கள் உழைத்துப் பெற்ற பெறுமதியை தானே இழக்கத் துணிவது பிறர் துன்பம் கண்டு வெதும்பி தன் இயலாமையைக் காட்டக் கிடைத்த ஒரே ஜனநாயக, அறிவுப்பூர்வமான வழிதானே இந்த விருதைத் திருப்பிக் கொடுத்தல். இது அறிவுப்பூர்வமான செயலன்றி வேறென்ன ஆயுதப் பூர்வமான செயலா ?

இதைப் புரியாத ஓநாய்க் கூட்டம் எழுத்தாளர்களைக் கொக்காணி காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் ராவணன் சீதையத் தூக்கிச் சென்றபோதே திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற ரீதியில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதையே கமலும் செய்கிறார். கமலுக்குத்தான் இந்தியா என்றால் ரொம்பவும் பிடிக்குமே !! இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைக் கூடவா அறியாமல் இருக்கிறார் ?

இவரது முன்னாள் துணைவரின் படம் ஃபர்ஜானியா ஏன் தடை செய்யப்பட்டது ?

இவரது நண்பர் ஷாருக்கான் கமல் தற்போது சந்தித்து விட்டு வந்தாரே தாக்கரேவின் புதல்வர், அவர்களின் கூட்டத்தினரால் எவ்வாறெல்லாம் ஏசப்படுகிறார் ?  உதாரணத்திற்கு இப்போதும் கூட ஒன்று

ஏன் கமல்ஹாசனுக்குத் தெரியாதா, தான் இயக்கிய முதல் படமான ஹேராமிலேயே , ஏணி மேல் ஏறி முஸ்லிம்களுக்காக இந்துக்களை துப்பாக்கியால் சுட்ட சாகேத் ராமன் கமல்தானே.

அவ்வை சண்முகியில் மாட்டை வெட்டுகிறவனையா நம்மா ஆத்துக்கு சமயக்காரன் என்று கேட்ட மாமனாரிடம், நீங்களும் அதே மாட்டை வெட்டித்தான் தோலை எக்ஸ்போர்ட் பண்றேள் என்ற கேட்ட பாண்டியனும் கமல்தானே ?

கமலுக்கு இதெல்லாம் தெரியாதா ?. ஓ இப்போதுதான் கமல் "உன்னைப் போல் ஒருவன்" என்றாகி "விஸ்வரூபம்" எடுத்துவிட்டார் என்கிறீர்களா ?? சரிதான். 

Download As PDF
Bookmark and Share

Post Comment

இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். 



Download As PDF
Bookmark and Share

Post Comment

சில உண்மைகள்

ஒரு இணையதளத்தை எதேச்சையாகக் காண நேரிட்டது. அதில் கிடைத்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பொய்யை பொய்யென்று உண்மையுரைப்பது நமது கடமையல்லவா ?

ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்று எல்லோரும் பழி வாங்கினால் உலகில் எல்லோரும் குருடாகிவிடுவார்கள் என்று காந்தி சொன்னதாக அங்கங்கே படிக்க நேர்கிறோம் இல்லையா ! அது காந்தி சொன்னதாக எந்தக் குறிப்பிலும் இல்லை. காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி பேசிய வசனம்தானாம் நாம் காந்தி சொன்னதாக நம்பிக் கொண்டிருப்பது.

பல நாட்களாக இது இணையத்தில் உலா வந்து கொன்டிருக்கின்ற புகைப்படம். இதில் இருப்பது காந்திதான் என்று நானும் நம்பிக் கொண்டிருந்தேன். இதில் நடனமாடுகிறவர் (காந்தி வேடமணிந்த) ஒரு ஆஸ்திரேலிய நடிகராம். சற்று உற்று நோக்கினால் கூட விளங்கி விடும். அந்நபரின் கையைப் பாருங்கள். வலுவான உடல்வாகுடையவர் என்பது புரியும். காந்தி மிகவும் ஒடிசலான உடலுடையவர். காந்தியின் கை படத்திலிருப்பவரின் கையைப் போல் இருக்காது.



காந்தியை விமர்சிப்பவர்கள் அதிகமாக இப்படத்தையும், நேரு எட்வினாவுக்கு சிகரெட் பற்ற வைப்பதையும் சேர்த்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் பெண்ணுடன் நடனமாடுவதையும், சிகரெட் பற்ற வைப்பதையும் கொண்டு விமர்சனம் செய்வதும், கேலி செய்து இன்பம் அடைவதும் அவரவர் தரத்தைப் பொறுத்தது.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஹாக்கியும் தேசிய விளையாட்டு இல்லையாம். ஆனால் ஹாக்கியை வளர்க்க அதை தேசிய விளையாட்டு ஆக்கினாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிரிக்கெட்டை விடவும் பல மடங்கு சிறந்த விளையாட்டு ஹாக்கி.

Download As PDF
Bookmark and Share

Post Comment

பெரும்பான்மை மனநோய் தவிர்ப்போம்


பெரும்பான்மை மனநோய் எப்படி இருக்கிறது. இறைவனைப் போன்று பலவித வடிவங்களில் பலவித நிறங்களிலும், பண்புகளிலும் இருக்கிறது. நம் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குருதியாறு ஓட வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இலங்கையில் பெரும்பான்மை மனநோய் சிங்களப் பேரினவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது அவர்களது மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. மொழியைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. பெரும்பான்மை ஆதிக்க வெறியை சமூக இயல்பாக மாற்றுகிறது. அவர்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அவர்களை இனப்படுகொலை செய்கிறது. அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கிறது. அவர்களை வாழிடங்களை விட்டு துரத்துகிறது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இன்னும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதிகளாக்கி மொத்த சமூகத்தையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மனநோய் இந்து மதவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது. அவர்கள் மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. முன்பு நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் இவர்கள் வந்ததால் நாம் நாசமானோம் என்கிறது

பாகிஸ்தானில் உருது திணிக்கப்பட்டதால் வங்க மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு கலகம் மூண்டு தனிநாடாயினர். தனிநாடாக முடியாதோர் அகதிகளாய் அவதியுறுகின்றனர். அரச பயங்கர வாதத்தினால் அல்லல் படுகின்றனர்.

ஈராக்கிலும், பாகிஸ்தானிலும், சிரியாவிலும் பெரும்பான்மை (சன்னி) மனநோயால் குர்துகள், யஸ்திகள், ஷியாக்கள் அல்லல் படுகின்றனர். இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர். துருக்கி நாட்டிலும் பெரும்பான்மை மனநோய் சிறுபான்மை குர்து இனம் தனிமைப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை இனமானது அவர்கள் முன்னோர் செய்த தவறுகளுக்கு பொறுப்பாகாது. ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் பிரிவு பின்பற்றும் மதம் மொழி இன்னோர் நாட்டில் வாழும் பெரும்பான்மை பிரிவினர் பின்பற்றுவதாகவும் இருக்கக் கூடும். ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ பெரும்பான்மை செய்யும் தவறுக்கு மற்றொரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் இந்த பெரும்பான்மை மனநோய்தான் காரணம்.  அதற்கு அந்த சமூகத்தையே ஒட்டு மொத்தப் பழியும் சுமக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

இந்தப் பெரும்பான்மை மனநோய்க்கு எந்த வித அடையாளங்களும் இருக்கலாம். மதம், இனம், மொழி அல்லது மூன்றுமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். இதில் ஈடுபடுவோர் மிகச்சிலராக இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவரே இருப்பர். பண்பாடு, பிறப்பு, பின்பற்றும் நம்பிக்கைகள் காரணமாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பெயரால் இயக்கம் நடத்துவோர் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமலும், மனசாட்சியை மறைத்துக் கொண்டும் வாழ்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறி கொள்வதற்கேற்ற பொய்க் காரணங்கள், வரலாறுகள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பெரும்பான்மை மனநோயால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே மக்களாகிய நாம், நாம் பின்பற்றும், நம்பிக்கை கொள்ளும், நேசிக்கும் இன, மத, மொழி காரணமாக அதன் பெயரால் மற்ற சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும்.

அந்த வன்முறையா நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் அந்த வன்முறையை, வன்முறையை நடத்துகிறவர்களை ஆதரிக்கவே கூடாது. ஏனெனில் பெருங்கொடுமை செய்வோர் தாம்தான் அந்த சமூகத்தையே காக்க வந்தவர் உய்விக்க வந்தவர் போன்ற தோற்றத்தை உருவாக்குவர். சமூகத்தில் மத நல்லிணக்கம் இருப்பதை வெறுத்து வெறுப்பை விதைப்பவர். அதன் மூலம் அரசியல் செய்து தமது நோக்கங்களை நிறைவேற்றுவர்.

இன்று #டிசம்பர் 6

#பாபர் மஸ்ஜித்  பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள். இதை ஜனநாயகம் இந்நாட்டில் தொடர விரும்புவோர் அனைவரும் வெறுக்கப்பட வேண்டிய செயல். நினைவு கூரத்தக்க நாள்.

இதை கொஞ்சம் விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்ள வேண்டும். மதவெறியால், பெரும்பான்மை வெறியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இது எள்ளலாகத் தெரியும். ஆனால் நம்பிக்கை காரணமாக ஊசலாடும் மனங்கள்தான் இங்கே அதிகம் என்பதாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இங்கே வாழும் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தளம் இடிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிம்கள் எப்போதும் தம் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் இந்துக்கள் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குக் கொஞ்சம் வரலாறு சொன்னால் போதும்.

எத்தனையோ மன்னர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான் எதிர்களும் இந்து மதம்தான் அவர்கள் படையெடுத்து வென்ற மன்னர்களும் இந்து மதமாக இருந்தாலும் அவர்கள் கட்டிய கோவிலை இடிப்பார்கள், இடித்திருக்கிறார்கள். ஏன் ராஜ ராஜ சோழன் எத்தனை இடங்களை வென்றான் ? அவன் கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்றால் என்ன அங்கே போரும் இனப்படுகொலையும் நடந்திருக்கிறது என்றுதானே பொருள். 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்த போதும், ஆண்ட போது இந்தியாவிலே இந்து மதம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 1000 வருடங்களுக்கு மேலாக ஆண்ட போதும் இந்தியாவில் இந்து மதம்தான் பெரிய மதமாக இருக்கிறது. இப்படியிருக்க அவர்களால்தான் இந்து மதத்துக்கு ஆபத்து, இந்துக்களுக்கு ஆபத்து என்பது என்ன வகை தந்திரம்.

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் மலேசியாவில் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசான பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் தாடிக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்துக் கோயிலை இடித்திருக்கிறார்களா ? இல்லை அந்நாட்டின் முதன்மையான எதிர்கட்சி ஒன்று அப்படி செய்தால் எப்படி இருக்கும்.

அவ்வளவு எதற்கு இலங்கையில் இருக்கும் இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரைகளை கட்டும் சிங்களப் பேரினவாத அரசும், புத்தர் சிலைகளை வைத்து வன்முறை ஊர்வலங்களை நடத்தும் பொதுபல சேனாவை வழிநடத்துவதும் சிறுபான்மைக்கெதிரான பெரும்பான்மை வெறிதான்.

கொஞ்சம் அடையாளம் கடந்து சிந்தித்தால் விளங்கும். தவறு செய்யும் ஒரு சிறு கும்பலே பெரும்பான்மை அடையாளத்தை தனது முகமூடியாக அணிந்து வரும்.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment