சீதையின் நிலை

சீதையைக் கவர்ந்து சென்றதற்காக 

இராவணனைத் திட்டுகிறவர்கள்

சீதையைத் தீயில் இறக்கியதற்காக

இராமனைத் திட்டுவதில்லை

Download As PDF
Bookmark and Share

Post Comment

பாலியல் வன்முறைக்குக் காரணம் பெண்களின் உடை என்பது தவறு

பெண்கள் கவர்ச்சியாக உடலைக் காட்டியவாறு உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைக் நடக்கிறது என்ரு 101 விழுக்காடுகள் உறுதியான கொள்கையை உடையவர்களுக்கு ஒர் சவால்.


பெண்கள் எந்த வகையில் உடை அணிந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்களுக்கு காமம் தோன்றுவது இயல்பே. அதற்காக பாலியல் ரீதியான தாக்குதல், சீண்டலை ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அதை இயல்பாகக் கடந்து செல்வதற்கு ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 

ஆண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் எந்த வித வன்முறையிலும் ஈடுபடுவதில்லை என்பதைப் போலவே ஆண்களும் மாற வேண்டும் என்பதே அறம். கட்டுப்படுத்த முடியாதளவுக்கு காம உணர்வு உந்தித் தள்ளினால் வீட்டுக்குச் சென்று கை மைதுனம் செய்து கொள்ளவும். இதைக் கிண்டலுக்குச் சொல்லவில்லை.  உண்மையாகவே பரிந்துரைக்கிறேன்.

ஒரு பெண் தன்னை செக்ஸியாகக் காட்டிக் கொள்வதாலும் உடை அணிவதாலும் அவள் விருப்பமோ அனுமதியோ இல்லாமல் அவளைத் தொடக்கூடாது அத்து மீறக்கூடாது. விருப்பம் இல்லாத நிலையில் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள். விருப்பம் இருந்து இருவர் ஒன்றாக இருக்கும்போது மற்றவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே கண்ணியம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

காவிகளின் போலி அங்கலாப்பு

 சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.

"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"

இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.

கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்

Download As PDF
Bookmark and Share

Post Comment

குக்கூ குக்கூ

குக்கூ குக்கூ…
தாத்தா தாத்தா களவெட்டி…
குக்கூ குக்கூ…
பொந்துல யாரு மீன்கொத்தி…

குக்கூ குக்கூ…
தண்ணியில் ஓடும் தவளக்கி…
குக்கூ குக்கூ…
கம்பளி பூச்சி தங்கச்சி…

(Cuckoo! Cuckoo! Grandpa weeding out the fields.
Cuckoo! Cuckoo! Who’s in the trunk hole? It’s the kingfisher.
Cuckoo! Cuckoo! Swimming frog in the water.
Cuckoo, Cuckoo! Is the sister of the caterpillar)

அல்லி மலர்க்கொடி அங்கதமே…
ஒட்டரே ஒட்டரே சந்தனமே…
முல்லை மலர்க்கொடி முத்தாரமே…
எங்கூரு எங்கூரு குத்தாலமே…

(Lilly is making fun of me. My adamant sweet sandalwood.
My Jasmine-decked necklace with pearls. Oh, my native Kutralam)

சுருக்கு பையம்மா…
வெத்தலை மட்டையம்மா…
சொமந்த கையம்மா…
மத்தளம் கோட்டுயம்மா…

தாயம்மா தாயம்மா…
என்ன பண்ண மாயம்மா…
வள்ளியம்மா பேராண்டி…
சங்கதியை கூறேண்டி…
கண்ணாடியே காணோடி…
இந்தர்ரா பேராண்டி…

(My grandma’s shrink bag with betel and nuts.
The hands that carry them play the Parai drum.
Grandma, grandma, what magic did you do.
Valliyamal’s grandson tells me the story.
Where are my glasses? Take it, my grandson)

அன்னைக்கிளி அன்னைக்கிளி…
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி…
நல்லபடி வாழச்சொல்லி…
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி…

கம்மங்கரை காணியெல்லாம்…
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்…
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி…

(Annakilli! Annakilli! Parrot sitting in the banyan tree.
Blessing to lead a good life, our ancestors have bequeathed us this soil.
Across the river banks and on the fertile fields, Our forefathers have sung through their life (Indigenous Tribes)
The lakes and ponds belong To the dogs, foxes, and cats too)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

(Enjoy, my dear. Come together as one
Ride on the elephants-shower in the rains)

குக்கூ குக்கூ…
முட்டைய போடும் கோழிக்கு…
குக்கூ குக்கூ…
ஒப்பனை யாரு மயிலுக்கு…

குக்கூ குக்கூ…
பச்சையை பூசும் பாசிக்கு…
குக்கூ குக்கூ…
குச்சிய அடுக்குன கூட்டுக்கு…

(Cuckoo! Cuckoo! The hen is laying the egg.
Cuckoo! Cuckoo! Who dolled up the peacock.
Cuckoo! Cuckoo! Algae spreading its green.
Cuckoo! Cuckoo! Nest arranged by tiny twigs)

பாடுபட்ட மக்கா…
வரப்பு மேட்டுக்காரா…
வேர்வத்தண்ணி சொக்கா…
மினுக்கும் நாட்டுக்காரா…

ஆக்காட்டி கருப்பட்டி…
ஊதங்கொழு மண்ணுச்சட்டி…
ஆத்தோரம் கூடுகட்டி…
ஆரம்பிச்ச நாகரீகம்…

(The toiling farmer with his fertile fields.
His sweat-drenched shirt, the glittering countryman,
the fire-kindling flute and the earthen pot.
Settling in the river banks is the beginning of civilization)

ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே…
உப்புக்கு சப்பு கொட்டி…
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு…
அடக்கி ரத்தங்கொட்டு…
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு…

(Jan Jana Janaku Jana, Oh my people.
Tasting the salt Yolk, the source of all energy.
Drip blood from leech bite. 
Strike away the Gilli-Danda)

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…
அழகான தோட்டம் வச்சேன்…
தோட்டம் செழிச்சாலும்…
என் தொண்டை நனையலேயே…

என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

(I planted five trees. Nurtured a beautiful garden.
My garden is flourishing. Yet my throat remains dry
My sea, bank, forest, people,
lands, clan, place, and track)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

(Enjoy, my dear. Come together as one
Ride on the elephants-shower in the rains)

பாட்டன் பூட்டன் காத்த பூமி…
ஆட்டம் போட்டு காட்டும் சாமி…
ராட்டினந்தா சுத்தி வந்தா…
சேவ கூவுச்சு…

அது போட்டு வச்ச எச்சம்தானே…
காடா மாறுச்சு…
நம்ம நாடா மாறுச்சு…
இந்த வீடா மாறுச்சு…

(My ancestors guarded the land.The devotee that dances;
As the earth rotates around the rooster crows.
Its excretions fertilized the forests.
It turned into our country, then our home too)

என்ன கொரை என்ன கொரை…
என் சீனி கரும்புக்கு என்ன கொறை
என்ன கொறை என்ன கொறை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொறை…

(What’s the matter, what’s the matter, my dear?
What’s the matter, my sugarcane?
What’s the matter, what’s the matter, my dear?
My darling grandson, what’s the matter?)

பந்தலுல பாவக்கா…
பந்தலுல பாவக்கா…
வெதகல்லு விட்டுருக்கு…
அது வெதகல்லு விட்டுருக்கு…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…

(Bitter Gourd in my canopy. Bitter Gourd in my canopy.
It has given us seeds. Given us seeds.
Left by our mom and dad. Left by our mom and dad.
Enjoy, my dear. Come together as one.
Ride on the elephants-shower in the rains)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

குக்கூ குக்கூ…


Download As PDF
Bookmark and Share

Post Comment

கோவில் அடிமை நிறுத்து - என்ன கருமம்டா இது?

                   

இணையத்தில் போட வேண்டிய கொத்துக்குறி (#) ஐ எதுக்கு பதாகையில் போட்டு வச்சுகிட்டு?

உலகிலேயே கோரிக்கை முழக்கத்தையே தவறாக எழுதிய ஒரே கும்பல் இந்தக் காவிக்கும்பல்.

கோயில் அடிமை நிறுத்து என்றால் என்ன ? 

கோயிலுக்குச் செல்லும் அடிமைகளை நிறுத்து என்று இந்துக்களை இழிவு படுத்துவது போல் தோன்றுவதால் இந்து மக்கள் கட்சி உடனே போராட்டத்தை அறிவித்திருக்கலாம். 

பஞ்சாப் உழவர்கள் போராட்டத்தில், க்ரேட்டா துன்பெர்க் ஒரு Tool Kit ஐ பகிர்ந்து கொண்டதற்காக கபாலமே வெடிக்குமளவுக்கு கூச்சல் போட்ட காவிபயங்கரவாதிகள், சிவராத்திரிக்கு சாமி கும்பிட வருபவர்களிடையே இப்படி கோயில்களைப்பாதுகாக்கும் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் திணிப்பது மட்டும் Tool Kit வகையில் வராதா ?

                 

கர்நாடகாவிலிருந்து இங்கே கஞ்சா விக்க வந்த, மனைவியைக் கொன்றதாக ஐயத்திற்குரிய நபர், வனப்பகுதியை ஆக்ரமித்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் கோயில்களை தமிழ்நாட்டு அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்கும் ஜகதீஷ் வாசுதேவ் க்கு என்ன தகுதி இருக்கிறது ? 

                

இந்த பித்தலாட்டச் சாமியாரிடமிருந்து ஈஷா மையத்தை மீட்டு தமிழ்நாட்டு அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். 

மனிதன் பூஜை செய்வதால்தான் கோயில்கள் அழிகின்றன எனில் மனிதர்கள்தான் சாமியையும் மதத்தையும் கோயில்களையும் உருவாக்கி நடத்துகிறார்கள் என்று வெட்கமில்லாம் ஒத்துக் கொள்கிறார்கள். 

கோயிலுக்குள் தமிழ் வழிபாடு வேண்டுமென்று நாம் கேட்டால் வேறு கோயில் கட்டிக்கொள் உன் விருப்பப்படி வழிபாடு செய், எங்கள் நம்பிக்கையில் தலையிடாதே என்பார்கள் காவிகள். அவர்களுக்கும் அதே பதில்தான் நாம் சொல்வோம். 

சரியாக 11999 கோயில்கள் ஒருவேளை பூஜை இன்றி அழிகின்றன எனில்,

தியானலிங்கம், ஆதியோகி என்று பெரிய பொம்மைகளை நிறுவி புரளிகளைக் கிளப்பாமல் இருக்க வேண்டும்

 இனி புதிது புதிதாக சாமி சிலைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும், தெருவுக்கு ஒரு கோயில் கட்டுவதைக் கைவிட வேண்டும், 

கொஞ்சம் மேல்தட்டு மக்கள் வசிக்கும் வட்டாரங்களில் சாய்பாபா கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்கள் புதிது புதிதாகக் கட்டுவதைக் கைவிட வேண்டும். 

மேலும் தினுசு தினுசாகக் கிளப்பப்படும் சிவராத்திரி, தாமிரபரணி புஷ்கரணி, 40 வருடங்களுக்குப் பிறகு அத்திவரதர், கோரோனாவுக்கு கைதட்டுவது விளக்கேற்றுவது போன்ற கேடுகெட்ட பழக்கங்களைப் புறந்தள்ள வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் நாட்டையே நாறடிக்கும், பணத்தைப் பாழாக்கும் விநாயகர் சதுர்த்திக்கு என்றே புதுப்புதுப் பெயரில் காவி இயக்கங்கள் தொடங்கி காசு பறிக்கும் கீழ்த்தரமான செயல்களைப் புறக்கணிக்க வேண்டும். 

ஏற்கெனவே கவனிப்பாரற்றுக் கிடக்கும் பழைய சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் சூடும் சுரணையும் மானமும் நேர்மையும் அறமும் உடைய பக்தர்கள் முன்வரவேண்டும். அதை விட்டு விட்டு அரசாங்கத்தை எதிர்ப்பதையும், அறநிலையத்துறையை எதிர்ப்பதையும் விட்டு விட்டு ஆகும் வழியைப் பார்க்க வேண்டும். பக்தர்களே செய்வீர்களா செய்வீர்களா ?

Download As PDF
Bookmark and Share

Post Comment

தடுப்பு ஊசி போடும் கடவுள் நம்பிக்கையாளர்கள்

கொரோனாவைப் படைத்தது அல்லது உருவாக்கியது யார் கடவுளா ? கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி கொள்கைப்படி கொரோனா என்ற தீநுண்மியைப் படைத்தது கடவுள்தான். 

கடவுள் எதற்காக இதைப் படைக்க வேண்டும் ? மனிதனுக்குப் பயனில்லாத உயிர்கள் பூமியில் பல உள்ளன. அது போல் இதையும் கொள்ளலாமா ? முடியாதே இது மனிதனின் இருப்புக்கே கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனாவைப் படைத்தது கடவுள் எனில் அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதும் கடவுளின் விருப்பத்திற்கு மாறானதுதானே ? இது முரண்பாட்டை கடவுள் நம்பிக்கையாளர்கள் எப்படி எளிதில் கடந்து போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம். 

இந்திய மக்கள் கட்சியின் (அதாஙக் பாரதிய ஜனதா கட்சி) ஹ. ராஜா அவர்கள் தடுப்பூசி போடும் படத்தைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றியது  மனம் முழுதும் பல்வேறு கடவுள்கள், வலது கையில் ஏதோ சாமி கயிறுகள், கழுத்தில் ஏதோ மாலை, நெற்றியில் பொட்டு இவையிருந்தும் கடவுள்களை நம்பாமல்,

முக்கவசமும் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளும் பக்தர். கடவுளும் மதமும் கலவரம் செய்யவும் அரசியல் அதிகாரத்தைப் பெற்று தனது இனத்தவரை ஆதிக்கம் செய்யும் அளவுக்கு முன்னேற்றவும் செய்யும் கருவிகள் என்று தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உலகில் தாம் வாழ்வதற்காகச் செய்யும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பகுத்தறிவு நடவடிக்கைகளும், அறிவியல் செயல்களும் அவர்களின் கடவுள் நம்பிக்கையை சற்றும் இடறுவதில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

வணிக நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டுவதில் முஸ்லிம்களின் மதச்சார்பின்மை

முகமதியர்களின் மதச்சார்பின்மை பற்றிய இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் கருத்துக்கள்.

முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்கள், அடுத்தவர் பண்பாட்டை மதிக்க மாட்டார்கள் என்று குற்றம் சொல்வோரின் வாயிலிருந்தே முஸ்லிம்களின் மதச்சார்பின்மையும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு நேர் எதிரான கொள்கைகளின் படியும் பெயர் வைத்தும் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது. 

இந்துக்கள் செறிவாக இருக்கும் பகுதியில் கடை வைக்கும் முஸ்லிம்கள், தங்களது பெயரையோ முஸ்லிம் மதம் சார்ந்த அரபுப் பெயர்களையோ வைப்பதில்லை. மாறாக பொதுவான பெயர்களையே வைக்கிறார்கள். காவிகளுக்குப் பிடிக்காத தமிழில் கூட வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் மனம் புண்படாமல் தான் முஸ்லிம் கடைகளில் வாங்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் இருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஆங்கிலப் பொதுச் சொற்களில் பெயர் வைக்கிறார்கள்.
எ. கா :
நியூ சிட்டி லெதர், ராயல் ட்ரேடர்ஸ், சூப்பர் மெடிக்கல்ஸ், ரிலீப் மெடிக்கல்ஸ், ஸ்டார் தியேட்டர், சூப்பர் வாக், நியூ மைனா ஹோட்டல், ஆரஞ்சு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்டார் ஜெனரல் ஸ்டோர்

தூய தமிழிலும் வைக்கிறார்கள்
எடுத்துக்காட்டு - சங்கம், சீமாட்டி சில்க்ஸ், பாரி மளிகை, வசந்தம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், நலம் மெடிக்கல்ஸ், காவேரி மெடிக்கல்ஸ், ஹோட்டல் செல்லப்பா

செங்கிருதத்திலும் இந்தியிலும் வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு -  மகாராஜா டெக்ஸ்டைல்ஸ், சர்க்கார் மளிகை, ராஜ்கமல் பட்டாசு கடை, மஜா மஜா உணவகம் (ஜம் ஜம் தண்ணீர் ஐத்தான் மஜா மஜா என்று திருப்பி எழுதியிருப்பார்கள் என்று ஒரு தேசபக்தருக்காவது தோன்றும்), பவித்ரா ஹோட்டல்

இந்தியா, தமிழ்நாடு,  ஆகிய பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - தமிழ்நாடு துணிக்கடை, இந்தியன், ஜெய்ஹிந்த் சீமாட்டி புட்வேர், நேஷனல் ஸ்டோர், இந்தியா ஸ்டோர், இந்தியன் பேக்கரி 

ஊர்ப்பெயர்களிலும் வைக்கிறார்கள். 
கொடைக்கானல் ஹோட்டல்

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத வேறு நாட்டுப் பெயர்களையும் வைக்கிறார்கள்.
லண்டன் ஹார்டுவேர், சிங்கப்பூர் ஹார்டுவேர், பர்மா ஹார்டுவேர்

அதற்கும் மேலாக இந்துப் புராணத்தில் வரும் பெயர்கள், இந்துக் கடவுள்களின் பெயர்களையும் தமது வணிக நிறுவனங்களுக்கு வைக்கிறார்கள். 
எடுத்துக்காட்டு - கிஷ்கிந்தா ட்ரெஸ்ஸஸ், லட்சுமி ஸ்டோர்ஸ், கணபதி ஸ்டோர்ஸ்

இன்னும் சில  
பாவா மெடிக்கல்ஸ், ரெங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர்,  ரோஜா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ராயல்

இதெல்லாம் போதாதென்று தங்களது பெயர் கண்டு சிறுமை கொள்ளும் பெரும்பான்மையினரை மதித்து சுமையா பானு, சபியா பானு, கதிஜா பானு என்ற பெயர்களில் வைக்காமல் முஸ்லிம் என்று உறைக்காத பானு ட்ரென்ட்ஸ் என்று வைக்கிறார்கள்.

முகமது அமித்சா என்று முழுப்பெயர் இடாமல் M.A. ட்ரேடர்ஸ் என்றும், வானதி பீவி மகளிர் தையலகம் என்பதற்குப் பதிலாக V.B. தையலகம் என்றும் பெரும்பான்மை உணர்வுக்கு மதிப்பளித்து பெயர் வைக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்துக்களின் பூஜைகளுக்குப் பயன்படும் விளக்குகள், திரி, எண்ணெய்கள், இன்ன பிற பொருட்களையும் விற்கிறார்கள். தீபாவளிப் பட்டாசுகளையும் விற்கிறார்கள். 

என்ன செய்வது பாய் கடை பிரியாணி மாதிரி வருமா என்று எல்லா இந்துக்களும் பிரியாணிக்கு அடிமையாகி விட்டதால் அதை மட்டும் ஐய்யங்கார் பிரியாணிக் கடை என்று போடுவதற்கு முஸ்லிம்கள் விரும்புவதில்லை.

திரையடிகளின் ஆதாரம் இந்த இணைப்பில் உள்ள இடுகையில் வந்த கருத்துக்கள் 












அன்பு இருக்கையில் வெறுப்பைத் தேர்ந்தெடுத்த இந்துத்துவா அன்பர்கள் இதை 1600 தடவை பகிர்ந்துள்ளார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

பாஜகவின் கல்யாணராமன் மேல் குண்டர் சட்டம் தொடுக்கப்படுவது தவறு

 முதலில் குண்டர் சட்டம் மக்களாட்சிக்கு எதிரானது.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்கு குண்டர் சட்டத்தில் கைது என்பது மிகவும் தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மதத்தை விமர்சனம் செய்வதையே எதிர்க்கும் மதவாதிகளின் ஆயுதம்தான் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது போன்ற சொற்கள்.

முஸ்லிம்களின் மத உணர்வுக்கு காவல்துறை அஞ்சுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகும்.

இவர் முஸ்லிம்கள் மீதான குஜராத் படுகொலைகளை ஆதரித்துப் பெருமையாகப் பேசியதற்கும் அவர்கள் மீது வெறுப்பைத் தூண்டியதற்கும்தான் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும்.

இல்லையென்றால் அவதூறு வழக்கில் குண்டர் சட்டம் எனில் மார்க்சிய, அண்ணலிய, பெரியாரிய போராளிகள் மீது இதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன.


Download As PDF
Bookmark and Share

Post Comment

கிரிக்கெட் மதம்

மதங்களை எதிர்ப்பவர்கள் கூட கிரிக்கெட் மயக்கமும் திரைப்பட மயக்கமும் உடையவர்களாக இருக்கின்றனர். ஊடகங்கள்தான் கிரிக்கெட்டர்களையும் நடிகர்களையும் கடவுளாகவும் அந்தத் துறைகளை கவர்ச்சிகரமாகவும், உணர்ச்சியைத் தூண்டியும், வெறியூட்டியும் மதமாகவும் வளர்த்து வருகின்றனர் என்றால் மாற்று/மக்கள் ஊடகங்களாகக் கருதப்படும் சமூக வலைத்தளங்களும் ஊடகங்களையே விஞ்சும் வகையில் திரைப்பட + கிரிக்கெட் துதிபாடிகளாக விளங்குகின்றன. 

கிரிக்கெட் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த துறையெனில் அதை எதிர்த்து பார்ப்பனரல்லாதவர் பங்கு பெறும் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களை ஆதரிப்பதும், புகழ்வதும்தானே பார்ப்பன எதிர்ப்பின் அரசியலாக இருக்க வேண்டும் ? நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், போட்டிகளில்தான் பார்ப்பனர் அல்லாதவர் பங்கு பெறுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெறுகின்றனர். அந்த ஒரிரு மாதங்கள் மட்டும் ஏதாவது பதக்கம் வாங்கிய அவர்கள் இந்திய தேசியப் பெருமைக்கும், அவர்கள் சார்ந்த இனப்பெருமைக்கும் தோதாக ஊறுகாய் செலிபிரிட்டி ஆக்கப்படுவர். 

கடும் வறுமைக்கும் ஆதரிக்காத அரசுக்கும்  இடையே போராடி ஒரு ஸ்பான்சரின் உதவியால் வென்ற அவர்களது  கதைகள் பரப்பப்பட்டு, ஏதாவது பொருளின் விளம்பரத் தூதுவராக மாறுவர். இல்லையெனில் திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவர். அவ்வளவுதான் அவர்களின் உச்சம். சில நாட்களில் எல்லோரும் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்குத் திரும்பி விடுவார்கள். 

ஏனெனில் வருடம் முழுக்க இந்தக் கிரிக்கெட் மதமும், கடவுளர்கள் மட்டும் வெவ்வேறு வடிவங்களில் இடைவிடாமல் திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். கிரிக்கெட்டில் தோற்றுப்போனால் என்னவோ இவர்கள் சோறு போட்டு அவர்கள் துரோகம் செய்தது போன்று ஒட்டு மொத்த கிரிக்கெட் அணிக்கோ அல்லது ஒரு சில தனி நபர்களுக்கொ மிகப்பெரிய திட்டு விழும். 

அரசியல் கட்சித் தலைவர்களைத் துதி பாடுவதிலாவது ஒரு அறம் இருக்கிறது. ஆனால் இந்த அட்டைக்கத்தி வீரர்களுக்குத் தரப்படும் வெளிச்சம் மிகவும் அதிகம். இப்படி ஒன்றுமில்லாததை மாய்ந்து மாய்ந்து புகழ்ந்துரைப்பவர்களுக்கு மத நம்பிக்கைகளை எதிர்ப்பதற்கும் குற்றம் சொல்வதற்கும் என்ன தகுதி இருக்கிறது ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

 7.5 விழுக்காடுகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு ட்வீட் போட்டதைத் தவிர்த்து என்ன செய்தார் சூர்யா ? - ரவிசங்கர்

இப்போதும் சரி அப்போதும் சரி ட்வீட் போட்டதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆதரிக்கும் முன்பு வரை சூர்யா செய்தது தவறாக இருந்தது. இப்போது சூர்யா என்ன செய்துவிட்டார் என்று கேள்வி வருகிறது. உங்க தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவன் அருகதையைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது ?

நடிகர் சூர்யா 8 கோடி பேருடன் கோட்டைக்கு ஊர்வலம் சென்று முதலமைச்சருக்கு நன்றி சொல்லவில்லை. அவர் போட்ட ஒரே ட்வீட்டை வைத்துத்தான் என்னவோ தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்ததாக சித்தரித்தனர் சில திமுகவினர்.  தமிழ்நாடே சூர்யாவின் ட்வீட்டைப் பார்த்துத்தான் அதிமுகவை ஆதரிப்பது போன்றும் இல்லையென்றால் அப்போதே புரட்சி வெடித்து அதிமுக அரசு கலங்கியிருக்கும் என்பது போல பேசினார்கள். ஜோதிகா பேசியதை வைத்து காவிகள் கூத்தடித்ததைப் போலவே இவர்களும் செய்தனர்.

யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னவர், ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்துத் தொலையுங்கள் என்றால் பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்கலாமா ? உங்கள் கட்சியை ஆதரிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன உங்கள் கட்சியின் குறைகள்தானேயன்றி நாங்கள் அல்லவே. 

NEET எதிர்ப்பாளர் என்றாலே அது திமுக சார்பாகத்தான் பார்க்கப்படும். எப்படி திமுக சாராத மற்றவர்களின் தவறுகளும், அவதூறுகளும் திமுகவின் மீது திருப்பப்படுகிறதோ அது போலவே NEET உட்பட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்த ஒரு அரசியலுமே திமுக சாராதவர்கள் பேசினாலும் போராடினாலும் அது திமுகவின் ஆதரவாக மாறும், திமுகவின் மீதான பொதுபுத்தி வெறுப்பின் ஒரே நன்மை இதுதான்.

அதிமுகவை நேரடியாகக் கண்டிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தூய்மைவாதம் பேசினால் எப்படி ? திமுகவை ஆதரித்து விட்டோ, திமுகவில் இருந்து கொண்டோ திமுக கொள்கைக்கு நேர் எதிரான அரசியலை/செயல்களைச் செய்தால் அது ஒரு பொருட்டே இல்லாதது போலவும், கட்சிசாராதவன் திமுக ஆதரவு கொள்கையைப் பேசினால் அவனை எதிரியிடம் தள்ளி விடுவது ஏன் ?

ஒரு முறை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே தவறென்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் ஆதரவை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று சொல்லியிருந்தார் ரவிசங்கர். ஆனால் யாருடைய ஆதரவை யார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? அதன் விளைவுகள் என்ன என்பதையும் நாம் இன்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ? 

எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபடும் உங்கள் கட்சிக்குக் குறிப்பிட்ட எல்லைகள் உள்ளனவோ அது போலத்தான் அரசியலிலும் பொதுவாகக் கருத்து சொல்லும் கட்சி சாராத நபர்களுக்கும் சில எல்லைகளும் தொல்லைகளும் உள்ளன, அவர்களால் ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரித்தோ எதிர்த்தோ பேச முடியாது. இது உங்களைப் போன்றவர்கள் அறியாததன்று என்றாலும் நீங்கள் இப்படி குற்றம் சொல்லிப் பேசுவது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெரியாமலில்லை. 

நாளை NEET ஆதரவு நிலைப்பாடு எடுத்து, NEET பயிற்சி நிலையங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றும் சொல்வார் போலிருக்கிறது.

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆரிய உதடும் திராவிட உதடும் பேசுவது என்ன ?

                                              

திராவிடத் திருமகனின் திருவாய்மொழிகளும், மோடியையே கலாய்க்கும் பார்பன சதிகாரியும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனியத்தையே வெட்கப்படுமளவுக்கு மாற்றி விட்ட நமது திமுக திராவிடப் புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

காவி பயங்கரவாதி இராமகோபாலன் இறந்ததற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவிக்கும் வைரமுத்து. 

பாலியல் வன்முறையைக் கண்டிக்க பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தையே பகிர்ந்து கிண்டல்/விமர்சனம் செய்யும் பாடகர் சின்மயி. 

அவருக்கு இருந்தது எல்லாம் கொள்கை அதில் குன்றாது கண்ணியம் காத்தாராம். அவர் செத்ததால் வருத்தப்படுகிறவர்களுக்கு இவர் இரங்கல் தெரிவிக்கிறாராம். இதன் மூலம் யாரை செருப்பால் அடித்தார் என்று யாருக்கும் தெரியாத மாதிரி இருப்போம் திராவிடப் புரட்சியாளர்களே !

இதில் யார் திராவிடம் பேசுகிறார்கள், யார் பார்ப்பனியம் பேசுகிறார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசும் இல்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

பக்தர்களின் பகுத்தறிவும் பகுத்தறிவுகளின் மூடநம்பிக்கையும்


ஏம்பா பக்தர்கள் கோயிலுக்குப் போகும் போது வீடு வண்டி எல்லாம் பகுத்தறிவோட பூட்டிட்டு போறீங்களா இல்ல கடவுள் பாத்துக்குவார்ன்னு அப்படியே விட்டுட்டு போயிருவீங்களா?

பக்தர்கள் மட்டும் 100 % பகுத்தறிவோட இருக்கலாம். பெரியாரியர்களுக்கு மட்டும் பக்தி கொஞ்சம் இருக்கப் படாதோ?

என்னவோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி வட்டம் போட்டு காட்றீங்க ! திமுககாரன் கோயிலுக்கு போனா பல்லிளிக்கும் பகுத்தறிவும்பீங்க இல்ல ?!

இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக இந்துக்களின் எதிரின்னும் சொல்வீங்க ?

உலகத்திலேயே கோயிலுக்குப் போனாலும் திட்டும் போகாவிட்டாலும் திட்டும் ஒரே இழிபிறவிகள் இவர்கள்தான். 

ஒரு பயங்கரவாதியை, கொலைகாரனை, பாலியல் வன்கொடுமை செய்தவனை, ஊழல் செய்தவனை, கொள்ளை அடிப்பவனைப் பார்த்து என்ன நீ இன்னும் பாஜகவில் சேரவில்லையா என்று கேட்பது எப்படி இயல்பாக இருக்கிறதோ அது போலத்தான் ஒரு கடவுள் நம்பிக்கை உடையவன் திமுகவில் இருப்பதும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

அரசை எதிர்த்துப் போராடக்கூடாது - காவிகளின் கயமை


பிரதமர் வீட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் முன் அமர்ந்து ஒரு இடதுசாரித் தோழர் போராடுகிறார் என்று காவிகள் இதை ஒரு பெரிய இது போல பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். ஊதியம் தரும் முதலாளிக்கு எதிராகவே போராடுவதுதான் பொதுவுடமைத் தத்துவமே.

இந்தத் திருட்டுப் பயல்கள் மத்தவன் உருவாக்கி வைத்த துறைகளை தன்னுடைய முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டே அதை உருவாக்கியவனைத் திட்டுகின்றவர்கள். உங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பேச அருகதை உண்டா ? இந்த உத்தமர்களின் தரம் என்னவென்று பார்ப்போமா ?

பிரதமர் திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டால் பிரதமரையோ பாஜகவையோ எதிர்க்கக் கூடாது என்பது என்ன எழவெடுத்த கருத்தியலில் வரும் ? சரி அதன் படியே வைத்துக் கொண்டாலும் காவி பயங்கரவாதிகள் தாங்கள் இதுவரையிலும் ஆட்சியைப் பிடிக்காத பல மாநிலங்களில் கட்சி நடத்துகிறான்கள் இல்லையா ?

குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜக பயங்கரவாதிகள் பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு கிடப்பான்கள். இவன்கள் எல்லாம் யார் ? தமிழ்நாட்டில் திராவிட அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில் தொந்தியை வளர்த்துத் திரியும் இழிபிறவிகள்தானே ? அதே போல கேரளாவிலும் பேராயக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் கொண்டு வந்த நலத்திட்டங்களில் வயிறை வளர்த்தும் தினவெடுத்துத் திரியும் கும்பல்கள்தான். 

இவனுகள் இப்படி மற்ற கட்சிகளின் நலத்திட்டங்களை ஆட்சியின் நன்மைகளை இரண்டு தலைமுறைகளாக துய்த்துக் கொண்டு அக்கட்சிகளை எதிர்த்துக் கொண்டு அரசியல் கட்சியை நடத்தும்போது பொதுவுடமைக் கட்சி நடுவண் அரசை எதிர்த்துப் போராடக் கூடாதா ? அந்த வீடு என்ன மோடியின் பரம்பரைச் சொத்தா இல்லை உழைத்துப் பெற்றதா ? இல்லையே மாநில அரசின் பணமும்தான் அதில் இருக்கிறது. அரசின் பணம் என்றாலே அது மக்களின் வரிப் பணம்தான் இதில் என்ன மயிரு இருக்குதுன்னு நீ கேள்வி கேக்கற திருட்டுக் காவியே ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் யூட்யூப் இன் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் போடப்போகிறார்களாம். கடவுளின் அவற்றின் கதைகளைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்கு இச்சட்டமெனில், இந்தக் கதையைப் பரப்பி மனிதர்களை முட்டாளாக்கும் கூட்டத்திற்கு இந்த ஜனநாயக அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. உண்மையைச் சொன்னவனுக்கு தண்டனை எனில் இது மதச்சார்பற்ற நாடா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 


எப்படி கடவுள் இருக்கிறது என்று சொல்ல உரிமையிருக்கிறதோ அது போன்றே கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறது. எப்படிக் கடவுள் கதைகளை கண்டபடிக்கு எழுதி அதை வெளியிட்டு கோடிக்கணக்கானோரை நம்ப வைத்து பணம் கறக்கவும் இன்ன பிறவும் செய்ய உரிமை இருக்கிறதோ அது போன்றே அக்கதைகளைக் கட்டுக் கதை என்று விளம்பவும் உரிமை இருக்கிறது. 

கொலை மருட்டல் விடுப்பவன், , கலவரத்தைத் தூண்டுகிறவன், அமைதியைக் குலைக்க போலிச் செய்தியைப் பரப்புகிறவன், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வெறுப்பை விதைப்பவன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு நிகரான செய்கையை செய்யச் சொன்னவன், தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசுகிறவன், தமிழ்நாட்டின்/இந்தியாவின் பெரிய தலைவர்கள் சிலைகளை உடைத்து இழிவு செய்தவன், அவற்றைத் தூண்டி விடுகிறவன், ஜனநாயக நாட்டை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்று செயல்படுகிறவன், ஆணவக் கொலையைத் தூண்டுகிறவன், கலவரம் செய்து உடமைகளை அழித்தவன்கள், உயிரோடு எரித்தவன்கள், காவல்நிலையத்தில் கொட்டடிக் கொலை செய்தவன்கள், தன் வீட்டில் தானே குண்டு வீசிக் கொண்டு நாடகமாடுகிறவன்கள், தன் வாகனத்திற்குத் தானே தீ வைத்துக் கொண்டு புரளியைக் கிளப்புகிறவன்கள் இன்னும் பல கொடிய பிறவிகள். 

இவனுங்க எல்லாம் வெளிய இருக்கும்போது சுரேந்தரன் மேல் குண்டர் சட்டம்தானே பாய வேண்டும் ?  
Download As PDF
Bookmark and Share

Post Comment

கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் திமுக

 மோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.

                                   

கொள்கையைப் பேசினால் காவிகள் கட்டம் கட்டி திசைதிருப்பி இந்து விரோதப் பட்டம் கட்டுவார்கள். இந்துக்களுக்காகப் பேசினால் நம்மளை மாதிரி போராளிகள் திமுகவிற்கு கொள்கை போதவில்லை/கைவிட்டுவிட்டது என்று மொத்துவார்கள். ஆக என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் திமுகவுக்கு அடிதான்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணியே கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவில்லை என்று சொன்ன பிறகும் திமுக காசு கொடுத்துத்தான் கறுப்பர் கூட்டம் நடக்கிறது என்று சொல்வார்கள்.

திமுககாரன், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களோ கோயிலுக்குப் போனால் ஆகா இந்து மதத்தைப் பின்பற்றுகிறான் என்று சமாதானமாக மாட்டார்கள்.
பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்பார்கள்.

ரம்ஜான்/கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னால், இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் இந்து விரோதி, கிறித்தவக் கைக்கூலி என்றுதான் சொல்வார்கள்.

முருகனை அவமதித்ததற்காகக் திமுக கண்டிக்கிறது என்ற செய்தியை 99 % காவிகள் வேண்டுமென்றே பார்க்காததுபோல் இருந்து விட்டு திருட்டு திமுக இந்து விரோத திமுக என்பார்கள்.

திராவிடம், கடவுள் மறுப்புப் பேசாமலேயே இந்துக்கள் மனதை புண்படுத்தாமலேயே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்த முடியும். அவர்கள் பாணியிலேயே போய் அவர்களைத் திரை கிழிக்க முடியும்.

பாஜக ஆட்சி நடத்தும் இலட்சணம் இந்துக்களுக்குத் தெரியாதா ? பிடி எதுவும் கிடைக்காமல்தான் இவர்கள் திமுக எதிர்ப்பை/மதவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மருத்துவத்தில் பெரும்பான்மை இந்துக்களின் இட ஒதுக்கீடைப் பறிக்கும் பாஜக என்று சொல்லியிருக்கலாம். காவிகளின் ஓட்டை வாயை அடைத்திருக்கலாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் முழித்திருப்பார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

அவன் யார் ?

எதிர்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்கும். ஆளும் கட்சியாக இருக்கும்போது விலைவாசியை உயர்த்தும்.

அது என்ன?

பாகிஸ்தான் என்றால் பாயும்.
சீனா என்றால் சிணுங்கும்.

அது என்ன ?

ஆட்சியில் இல்லாதபோது அரசைக் கேள்வி கேட்பது தேசபக்தி என்பான். ஆட்சியில் இருக்கும்போது அரசைக் கேள்வி கேட்பது தேசத்துரோகம் என்பான்.

அவன் யார் ?

அன்னம் தண்ணி புழங்க மாட்டான். மதம் மாறினால் கதறுவான்

அவன் யார் ?

எல்லாத்துக்கும் காரணம் நேருவும் காங்கிரசும்தான் என்பான்
எல்லாத்தையும் தொடங்கியது கருணாநிதியும் திமுகவும்தான் என்பான்.

அவன் யார் ?

சீன நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வான்
சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவான்.

அவன் யார் ?

ஆளுங்கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சியைத் திட்டுவான்.  
அடித்தவனை விட்டு அடிவாங்கியவனைத் திட்டுவான்.

அவன் யார் ?

எல்லா ஊடகங்களிலும் வருவான். அவர்களையே வேசி ஊடகங்கள் என்பான். 

அவன் யார் ?

ஜாதியை ஆங்கிலேய சதி என்பான் திராவிட சதி என்பான். ஜாதிதான் பண்பாடு என்பான் ஜாதிதான் மதம் என்பான். 

அவன் யார் ?

விடுதலைப்போராட்டத்தில் போராடாமல் சும்மா இருப்பான்.  விடுதலைப்போராளிகளைக் காட்டிக்கொடுப்பான். 70 வருடங்கள் கழித்து போராளியாகக் கரடி விடுவான்.

அவன் யார் ?

தேசத்துரோகிகளுக்குவெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பான்.
அவனும் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவான்.

அவன் யார் ?

பாஜக. 
Download As PDF
Bookmark and Share

Post Comment

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாத எதிர்ப்பு வேறு

இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.

                                         

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.

இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?

காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?

பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,

"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "

"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"

இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.

இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.

நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.

இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.

முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.

அதுவும் எப்படி ?

நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.

அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.

எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்துக்கள் மதம் மாற்றுவதில்லையா ?

விவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,

                                                  

என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும். 

மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.

ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.

கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?

இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?

இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?

Download As PDF
Bookmark and Share

Post Comment

டெல்லி கலவரம் 2020








                                          

                                          

                                          

                                         

                                          

                                         

                                        

                                        

                                        

                                        

                                        

                                        

Download As PDF
Bookmark and Share

Post Comment

பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share

Post Comment