இணையத்தில் போட வேண்டிய கொத்துக்குறி (#) ஐ எதுக்கு பதாகையில் போட்டு வச்சுகிட்டு?
உலகிலேயே கோரிக்கை முழக்கத்தையே தவறாக எழுதிய ஒரே கும்பல் இந்தக் காவிக்கும்பல்.
கோயில் அடிமை நிறுத்து என்றால் என்ன ?
கோயிலுக்குச் செல்லும் அடிமைகளை நிறுத்து என்று இந்துக்களை இழிவு படுத்துவது போல் தோன்றுவதால் இந்து மக்கள் கட்சி உடனே போராட்டத்தை அறிவித்திருக்கலாம்.
பஞ்சாப் உழவர்கள் போராட்டத்தில், க்ரேட்டா துன்பெர்க் ஒரு Tool Kit ஐ பகிர்ந்து கொண்டதற்காக கபாலமே வெடிக்குமளவுக்கு கூச்சல் போட்ட காவிபயங்கரவாதிகள், சிவராத்திரிக்கு சாமி கும்பிட வருபவர்களிடையே இப்படி கோயில்களைப்பாதுகாக்கும் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் திணிப்பது மட்டும் Tool Kit வகையில் வராதா ?
கர்நாடகாவிலிருந்து இங்கே கஞ்சா விக்க வந்த, மனைவியைக் கொன்றதாக ஐயத்திற்குரிய நபர், வனப்பகுதியை ஆக்ரமித்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் கோயில்களை தமிழ்நாட்டு அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்கும் ஜகதீஷ் வாசுதேவ் க்கு என்ன தகுதி இருக்கிறது ?
இந்த பித்தலாட்டச் சாமியாரிடமிருந்து ஈஷா மையத்தை மீட்டு தமிழ்நாட்டு அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
மனிதன் பூஜை செய்வதால்தான் கோயில்கள் அழிகின்றன எனில் மனிதர்கள்தான் சாமியையும் மதத்தையும் கோயில்களையும் உருவாக்கி நடத்துகிறார்கள் என்று வெட்கமில்லாம் ஒத்துக் கொள்கிறார்கள்.
கோயிலுக்குள் தமிழ் வழிபாடு வேண்டுமென்று நாம் கேட்டால் வேறு கோயில் கட்டிக்கொள் உன் விருப்பப்படி வழிபாடு செய், எங்கள் நம்பிக்கையில் தலையிடாதே என்பார்கள் காவிகள். அவர்களுக்கும் அதே பதில்தான் நாம் சொல்வோம்.
சரியாக 11999 கோயில்கள் ஒருவேளை பூஜை இன்றி அழிகின்றன எனில்,
தியானலிங்கம், ஆதியோகி என்று பெரிய பொம்மைகளை நிறுவி புரளிகளைக் கிளப்பாமல் இருக்க வேண்டும்
இனி புதிது புதிதாக சாமி சிலைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும், தெருவுக்கு ஒரு கோயில் கட்டுவதைக் கைவிட வேண்டும்,
கொஞ்சம் மேல்தட்டு மக்கள் வசிக்கும் வட்டாரங்களில் சாய்பாபா கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்கள் புதிது புதிதாகக் கட்டுவதைக் கைவிட வேண்டும்.
மேலும் தினுசு தினுசாகக் கிளப்பப்படும் சிவராத்திரி, தாமிரபரணி புஷ்கரணி, 40 வருடங்களுக்குப் பிறகு அத்திவரதர், கோரோனாவுக்கு கைதட்டுவது விளக்கேற்றுவது போன்ற கேடுகெட்ட பழக்கங்களைப் புறந்தள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் நாட்டையே நாறடிக்கும், பணத்தைப் பாழாக்கும் விநாயகர் சதுர்த்திக்கு என்றே புதுப்புதுப் பெயரில் காவி இயக்கங்கள் தொடங்கி காசு பறிக்கும் கீழ்த்தரமான செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.
ஏற்கெனவே கவனிப்பாரற்றுக் கிடக்கும் பழைய சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் சூடும் சுரணையும் மானமும் நேர்மையும் அறமும் உடைய பக்தர்கள் முன்வரவேண்டும். அதை விட்டு விட்டு அரசாங்கத்தை எதிர்ப்பதையும், அறநிலையத்துறையை எதிர்ப்பதையும் விட்டு விட்டு ஆகும் வழியைப் பார்க்க வேண்டும். பக்தர்களே செய்வீர்களா செய்வீர்களா ?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்