வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுதத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.
ஜால்ரா 1
அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.
ஜால்ரா 2
அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
|
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது |
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம்.
இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !
இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.
ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம்.
ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.
Download As PDF