நானானவள் - ஆம் ! அவள் நான் என்று ஆனவள்


நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நாளில்
உன் வாழ்க்கையில் ஒரு நாளில்
என் வாழ்க்கையில் ஒரு நாளில்
அந்த சில நிமிடங்கள் நீயும் நானும் மட்டும்
நமது மொழிகள் மட்டும்
நமது குரல்கள் மட்டும்

நமது செவிகள் மட்டும்
நமது இதயங்கள் மட்டும்

நம்மைப் பற்றியவை மட்டும்
நம்மைச் சேர்ந்தவர்கள் குறித்தவை மட்டும்
நம்முடைய நிகழ்கால நிகழ்வுகள் மட்டும்
நம்முடைய உள்ளங்கள் மட்டும் பேசின
பொன்னான நிமிடங்கள் அவை மட்டும்
நீ எனக்கு மிகவும் உறவாகவிருந்தாய்
நான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிருந்தேன்

என்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது
உன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது
காலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்
பட்டும் படாமல் நீ பதில் பேசியதும்
விட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்
என் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்
நீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்
அவ்வப்போது அதை தூசுதட்டி நான் அசைபோடுவதும்
வாழ்வு உன் மீதான ஈர்ப்பைக் குறைத்து விட்டாலும்
அந்நினைவுகள் எனக்கு சுவையூட்டும் இன்றும் என்றென்றும்
உன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்
உன்னில் நீ மாறியிருந்தாலும் 
என்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்

ஏனெனில் நீ, நான் என்று ஆனவள்
ஆம் அவள் நான் என்று ஆகினாள்
அவள் என்னவள்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. என்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது
    உன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது
    காலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்
    பட்டும் படாமல் நீ பதில் பேசியதும்
    விட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்
    என் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்
    நீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்// செம...

    உன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்
    உன்னில் நீ மாறியிருந்தாலும்
    என்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்
    ஏனெனில் நீ, நான் என்று ஆனவள்
    ஆம் அவள் நான் என்று ஆகினாள்
    அவள் என்னவள்// ஆஹா!! அருமை அருமை...

    இம்புட்டு எழுதற நீங்களா அங்கிட்டு வந்து கதையப் பார்த்துட்டு நல்லாருக்குனு சொல்லி, பொறாமையா இருக்க்னு முயற்சி செய்யணும்னு சொல்லிட்டுப் போனது..நீங்க எழுதறத விடவா....உங்க கவிதை போல எல்லாம் நமக்கு எழுத வராதுங்கோ..கவிதையே அபூர்வம்...அசத்திப்புட்டீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ?!! நம்பவே முடியலையே ?:)) என்னைக் கிண்டலடிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது கீதா.
      எனினும் நன்றிகள் பல

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்