மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஒரு கேள்வி பதிலை குமுதம் அரசு பதில்கள் பிரிவில் வெளியிட்டுள்ளனர். தற்போதைய திருவாய் மலர்ந்தருளிய செய்தி - வேறென்ன ஹிந்தியைப் படிக்க விடாமல் திராவிட இயக்கத்தின் துரோகம் குறித்துத்தான். தமிழர்களைப் படிக்கவிடாமல் செய்தது திராவிட இயக்கங்களின் துரோகம்தானே என்று ஒரு வாசகி கேட்க, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கும்படி பார்த்துக் கொண்டார்கள் அதுதான் துரோகம் என்று பதிலளித்து இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல வேறு 100 காரணங்கள் இருக்கின்றன.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதாகவும், ஹிந்தியைப் படிப்பது துரோகம் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடடா என்ன கைங்கரியம். ஹிந்தி திணிப்பதை எதிர்ப்பதும், அல்லது ஹிந்தியைக் கற்பதும் துரோகமாம். தேவைப்படுபவன் கற்றுக் கொள்வதில் யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, அதே நேரம் கட்டாயத் திணிப்பை எதிர்ப்பதில் நியாயமிருந்தது. இப்போது ஆங்கிலத் தாக்கத்தினால் தமிழ் மொழி குறித்து கவலைப்படும் நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது துரோகம் என்று சித்தரிப்பதில் என்ன நேர்மையிருக்கிறதோ அது போலத்தான் இதுவும்.
எத்தனை முறை கரடியைப் போல் கத்தினாலும் தேசிய மொழி ஹிந்தியைக் கற்க விடாமல் செய்தது திராவிட இயக்கம் என்று திரும்பத் திரும்ப முதலிலிருந்த தொடங்குகிறார்கள். இதைப்பார்த்தால்தான் கொதிக்கிறது.
ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதைக் கற்காததால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது, ஹிந்தியல்லாத வெறொரு மொழி தெரியாததால் ஏற்படும் தொல்லைகள்தானே ஒழிய வேறொன்றும் தனிச் சிறப்பாக ஏற்படவில்லை. சில இணைப்புகள் தருகிறேன். வேறு ஏதேனும் சிறப்பான கட்டுரைகள் ஹிந்தி திணிப்பு குறித்து இருந்தால் தெரியப்படுத்தவும்
வெட்கம் கெட்டவர்களுக்காக ! (கோவி கண்ணனின் பதிவில் சில இணைப்புக்களும் உள்ளன. )
என்னுடைய பதிவு
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்