பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும் சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.
ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது.
3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.
தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .
தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''
இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.
சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.
அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.
இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.
புகழ்விரும்பி எக்செட்ரா......
இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.
அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.
ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல. பார்ப்பனப் பெண் மட்டுமல்ல இட ஒதுக்கீடு பற்றி அறியாத எந்தவொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண், பெண்களின் கருத்தும் சின்மயி கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் படித்ததே இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் என்பதை அறியாமல் இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். சின்மயி பார்ப்பனராக இருப்பதால் அதை வைத்தே அவரை தாக்க முடிகிறதே. இதே வேறு ஜாதியாக இருந்திருந்தால் ?
அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?
அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.
திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?
அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.
தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.
இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?
ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?
படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.
பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.
சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?
களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா
3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.
கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.
கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்
மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்
நடிகர் விஜய் குறித்து வருகின்றவை
இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி வீசுகின்றனர்.
இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you என்று ட்வீட்டியிருந்தான்.
நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.
பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.
இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.
இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.
2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.
http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.

நன்றி சவுக்கு |
பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.
இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.
இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.
2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.
http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
இரு பக்கமும் தவறு உள்ளது . முறைப்படி நீதிமன்றத்தை அணுகுவதுதான் சரி
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி !! இது நீதி மன்றம் போயிருக்க வேண்டிய பிரச்சனையில்லை. இருந்தாலும் கைமீறிப் போய்விட்டது
நீக்கு
பதிலளிநீக்குகேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?
படித்தேன். அதற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியுமென்று தெரியவில்லை. இதை வேடிக்கை பார்த்தவர்களாவது சொல்லியிருக்க வேண்டும்
நீக்குஉங்களுடைய அருமையான பதிவு.
பதிலளிநீக்குஒரு பெண்ணை ஆபாசமாக தூற்றவிட்டு அதை கண்டு கொள்ளாம அதற்க்கு ஆதரவாக மேட்டு குடி எதிர்ப்பு, கீழ்தட்டு மக்கள் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று பலர் கிளம்பி இருப்பது நம்பவே முடியல்ல.
//இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார்//
எல்லா குடிமக்களுமே பிரச்சனையை முறையிடுவதற்க்கு காவல் துறையை தான் நாட வேண்டும். சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க முடியாது .செல்வாக்குள்ள பிரமுகர்களின் முறைபாடுகளை மட்டுமே காவல் துறை எடுத்து செயல்படும் என்பது இந்தியநாட்டு நிர்வாகத்தின் மோசமான குறையே தவிர சின்மயியின் தவறு அல்ல.
//அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள்//
இவர்களிடம் தான் தமிழராக இருப்பதற்கு சான்றிதழ் பெறவேண்டுமாக்கும்.
நன்றி வேகநரி! அவரைக் கேவல்ப்படுத்தியவர்கள் தமிழுணர்விலோ, தலித் அல்லது மீனவர் பாசத்திலோ செய்ததாகத் தெரியவில்லை. ஆணாதிக்க வன்மம் மட்டுமே தெரிகிறது. பெரியாரியவாதிகள், அம்பேத்கரியர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
நீக்குநடு நிலயான கருத்துக்கள், சின்மயி பிராமணர் என்பதாலேயே இந்த வக்ரபுத்தி தாக்குதல்
பதிலளிநீக்குநன்றி !! அவர் பெண் என்பதால் மட்டுமே அப்படிப் பேசப்பட்டார், பிராமணர் என்பது ஒரு காரணம். உதாரணம் மேலேயுள்ளா மீனாவின் மீதான தாக்குதல்கள்
நீக்கு"சின்மயி பிராமணர் என்பதாலேயே இந்த வக்ரபுத்தி தாக்குதல் "
பதிலளிநீக்குஅப்போ மீனா கந்தசாமி எதற்க்காக அப்படி வக்கிரமாக தாக்கப்பட்டார் ஆரிய டமிலன். மீனாவும் பார்ப்பனரோ ????
வேக நரிக்கு,
பதிலளிநீக்குமீனவர் ஆதரவு பிரச்சினைதான் ஆரம்பம். அதற்க்கு முன் ஆபாச வார்த்தை பிரயோகம் சின்மயியை நோக்கி நடை பெறவில்லை. இட ஒதுக்கேடு தொடர்பான விடயமும், மீனவர் படுகொலை தொடர்பான விடயமும் வெளிவந்த பின் தான் மோதல், வார்த்தை பிரயோகம் கடுமையானது.
சின்மயி மீதானா பாலியல் வசவை நான் ஆதரிக்க வில்லை. கண்டிக்கிறேன்
நன்றி ! அதேதான் எனது கருத்தும். அவர் தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும் அது தவறான கருத்துதுதான். அதை இவர்கள் எதிர் கொண்ட விதம மன்னிக்கவே முடியாதது
நீக்குபார்பனர் இல்லாத காரணத்தினால் பல பார்பனர் அல்லாத பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் மூடி மறைக்கப்படுகின்றன.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி !! ஆம் ஏழைசொல் அம்பலத்தில் ஏறுவதில்லை
நீக்கு