வட கொரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வட கொரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதிர வைத்த ஆவணப்படம் !! - பரப்புரை (Propaganda )

சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆவணப்படம் வட கொரியாவைச் சேர்ந்தது. வடகொரியா என்பது இணையத்திலேயே கிட்டத்தட்ட எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளாத நாடாகவே இருக்கிறது. எந்த செய்தியும் அங்கிருந்து அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. அணு குண்டு ஆய்வு, அல்லது ஏவுகணை ஆய்வு அது குறித்த வெற்றி தோல்வி என்பதைத் தவிர வேறெந்த செய்திகளும் கிடைத்த பாடில்லை. அதன் அதிபர் இறந்த செய்தியையே உலகிற்கு இரண்டு நாள் கழிந்துதான் அறிவித்தார்கள். அவ்வளவு ஊடக் கெடுபிடிகள் நிறைந்தது.

அது இரும்புத்திரை நாடு, அடக்குமுறை உச்சத்தில் இருக்கும் நாடு, இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு, பசி பட்டினி நிறைந்த நாடு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சுருக்கமாக அது ஒரு பொதுவுடமை நாடு என்று ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றோம்.

அந்த நாட்டைக் குறித்து மேற்கண்ட செய்திகளை உண்மையாக்கும் ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அந்நாடே ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அது மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளைப் பற்றி விளக்குகிறது. இதை விடாமல் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது முதல் ஒரு சில நிமிடங்களிலேயே. அது மிகவும் தீர்க்கமாக மேற்கத்திய நாடுகள் செய்யும் அட்டூழியங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறது.

வட கொரியாவின் ஆவணப்படம் என்பதற்காக அது கம்யூனிசப் பெருமைகளைச் சொல்லவில்லை. அதன் அதிபரை அங்கங்கே புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் 2 முறை அவைகளும் வருகின்றன. அது அவ்வளவு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவில்லை உறுத்தவில்லை. நம்மை மட்டுமே அமெரிக்காவால் அடக்க முடியவில்லை என்று வட கொரியாவையும் அதிபரையும் மக்களையும் புகழ்கிறது. இறக்கும் வரை இவர்களை எதிர்த்துப் போரிடுவோம் என்று சூளுரைக்கிறது. இங்கு கேட்கும் போலிதேசபக்திக் கூச்சலை விட இது எவ்வளவோ மேலானது.

விளம்பரங்கள் ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் அமெரிக்கர்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று காட்டிய விதம் அருமை. மேலும் இது வரலாற்றுச் செய்திகளை போகிற போக்கில் தொடர்பு படுத்தி பல விசயங்களைப் புரிய வைக்கிறது. தற்போதைய வரலாறு முதல் கொலம்பஸ் வரை. பிரிட்டனும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இணைந்து புரிந்த புரியும் வரலாற்றுச் கொடுமைகளைப் புரியவைக்கிறது.

எடுத்துக்காட்டாக,

தன்னை வரவேற்ற மக்களைக் கொலம்பஸ் கொன்று குவித்தது

அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கப்போவதை அறிந்திருந்தும் அதை அனுமதித்தது

ஹிட்லருடனான ராக்பெல்லர், ஸ்காட்லாந்து வங்கி ஆகியோரின் அறக்கட்டளை தொடர்பு

அமெரிக்க உளவு நிறுவனமான் CIA நாஸி விஞ்ஞானிகளை வைத்து நடத்திய ஆய்வுகள்

பாலஸ்தீனம் திருடப்பட்ட வரலாறு

9/11 தாக்குதலின் போது எந்த தாக்குதலும் இல்லாமலே விழும் ஒரு கட்டிடம்

ஜப்பானின் மீதான அணுகுண்டுத் தாக்குதல்

கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கன் உட்பட 37 நாடுகளின் மீதான நேரடியான மறைமுகமான தாக்குதல்

மக்கள் தொகைக் கட்டுப்படுத்தும் திட்டம்

மேலும் சிறப்பம்சமாக நான் காண்பது மதத்தை பயன்படுத்தி மக்களை மயக்கி வைத்திருப்பது என்பதையும் காட்டியது.

பிரபலங்கள் எனப்படும் செலிபிரிட்டிகளை உருவாக்கி மாயையை ஏற்படுத்துதல் செலிபிரிட்டிகள் என்பவர்கள் எந்த ஒரு திறமையுமில்லாதவர்கள் என்று உரைக்கிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் முக்கியமாக தென்கொரியாவில் இருக்கின்றவை

எனப் பல செய்திகளைச் சொல்கிறது.

மொத்தமாக இப்படம் 1% பேர் எப்படி மற்ற 99% பேர்களை மயக்கி அவர்களை ஆள்கிறார்கள் என்று விளக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை இன்னும் யூட்யூப்பில் விட்டு வைத்திருப்பது இன்னொரு ஆச்சரியம்

பார்க்கும் சில படங்களையும் இது போன்ற கருத்துச் செறிவுடைய படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. எச்சரிக்கை மனதைப் பாதிக்கும் காட்சிகளைக் கொண்டது. இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

உலக பயங்கரவாத நாள் ஆகஸ்ட் - 6, 1945

நேற்றைக்கு உலகெல்லாம் நண்பர்கள் நாள் அசத்தலாக கொண்டாடப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியில் இன்றியமையாத நாளாகும். ஏனெனில் இன்றைக்கு சரியாக 67 வருடங்கள் முன்பு இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் அணு குண்டு வீசப்பட்டது. 


மனித குலத்திற்கே எதிரான இந்த கொடிய பயங்கரவாதச் செயலை உலகின் கவனத்திலிருந்து படிப்படியாக மறைக்கும் பொருட்டே ஒவ்வொரு வருடமும் உலக அளவில் நண்பர்கள் நான் கொட்டி முழக்கப்பட்டு வருகின்றது.

நான் இன்னொரு தகவலையும் எங்கோ வாசித்தேன். அது உண்மையா பொய்யா என்றும் தெரியாது. இக்குண்டுகள் ஜப்பானின் மீது வீசப்படுவதற்கு முன்பே ஜப்பான் தளபதிகள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்து விட்டார்களென்றும், அணு குண்டுகளை ஆய்வு செய்வதற்காகவே ஜப்பானின் மீது அமெரிக்கா வீசியது என்பதும் அத்தகவல். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். 


உலகமெங்கும் அமெரிக்கா நடத்தி வரும் போர் வெறியாட்டங்களை நினைத்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. தனது நாட்டின் மீதே தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் விரவிக் கிடக்கின்றன.

ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா என எத்தனை எத்தனை ஆக்ரமிப்புகள் ஈரான், வட கொரியா மீதான  அச்சுறுத்தல்கள்.

இறந்த ஜப்பானியர் நினைவாகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் நம் அனைவராலும் நினைவு கூரப்பட வேண்டிய நாளிதுவாகும். 

புகைப்படங்களுக்கு நன்றி கூகிள், ஃபேஸ்புக்
Download As PDF
Bookmark and Share

Post Comment

வடகொரியர்களின் கண்ணீர் !!

வடகொரியா என்ற நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது. 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை, ஏழை நாடு, ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலின் காரணமாக அணு ஆயுதத்தை உருவாக்கிக் கொண்டது. பத்து இலட்சம் துருப்புக்களைக் கொண்ட வலுவான ராணுவம் என்பதைத் தவிர்த்து. 



ஒரு தலைவருக்காக இத்தனை பேர் தரையில் விழுந்தும், கதறியழுததும் இது வரையில் நான் கண்டதில்லை. இது போலியாகத் தயாரிக்கப்பட்ட காட்சிகள் என்றும் சிலர் கூறுகிறார்கள் மக்கள் தரையில் விழுந்து அழுவது மன்னர்கால அடிமைத்தனத்தை நினைவூட்டும் கலாச்சாரம். அவர்களை மிரட்ட எடுத்திருக்கக் கூடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜோ இல் இறந்த செய்தியைக் கேட்ட ஜான் மெக்கெய்ன் இவ்வாறு கூறினார், "கிம் ஜோ இல்லாத உலகம் இனிமேல் நன்றாக இருக்கும். அவர் நரகத்தில் ஒசாமா, கடாபி, ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்திருப்பார்" என்றார். இதன் மூலமே நான் அவர் ஓரளவுக்காவது தமது நாட்டின் மீது அக்கறையுள்ளவராகவே இருந்திருப்பாரென்று நம்பத் தொடங்கினேன். 



அவர் அமெரிக்காவின் எதிர் என்பதால்தான் சர்வாதிகாரி உலகமே வெறுக்கும் தலைவர், அணுஆயுதத்தைக் கொண்டு உலகையே மிரட்டினார் என்றெல்லாம் மேற்கத்தைய ஊடகங்களால் தூற்றப்பட்டார். இராணுவ ஆட்சி, வெளியுலகத் தொடர்பு துண்டிப்பு, மனித உரிமை மீறல், வறுமை, அணு ஆயுத அபாயம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருன்தனர். இருப்பினும் இத்தனை மக்கள் கதறியழுவதும் ஏங்குவதையும் பார்த்தால் இது வரை இவர் குறித்தும் வடகொரியா குறித்தும் அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கு வெட்கப்பட்டேன்.







மேலும் அவரது இறுதி ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் இன்னும் நேர்த்தி என்றாலும் அதை வர்ணிப்பது இவ்விடம் சரிப்படாது. இராணுவத்தினரும் கூட அழுகிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம்தான். சமீபத்தில் பார்த்த நெகிழ்ச்சியான துயரமான காட்சி இதுதான். ஃபிடல் காஸ்ட்ரோ, ஹுகோ சாவேஸ் ஆகியோரும் இறப்பை சந்திக்கப் போகிறார்கள் என்பது எனக்கு இன்னும் துக்கத்தைத் தருகிறது. 

இறுதியாக வட கோரிய ஊடகங்கள் போலியாகத் தயாரித்த காட்சிகள் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் அது குறித்த ஒரு புகைப்படம் 
மேலிருக்கும் புகைப்படத்தில் இடது ஓரமுள்ள 5 பேரையும் இரண்டாவது புகைப்படத்தில் காணவில்லை. கார் நகர்ந்துள்ள தொலைவைக் கொண்டு வடகொரிய செய்திகள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். 



Download As PDF
Bookmark and Share

Post Comment