தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மடத்தனம் - பிஜெ

ஆண்டாள் விடயத்தில் காவிக் கூட்டம் அயோக்கியத்தனம் பண்னாமலிருந்தால் சங்கராச்சாரியார் மீது இத்தனை எதிர்ப்பு வந்திருக்காது. அது ஒரு வகை பதிலடிதான். சங்கரர் மரியாதை செலுத்தாமலிருப்பதே தமிழுக்கு அவர் செய்த மரியாதை. அதுதான் தமிழுக்கும் மரியாதை. அந்த வகையில் பிஜே அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை என்று சொல்லித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 

வாழும் நாட்களில் 24 மணிநேரமும் இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையில் வாழவேண்டும் என்று கோருகிறவர் பிஜே. அது சாத்தியமா ? இல்லை. எல்லாருக்குமே நல்லாத் தெரியும். ஆனாலும் முடிந்த வரை அமல் படுத்துகிறார்கள். இதை நம்பிக்கை என்று சொன்னால் கூட விட்டு விடலாம். இதை எல்லாருக்கும் பொதுவான கொள்கையாக, கருத்து போலச் சொல்வதால்தான் சகிக்க முடியாத்தாக இருக்கிறது

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ?


பிஜே அவர்கள். யாராலும் இவருகிட்ட விவாதமே பண்ண முடியாது. ஏதாவது ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு அதற்கு நூறு விளக்கம் சொல்லி திணறடிப்பதே இவர்களின் விவாதத் திறமை. மத அடிப்படைவாதம் என்று சொன்னால் அது எல்லா முஸ்லிம்களையும் குறிக்குது என்று வாயையும் அடைப்பது, பர்தா விமர்சனம் பண்ணா அது வன்மம், சமூகத்தின் மீது காழ்ப்பு என்று அடிப்பதும் தொடர்கிறது.

அந்த வகையில் இப்போ தமிழ்த்தாயை விமர்சனம் பண்றாப்ல. இதை நான் தமிழ் மீது இருக்கும் வெறுப்பு/காழ்ப்பு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்னா நம்ம வேற அவங்க வேற.

எதையெடுத்தாலும் கடவுள் நம்பிக்கையுடன் தொடர்பு படுத்தி, அல்லா வுக்கு வணங்குதல் - மற்றவைக்கு வணங்குதல் என்று ஒப்பீடு செய்தே அனைத்தையும் விமர்சனம் செய்வது அன்னாரின் வாடிக்கை. வெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதையும், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போடுவதையும் கூட தமது பகுத்தறிவினால் கட்டுடைப்பார்.

பெண்கள் மேற்கத்திய உடையணிந்தால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆணாதிக்க சமூகம் இந்தியாவுடையது. அதை தன்னுடைய பர்தா ஆதரவுக்குப் பயன்படுத்துவதற்காக இந்தியக் கலாச்சாரமும் பெண்கள் மூடி வைக்க வேண்டும் என்று கூறுகிறது, என்று தமக்குத் தோதாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே நேரம் சிலையை வணங்குவதை மட்டும் கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பார்கள்.

இவர்களின் கொள்கைப்படி, சக மனிதனுக்கும் மரியாதையாக வணக்கம் சொல்வது இறைவனுக்கு மாற்று வைப்பதாகி விடுகிறது. இறைவனை வணங்குவதும் ஒன்னு மனிதனுக்கு வணக்கம் சொல்வதும் ஒன்னு. வணக்கம் சொல்வது ஒரு வகை ஏற்றத் தாழ்வு என்று சொல்ல முடியும். ஆனால் வழிபாடு ஆகுமா ?

இப்ப முஸ்லிம்கள் பயன்படுத்தற நவீன வசதிகள் குறித்த அனுமதி வசனம் எதுவும் இஸ்லாமில் இல்ல என்றாலும் அதை சாதகமாப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். ஆனா இந்த மாதிரி விசயத்துக்கு மட்டும் மத அளவுகோலைக் கொண்டு வந்திடுவார்.

என்னவோ ஒரு கடவுளாம் அவனுக்கு எந்தத் தேவையுமே இல்லையாம். ஆனா அவனை வணங்கறதுக்காகவே மனிதனைப் படைச்சானாம். அதுக்கு அஞ்சு தடவை மண்டி போடணுமாம். இது ஒரு லாஜிக்கா ? இதுக்கு ஒரு மார்க்கமா ? சபை நாகரிகம் என்பதை மட்டும் இவர் எப்படி ஏத்துக்கிறார். பாட்டு முடிய வரைக்கும் இருந்துட்டுப் போனா அது மரியாதையாம். அதை எப்படி இஸ்லாமியப் பகுத்தறிவு ஏத்துக்குது ?

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ? அதை எப்படி எல்லா உலக மக்களுக்குமான நன்னெறின்னு சொல்ற ?

நாட்டுப் பண்ணுக்கு எழுந்து நிற்பது என்ன வகையில் சேர்த்தின்னு சொல்வாரா ? அதுவும் மடத்தனம்தானே ? அதை எந்த நாட்டிலும் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நாட்டிலும் எழுந்து நிற்பது கட்டாயமாகத்தானே இருக்கும். எப்படி எல்லா நாட்டிலும் இவர் சொன்ன கொள்கைப்படி வாழ்வது ?


        

இசைக்கு இஸ்லாமில் இடைமில்லதானே. நாட்டைப் புகழ்வது/ போற்றுவதற்குத்தானே நாட்டுப் பண். சௌதி அரேபியாவுக்கு எதற்கு நாட்டுப் பண் ?

சௌதியின் இராணுவ அணிவகுப்பின் போது ராணுவத் தளபதிகளும் சௌதி மன்னருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். சௌதி  மன்னரும் அவருக்கு பதில் சல்யூட் வைக்கிறார். இராணுவ சல்யூட் குறித்த இஸ்லாமின் நிலை என்ன ? வணக்கம் சொல்வதே தவறு, எழுந்து நிற்பதே மடத்தனம் என்பதெல்லாம் சரியென்றால் இது என்ன வகையில் வரும் ? ஏன் எதற்கெடுத்தாலும் இஸ்லாம்/ சௌதி என்கிறேன் என்றால் இவர்கள் இஸ்லாம் எங்கள் நம்பிக்கை/மதம் என்று கூறுவதில்லை. கொள்கை/மார்க்கம் என்று கூறுவதால்தான். நம்பிக்கையை விட கொள்கையைத்தான் அதிகம் விமர்சிக்க வேண்டும். இதில் எந்தக் காழ்ப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. வெறும் கேள்விகள்தான். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆண்டாளை இழிவு செய்த எச்.ராசா, விஜயேந்திர சங்கராச்சாரி !

 எச்.ராசா அவர்களின் தந்தையாரின் உழைப்பில் வெளியான செங்கிருதம்-தமிழ் அகராதி ஒன்றை வெளியிடுவதற்காக எச்.ராசா விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிறிஸ்தவரான சாலமன் பாப்பையாவையும் மதச்சார்பின்மை போற்றியான ராசா அவர்கள் வரவேற்றிருந்தார். இந்த விழாவை சிறப்பிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் வந்திருந்தார். ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் புகழ வேண்டுமே. இந்த விழா நடந்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரதமாதாவின் புத்திரர்களாக அனைவரும் எழுந்து நின்றனர். உயர்வான மேடையில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியும் எழுந்து நின்றார். பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கு அந்த மேன்மகனார் எழுந்து நிற்கவில்லை.  

தமிழை தனது ஆன்மாவிலிருந்து வெறுக்கும் ஒருவரை இம்மேடையில் ஏற்றியதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி விட்டார் எச். ராசா. தமிழினத் தலைவர் எச். ராசா அவர்களும் இதைக் கண்டுகொள்ளவோ கண்டிக்கவோ இல்லை. அப்படிச் செய்திருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழைத் தனது பெயரில் தாங்கிக் கொண்டிருக்கும் தமிழிசை அவர்கள் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார். தமிழை வளர்த்த ஆண்டாளுக்கு இப்படி ஓர் இன்னல் நேருமென்பதை அவர் எப்படி எதிர்கொள்வார் ?

இதற்கு முன்பும் கூட ராசா ஆண்டாளை வேசி என்று கூறினார். நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அது எப்படி?  வைரமுத்து ஆண்டாளை தனது தாயாகக் கருதுவதாகக் கூறினார். ராசாவோ வைரமுத்துவை வேசிமகன் என்று திட்டினார். என்ன ஒரு சின்ன சிக்கல் எச். ராசா முதலில் வைரமுத்துவை வேசிமகன் என்று கூறிய பின்னர்தான் வைரமுத்து ஆண்டாள் எனது தாய் என்று கூறினார். முன்ன பின்ன இருந்தாலும் அன்னை ஸ்ரீ ஆண்டாளை இழிவு படுத்திய எச். ராசாவை மன்னிக்கலாமா பக்தர்களே ! இப்பக் கணக்கு நேராயிட்டுது பார்த்தேளா ? 


பிரச்சனை என்ன என்பது இங்கு முக்கியமில்லை. ஆண்டாளை அவமானப்படுத்திய எச். ராசா அவர்களும், விஜயேந்திர சங்கராச்சாரி அவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அது எங்கள் உணர்வைப் புண்படுத்தியதாகும். என்ன ஏது என்று விளக்கம் கேட்காதீர்கள். அது எங்கள் உணர்வு சார்ந்தது. ஆம் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் எச்.ராசா. மார்கழிப்புரட்சியின் தலைவரான அழகுத் தமிழ் திருவாய் மொழியாளரான ராசா அவர்கள் ஆண்டாளை அவமானப்படுத்தியிருக்கிறார். ஆண்டாள் அளவுக்கு தனக்கு தமிழ் வரவில்லை என்பதால் அவமானப்படுத்தியிருக்கலாம் என்று ஒரு வாரம் முன்பிருந்து ஆண்டாளைத் தாயாக வரித்துக் கொண்ட தமிழர்கள் கருதுகிறோம். 


ஆண்டாளை எங்கே இழிவு படுத்தினார் என்று கேட்கக் கூடாது. ஆண்டாள் கோடிக்கணக்கான தமிழர்களின் தாய். எனவே தமிழர்களின் தாய்=தமிழ்த்தாய் என்று கொள்வோம். ஆக தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாயாகிய ஆண்டாளுக்கும் சேர்த்துத்தான் பாடப்படுகிறது. இது எங்களது நம்பிக்கை. அதில் தலையிட எவனுக்கும் உரிமையோ அருகதையோ இல்லை.  இந்த விளக்கத்தைல் சமாதானமாகதவர்களுக்காக இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறேன். சார்ந்தோர்கள் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். ஆண்டாள் வளர்த்ததால்தான் தமிழ் வளர்ந்தது. அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றது.  எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதது ஆண்டாளை அவமதிப்பது போலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காத சங்கராச்சாரி 100 கோடி இந்துக்களையும் இழிவு செய்துவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு, ஆண்டாள் தமிழர்களின் தாய், தமிழர்கள் இந்துக்கள், எனவே உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் புண்பட்டுவிட்டனர். இங்கே இந்துக்களுக்காக கேள்வி கேட்க இந்துக்களே உள்ளனர், புலுத்தறிவுப் பன்னாடைகள், கம்மனாட்டிக் கம்மூனிசிட்டுகள் உட்பட எச்சக்களைகள் அந்நிய மதத்துக்கு மட்டுமே சொம்பு தூக்குவர். 

இந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் பஹூத்தறிவுப் பன்னாடைகள் மற்ற மொழிக்காரர்களிடம் கேட்க முடியுமா ? கேட்டால் வாயிலியே வெட்டுவார்கள் என்பதால்தானே இந்துத் தமிழர்களிடம் மட்டும் இந்த வீரம் ?. இப்போதெல்லாம் அது நடக்காது தமிழ் இந்துக்கள் விழித்துக் கொண்டனர்.  நாம் இந்துக்களாப் போராடினால் மதவெறி என்று கூவுவார்கள் திருட்டு திராவிடக் கும்பல். எனவே நாம் தமிழ் + ஆண்டாள் என்று போராடினோம். தற்போது அதையே தொடர்வோம். இப்போது பாருங்கள் தமிழ் இனவெறி என்று அவதூறு செய்வார்கள் கம்மினாட்டி கம்யூனிஸ்ட்டுகள். அதெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 

எனவே தமிழன்னை ஆண்டாளைப் போற்றும் பாடலுக்கு நிற்காமல் இழிவு செய்ய விஜயேந்திரனுக்கு எப்படித் துணிவு வந்தது, இந்த விழாவை ஏற்பாடு செய்யக் காரணமான எச்.ராசா கொடுத்த உற்சாகமாகத்தான் இருக்கும். எச்.ராசாவின் தமிழ்ப்பற்றும், தமிழகப்பற்றும், இனவுணர்வும், தமிழ்மொழியுணர்வும் எங்களுக்குத் தெரியும், இருந்தாலும் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

புரட்சி நடக்கும்போது புரட்சியில் ஈடுபட்டவர்களே புரட்சிக்குத் துரோகமிழைத்த நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய உண்டு. அவ்வகையில் மார்கழிப் புரட்சி நாயகனான எச். ராசா அவர்களே அப்புரட்சியைக் காட்டிக் கொடுத்துள்ளார். எனவே மார்கழிப் புரட்சியாளர்கள் தங்களது களத்தை மாற்றிக் கொண்டு புரட்சியைத் தொடருமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆண்டாளை இழிவு படுத்தியவர்களைக் கண்டிக்கப் போன அவர், தானும் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்கு மூல காரணாமாகிவிட்டார். என்னே ஆண்டாளின் திருவிளையாடல் ! தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதானன்றோ !

 மன்னிப்புக் கேட்கும் முறை: 

நாம் எதிரிகளை மதிப்பவர்கள். எனவே எதிரிகளின் மொழிகளிலேயே மன்னிப்புக் கேட்க வைப்போம். தங்களின் பெருமதிப்புக்குரிய சொறியான் ஈவே ராம்சாமி நாயக்கனின் சிலை முன்பு நின்று கருப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் வாயைத் திறக்காமல் 5 முறை, 

 கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை 
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;  
கடவுளை பரப்பியவன் அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 

 என்று சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்க வேண்டும். செய்வீர்களா ? செய்வீர்களா ?. மன்னிப்புக் கேட்க வேண்டிய கடைசித் தேதி மன்னிப்பு கேட்ட பின்னர் அறிவிக்கப்படும். 

இப்போது தர்மப்போராளிகளுக்கு ஒரு வித கலக்கமும், ஐயமும் நேரலாம். நம்ம மதம் ஆப்ரகாமிய மதங்களைப் போல் மற்றவரை வெறுக்கச் சொல்லவில்லை நாத்தீக நாதாரிகளையும் ஏற்றுக் கொள்வதுதானே நம் பண்பாடு. வாழு வாழவிடு என்பதுதானே நமது கொள்கை. இப்படிப் போராட்டம் பண்ணி வெறுப்பதெல்லாம் நமக்கு ஒத்து வராதே என்று தோணலாம். ஆனால் திருவரங்கப் பெருமானின் ஆலயத்தை பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்ற சொறியான் ராமசாமியை மன்னிக்காத நாம், இலங்கையில் புதிய ஆலயங்களைக் கட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சில கோயில்களை ஆகம முறையில் ராமாயண காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட விமானங்களின் மூலம் குண்டு போட்டுத் தகர்த்த நமது ஸ்ரீமான் ராஜபக்ச அவர்களுக்கு நம் கோயிலில் வைத்து பூரணகும்ப மரியாதையும் செலுத்தி விட்டோம். நாம் நமக்கு நன்மை செய்தவர்களை போற்றுவதிலும் சிறந்தவர்கள். எதிரிகளை அழிப்பதிலும் சிறந்தவர்களே!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு நேர்ந்த கொடுமை

 
    

இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. தமிழ்நாட்டின் தனித்துவமான ஒரு நாளிதழின் ஆசிரியரான தினமணி வைத்தியநாதன் மதவெறிக்கும்பலின் அயோக்கியத்தனமான மருட்டலின் காரணமாக ஆண்டாளின் சிலை முன்பு நெடுஞ்சான்கிடையாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தினமணியில் செய்யாத தவறுக்காக பக்தர்கள் என்ற பெயரில் கூரு கெட்ட முட்டாள்களின் உளறல்களை கண்டனக் கடிதங்களைக் கூட ஜனநாயக அடிப்படையில் வெளியிட்டார். இதற்கும் மேல் தினமணியே மன்னிப்புக் கேட்கிறது என்றும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கப்பட்டது. இதற்குப் பிறகும் மதவெறிக் கும்பலின் கொட்டம் அடங்கவில்லை. அரசியல் அதிகாரம் மூலமாக தனது பதவிக்கு/பணிக்கு அச்சுறுத்தல் வருமென்பதால் வேறுவழியின்றி இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஊடகத்துறையினருக்கு இழிவை ஏற்படுத்தியிருக்கிறார். யாரைக் காலங்காலமாக ஆதரித்து வந்தாரோ அவர்களாலேயே இந்த இன்னல் நேர்ந்திருக்கிறது.  நம்புங்கோ இது சகிப்புத்தன்மையுடய மதம். கட்டுரை வெளியிட்டதால் இவர்கள் புண்பட்டார்களாம். அதற்கு ஆண்டாள் சந்நிதியில் இப்படி விழுந்து மன்னிப்புக் கேட்டதால் இவர்கள் புண் சரியாகி விட்டதாம். அற்புதம். இதைச் சுற்றி இத்தனை வெளக்கெண்ணைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

தினமணி நாளிதழின் ஆசிரியரான வைத்தியநாதன் அவர்களை எனக்கு சிறிதும் பிடிக்காது. அவர் மீதான மரியாதை உள்ள காரணம் கண்ணியமான முறையில் கருத்தை வெளிப்படுத்துவதும், தமிழைத் தனிப்பட்ட முறையில் போற்றுவதும் அதை தினமணியில் தொடர்ந்து செய்வதாலும்தான். இறைமறுப்பாளர்கள்/திராவிட அரசியல்வாதிகள் மீது வெறுப்பு இருந்த போதும் அதை அரசியல் ரீதியாக தினமலர் அளவுக்கு கீழ்த்தரமாக எதிர்வினை ஆற்றுவதோ அவதூறு பரப்புவதோ கிடையாது. அவர் இந்துத்துவவாதியாக இருந்த போதும் ஆன்மிகவாதியாக இருந்ததால் ஓரளவுக்கு என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சனையின் போதும் அவருடைய நியாயங்களை அங்கீகரித்தார். 

இவரை ஏன் பிடிக்காது என்றால் ஆன்மிகவாதியாக இருந்து கொண்டு மதவெறிப் பயங்கரவாதிகளான பாஜக, ஆர் எஸ் எஸ் வகையறாக்களை வெட்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் ஆதரிப்பவர். நேற்றும் கூட நீட் தேர்வுக்கு ஆதரவான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். ஆனால் மதவெறிப் பயங்கரவாதிகள் தனது எதிரிகளை எவ்வளவு கொடுமைப் படுத்துவார்களோ அதே அளவு வெறுப்புடன்தான் ஆன்மிகவாதிகளையும் அணுகுவார்கள். ஏனென்றால் ஆன்மிகவாதிகள் கொஞ்சமாவது மதம் கடந்த மனிதம், நேர்மை ஆகியவற்றை போதிப்பார்கள். அதெல்லாம்தான் மதவெறியர்களுக்குப் பிடிக்காதே. காந்தி என்ற ஆன்மிகவாதிக்கு கோட்சே என்ற மதவெறியன் கொடுத்த பரிசு நமக்குத் தெரியும்தானே ?

இதற்கு தினமணி வாசகர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இல்லை அவர்கள் கண்டனம் தெரிவித்தால் அதை தினமணி வெளியிடுமா ? பெருமாள் பக்தர்களுக்குக் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி உண்டாகுமா ?. செய்தித் தலைப்பே பித்தலாட்டம். ஆண்டாள் குறித்த சர்ச்சைக் கருத்தாம். கடவுள் என்பதே சர்ச்சை. ஆண்டாள் என்பதே சர்ச்சை, ஆண்டாள் கடவுள் என்பதும் சர்ச்சை. இதில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தாம். எங்கங்க போகுது இந்த நாடு ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆகாவென்றெழுந்தது பார் மார்கழிப் புரட்சி !

வைரமுத்து விளக்கம்.
       
       

கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று பாட்டெழுதினால் அது பகவத் கீதைய ஆன்மிகத்தை பரப்புவதாகப் பேருவகை அடையவேண்டும். அதே வைரமுத்து அற்றைத் திங்கள் அந்நிலவில் எழுதினால் அதை சங்க இலக்கியத்திலிருந்து திருடிச் சம்பாதித்தான் என்றும் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மார்கழிப் புரட்சித் துரோகியாவீர்கள். வைரமுத்து திருடி எழுதியதைக் கண்டு பிடிக்க முடிந்த ஆண்டாள் பக்தர்களால், வேறொருவரின் ஆண்டாள் குறித்த கருத்தை எச்சரிக்கையோடும் பெருமைப்படுத்தும் விதமாகவும் மேற்கோள் காட்டிய வைரமுத்துவை, ஆண்டாளை வைரமுத்துவே வேசி என்று சொன்னதாகவும் நீங்கள் நம்ப வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இந்துவாக இருக்கத் தகுதியில்லாதவர்.

இந்துச் சாமியார்கள் வெள்ளைகாரிகளை மடக்கிப் போட்டு யோகாவும், ஆன்மிகமும் கலந்து அடித்தால், இந்துக்கலாச்சாரம் மேலை நாட்டில் பரவுகிறது என்று சொல்ல வேண்டும். அதே நேரம் இங்கே நடக்கும் கிறித்தமதமாற்றத்தை கிறித்தவ சதி என்றும் சொல்ல வேண்டும். ஆகவே நீங்கள் இந்தப் புரட்சியில் நடுநிலை வகிக்கமுடியாது. உங்களால் இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது.

கிறித்தவர்களை வைத்து தமிழை, ஆண்டாளைப் புகழும் வைரமுத்துவை தமிழில் தரக்குறைவான கொச்சையான மொழியில் திட்டுவதை இந்துக்களின் எதிர்வினை என்று ஏற்க வேண்டும். ஆண்டாள் பெருமாளைக் காதலானகப் பாவித்துப் பாடுவது பெண்ணியப் புரட்சி என்று சொல்ல வேண்டும். அதே வேளை வைரமுத்து திரைப்படக் குத்துப் பாடல்களை ஆபாசம் என்றும் வகை பிரிக்க வேண்டும்.

இதைப் புரட்சியாக அங்கீகரிக்கக் காரணமும் நியாயமும் உண்டு. பொதுவாக திராவிடக் கழக்த்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர்தான்,  நாத்திகர்கள்தான் இழிவாகப் பேசுவார்கள், ஆபாசமாகப் பேசுவார்கள் என்று காலங்காலமாக இருந்த கருத்தை உடைத்த ஆத்திகர்களுக்கு, பக்தர்களுக்கு, குறிப்பாக ஆன்மிகவாதிகளுக்கு புரட்சிகர வாழ்த்துகளை இணையப் போராளிகள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் நடந்த மஞ்சுவிரட்டுக்கு ஆதரவான போராட்டத்தைப் போலவே பிரபலமாகும் என்று எண்ணி எச். ராசா தொடங்கி வைத்த இந்த மார்கழிப் புரட்சியில் எதிர்பாரா விதமாக நித்யானந்தரின் பக்தர்கள் இடையே வந்து தன்னிச்சையாக இணைந்து புரட்சிக்குத் தோள் கொடுத்து போராளிகளான ஆண்டாள் பக்தர்களையே ஓரங்கட்டி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு ஆதரவான போராட்டத்தில் இறுதியில் போராட்டக்காரர்கள் கெட்ட வார்த்தை பேசினார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே போல் இங்கும் கெட்டவார்த்தை பேசப்படுகிறது. தேவதாசி என்று வைரமுத்து சொன்னார் என்பதை இந்தக் கூட்டம் வேசி என்று சொல்லிவிட்டார் என்று எத்தனை முறை சொல்லி இன்பமடைகிறார்கள். உண்மையில் ஆண்டாள் மேல் என்ன ஆத்திரம் இவர்களுக்கு.

  ஆனால் இங்கே வைரமுத்துவை ஆபாசமாகத் திட்டியதிலிருந்து புரட்சி வேகம் கண்டுள்ளது. தமிழுக்காகப் போராடுகிறோம் என்று மார்தட்டப்படுகிறது, கலாச்சாரம் என்று என்னென்னவோ சொல்லி முட்டுக் கொடுக்கிறார்கள். எச்.ராசா இரண்டாவது முறையாகத் தீக்குளிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஜீயர் இரண்டாவது முறையாக சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை அறிவிக்கிறார். ஒருவர் இரண்டு முறை சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்துவது உலகில் இது வரை நடக்காதது.

ஆண்டாள் பக்தர்களின் திருவாய் மொழியினைக் கேளச் சகியாத ஆண்டாள் காதைப் பொத்திண்டா பாருங்கோ !

ஆண்டாள் இன்று இருந்திருந்தால் அல்லது ஆண்டாளின் ஆன்மா இருந்து இன்று நடக்கும் கூத்துக்களையெல்லாம் பார்த்தால் பெருமாளே பெருமாளே இவாகிட்ட இருந்து என்னக் காப்பாந்துங்கோ பெருமாளே என்று ஆண்டாளே புதிய பாசுரங்களைப் பாடியிருப்பார். ஆண்டாள் பக்தர்களின் நாறவாய் மொழிகளை முடிந்தால் காது பொத்தாமல் கேளுங்கள். நித்யானந்தம் !!

         

இன்னொரு முக்கியமான காணொலியைத் தேடினேன் யூட்யூபில் கிடைக்கவில்லை. அதனுடைய இரண்டாம் பாகமே கிடைத்தது. இந்தப் பெண் பேசியவைதான் அனைவரையும் போய் சேர்ந்துள்ளது. இதில் பேசுகிறவர்கள் யாருமே தானாகப் பேசியது போல் தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடித்தது அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள் பேசும்போது பார்த்தால் இவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள். முடிந்தால் பார்ப்பவர்களும் சிரியுங்கள். வழிபாடு என்பதையே வழிப்பாடு என்கிறார். பொழுது போகலையாம், பூஜை எல்லாம் முடிச்சுட்டு ஒரு ஸ்பெஷலாக் குடுக்கலாம்னு...

          

இங்கே பாருங்கள்  மேலைநாட்டவர்கள் நம் பெருமைகளைப் பேசுவதை. நித்யானந்தர் ஆன்மிகம் மட்டுமல்லாமல் நமது தமிழையும் மேலைநாட்டு வெள்ளையர்கள் வாயிலாகப் பேச வைத்து தமிழை உலக அளவில் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதையே நம் தமிழர்கள் செய்தால் பல்லாயிரம் லைக்ஸ் ஃபேஸ்புக்கில் வரும் வெளிநாட்டுக்காரர் செய்ததால் இதற்கு எத்தனை லைக்ஸ் வரும் ஃப்ரண்ஸ் ! விக்டர் ஜேம்ஸ் என்று வைரமுத்துவுக்கு ஞான்ஸ்நானம் செய்து வைத்த மார்கழிப் போராளிகள் இந்தக் கிறித்தவர்களை ஒரே அடியில் தமிழர்களாகவும் இந்துவாகவும் மாற்றி வைத்த நம்ம நித்யானந்தரிடன் நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒரு வேளை இந்து மதத்திற்கு ஆதரவளிப்பது நடித்து இந்துக்களுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பக்தர்கள் போல் நித்யானந்தா ஆசிரமத்தில் நுழைந்து இந்துக்களுக்கு எதிராக கிறித்தவமிசனரிகள் சதி செய்யும் வாய்ப்புள்ளதால் தருமப் போராளிகள் உஷாராக இருக்கவும்.


சூத்திரன் பார்ப்பான் ஆலய நுழைவு பற்றிய எச்.ராசா அவர்களின் கருத்து


புரட்சியை அடுத்த கட்டத்திற்குக் (அதாவது வேற Level) கொண்டு சென்ற ஆன்மிகவாதிகள்.


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆண்டாள் பெயரால் தருமப் போராளிகளின் போலிப் போராட்டம்

தமிழை ஆண்டாள் என்ற பெயரில் வைரமுத்து சொன்ன ஒரு கருத்துக்காக ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது. இது நாள் வரையிலும் எதற்காகவும் போராடியிராதவர்கள், வேறு யாரேனும் எதற்காகப் போராடினாலும் நக்கலடித்தவர்கள் இப்போது போராளிகளாக மாறியிருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பாளர்கள் அனைவரையும் போராளிகள் என்று நக்கலடிப்பது இந்துத்துவர்கள் மரபு. அதே மோடி ஆதரவாளர்களை நாம் "பக்தாள்" என்று அன்போடு அழைப்போம். இப்போது இன்ப அதிர்ச்சியாக பக்தாளே போராளியாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். ஓ அவர்களுக்கு தருமப் போராளிகள் என்று இன்னொரு பெயரும் உண்டு என்று நமக்கு உணர்த்தியுள்ளனர்.

வைரமுத்து 100 கோடி இந்துக்கள் வணங்கும் ஆண்டாள் ஒரு தேவதாசின்னு சொன்ன மாதிரி கதறித் தீர்த்தார் ராசா. இந்த தேவதாசி முறை என்ன பிரிட்டிஷ்காரனோ இல்ல முசல்மானோ கொண்டு வந்ததோ இல்லையே. இருக்கற பண்பாடுகள் எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடற இந்து மதத்தின் ஒரு அங்கம்தானே தேவதாசி முறை. அது இந்துக் கோயில்ல இருந்த முறைதானே. அதில் சிக்கியவர்கள் இந்துப் பெண்கள்தானே. அதை ஒழிக்க இந்து எதிர்ப்பாளர்கள் முயன்றபோது எதிர்த்தவர்களும் இவர்கள்தானே. 

இந்தப் போராட்ட/எதிர்ப்புக் கூத்தில் கொஞ்சமும் அடிப்படையே இல்லை. தேவதாசி முறை இந்து மதத்தில் இருந்ததால் குற்ற உணர்வு இல்லை. ஆனால் ஆண்டாள் தேவதாசி என்றால் புண்படுகிறதாம். ரொம்ப நல்ல மனசு.

ஆண்டாள் ஒரு தேவதாசி என்று சொன்னதால் எப்படி அவரை இழிவுபடுத்துவதாகும் என்று சொன்னால் நலம். இராமன் ஒரு குடிகாரன் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது என்று கருணாநிதி சொன்னால், அதை எப்படித் திரிப்பார்கள் மதவாதிகள் ?.  கருணாநிதி ராமனைக் குடிகாரன் என்று பழித்தார் என்பார். அதாவது கருணாநிதி தனது சொந்தக் கருத்தினைச் சொன்னது போல் மாற்றினார்கள். அது போலவே இங்கும் வைரமுத்தையும் தினமணி வைத்திநாதனையும் சொல்கிறார்கள். ஆனால் ஆண்டாள் தேவதாசியாக இருந்தார் என்ற வரலாறு மிகவும் சராசரியான செய்திதான்.



வைரமுத்துவை பேச வைத்து அதை வெளியிட்டவர் யார் ? தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தினமணியில் ஆன்மிகத்தை தூக்கிப் பிடிப்பவர், தமிழையும் தூக்கிப் பிடிப்பவர். தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர். காந்தியவாதி. மோடியின் ஆதரவாளர்.  இந்துத்துவா ஆதரவாளர். ஆன்மிகவாதி, தமிழ் ஆர்வலர்.  இவர் இந்து மதத்தையோ, பக்தி இலக்கியத்தையோ ஆன்மிகத்தையோ இழிவு செய்யும் செயலை 101% விழுக்காடுகள் உறுதியாக செய்ய மாட்டார் என்று சொல்ல முடியுமே. ஆனாலும் இதை விடாமல் பிரச்சனையாக்கி குளிர்காய வேண்டுமே மதவாதிகளுக்கு. அதற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனையும் சேர்த்து திட்டித் தீர்க்கிறார்கள். 

இந்து முன்னணியினர் நிர்வாகிகள் 10 பேர் சேர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு கூட்டம் நடத்தினாலே அதை செய்தியாகப் போடுவார். இவர் மீதே இந்து முன்னணியினர் தற்போது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். எதற்காகவோ ஜெயமோகனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியைப் போல இப்போது வைணவர்கள் தினமணி வைத்தியநாதனையும் நையப்புடைக்கிறார்கள்.

இது ஹேராம் படத்தில் வரும் காட்சி. மனைவியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத கணவனிடம் மனைவி சொல்வது போல் இருக்கிறது. என்னை ஆம்படையாளா ஏத்துக்காட்டியும் பரவால்ல ஆண்டாளாவாவது ஏத்துக்கலாம்ல என்ற ரீதியில் வரும் இந்த உரையாடல் ஹேராம் படத்தில் வருவதாகும். இந்த மாதிரி வசனம் இப்போது வந்திருந்தால் ஆண்டாளை இழிவு செய்கிறார் கமல் என்று கூட போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆணால் கமல் கொஞ்சம் வைணவ அடையாளங்களை தனது திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்துவதால் வழக்கமாக சைவ சமயத்தவரே அதிகமாக அவரை விமர்சனம் செய்வார்கள். ஆண்டாளை விட பெரிய சர்ச்சைகள் ஹேராமில் இருந்ததால் அதிகமாகத் தெரியவில்லை.
இந்தியாவையே (தமிழகத்தையும்) கைப்பற்றி விட்ட காவி பயங்கரவாதக் கூட்டத்துக்கு இன்னும் தமிழகத்தில் மதவெறியும் ஜாதிவெறியும் அது சார்ந்த கலவரங்களும் (பெருமளவில்) இல்லாமல் இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 

இங்கே நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் தமிழினம் சார்ந்ததாகவும், ஈழத்தமிழர் ஆதரவு, ஜல்லிக்கட்டு போன்றவை (அதுவும் இனவெறி இல்லாமல்), நீட் எதிர்ப்பு போன்ற சமூக நீதி சார்ந்தும் தான் நடக்கிறது. ஊடகங்களிலும் அவைதான் முதன்மைச் செய்திகளாக வருகிறது. விநாயகர் சதுர்த்தியிலும் பெரிய கலவரமாக மாற்ற முடியவில்லை. இந்து முன்னணித் தலைவர்களில் படுகொலையையும் பெரிதாக்கிக் கலவரம் தூண்டப் பார்த்தார்கள். எதிலும் இவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தும் விடுதாயில்லை. 

திமுகவின் திராவிட இந்து மத எதிர்ப்பினால திமுகவின் மீது கடும் வெறுப்பு கொண்ட இந்துக்கள்/ஜாதிவெறியர்கள் காட்டும் அதிகபட்ச எதிர்ப்பு கருணாநிதிக்கு அம்மா பரவால்ல என்று அதிமுக ஆதரவுடன் நின்று விட்டது. 

இங்கே திராவிடக் கட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்றால் அது டாஸ்மாக் எதிர்ப்பு ஒன்றுதான். அதிலாவது இவர்கள் திராவிட எதிர்ப்பை வலுவாகப் பதிய வைக்கலாம். அந்தளவுக்கு அவர்கள் யோக்கியர்களும் இல்லை. இந்து முன்னணிக்கு ஆட்களுக்கு மது இல்லாமல் எப்படி ஆட்டம் போட, எப்படிக் கலவரம் பண்ணுவதாம். 

இவர்களுக்கு மக்கள் நலத்தில் துளியும் அக்கறையில்லாததால் போராடுவதற்கோ காலூன்றுவதற்கோ எந்தக் களமும் இல்லை. கலவரம் செய்வதைத் தவிர வேறு அரசியல் தெரியாது. எனவே மதவெறியைக் கிண்டி விடத் தனக்குக் கிடைத்த சிறு சந்துகளில் பூந்து பயங்கரமாக performance பண்ணுகின்றனர். அதில் தோல்வியுற்றாலும் மதவெறி சிறுகச் சிறுகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

மெர்சல் படத்தில் வந்த மிகச் சராசரியான கோயிலை இடித்து பள்ளி கட்ட வேண்டும் என்பது போல ஒரு வசனத்தை வைத்து மதவெறியைத் தூண்டினார்கள்.  அது ஏற்கெனவே பாரதியார் சொன்னதுதான். உன்னால் முடியும் தம்பி என்ற பாலச்சந்தரின் படத்தில் ஒரு பாடலில் கூட அவ்வரிகள் வந்தன.  ஆனாலும் அதை ஒரு காரணமாகச் சொல்லி மதவெறியைத் தூண்டி மதவெறிக் கருத்துக்களை அனைவரிடமும் ஊடக விவாதங்கள் வாயிலாக விதைத்தனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது நியாயமெனில். புத்த விகாரைகள் இருந்த இடம் தற்போது கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன, எனவே கோயில்களை இடித்து விட்டு புத்த விகாரைகள் கட்ட வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தர்க்கமாகப் பேசியதை மாற்றி இந்துக் கோயிலை இடிக்கச் சொல்லும் திருமா என்று புரளியைக் கிளப்பிக் குளிர் காய்ந்தனர்.  திருமாவளவன் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்தை மாற்றி மதவெறியைத் தூண்டுகிறார்கள்.

அதே வகையில் இப்போது ஆண்டாளை அவமானப்படுத்தி விட்டதாக அடித்து விடுகிறார்கள்.  ஆனால் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இங்கே ஒரு உதாரணம் பாருங்கள். நடிகர், நாடக இயக்குநர் எஸ்.வி. சேகர் "மகாபாரதத்தில் மங்காத்தா" என்று ஒரு நகைச்சுவை நாடகம் போட்டிருக்கக் கூடும். அதை எப்படி மதவெறியாக மாற்றுகிறார்கள். சேகர் ஒர் இந்துத்துவாவாதி, அவர் இந்து மதத்தை இழிவு செய்வாரா ? மகாபாரத்தைப் பயன்படுத்தி ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தைப் புகுத்தி ஒரு சிரிப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் போலிருக்கிறது. அதை என்னவோ பயங்கரமான தெய்வகுத்தமாகக் கருதி இம்மாதிரி பதாகை தயாரித்தவருக்கும் இப்போது ஆண்டாளுக்காகப் போராடுகிறவர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ? இது மாதிரியெல்லாம் இந்து மதத்தை இழிவு செய்வதற்கு எதிராகப் போராட்டம்/பிரச்சனை செய்யத் தொடங்கினால் நூறு காரணங்கள் கண்டுபிடிக்கலாம். போராடிக் கொண்டே இருக்கலாம்.


வைரமுத்துவும், தினமணியும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்ட பிறகும் இது போன்ற போராட்டங்கள் நடப்பது வெறும் விளம்பரத்துக்காகவும், மதவெறியை விதைக்கவும் என்பதே தெளிவு. இதுமாதிரியெல்லாம் இவர்கள் செய்வது பொய் என்றும் வரலாற்றுப் பிழை என்றும் நமக்குத் தெரியும். சராசரி மக்களிடம் அறியாமையால் எழும் கேள்விகளையே நியாயமாக மாற்றி அதை மதவெறியாக மாற்றுகிறார்  எச். ராசா.

இப்படி இவர்கள் பொய்யாக பரபரப்பைக் கிளப்பி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நாள்களில் மக்களுக்கு முட்டாள்தனமான வரலாற்றுப் புரட்டுக்களுடன் கூடிய இந்துக்களை கிருஸ்தவ மிஷனரிகள், திராவிட ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள், காங்கிரஸ், கம்யூனிஷ்டுகள் என அனைத்துத் தரப்பினரும் இந்து மதத்தை அழிக்கிறார்கள் என்கிற ரீதியில் வாட்சப் வதந்திகள் பரவும். இதில் உள்ள ஒரே நல்ல விடயம், இது போன்ற கூத்துக்களை இந்துக்களே பரபரப்புச் செய்தியைப் போல மறந்து விடுகிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆன்மிக அரசியல் மதவாதமே

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

இந்தாண்டும் புதியன பலவும் கற்போம். மத, ஜாதி, இன பேதங்களை இடைவிடாது எதிர்ப்போம். நம்மையும் திருத்திக் கொள்வோம் நாளும்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார். விரைவில் தனிக்கட்சி துவங்கப்போவதாக சொல்லியிருக்கிறார். இதுவரை எந்தக் கொள்கையும் இல்லை என்றாலும் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு விழாவில் என் வழி பெரியார் வழி என்று சொன்னார். இப்போது ஆன்மிக அரசியல் என்கிறார். 

அறிக்கை விடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதை நாம் செய்ய வேண்டாம் என்கிறார். அறிக்கை விடுவதும் போராட்டம் நடத்துவதும்தான் அரசியல் அதில்லாமல் என்ன அரசியல் செய்யப் போகிறார். இப்படி போராடுகிறவர்கள் வெறும் கூட்டமாகப் பார்ப்பது வெறும் தந்நலவாத நடுத்தரக் கண்ணோட்டம். போராடுகிறவர்கள் தனக்காக மட்டுமன்றி பிறருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். 

இந்த ஆன்மிக அரசியல் என்பது மதவாதமாக மாறுவதற்குத்தான் வழிவகுக்கும். எப்படி என்றால் ரஜினி தனது ஆன்மிக அரசியல் என்று சொன்னதை வரவேற்றவர்கள் யாரென்று பாருங்கள். பாஜகவின் எச். ராஜா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ? இவர்கள் இருவருமே மதவெறியர்கள். பாஜகவுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும் நாராயணன் இதை மோடி அமித்ஷாவின் அதிரடி என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் தமிழிசை 2019 தேர்தலில் ரஜினி பாஜகவை ஆதரிப்பார் என்கிறார்.


ரஜினி தன்னுடைய வழிகாட்டியாக மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ வைக் குறிப்பிடுகிறார். அவர் உயிரோடு இருந்தால் தனக்கு 10 யானைகளின் பலம் இருந்திருக்கும் என்று கூறுகிறார். சோ ராமசாமி என்பவர் தான் இறக்கும் தறுவாயில் கூட திமுக அழிய வேண்டும் என்கிறார். நான் திமுக இல்லை. ஆனால் திமுக வை எதிர்க்கும் சோ திமுக வை விட சிறந்த கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும். ஆனால் என்ன செய்வார் திமுக வை விட எல்லா வகையிலும் பல மடங்கு மோசமான பாஜகவின் ஆதரவாளர். இவர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ரஜினியை மூளைச் சளவை செய்து மோடியின் முன்னர் பாஜகவில் இணைய வைத்திருப்பார். 

ஆன்மிகம் வேறு மதம் வேறு என்று நம்பும் ஆன்மிக வாதிகளுக்கு, ரஜினியின் ஆன்மிகத்துக்கு ஏன் மதவாதிகள் ஆதரிக்கிறார்கள் என்று பதில் சொல்ல முடியுமா ? இங்கே இருப்பவர்கள் பெரும்பாலாலான ஆன்மிக வாதிகள் வெறும் மதவாதிகளே ! மதவெறியர்களே ! ஆன்மிகம் என்றால் ஹிந்துத்துவா, பாஜகவை ஆதரிப்பதே அவர்கள் மேற்கொள்ளும் ஆன்மிகம். 

மதவெறியை கக்கும் ஹெச். ராஜா பாராட்டுகிறார். குருமூர்த்தி 60 ஆண்டுகால திராவிடத்துக்கு மாற்றம் வரும் என்கிறார். ஆன்மிகம் என்று ரஜினி நம்பும் ஒன்று உண்மையில் நடைமுறைக்கு ஒத்து வராதது. அதாவது அரசியலில் ஆன்மிகம் என்பது இது போன்று மதவாதிகளுக்கே சாதகமாகும். உண்மையான ஆன்மிகவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் மதத்தை கடந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்க டிடிவி தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் ஜனநாயக முறையில் ரஜினியை வரவேற்க, பாஜகவினர் ஆன்மிகம் என்றவுடன் பாராட்டுகின்றனர். 

மகாபாரதப் போரில் எதிரிகளைக் கொல்றதுக்கு அர்ஜுனன் தயங்க, எதிர்ல இருக்கறவங்க எல்லாம் என்னோட உறவினர்கள். அங்காளி பங்காளிகள், மாமன் மச்சான்கள். அவர்களை கொல்வதற்கு என்னோட மனம் அஞ்சுது அப்படின்னு தயங்குகிறான். இது சராசரி மனிதனுக்கோ அல்லது பக்தனுக்கோ வரும் சராசரியான உணர்ச்சி இது.

கிருஷ்ணர் என்ன சொல்கிறார் "அவர்களெல்லாம் வெறும் உடல்கள். அவர்களின் ஆன்மாவை எப்போதோ நான் கொன்று விட்டேன். நீ கொல்லப்போவது அவர்களின் ஆன்மாவை அல்ல வெறும் உடல்களைத்தான். நீ அவர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்லத்தான் வேண்டும். அதுவே உன் கடமை இல்லையென்றால் கோழை என்று உலகம் உன்னை ஏசும் என்றெல்லாம் சொற்ச்சிலம்பம் ஆடி அவனைப் போர் புரியத் தூண்டுகிறார்.

சுருக்கமாக ஆன்மிகம் என்பது எந்த வித தவறுகளையும் புரிய இயலாத தத்துவப்பூர்வமாக இறைவனின் பெயரால், ஞானத்தின் பெயரால், கர்மாவின் பெயரால் நியாயப்படுத்தும். அதை தனிமனிதர்கள் தமது சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பொருத்திப் பார்த்து அதிலிருந்து பாடம் பெறவோ அல்லது சரியாக நடந்து கொள்ளவோ சரியாக இருக்கலாம். ஆனால் மக்களை வழிநடத்தும் அரசியலுக்கு ஒத்து வராது. அதுவும் இன்றைய நிலவரத்தில் அரசியலுக்கு வரும் கொள்கையில்லா அறிவிலி ஆன்மிகம் பேராபத்து. கொள்கையே தனக்கு இல்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ரஜினியை எளிதாக மதவாதிகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆன்மிகம் மதம் எல்லாம் தனி மனிதர்களுக்கு மட்டுமாக இருக்க வேண்டும். அரசியலுக்கான சித்தாந்தமாக இருக்க தகுதியில்லாதது.  ஆன்மிகம் மதமாக மாறி மதவெறி அரசியலாக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் இருக்கிறது. 

நானும் சில வருடங்கள் ஆன்மிக வாதியாக வாழ்ந்திருக்கிறேன். அந்த சில வருடங்கள் என்னை மிகவும் பண்படுத்தியதாகவும் உணர்கிறேன். ஆனால் அதை மற்றவருக்கு என்னால் பரிந்துரைக்க முடியாது. என்னைப் போல் மற்றவருக்கும் அது பலனளிக்கும் என்று என்னால் உறுதி கூற இயலாது. ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சிந்தாந்தமோ, மதமோ, தத்துவமோ, நூலோ கூட சிறந்த இயல்புடைய மனிதனாக மாற்றலாம். அது எல்லாருக்கும் பொருந்தாது. அரசியலுக்கு அது பொருந்தவே பொருந்தாது. எந்த சிந்தாந்தவாதியாக இருந்தாலும், மதவாதியாக இருந்தாலும் அடிப்படை அறவுணர்ச்சி, மனிதநேயம் இருக்க வேண்டும். மத, ஜாதிய, இன அடையாளத்தை, கலாச்சாரத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட கட்சிகளிடம் அதைக் காணவே முடியவில்லை. 

நாம் ஒரு மனிதனை அவனது ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்துகிறோமே என்று ஒருவனை சிந்திக்க வைக்குமா ஆன்மிகம், உத்தரவாதமில்லை. ஆனால் அவனது கர்மா அது அதை அவன் செய்வது அவனது கடமை. இறைவன் எல்லாம் அறிந்தவன் எனவே அவனை சாக்கடை அள்ளவோ மலம் அள்ளவோ பணித்திருக்கிறான். அதில் ஒரு காரணகாரியம் இல்லாமலா இருக்கும் என்று நியாயப்படுத்தும் மனநிலையே ஆன்மிகம். கொலை செய்தவனையும் கொலைகாரனையும் இறைவனின் உருவங்களாக லீலைகளாக சமத்துவமாக பார்ப்பதே ஆன்மிகம்.

பௌத்த மதக் கோட்பாடுகளுக்கும், இலங்கையின் இனவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த பிக்குகளுக்கு எத்தனை வேறுபாடுகள் இருக்கும் என்று பாருங்கள். புத்தரின் கோட்பாடுகளில் பற்றுக் கொண்டு பின்பற்றி வாழாமல் வெறுமனே புத்தரை கடவுளாக்கி பௌத்தத்தை மதமாக்கி வணங்கி வெறும் சடங்குகளில் மூழ்கினால் அது இனமாக, மதமாக, மொழியாக அடையாள அரசியலாகும். பின்பு அடையாள வெறியாகி வெறுப்புக்கும் கலவரத்துக்கும் இனப்படுகொலைக்கும் வழிவகுக்கும். ஏற்கெனவே அதையெல்லாம் நடத்தி முடித்து வெற்றிகரமாக ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டம் ரஜினியை அனுப்பி வெள்ளோட்டம் பார்க்கிறது. 
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment