கொள்கைக்கும் செயலுக்கும்தான் எத்தனை தொலைவு. ரவி ஸ்ரீனிவாசன் என்ற் ட்விட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் ஒரு செய்தியை பகிர்ந்தது மட்டுமே. இது என்ன சைனாவா இல்லை இந்தியாவா என்ற ஐயமே வந்து விட்டது. இந்த செய்திக்குத்தான் வலைப்பூவினரும், கீச்சருமாகிய நாம் பதறியிருக்க வேண்டும். அவர் வெறும் 16 பேரை மட்டுமே பின்தொடர்பாளர்களாக வைத்திருந்தாராம். இப்போது 2000 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.
ரவி ஸ்ரீனிவாசன் |
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - என்ற வால்டேரின் மேற்கோளை முகப்பில் வைத்து
சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை - என்ற கடமையை அனைவருக்கும் வலியுறுத்தி
இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன. என்ற சட்டத்தினை எடுத்துக் காட்டி ஆரம்பிக்கப்பட்ட கருத்து.காம் என்ற இணையதளத்தில் உள்ள வாசகங்கள்.
இந்த இணையதளத்தை கி.பி 2005 ஆம் ஆண்டில் இறுதியில் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். எதற்காக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் போக்க ஒரு அமைப்பு தேவை. அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவானதே, கருத்து என்ற புதிய அமைப்பு.
அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 2005 இல் நடிகை குஷ்பு திருமணத்திற்கு முன்னர் உடலுறவு தவறில்லை எனவும், ஆண்கள் மனைவியாக வரும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கிற பாணியில் ஒரு கருத்து வெளியிட்டார். இது இந்தியாடுடே வார இதழுக்காக எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்திற்காக எடுக்கப்பட்டது. இது போன்ற புள்ளி விபரங்கள் இந்தியாடுடே வார இதழில் அடிக்கடி, மேல்தட்டு மக்களின் பாலியல் நுகர்வுப் பண்பாட்டை ஆதரித்து ஊக்குவிக்க எழுதப்படுபவை.
குஷ்பு வெளியிட்ட இந்தக் கருத்தை, தினமலரின் தரத்தை விஞ்சும், செய்திகளை 150% சரியாகவும் நேர்மையாகவும் வெளியிடும் நாளிதழான சன் குழுமத்தின் தினகரன் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கற்பில்லையா என்று குஷ்பு சொன்னதால் பரபரப்பு என்று நீட்டி முழக்கி விட்டது. ராமதாஸும் தொல்.திருமாவளவனும் அப்போதுதான் முதல் முதலாக கூட்டணி சேர்ந்திருந்தனர். அப்போது ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிப்பது, திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது(மும்பை எக்ஸ்பிரஸ்) என திரையுலகை எதிர்க்கும் விளம்பரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்களின் அரசியல் களத்திற்கு குஷ்புவின் இக்கருத்து வராது வந்த மாமணியாய் வந்து விழ குஷ்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தமிழ் அரசியல், தமிழ்ப்பெண்களின் கற்பு என்ற உணர்ச்சிகர நிலையில் நடத்தினர். குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து நடிகை சுஹாசின் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று வாய் விட்டு விட்டார். இதன் பின்பு குஷ்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட சுஹாசினிக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் செருப்பு, துடைப்பக்கட்டை, கழுதை ஊர்வலங்கள் நடந்தன. விலங்கு நல வாரியங்கள் அதைக் கண்டித்தனர். குஷ்புவின் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. பின்பு அதே குஷ்பு, ராமதாஸும் திருமாவளவனும் கூட்டணி வைத்திருந்த திமுகவில் சேர்ந்தது முத்தாய்ப்பான நிகழ்வு.
இந்த நிலையில்தான் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதன் பின்புதான் கனிமொழியும் கார்த்தியும் இணைந்து கருத்து என்ற அமைப்பைத் தொடங்கினர்.
இதைத் தொடங்கியவ நடுவண் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி ஒரு மிகச் சாதாரணமான கருத்து ஒன்றைப் பகிர்ந்த குற்றத்திற்காக ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அன்னா ஹஸாரே இயக்க ஆதரவாளர் போல் தெரிகிறது. அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து பெரிய அளவில் எனக்கு நம்பிக்கை இல்லையெனிலும் இக்கைது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கூடவே கருத்துரிமைக்கும்.
அதிகாலையில் 5: 30 மணியளவில் வீடு வரை சென்று ஸ்ரீனிவாசனைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு அவர் என்ன ட்விட்டரில் சொல்லி விட்டார் என்றால் இதுதான்.
"got reports that karthick chidambaram has amassed more wealth than vadra"
கார்த்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் கைது செய்திருக்கிறது.
சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை தூரம் ? அலட்சியத்தால் சாவு நிகழ்ந்தால் இருவருட தண்டனை அதே நேரம் ட்விட்டர், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு 3 வருட தண்டனை ? இந்தச் சட்டம் யாருக்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? (நன்றி: தி ஹிந்து செய்திகள்)
இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
* இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
* முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
இதுதான்யா ஜனநாயகம்
பதிலளிநீக்குபடித்ததற்கும் கருத்துக்கும் நன்றிகள் வெளங்காதவன்
நீக்குபிரபலங்கள் புகார் குடுத்தால், உடனடியாக சரி தவறு பார்க்காமல் கைது நடவடிக்கை எடுக்கிறார்களோ???!!!
பதிலளிநீக்குஎல்லோரும் சட்டத்தின் முன் சமம்!!!!
//எல்லோரும் சட்டத்தின் முன் சமம்!!!!//என்று சட்டத்தில் மட்டும் இருக்கிறது. ஜே!!
நீக்குகருத்துக்கு நன்றிகள்
நல்ல ஒரு பதிவு.
பதிலளிநீக்குதொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றிகள் வேகநரி :))
நீக்குஜாதி வெறியர் அருளின் பதிவில் உங்க பின்னோட்டம் மிக அருமை.
பதிலளிநீக்கு//இக்கட்சி மாநாடுகளில் சீதனம் கொடுக்க மாட்டோம் வாங்க மாட்டோம் என்ற தீர்மானங்கள் ஏதுவும் போடப்பட்டனவா ?//
நல்ல ஒரு கேள்வி கேட்டீர்கள்.
ஜாதிவெறியர் என்று அவரை நினைக்கவில்லை. ஆனால் அவர் ஆம் என்று சொல்லாமல் சொல்கிறார்
நீக்கு