கூடங்குளம் போரட்டத்தில் நக்சல் தொடர்பு என நாராயணசாமி சொல்லியிருக்கிறார். அடுத்து நேரடியாகவே பாகிஸ்தான் தொடர்பு மாவோயிஸ்டுகள் மற்றும் சீனாவின் சதி என்று தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. இடிந்த கரையில் உதயகுமாருக்குப் பதிலாக உபயதுல்லாவோ உமர் முகமது என்ற பெயரில் தலைவரும், கிறித்தவர்களுக்குப் பதிலாக இசுலாமியர்களும் இருந்திருந்தால் மிக எளிமையாக வேலையை முடித்திருப்பார்கள் ஐ எஸ் ஐ உளவாளிகள் பாகிஸ்தான் சதி என்று. இன்னும் எத்தனையெத்தனை அவதூறுகள் கொண்டுவந்து கொட்டினாலும் இவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. இது போன்ற மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த வகையான திட்டங்களைக் கொண்டுவரும்போதும் வெளிப்படும் பரவலான மக்கள் எதிர்ப்பை ஊடகங்கள் மறைத்தே வருகின்றன. போராட்டம் வலுவாக இருக்கும்போது பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாடு, நலத்திட்ட உதவி, இழப்பீடு என்ன அனைத்துப் பித்தலாட்டங்களையும் செய்து ஆசை காட்டுவார்கள். மசியவில்லையெனில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறு ஒரு தளத்திலிருந்து பேசுவது வேறுவகையில் செய்தியை வெளியிடுவது வேலைக்கு உத்தரவாதமளிப்பது, பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது என்ற பொய் வாக்குறுதிகள், அணு உலை பாதுகாப்பானது என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
பேஸ்புக்கில் ஒருவரிடமிருந்து எடுத்தது |
அடுத்து உளவியல் போரை நிகழ்த்த வேண்டியது. போராளிகளை ஆளுமைக் கொலை செய்வது. வெளிநாட்டுப் பண உதவி, மதவாதம், தீவிரவாதம், தேசதுரோகம், பொருளாதார வளர்ச்சி என்று ஊடகங்கள் மூலமாக அவதூறுகளையே வெளியிட்டு அதைப் பொதுக்கருத்தாக்கிப் பின்பு காவல்துறையையும் இராணுவத்தையும் விட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்த வேண்டியது. இதுதான் நந்திகிராமில் நடந்தது. இடிந்தகரையிலும் நடக்கிறது. இது காந்தி நாடு இல்லை என்று எப்போதும் ஆட்சியாளர்கள் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள், எதில் என்றால் காந்திய வழியில் நடக்கும் போராட்டங்களைக் கூட நாங்கள் எப்படி எதிர்கொளவோம் என்று இராணுவத்தையும் துப்பாக்கிகளையும் வைத்துப் பதில் சொல்லுகிறார்கள். கொலை செய்து விட்டு கலவரத்தில் இறங்கினார்கள் சுட்டோம் என்று முடிப்பார்கள். மிச்சத்தை தினமலம் பார்த்துக் கொள்ளும். நந்திக்கிராம் போராட்டம் நடந்த போது மாவோயிஸ்டுகள் சதி என்றார்கள், மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் விவசாயிகளிடமிருந்து முப்போகம் விளைந்த விவசாய நிலங்களைப் பிடுங்கவென்று வெறியாட்டம் போட்டார்கள். அங்கு பெருமளவில் முஸ்லிம்கள் இருந்தார்கள் நந்திகிராம் வெறியாட்டம் முடிந்தபின்பு சிபிஎம் இல்லாத மற்றக் கட்சித்தலைவர்கள் மக்களைப் "பார்வையிட" சென்றார்கள். அங்கிருந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்கள் சிபிஎம் கட்சியினராலும் காவல்துறையினராலும் நடந்த கொடுமைகளை அத்வானியிடம் சொல்லி அழுதார்களாம்.
இப்படி எதிரியிடமே சென்று அவர்களைக் கதற வைத்த கொடுமையைச் செய்தனர் அன்றைய மேற்கு வங்க ஆட்சியாளர்கள். இன்று அம்மா அவர்கள் தமது கொடுங்கரங்களை ஏவியுள்ளார். அதற்கு ஒத்தூதிய தோழர் தா பாண்டியன் கூடங்குளம் மக்கள் பண்த்தை வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும் என்று வெறிபிடித்துக் கத்தியுள்ளார். இதனால் மனம் நொந்த எழுத்தாளர் பொன்னீலன் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இது மிகத் தாமதம் என்றாலும் இது சரியான முடிவுதான். இதே தா பாண்டியன் இரு வருடங்களுக்கு முன்பு பேசியதை மறக்க முடியாது. ஈழப்போரின் போது அம்மா திடீரென்று ஈழ ஆதரவ அவதாரமெடுத்தார் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு. அப்போது ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினார். அதில் கலந்து கொண்ட வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் அம்மாவுக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதில் பாண்டியன் ஒரு உலகமகா வக்கிரம் பிடித்த ஒரு பொய்யைச் சொன்னார். அது "அம்மா உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் என்று தெரிந்த ஒரு ஈழப்பெண் வவுனியாவிலிர்ந்து தொலைபேசியில் இவரிடம் பேசினாராம். அவர் சொன்னாராம் அம்மா உண்ணாவிரதம் கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் இனிமேல் என் தலையில் குண்டு விழுந்தாலுமே பரவாயில்லை என்று. என்ன ஒரு வக்கிரம் இது போலெல்லாம் பொய்யடிக்க யாரால்தான் முடியும்.
உள்ளம் பதைக்க வைக்கிறார்கள் என்னவாகுமோ என்று. உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவமாகிவிட்டதாம். இது போன்று போராட்டங்களெல்லாம் கொச்சைப் படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் அடுத்து அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு முரசு கொட்டத் தொடங்கிவிட்டன. 200 நாட்களுக்கும் மேலாக துளி வன்முறையில்லாமல் நடந்து வரும் போராட்டத்திற்கு முடிந்த வர கேவலப்படுத்தும் வேலைகளும் எதிர்க்கருத்து உருவாக்கும் வேலைகளும் செவ்வனே நடக்கின்றன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தினமலம் தொடர்ந்து வேலையைக் காட்டி வருகின்றது. அரசியல் கட்சிகள் வழக்கம் போ உயிர்நாடியான பிரச்சனையான கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதை விட்டு தமது வேலையில் ஆழ்ந்துள்ளன. வாக்கு வங்கிக் கட்சிகள் ஆயிரமாவது முறையாக தமது புத்தியைக் காட்டியுள்ளன. சுரணை கெட்ட தமிழர்கள் கூடங்குளம் போராட்டத்தை தமது வயித்தெரிச்சல்களால் கரித்துக் கொட்டுகிறார்கள். என்னவோ உலை திறந்தவுடன் ஒரு பொத்தானை அமுக்கியவுடன் நாளையே மின்வெட்டு நீங்கி விடும் என்று கனவு காண்கிறார்கள். நாளையே உலை வெடித்து ஆயிரம் பேர் இறந்தாலும் குற்ற உணர்வு கொள்ள மாட்டார்கள் இவர்கள். அடுத்து அம்மா துரோகம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். நிச்சயம் அம்மா துரோகம் செய்ய மாட்டார். அதில் அவர் நேர்மையானவர். கருணாநிதியைப் போல அல்ல அவர். அவரை நம்பியது யாருடைய தவறு. ஈழமாகட்டும் கூடங்குளமாகட்டும் அவர் இப்படித்தான் செய்வார். ஈழ ஆதரவாளர்களுக்கு இடிந்த கரை ஒரு பாடம்தான் ஆனால் அதற்குக் கொடுக்கும் விலைதான் அதிகம். ஒருவேளை 2009 - இல் நடந்த தேர்தலில் கருணாநிதி தோற்று அம்மா வென்றிருந்தால் இப்படித்தான் ஆப்படித்திருப்பார். ஈழப்போர் வழக்கம் போலவே நடந்து முடிந்திருக்கும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்