முகமதியர்களின் மதச்சார்பின்மை பற்றிய இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் கருத்துக்கள்.
முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்கள், அடுத்தவர் பண்பாட்டை மதிக்க மாட்டார்கள் என்று குற்றம் சொல்வோரின் வாயிலிருந்தே முஸ்லிம்களின் மதச்சார்பின்மையும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு நேர் எதிரான கொள்கைகளின் படியும் பெயர் வைத்தும் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது.
இந்துக்கள் செறிவாக இருக்கும் பகுதியில் கடை வைக்கும் முஸ்லிம்கள், தங்களது பெயரையோ முஸ்லிம் மதம் சார்ந்த அரபுப் பெயர்களையோ வைப்பதில்லை. மாறாக பொதுவான பெயர்களையே வைக்கிறார்கள். காவிகளுக்குப் பிடிக்காத தமிழில் கூட வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் மனம் புண்படாமல் தான் முஸ்லிம் கடைகளில் வாங்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் இருக்கிறார்கள்.
மதச்சார்பற்ற ஆங்கிலப் பொதுச் சொற்களில் பெயர் வைக்கிறார்கள்.
எ. கா :
நியூ சிட்டி லெதர், ராயல் ட்ரேடர்ஸ், சூப்பர் மெடிக்கல்ஸ், ரிலீப் மெடிக்கல்ஸ், ஸ்டார் தியேட்டர், சூப்பர் வாக், நியூ மைனா ஹோட்டல், ஆரஞ்சு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்டார் ஜெனரல் ஸ்டோர்
தூய தமிழிலும் வைக்கிறார்கள்
எடுத்துக்காட்டு - சங்கம், சீமாட்டி சில்க்ஸ், பாரி மளிகை, வசந்தம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், நலம் மெடிக்கல்ஸ், காவேரி மெடிக்கல்ஸ், ஹோட்டல் செல்லப்பா
செங்கிருதத்திலும் இந்தியிலும் வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - மகாராஜா டெக்ஸ்டைல்ஸ், சர்க்கார் மளிகை, ராஜ்கமல் பட்டாசு கடை, மஜா மஜா உணவகம் (ஜம் ஜம் தண்ணீர் ஐத்தான் மஜா மஜா என்று திருப்பி எழுதியிருப்பார்கள் என்று ஒரு தேசபக்தருக்காவது தோன்றும்), பவித்ரா ஹோட்டல்
இந்தியா, தமிழ்நாடு, ஆகிய பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - தமிழ்நாடு துணிக்கடை, இந்தியன், ஜெய்ஹிந்த் சீமாட்டி புட்வேர், நேஷனல் ஸ்டோர், இந்தியா ஸ்டோர், இந்தியன் பேக்கரி
ஊர்ப்பெயர்களிலும் வைக்கிறார்கள்.
கொடைக்கானல் ஹோட்டல்
முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத வேறு நாட்டுப் பெயர்களையும் வைக்கிறார்கள்.
லண்டன் ஹார்டுவேர், சிங்கப்பூர் ஹார்டுவேர், பர்மா ஹார்டுவேர்
அதற்கும் மேலாக இந்துப் புராணத்தில் வரும் பெயர்கள், இந்துக் கடவுள்களின் பெயர்களையும் தமது வணிக நிறுவனங்களுக்கு வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - கிஷ்கிந்தா ட்ரெஸ்ஸஸ், லட்சுமி ஸ்டோர்ஸ், கணபதி ஸ்டோர்ஸ்
இன்னும் சில
பாவா மெடிக்கல்ஸ், ரெங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர், ரோஜா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ராயல்
இதெல்லாம் போதாதென்று தங்களது பெயர் கண்டு சிறுமை கொள்ளும் பெரும்பான்மையினரை மதித்து சுமையா பானு, சபியா பானு, கதிஜா பானு என்ற பெயர்களில் வைக்காமல் முஸ்லிம் என்று உறைக்காத பானு ட்ரென்ட்ஸ் என்று வைக்கிறார்கள்.
முகமது அமித்சா என்று முழுப்பெயர் இடாமல் M.A. ட்ரேடர்ஸ் என்றும், வானதி பீவி மகளிர் தையலகம் என்பதற்குப் பதிலாக V.B. தையலகம் என்றும் பெரும்பான்மை உணர்வுக்கு மதிப்பளித்து பெயர் வைக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்துக்களின் பூஜைகளுக்குப் பயன்படும் விளக்குகள், திரி, எண்ணெய்கள், இன்ன பிற பொருட்களையும் விற்கிறார்கள். தீபாவளிப் பட்டாசுகளையும் விற்கிறார்கள்.
என்ன செய்வது பாய் கடை பிரியாணி மாதிரி வருமா என்று எல்லா இந்துக்களும் பிரியாணிக்கு அடிமையாகி விட்டதால் அதை மட்டும் ஐய்யங்கார் பிரியாணிக் கடை என்று போடுவதற்கு முஸ்லிம்கள் விரும்புவதில்லை.
திரையடிகளின் ஆதாரம் இந்த இணைப்பில் உள்ள இடுகையில் வந்த கருத்துக்கள்
அன்பு இருக்கையில் வெறுப்பைத் தேர்ந்தெடுத்த இந்துத்துவா அன்பர்கள் இதை 1600 தடவை பகிர்ந்துள்ளார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் ?