கலாம் சிலையில் மதத்திணிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15  கோடி ரூபாய் செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதில் அவருக்குப் பக்கத்தில் பகவத் கீதையையும் சேர்த்து சிலையில் வடித்திருக்கிறார்கள். இதை விடக் கேவலம் உண்டா ? அவர் வீணை வாசிப்பார் அதனால் கையில் வீணை சரி. அவர் பகவத் கீதையில் இருந்து மேற்கோள் காட்டுவார் அதனால் கீதையை சிலையில் வடித்தது சரியா ? அவர் என்ன சாகும் வரை கீதையையா பிரச்சாரம் பண்ணினார் ? மாணவர்களிடம் கல்வி குறித்துதானே பேசினார். 

அவரைப் பற்றி நினைத்தால் என்ன நினைவுக்கு வருகிறது. குழந்தைகள், கல்வி, இந்தியா, வல்லரசு, போக்ரான் அணுகுண்டு இத்யாதிகள். இப்பேர்ப்பட்டவரின் சிலை அருகில் ஒரு மதத்தைச் சார்ந்த நூல் எதற்கு ? அறிவியலுக்கும் மத நூலுக்கும் என்ன தொடர்பு. அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் (ஓரளவிற்கு அனைவரும் ஏற்கக்கூடிய மதச்சார்பற்ற)திருக்குறள் கூட அங்கே வைத்திருக்கத் தேவையில்லை. இதற்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு. இந்த பகவத் கீதை எல்லா இந்துக்களின் புனித நூலும் அல்ல. இந்து மதத்திலிருக்கும் ஒரு புனித நூல். அது பைபிள் போன்றதோ, குரான் போன்றதோ அன்று. இந்து மதம் பன்மைத்தன்மை வாய்ந்தது இதுதான் இந்து மதம் இது இந்து மதம் இல்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பழக்கவழக்கங்களைக் கொண்டது. ஆனால் அதன் பன்மைத் தன்மையை மறுத்து இஸ்லாமிய, கிறித்தவ, பௌத்த மத பாணியில் கொண்டு சென்று இந்து மத ஆட்சியை அமைக்க முயல்பவர்கள் இந்துத்துவாவாதிகள். 
    
                                  

அவர் உயிருடன் இருக்கும் போது இந்துமத சாமியாரின் கீழ் அமர்ந்திருந்தது, கோல்வால்கர் சிலையில் வணக்கம் வைத்தது போன்றவை பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியாகியது. அதன் மூலம் இந்துமதவாதிகள் அவரை தங்களுடையவராகக் காட்டிக் கொண்டனர். குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகளை மறைத்து வேடம் போடவே பாஜக பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அவரை பிரபலமும் ஆக்கியது. அவர் பெரும்பான்மையான இந்தியர்களால் போற்றுதலுக்கு உரியவரானார். அவரை மக்கள் பாஜவின் அடையாளமாகப் பார்க்கவில்லை. எந்த மதமும் சாராதவராகவே இருந்தார் மக்களின் பார்வையில், ஆனால் இந்த பகவத் கீதையை அவர் அருகில் வைத்தது மதத் திணிப்பாகவே கொள்ளப்படும். இறந்த பிறகும் ஒரு மனிதனுக்கு மதம் திணிக்கப்படுகிறது. 

இதைப் பலரும் கண்டித்தனர். பின்பு அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் என்பவர் கலாம் சிலையருகில் குரானையும், பைபிளையும்(ஒரு முஸ்லிம் பைபிளையும் சேர்த்து எடுத்துக் கொள்வது உண்மையில் பாராட்டத்தக்கதே) வைத்தார். உடனே இந்து மக்கள் கட்சி என்ற முட்டாள் மதவெறிக்கட்சியினர் வந்து அவர் மீது புகார் கொடுத்தனர். இந்து மதம் இழிவு படுத்தப்பட்டது என்கின்றனர். இந்த முட்டாள்களுக்கு ஒரு முஸ்லிம் சிலைக்கு முன்னர் பகவத் கீதையை வைத்தது தவறாகப்படவில்லை. ஆனால் குரானையும் பைபிளையும் வைத்தது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்கிறார்கள். ஒரு மதச்சார்பற்றவர் சிலை என்றால் எந்த நூலையும் வைக்கக்கூடாது இல்லையென்றால் எல்லா நூலையும் வைக்க வேண்டும்தானே அதுதான் நியாயம். மதவெறியர்கள் ஆளும் நாட்டில் இது போன்ற சில்லரைப் பிரச்சனைகளை வைத்தும் கலவரம் செய்ய முடியும், மக்களைக் குழப்ப முடியும். மதவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கவும் முடியும். கொடுமை !

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் முஸ்லிம் தொப்பி அணிவது, தர்காவிற்குச் செல்வது, நோன்புக் கஞ்சி குடிப்பது, ரம்ஜான் பிரியாணியை அருந்துவது போன்றவை மதச்சார்பின்மையாகப் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க ஒரு முஸ்லிமின் அருகில் பகவத் கீதையை வைப்பதை ஏன் மதச்சார்பின்மையாக, மத நல்லிணக்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி வருகிறது. இந்துக்கள் அவர்களாக விரும்பிச் செய்வது. அத்வானி முஸ்லிம் குல்லாவை மாட்டியிருக்கிறார். மோடியே முஸ்லிம்களுடன் கையை ஏந்தியவாறு நின்றிருக்கிறார். ஜெயலலிதா நின்றிருக்கிறார். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். சரி மோடிக்கு சிலை வைக்கும்போதோ, அத்வானிக்கு சிலை வைக்கும்போதோ, வல்லபாய் படேலுக்குச் சிலை வைக்கும்போதோ பக்கத்தில் குரானை வைத்து விட்டு அது முஸ்லிம்களைப் போல அ அவர்கள் நடந்திருக்கிறார்கள், எனவே இப்படிச் சிலை வைப்பது மதச்சார்பின்மையின் அடையாளம் என்றால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா ? முடியாதல்லவா. மேலும் இப்போது நடப்பது இந்துத்துவா ஆட்சி என்பதாலும், ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி போன்றவற்றை வெறித்தனமாகத் திணிக்கும் அரசாக இருக்கும் காரணத்தாலும்தான் இதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. எதற்கும் கையாலாகாத புண்ணாக்கு நபர்கள் மதத்தை வைத்து பிழைப்பு, பதவி, புகழ், போர் இரத்த வெறி, வீண் ஆடம்பரம், தான் என்கிற அகங்காரம், திமிர் போன்ற கெட்ட எண்ணங்களை பின்புலமாக கொண்டே இப்படி காய் நகர்த்தி வருகிறார்கள். இவைகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்த்து குறல் கொடுத்து போராடினால்தான் இக்காலிகளின் கொட்டங்களை அடக்க முடியும்.

    கலாம் கையில் கீதை? வேதனையிலும் வேதனையடா சாமி! போயும் போயும் தமிழர்கள் நாட்டிலா இந்த அசிங்கம்?

    பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழானவன்.

    பதிலளிநீக்கு
  2. மதத்துக்க ஒருவரை ஒருவர் அடித்து சாவது என்பது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் தொடங்கியது.அப்புறம் எத்தனையோ கலவரங்கள். இன கலவரங்கள், ஜாதி கலவரங்கள், இந்திரா காந்தி கொலை செய்யபட்டதிற்காக சீக்கிய இனத்தவர்களை கொன்றார்கள். தமிழகத்தில் எத்னை ஜாதி கலவரங்கள்,கொடுமைகள் நடந்தன.
    //குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகளை மறைத்து வேடம் போடவே பாஜக பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அவரை பிரபலமும் ஆக்கியது.//
    அசுரன் பொதுவுடமை காதலன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்க
    இந்திய அரசு ரகசியமாக அனு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அந்த ஆயுதங்கள் அனைத்தும்.. அரசை எதிர்ப்போர் மீது பயன்படுத்த.!
    இந்த தயாரிப்புக்கு உதவியது மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் என தெறிகிறது...
    ஆணால் rssயின் திட்டம் கலாமுக்கு தெறியாது...
    ஒருவேளை கலாம் அவர்களுக்கு தெறிந்தால் அவர் சம்மதிக்க மாட்டார்... ஆகவே கலாமின் சேவை போதும் அவரை கொன்றுவிடுங்கள் என rss உத்தரவிட்டதாக அதன் காரணமாக அப்துல் கலாம் கொல்லப்பட்டதாக சொல்லபடுகிறது...
    நண்பர்களே நீங்கள் ஒரு விசயத்தை நன்றாக சிந்தித்து பாருங்கள் ... கலாம் அவர்கள் இமாசல பிரதேசத்தில் மாணவர்கள் இடையே பேசிகொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிர் விட்டதாக சொல்கிறது அரசு... ஆணால்
    அப்படி ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ நீங்ககள் யாராவது இதுவரை பார்ததுண்டா.???
    ஏன்.? ஆயிரகணக்கான மாணவர்கள் இருக்கும் அரங்கில் ஒரு மாணவர் கூட தனது மொபைலில் படமோ வீடியோவோ எடுக்காமல் இருந்திருப்பாரா.?
    அல்லது கலாம் போன்ற தலைவர்கள் பேசும் போது கல்லூரி நிர்வாகமே வீடியோ பதிவு செய்திருக்குமே.?
    ஆணால் இதுவரை.. கலாம் அவர்கள் மயங்கி விழுவதை போல புகைப்படமோ வீடியோ வெளியாகவில்லையே ஏன்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதவாதிகள் மட்டுமல்ல மதத்தை எதிர்ப்பவர்கள், பகுத்தறிவுவாதிகள், பொதுவுடமைவாதிகள் வரை தத்தமது எதிரிகளை விமர்சனம் செய்யும்போது யூகம் என்ற பெயரில் தமது கற்பனையை எடுத்து விடுகிறார்கள். அது போன்றதொரு கதைதான் இது வேகநரி

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்