அய்யடா !! இந்திய மக்கள் கட்சி (பிஜேபி) தமிழைப் பெருமைப்படுத்தறாங்களாம். ஏன் இப்போதுதான் தமிழின் பெருமையை புரிந்து கொண்டீங்களாக்கும். சரி இருக்கட்டும். இந்த அறிவிப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா ?
இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று கொட்டி முழக்கலாம்.
ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ?
இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று கொட்டி முழக்கலாம்.
ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ?
ஹிந்தி மொழியை நாம் கற்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் திருக்குறள் பாடமும் திருவள்ளுவர் நாள் விழாவும். நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருந்திங்கலாம்.
இப்படிச் சொன்னால் புரியும், நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஹிந்தியில் ஒரு பெரிய அறிஞரின் இலக்கியத்தின் ஒரு பகுதியை பாடமாக வைத்துக் கொள்கிறோம். எப்படி வசதி ?
சரி தமிழல்லாத மற்ற மாநிலங்களில் இது போல் அவர்கள் மொழிக்கும் மொழிசார்ந்த இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவணரசு ?
ஹிந்தித் திணிப்புக்கு இந்த திருவள்ளுவர் விழாவும் டேலியாகாது என்ற போதும், இது தவறே.
அட ராமா !! இனி இங்க நம்ம இந்தியைத் திட்ற மாதிரி அங்க தமிழையும் வள்ளுவனையும் திட்டுவார்கள். தேவை எல்லா மொழிகளுக்கும் சமத்துவமே.
தமிழைப் புகழ்வதாலோ அடுத்தவன கொண்டாடச் சொல்வதையோ, படிக்கச் சொல்வதையோ ஏற்க முடியாது. ஒரு மொழி பேசுவோர் மற்றதை கற்பது இயல்பாக நடக்க வேண்டும். நடக்கும். எப்போது ? எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்படும்போது.
இங்க இந்தித் திணிப்பும் வேண்டாம் அங்க தமிழ் வள்ளுவத் திணிப்பும் வேண்டாம். சம்பந்த சம்பந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் அப்படிக் கொண்டாட வேண்டும் இதைக்கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு.
முதலில் உங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருத வெறியைக் கைவிடத் தயாரா ?
ஹிந்தி விசயத்தில் காங்கிரசுக்கு எதிராக நிலைப்பாடு எடுங்களேன் பார்ப்போம்.
ஹிந்திதான் நாட்டின் முக்காவாசிப் பேர் பேசுகிறார் என்றெல்லாம், செங்கிருதம்தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று நம்பிக்கையுடையவர்களிடம் எல்லா மொழியும் சமமென்று சொல்லுங்களேன். திருந்த வேண்டியது நீங்கதான்.
கால் நூற்றாண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி பெரிய அளவில் கூட்டம் சேர்க்க இயலவில்லை. தமிழ் இந்துக்கள் வந்தமா சாமி கும்பிட்டமா என்று போனார்கள். இவர்களுடன் இணைந்து ராமன் கோயில் வேண்டுமென்று கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு இவர்களே குண்டு வைத்தும் பார்த்தார்கள். வெறுப்பை விதைக்க முயன்று பார்த்தார்கள். கடைசியாக மோடி அலையில் அள்ளிவிடலாம் என்று நினைத்தார்கள். அதிலும் எதிர்பார்த்தளவு இல்லை. தூய இந்தியா என்ற இவர்களது நகைச்சுவை சுய விளம்பரக் கைப்படம்(செல்ஃபி) எடுத்து ரஜினி கமல் என்று அனைவரையும் டாக் செய்து பார்த்தார்கள். இப்போது ஆண்ட பரம்பரைக் கனவில் திளைக்கும் மேல்ஜாதி வெறிக் கூட்டத்தை வளைக்க ராஜ ராஜ சோழனைக் கொண்டாடி உள்ளே புகப் பார்க்கிறார்கள். அதன் அடுத்த முயற்சியாகத்தான் திருவள்ளுவரைப் புகழ்ந்து தமிழனின் நெஞ்சை நக்கி நஞ்சை விதைக்கப் பார்க்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்