கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் யூட்யூப் இன் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் போடப்போகிறார்களாம். கடவுளின் அவற்றின் கதைகளைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்கு இச்சட்டமெனில், இந்தக் கதையைப் பரப்பி மனிதர்களை முட்டாளாக்கும் கூட்டத்திற்கு இந்த ஜனநாயக அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. உண்மையைச் சொன்னவனுக்கு தண்டனை எனில் இது மதச்சார்பற்ற நாடா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 


எப்படி கடவுள் இருக்கிறது என்று சொல்ல உரிமையிருக்கிறதோ அது போன்றே கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறது. எப்படிக் கடவுள் கதைகளை கண்டபடிக்கு எழுதி அதை வெளியிட்டு கோடிக்கணக்கானோரை நம்ப வைத்து பணம் கறக்கவும் இன்ன பிறவும் செய்ய உரிமை இருக்கிறதோ அது போன்றே அக்கதைகளைக் கட்டுக் கதை என்று விளம்பவும் உரிமை இருக்கிறது. 

கொலை மருட்டல் விடுப்பவன், , கலவரத்தைத் தூண்டுகிறவன், அமைதியைக் குலைக்க போலிச் செய்தியைப் பரப்புகிறவன், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வெறுப்பை விதைப்பவன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு நிகரான செய்கையை செய்யச் சொன்னவன், தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசுகிறவன், தமிழ்நாட்டின்/இந்தியாவின் பெரிய தலைவர்கள் சிலைகளை உடைத்து இழிவு செய்தவன், அவற்றைத் தூண்டி விடுகிறவன், ஜனநாயக நாட்டை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்று செயல்படுகிறவன், ஆணவக் கொலையைத் தூண்டுகிறவன், கலவரம் செய்து உடமைகளை அழித்தவன்கள், உயிரோடு எரித்தவன்கள், காவல்நிலையத்தில் கொட்டடிக் கொலை செய்தவன்கள், தன் வீட்டில் தானே குண்டு வீசிக் கொண்டு நாடகமாடுகிறவன்கள், தன் வாகனத்திற்குத் தானே தீ வைத்துக் கொண்டு புரளியைக் கிளப்புகிறவன்கள் இன்னும் பல கொடிய பிறவிகள். 

இவனுங்க எல்லாம் வெளிய இருக்கும்போது சுரேந்தரன் மேல் குண்டர் சட்டம்தானே பாய வேண்டும் ?  
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் திமுக

 மோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.

                                   

கொள்கையைப் பேசினால் காவிகள் கட்டம் கட்டி திசைதிருப்பி இந்து விரோதப் பட்டம் கட்டுவார்கள். இந்துக்களுக்காகப் பேசினால் நம்மளை மாதிரி போராளிகள் திமுகவிற்கு கொள்கை போதவில்லை/கைவிட்டுவிட்டது என்று மொத்துவார்கள். ஆக என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் திமுகவுக்கு அடிதான்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணியே கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவில்லை என்று சொன்ன பிறகும் திமுக காசு கொடுத்துத்தான் கறுப்பர் கூட்டம் நடக்கிறது என்று சொல்வார்கள்.

திமுககாரன், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களோ கோயிலுக்குப் போனால் ஆகா இந்து மதத்தைப் பின்பற்றுகிறான் என்று சமாதானமாக மாட்டார்கள்.
பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்பார்கள்.

ரம்ஜான்/கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னால், இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் இந்து விரோதி, கிறித்தவக் கைக்கூலி என்றுதான் சொல்வார்கள்.

முருகனை அவமதித்ததற்காகக் திமுக கண்டிக்கிறது என்ற செய்தியை 99 % காவிகள் வேண்டுமென்றே பார்க்காததுபோல் இருந்து விட்டு திருட்டு திமுக இந்து விரோத திமுக என்பார்கள்.

திராவிடம், கடவுள் மறுப்புப் பேசாமலேயே இந்துக்கள் மனதை புண்படுத்தாமலேயே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்த முடியும். அவர்கள் பாணியிலேயே போய் அவர்களைத் திரை கிழிக்க முடியும்.

பாஜக ஆட்சி நடத்தும் இலட்சணம் இந்துக்களுக்குத் தெரியாதா ? பிடி எதுவும் கிடைக்காமல்தான் இவர்கள் திமுக எதிர்ப்பை/மதவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மருத்துவத்தில் பெரும்பான்மை இந்துக்களின் இட ஒதுக்கீடைப் பறிக்கும் பாஜக என்று சொல்லியிருக்கலாம். காவிகளின் ஓட்டை வாயை அடைத்திருக்கலாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் முழித்திருப்பார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment