சற்றே நானும் தினமலர் பாணியில் ஒரு தலைப்பை முயன்று பார்த்தேன். விநாயகர் சதுர்த்தியை வைத்து வினை விதைக்க முயன்றவர்களுக்கு வினை தீர்க்கப்பட்டிருக்கிறது. விநாயகர் வினை தீர்ப்பாரா ? அதாவது கொலைகாரனை காவல்துறையிடம் சிக்க வைப்பாரா ?
பரவலாக ஒரு சொல்வடை உண்டு. எதிரியை விட துரோகிதான் தீயவன். விநாயகர் சதுர்த்தியை வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல். எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்து மதத்தை விமர்சிப்பது என்பது மதவாதத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எதிரான குரல். இது எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டில் நிலவும் மூடத்தனத்திற்கு எதிரான குரல். இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்திற்கு எதிராக எழுகிறது, ஏனெனில் பெரும்பான்மை இந்து மதத்திலிருந்தே இறைமறுப்பாளர்கள் உருவாகின்றனர் அவர்கள் தமது மதத்தால் பாதிக்கப்படுவாலும், தமது மதத்தவர் மூடத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற முனைப்பிலிருந்தும் உருவாகிறது. ஏன் என் மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய் என்பது எவ்வளவு அபத்தமான கேள்வியென்றால், நீ ஏன் உன் மதக் கடவுளை மட்டும் வணங்குகிறாய் என்ற கேள்வியே இதன் பதில். சரி உங்கள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் உங்கள் எதிரியாகவே இருக்கட்டும். உங்கள் மதத்தை காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்பவர்களின் அருகதையைப் பார்க்கலாம்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து குரல் எழுப்பப்படும்போதெல்லாம் அது அதிகமாகக் கேட்கும் குற்றச்சாட்டு. என்னவோ இந்துக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போலவும், தமது வீடுகளில் விநாயகர் படத்தை வைத்து வணங்குவதற்குக் கூட அரசு தடை செய்வது போலவும் மதவெறி ஏற்றி விடப்படுகிறது.
இவ்வருடத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது கிடைத்த இரண்டு நெகிழ்ச்சியான புகைப்படங்கள்.
அவசரத்துக்கு வேற வண்டி கிடைக்கல. பாய் வண்டிதான் கிடைச்சது என்று கொண்டு போகிறார்கள். இவர்களுக்கோ இல்லை இந்த வாடகை வண்டிக்கார்களுக்கோ இன்னும் கலவர நஞ்சு பாயவில்லை என்று நிம்மதியடையலாம் |
மற்ற மதத்தை வம்புக்கு இழுத்து கலவரம் செய்யும் நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தியின் நோக்கம் பல்வேறு வீடியோக்களால் அவ்வப்போது அம்பலப்படுகிறது. பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்கள் காவல்துறையின் முன்னிலையிலேயே கற்களால் கடைகளைத் தாக்குவது, விநாயகர் சிலையின் அடியிலே அமர்ந்து மது அருந்துவது ஆகிய வீடியோக்கள் இவ்வருட விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள். ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சிலை வைக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார் அது பெரிய அளவில் பரபரப்பாகவில்லை. ஊரும் மறந்து விட்டது.
தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் உள்ளூர் வேலையில்லா உத்தமர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களாக அல்லது RSS- இன் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று எல்லாருடைய உயிரையும் வாங்கி பணம் வசூலிப்பர். சில இடங்களில் மிரட்டல் செய்தும் "நன்கொடை" பெறப்படும். பணம் தராத கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுப் பின்னர் ஏதாவது ஊர்வலத்தின் போது கல்வீசித் தாக்கப்படும் இல்லையெனில் சூறையாடப்படும் அபாயமும் உண்டு. இவர்களுக்குள் போட்டி மோதல் இருக்கும். எந்தக் குழு எவ்வளவு பெரிய சிலை வைக்கிறது என்கிற போட்டி எப்போதும் இருக்கும். இதற்கு பெயர் இந்துக்களின் எழுச்சி விழா. கடைசி நாளில் விநாயகர் சிலை கரைப்பு என்ற பெயரில் பல பத்து வாகனங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ஊரே மலம் கழித்து சாக்கடை நீரால் நிரம்பியிருக்கும் குளங்களில் கொண்டு போய் விநாயகர் சிலைகளைக் கரைப்பார்கள். இதற்கு காவல்துறை காவல்காத்து நிற்கும்.
இவர்களின் நோக்கமே மதக் கலவரத்தினைத் தூண்ட வேண்டும் என்பதால் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. தொடர்ந்து காவலுக்கு ஆட்களை நிறுத்துகிறது. எனவே இவர்களின் மதக்கலவரத்தைத் தூண்டும் திட்டம் தோல்வியடைகிறது. நீதிமன்றமும் இவர்களுக்கு சில இடங்களில் மற்ற மத்தவர் செறிந்து வாழும் இடங்களில் ஊர்வலம் செல்வதை மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் ஹெச். ராஜா என்ற மகாத்மா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று பொங்கினார்.
எடுத்துக்காட்டாக தற்போது கோவையில் நடந்த ஒரு கொலை பற்றிப் பார்ப்போம். விநாயகர் சதுர்த்திக்கு வசூலான தொகையில் கிடா விருந்து வைத்து இருக்கிறார்கள் அதில் நடந்து வரவு செலவுத் தகராறில் ஒருவர் கண்ணாடி புட்டியால் குத்தி இன்னொருவர் இறந்து விட்டார். விநாயகர் சதுர்த்திக்கி இவர்கள் இந்துக்களிடம் பெற்ற பணத்தில் இவர்கள் கறியும் மதுவும் உண்டு களிக்கின்றனர் என்றால், விநாயகர் சிலை வைக்க என்று நம்பி காசைக் கொடுத்து இதைக் கொண்டாடும் இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா ? இப்படித்தால் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி வசூல் ராஜாக்கள் கும்மியடிக்கிறார்கள் போலும்.
//கோவை நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த இளைஞகள் விநாயகர் சதுர்த்திக்காக பல இடங்களில் பணம் வசூல் செய்து விழாவை கொண்டாடியுள்ளனர். பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது வசூலான மீதி பணத்தில் கடந்த 30ம் தேதி பாஜக வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர். விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, குடி போதையில் இருந்த பாஜக இளைஞர் அணி நல்லாம்பாளையம் பகுதி தலைவர் குட்டி (எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சக நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலிசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், தலைமறைவான பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கு ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.//
இன்னும் ஒரு செய்தி.
பாஜகவின் தேசியச் செயலாளர் அமித் ஷா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது பொய்த்தகவலைகளைப் பரப்புவதை வெளிப்படையாகவே (எதிர்ப்பதைப் போல் பேசி ஜாடைமாடையாக அதை வரவேற்றுள்ளார்). வரும் தேர்தலில் சமூக வலைத்தளங்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இவர் கட்சியினர் இப்படிச் செய்வது அதிசயமோ ஆச்சரியமோ பட வைப்பதில்லை. அறியாத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் பாருங்கள்.
ஆதார இணைப்பு
https://www.thequint.com/news/politics/amit-shah-real-fake-can-make-messages-viral
இன்னுமோர் முக்கியமான செய்தி
சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/
இன்னுமோர் முக்கியமான செய்தி
சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது ஒரு கொலை. அது என்ன நோக்கம் விநாயகர் சதுர்த்திக்கு அந்தந்த வட்டாரங்களில் பிள்ளையார் சிலை வைக்க வேண்டி பணத்தை வசூல் செய்து, ஒரு சிலையை வைத்து விட்டு மீதிக்காசில் கும்பல் கும்பலாக குடித்து கூத்தடிப்பதுதான். அதுவும் வசூல் அதிகமாக இருந்தால் கிடா வெட்டி கறியும் மதுவுமாக வெறியாட்டம். அற்புதமான வளர்ச்சி.
இங்கே இரண்டு பாஜகவினர் இடையேயான மோதலால் எதுவும் நிகழவில்லை. இதுவே கொலை செய்தவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இக்கொலைக்குக் காரணம் மதப்பிரச்சனை இல்லை வெறும் பணப் பிரச்சனை என்றாலும் கொன்றவர் முஸ்லிமாக இருந்தால் அது மதப்பிரச்சனை ஆக்கப்பட்டிருக்கும். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி என்ற அயோக்கியத்தனம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை தங்கள் நம்பிக்கையின் பெயரால் பயங்கரவாதத்தை வளர்க்கும் ஒரு தீயவர் கூட்டம் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வார்களா ?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்