கூகிளின் அடுத்த அருட்கொடை - நமது குரல்/பேச்சு எழுத்துக்களாக மாறும் அதிசயம்

அடுத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டது கூகிள். ஆம். நாம் பேசினால் அது எழுத்துக்களாக மாறுகிறது. இதற்காக நாம் எழுத்துக்களை குரலாக மாற்றித்தான் வாழ்கிறோம். ஆனால் குரலையே எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் ஏற்கெனவே வந்து விட்டது. கூகிள் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது ஆண்ட்ராய் திறன் பேசியில் இதைப் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள், நேரமும் வாய்ப்பும் கிடைக்காதவர்கள் கூட இதைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு நமக்கு அளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் கூகிளுக்கு கடமைப்பட்டுள்ளது. இதன் வேகம் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் மும்மடங்கு வேகத்தில் இருக்கிறது என்று கூறுகிறது கூகிள். 

கையால் ஒரு பலகையில் எழுதுவது போல் எழுதினால் கூகிள் அதை எழுத்தாக மாற்றித் தரும் வசதியான தமிழ் ஈர்த்தறி வசதி (Tamil Handwriting Recognition Facility) என்ற அற்புதத்தின் அடுத்த மைல்கல்லாக விளங்கப் போகிறது இந்த கண்டுபிடிப்பு. இதற்கு மேலும் என்னதான் வேண்டும் சொல்லுங்கள். 

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆண்ட்ராய்ட் அலைபேசியில் Gboard - எனப்படும் கூகிளின் தட்டச்சுப் பலகை செயலியை நிறுவ வேண்டியதுதான். பின்பு languages - என்ற பகுதியில் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு பேசிக் கொண்டே இருக்கலாம். இதைக் கொண்டு இணைய உலாவிகளில் தேடல்களை நிகழ்த்தலாம். மின்னஞ்சல், ஃபேஸ்புக், கட்செவி அஞ்சல் (whatsapp) என அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தலாம். அதிகம் மெனக்கெட்டு தட்டச்சு செய்து அழித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.        இவ்வாறு தன்னால் இயன்ற வரையில் எல்லாம் மொழிகளுக்கு தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள். ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம். இனிமேல் தமிழில் தட்டச்ச முடியாமல்தான் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தமிழில் உரையாடும் அட்டூழியம் இனியாவது ஒழிய வேண்டும். ஆயிரம் நன்றிகள் இதை சாத்தியமாக்கிய கூகிள் ஊழியர்களுக்கு. 
     தமிழ் வாழ்க ! தொழில்நுட்பம் வாழ்க ! கூகிள் வாழ்க !


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 கருத்துகள்:

  1. aஆம் கூகுளில் தேடுவதற்கு வாய்ஸ் கொடுத்தால் டைப் பண்ணி தேடும் ....தமிழிலும் வந்திருக்கிறது என்று அறிந்தோம். ஆனால் இன்னும் செய்து பார்க்கவில்லை...ஒன்று புரியவில்லை பேசும் போது அதாவது கருத்து இடும் போது தவறாகப் பேசிவிட்டால்...அதை அழித்துவிட்டுத் தொடர முடியுமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் தவறு நேராது. நாம் டைப் செய்வது போலத்தான், நாம் பேசிய முடிந்த ஒரிரு விநாடிகளில் எழுத்துக்கள் சொற்கள் தோன்றும் நாம் அனுப்பினால் மட்டுமே செல்லும்.

      நீக்கு
  2. உங்களுக்கு முயற்சி செய்தோம்....இன்னும் எங்களுக்கு கூகுள் அப்டேட் ஆகலை போல பேசிக் கருத்து இட்டால் ஆங்கிலத்தில் அடிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கீபோர்டை செலக்ட் செய்யும்போது ஜிபோர்டு - தமிழ் என்ற ஆப்சனையா இல்லை ஜிபோர்ட்- இங்கிலிஷ் ஆ என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் இங்க்லிஷ் இருப்பதால் அப்படி வர வாய்ப்புள்ளது.

      அதற்கு முன்பே உங்கள் மொபைலில் செட்டிங்க்ஸ் பகுதியில் லாங்வேஜ் அன்ட் இன்புட் பகுதியில் சென்று gboard- இல் தமிழை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். நான்கு வகை தமிழ், gboard - இல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் Tamil (India) (abc -> தமிழ்) என்பதை செலக்ட் செய்திருந்தால் அப்படி வர வாய்ப்புள்ளது. எனவே Tamil (India) என்ற ஆப்சனை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

      நானும் இன்றுதான் முயற்சி செய்தேன். எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் பல்லாயிரம் பேர் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் இது இன்னும் மெருகேறும் என்று நம்புகிறேன். மேலும் நம்முடைய குரல் நம்முடைய ஆன்ட்ராய்ட் அலைபேசியில் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சலில் ஆடியோ ஃபைல்களாக பதிவாகிறது.

      நீக்கு
  3. மகிழ்ச்சியான தகவல் கூகிளுக்கும் உங்களுக்கும் நன்றி.
    //சில நிறுவனங்கள் ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம்.//
    நிறுவனங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தமிழை பயன்படுத்தக் கூடாது,அது அவமானம் என்று இறுமாப்பாக இருக்கும் தமிழர்கள் சிலரை எனக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சிலரெல்லாம் இல்லை பலர்

      நீக்கு
    2. //ஆமாம். சிலரெல்லாம் இல்லை பலர்//
      உண்மை.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்