இரு வேறு நாடுகளில் இரண்டு வேறு பேர் கொல்லபட்டனர். இரண்டிற்கும் ஒரே காரணம் மதவெறி அல்லது மதநம்பிக்கை. இரண்டு பேரும் அந்த மதவெறிக்குக் காரணமான மதத்தைப் புண்படுத்தியதாகவோ, அல்லது இழிவு படுத்தியதாகவோ ஆதாரம் இல்லை. இருப்பினும் அவர்கள் செய்யாத செயலை, செய்தார்கள் என்ற நம்பிக் கொண்டு அல்லது நம்பியதாக நடித்துக் கொண்டு ஒரு பெருங்கூட்டம் அல்லது சிறு கூட்டம் அவர்கள் தனிமனிதனாக இருந்த போது அடித்துக் கொன்றுள்ளது. இந்த மதவாதம் மத நம்பிக்கை என்ற கூறு கெட்ட மூடத்தனம் ஒரு கூறு கெட்ட கூட்டத்தின் மொத்த வடிவமாக மாறும்போது பொய்யும் உண்மையாகிறது. கொலைவெறியே இவர்கள் மூச்சாகிறது. மனிதம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.
முதல் கொலை இந்தியாவில் நடந்தது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனாலும் இந்தக் கொலை மதத்தின் பெயரால், மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகச் சொல்லி ஒரு கொடுமையான மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தியுள்ளது இந்து மதவெறிக்கூட்டம். ஜனநாயக நாடு என்று சட்டத்தில் இருந்த போதும் பெரும்பான்மை என்ற காரணத்தைக் கொண்டு போலியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தமான மக்களுக்குமான ஒரு நம்பிக்கையாகக் காட்டி பத்து தெருப்பொறுக்கிகளை வைத்து பட்டப்பகலில் பகிங்கரமாக பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்துக் கொல்ல முடியும். ஆனாலு அந்த இயக்கம் தடை செய்யப்படாது. அந்தக் கொள்கையும் கண்டிக்கப்படாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினர் மாட்டிறைச்சி உண்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மீது அதே காரணத்தை வைத்து தாக்குதல் நடத்திக் கொல்லவும் முடியும். இதெல்லாம் ஒரு ஜனநாயகமா ? ஆம்.
ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று ஒரு கூட்டம் பால் பண்ணை முதலாளி ஒருவர் மாடுகளை கொண்டுவந்த போது வழிமறித்துத் தாக்கியுள்ளது. காரணம் அவர்கள் பசுக்களைக் கடத்தி வதை செய்பவர்கள் என்று ஐயமாம். அவர்கள் தாங்கள் பால்பண்ணை நடத்துகிறவர்கள் என்று ஆதாரங்களைக் காட்டிய பிறகும் அதை நம்பாமல் அவர்களைத் தாக்கியுள்ளது அவர்களிடமிருந்து 35000 ரூபாயையும் பறித்துக் கொண்டது. 50 வயதான அந்த பால் பண்ணை முதலாளியைக் கிழவா ஓடு என்று விரட்டி விட்டு பின்னர் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமுற்ற அந்த நான்கு பேர்களில் அந்த 50 வயது நபர் உரிய சிகிச்சையின்றியும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இந்த கும்பல் தாக்கிய ஐவரில் ஒருவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரை தப்ப அனுமதித்த கும்பல், முஸ்லிம்கள் நான்கு பேரை மட்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாத்ரியில் இது போல்தான் ஒரு வருடத்திற்கு முன்னர், மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஆட்டுக்கறி வைத்திருந்த அக்லக் என்றவரைக் கொன்றார்கள்.
இரண்டாவது கொலை பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு மதவெறி நாடு, மத விமர்சனம் செய்தாலே தேசதுரோகம், மதநிந்தனை என்று வாழ்நாள் சிறை அல்லது சாவு தண்டனைதான் கிடைக்கும் இதற்கு மேல் பெரிய விளக்கம் வேண்டியதில்லை. பெரிய காரணம் வேண்டியதில்லை. அவர் இறைவனை நிந்தித்தார். இஸ்லாத்தை இழிவுபடுத்தினார் என்ற வகையிலான வதந்தி மட்டும் போதும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் காட்டுமிராண்டிகள் கூடி விடுவார்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஒரு உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும். இது அரசாங்கம் நடத்தாது, மக்களே நடத்துவர்.
பாகிஸ்தானின் மர்தானில் உள்ள வாஹிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவர் முஹம்மத் மாஷால் கான் இறைவனை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார், அதுவும் அந்தப் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த மாணவர்களாலேயே. இந்தக் கேடுகெட்ட மதவெறி என்று ஒழியும் ? இது இருக்கும் வரை மனிதம் தழைக்கவே தழைக்காது. மாணவர் மஷால் கான் தாக்கப்படும் கொடூரக் காணொலி. மனவலிமை இல்லாதவர்கள் தயவு செய்து காணவேண்டாம்.
இரண்டு கொலைகளுமே காட்டுமிராண்டிதனமானவை.
பதிலளிநீக்குஒரு நாடு தனது மதம்சார்ந்ததாக இருக்கலாம்,இருந்தா கூட ஆனால் எப்படி ஒரு மனிதனை கொலை செய்ய முடியும், நிலைமை அப்படியிருக்க எல்லா மதமுமே அன்பைதான் போதிக்கின்றன என்ற அறுவை வேறு.
நாட்டில் அரசே அப்படி என்றால் மக்கள் எந்த அளவுக்கு இருப்பார்கள்
நீக்குகொடூரம்! மனிதன் 6 அறிவு படைத்தவன் என்று சொல்லிக் கொள்வதை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. காட்டுமிராண்டிகள்...
பதிலளிநீக்குஆமாம்
நீக்கு