எழுதுவதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது எழுத வேண்டியிருக்கிறது. எழுதவதில் கிடைக்கும் உணர்வும் ஒரு இன்றியமையாத காரணம். பணிச்சுமையும், வாசிப்பே இல்லாத நிலையும், அயர்ச்சியும் இணைந்து வலைப்பூவின் பக்கமே வரவிடுவதில்லை. முடிந்தவரையில் இணைய வாசிப்பு மட்டுமே தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பதிவில் பிற இடங்களில் வாசித்தவை மட்டும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தட்டத்தின் மராயத்து என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். தமிழ்த்திரைப்படம் போல் இருந்து விடுமோ என்று தொடக்கத்தில் திரைக்காட்சிகள் அச்சத்தைத் தந்தாலும் போகப் போக மலையாளத் திரைப்படத்தின் இயல்பு வந்து விடுகிறது. சின்னச் சின்னத் திருப்பங்கள், மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சிகள், சுவாரஸ்யம், வசனம் என்று எல்லாவகையிலும் நன்றாக இருந்தது. மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான அல்லது புதுமையான திரைப்படம் இல்லையெனினும் காணக்கூடியதே. இதுவரை எந்த மலையாளப்படமும் என்னை ஏமாற்றாமல் மனநிறைவைத் தந்துள்ளன. இதுவும் கூட.
பாலியல் வன்முறை பிற குற்றங்களும் தண்டனைகளும் :
தருண் தேஜ்பால் அல்லது நரேந்திர மோடி உளவு பார்த்தது மாதிரியான விவகாரங்களில் பாலியல் வன்முறையை எதிர்ப்பது என்பதைக் காட்டிலும் தத்தமது எதிரிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தான் போற்றும் தலைவரோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ ஈடுபட்டால் கள்ள மௌனம் காப்பதுதான் தெரிகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், அணுகுமுறைகள் தவறு என்பதைக் காட்டிலும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் எதிர்ப்பும் ஆதரவும் வெளிவருகிறது. மாட்டியது தெஹல்கா ஆசிரியர் என்றதும்தான் பல பேர் பெண்ணியவாதிகள் என்பதே தெரியவருகிறது.
பெண்களைக் கிண்டல் செய்ததற்காக. என்னுடைய அலுவலகத்தில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் மூன்றில் ஒருவர் Team Lead. அவர் தனது கீழே இருப்பவர்களைக் கண்டிக்காத குற்றத்துக்காகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் பேசியதாலும் அவரும் நீக்கப்பட்டார். அவர் அச்செயலில் ஈடுபடாத போதும் அவரை நீக்குவதற்கான கெடுவாய்ப்புகள் ஏற்கெனவே அவரது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து இருந்தன.
அலுவலகம் முழுவதும் இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் செய்தது தவறு என்ற ரீதியில் சிலர் மட்டுமே பேசினார்கள் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கலாம் என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் இது தவறு என்று புரியப்போவதுமில்லை. அதனால் தண்டனைகள் இது போன்ற செயல்களுக்காவது உடனடியாக நிறைவேற்றப்படுவது குறைந்தபட்சம் அச்சத்தையாவது வரவழைக்கும். Eve Teasing என்பது ஆண்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான செயலாகவே பேசப்படுகிறது. அது தவறே இல்லை என்பது போல்தான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவர் அதனை செய்யாதவராயினும் கூட இருப்பவர்களால் அவரும் சேர்ந்து பாதிக்கப்படுவது நடக்கிறது. பாலியன் வன்முறையும் கிட்டத்தட்ட அதே போலத்தான். தருண் தெஜ்பால், ஏ. கே கங்குலி என பெரிய கண்ணியவான்கள், கனவான்கள் எல்லோரும் கை நனைத்தவர்களாகவே இருப்பதைப் பார்த்தால் ஒரு ஆண் கூட நம்பத்தக்கவன் அல்ல என்றே தோன்றும்.
கோவையில் தன் மனைவி இறந்து விட்டதாகக் காட்ட தன்னிடம் வந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கறிஞர் ஒருவரை கோவளத்தில் வைத்துப் பிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஒருவன் பேசியதாகக் கூறினார். சில பத்தாயிரங்கள் தந்தால் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பதாக ஒருவன் சர்வ சாதரணமாகப் பேசினான், பணத்தைக் கொடு நான் போட்டுத் தள்ளிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்து விட்டு பின்பு சரணடந்து விடுகிறேன். நீ ஜாமீனில் எடுத்து விடு என்றானாம். சட்டத்தின் மீது குடிமகனுக்கு எவ்வளவு அச்சமும் மதிப்பும் என்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பணத்துக்காக ஒவ்வொருவனும் கொலை செய்ய ஆயத்தமானால் என்னவாகும் இந்த நாடு என்று தோன்றியது. :((((
தமிழகத்தின் மீதான ஓர வஞ்சனை:
ஒரிரு மாதங்களுக்கு முன்பு குங்குமத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒரு செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் அமைக்கும்படியான இடம் தமிழகத்தில் இருப்பதாகவும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் உருவாக்கும்படியுமான திட்டம் எனினும் அது இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் மலையாளிகள் ஆதிக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது என்பதாகவும் படித்தேன்.
கெயில் என்ற நிறுவனத்தின் பங்குகள் 57% நடுவண் அரசினுடையவை என்று இத்தகவல் கூறுகிறது. இதன் மூலம் இந்திய அரசு எத்தகையது என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
https://www.facebook.com/photo.php?fbid=667286226636854&set=a.320897871275693.79991.236784116353736&type=1&relevant_count=1
அடுத்தது தமிழ் நாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தைப் பாருங்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=314274975379746&set=a.278920168915227.1073741825.278864095587501&type=1
https://www.facebook.com/deltamethane

சிறப்பான தொகுப்பு .பிரபலங்கள் பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகி வருவது வேதனை. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவரை தான் எலோரும் நல்லவர் போலும்
பதிலளிநீக்குசிறப்பான தொகுப்பு .பிரபலங்கள் பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகி வருவது வேதனை. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவரை தான் எலோரும் நல்லவர் போலும்

பதிலளிநீக்குநன்றிகள் முரளிதரன்
பதிலளிநீக்குஆனால் ஒன்று. மீத்தேன் வாயுத் திட்டம் துணை முதல் அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்த திட்டம். 39 பாராளுமன்ற உறுப்பினர்களை முதலில் ஏன் இப்படி என்று கேட்டுப் பாருங்கள். பாதிப் பேருக்கு டெல்லி என்றாலே குளிரில் விரைப்பது தான் தெரியும். அப்புறம் எங்கே தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் போகும். ரயில்வே துறையில் தமிழக எம்பிக்கள் என்றால் மதிக்கவே மாட்டார்கள். அதிகாரிகளே ஆகட்டும் பார்க்கலாம் என்று தான் சொல்வார்கள்.
பதிலளிநீக்குஓஹோஹோ அவர்தானா இதன் மூலம் !! நல்லது.
நீக்கு