1984: டெல்லியில் சீக்கியர் மீதான கலவரத்தைத் தூண்டிய அமிதாப் பச்சன்


சீக்கியர் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் மொத்தம் 200 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் 177 காங்கிரஸ் கொலைகாரர்களும் , 17 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம். இதுவன்றி குற்றம் சாட்டப்பட்ட பெரும்புள்ளி நடிகர் அமிதாப் பச்சன். முதன் முதலில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை மக்களிடம் தூண்டியவர் அமிதாப் பச்சன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சீக்கியர்கள். 
                                            
அமிதாப்பின் மீதான குற்றச்சாட்டுக்கள்

    

  சீக்கிய இனப்படுகொலைக்கு முன்பு அமிதாப் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அதில் சீக்கியர்களைக் கொல்லுமாறு மக்களைத் தூண்டினார்.

 "சீக்கியர்கள் இந்திராகாந்தியை மட்டும் கொல்லவில்லை, அவர்கள் இந்த தேசத்தின் தாயையே கொன்றுவிட்டார்கள்" என்றார்.

  "இந்திரா சிந்திய குருதியை கொலைகாரர்களும்(சீக்கியர்கள்)  சிந்த வேண்டும்" என்கிற பாணியில் "இரத்தத்திற்கு பதில் இரத்தம்" என்று முழங்கினார் அமிதாப்.

(Khoon ke chheente Indira ko marne walon ke gharon tak pahunchne chahiye (The bloodstains must reach the houses of those who killed Indira))



இந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அகில இந்திய மருத்துவ கழகத்தில்(AIIMS), அமிதாப்பும் இராஜீவும் இருந்தனர். அப்போது தூர்தர்ஷனின் நிருபர்களும் இருந்தனர். அப்போதுதான் இந்த அமிதாப் கலவரத்தைத் தூண்டும் வகையில் கூடியிருந்த மக்களை நோக்கி "சர்தார்கள் தேசத்துரோகிகள்" என்றும் "இரத்ததிற்குப் பதில் இரத்தம்" (Blood for blood)  என்கிற தொனியில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு மக்கள் கூட்டத்துடன் சில தொலைவு நடந்தார். இவரது ஆவேசப் பேச்சு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. வட இந்தியா முழுவதும் சீக்கியருக்கு எதிராக இந்துக்களை கலவரத்தில் ஈடுபடுத்த இது ஒரு தூண்டுதலாக இருந்தது. 

இராஜீவ் - அமிதாப் நட்பு

இவர்களின் நட்பு மிகவும் புகழ் வாய்ந்தது. இராஜீவும் அமிதாப்பும் தோஸ்தி நெ.1 என்று அழைக்கப்படுமளவிற்கு நண்பர்களாக இருந்தனர். பச்சன் காந்தி குடும்பத்தின் நட்பு உலகறிந்தது. இரண்டு குடும்பங்களுமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லிக்குக் குடிபெயர்ந்த பின்னும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அமிதாப்பும் இராஜீவும் பால்ய காலத்தில்  ஒன்றாக ஊர்சுற்றியது, நீச்சலடித்ததையும் குறிப்பிட்டுள்ளார் அமிதாப். மேலும் 1968 - ல் சோனியா அன்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) இந்தியா வந்த போது திருமணத்திற்கு முன் ராஜீவின் இல்லத்தில் தங்கக் கூடாது என்பதால் அமிதாப்பின் வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டார். அமிதாப்பின் தாயார் தேஜி பச்சன் அவருக்கு தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். 

மேலும் முதன் முதலில் அமிதாப் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் இராஜீவ்தான். இந்திராவின் படுகொலைக்குப் பின்னர் இராஜீவ் வற்புறுத்தலினால்  தேர்தலில் நின்றார் அமிதாப். அலகாபாத் தொகுதியில் பஹூகுனா என்ற செல்வாக்குள்ள ஒருவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட அமிதாப் 62% வாக்குகளுடன் மிகப்பெரும் வெற்றி பெற்றார். இருப்பினும் மூன்று வருடங்கள் மட்டுமே அரசியலில் இருந்த அமிதாப் ஃபோபர்ஸ் குற்றச்சாட்டின் காரணமாக அரசியலிலிருந்து விலகினார். இராஜீவின் படுகொலைக்குப் பின்னர் இரு குடும்பத்திற்குமிடையிலான் நட்பு உடைந்தது. 2007 இல் அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனின் இறந்த போது, இறுதிச் சடங்கில் கூட சோனியா கலந்து கொள்ளவில்லை.

அமிதாப்பின் புகழைப் பயன்படுத்திக்கொண்ட இராஜீவ்

1980 களில் அமிதாப் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்பது  நாம் அறிந்ததே. எல்லாக் காலத்திலும் திரைப்படங்களில் நாயகர்களுக்குப் புகழைத் தரும் பாத்திரமான "கோபக்கார இளைஞன்" வேடத்தில் நடித்துப் செல்வாக்குப் பெற்றவராக இருந்தவர் அமிதாப். சீக்கியர் மீதான வெறியைத் தூண்டும் இவரது ஆவேசப் பேச்சுக்கள் ஹிந்துக்களிடம் கலவரத்தைத் தூண்டியதில் மற்ற கொலைகாரர்களைக் காட்டிலும் பெரும் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர் சீக்கியர்கள். அதுவும் தூர்தர்ஷன் இவரது உரையை நேரடியாக ஒளிபரப்பியது மிகவும் கீழ்த்தரமானது.  இவராகப் பேசினாரா அல்லது இராஜீவின் தூண்டுதலினால் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகர் அரசுத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் உரை நிகழ்த்துவதை என்னவென்பது?

இதுவரையிலும் அமிதாப்பச்சனுக்கு எதிரான  வழக்குகள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.  அமிதாப்பும் இதுவரையில் தனது நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கவில்லை. இதை எதிர்த்து அமிதாப்பின் வலைப்பூவிலும் பின்னூட்டமிட்டவர் அஜ்மீர் சிங் ரந்தாவா என்பவர். அவரது வலைப்பூவில்  இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். 

அமிதாப்பின் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டமும் அவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலும் 










அமிதாப்பச்சனின் அம்மா சீக்கியரா?

படுகொலையின் காரணங்களுக்குப் பதில் சொல்லும்போதெல்லாம் அமிதாப்பச்சனும், ஜக்தீஷ் டைட்லரும் தாம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அது உண்மையா? ஜக்தீஷ் டைட்டல் சீக்கியராக பிறந்தவர்தான் எனினும் கிறித்தவராக மாறிவிட்டாரென்றும் கூறுகின்றனர். அமிதாப்பச்சனின் அம்மா தேஜி சீக்கியர்தான். ஆனால் அவர் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இந்து ஒருவரைத் திருமணம் செய்து (இந்துவாக) மதம் மாறியவர்தான். மேலும் அவரது தந்தையாரும், தாத்தாவும் சீக்கிய மதத்துக்கு எதிரானவர்கள் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர். அவரது முப்பாட்டனார் தேஜிபச்சனின் தாத்தா சர் கெம் சிங் பேடி சீக்கியர்களை இந்து மத்திற்குள் உள்வாங்கும் இந்துத்துவாக்களுக்கு துணை நின்றவர். அவரது இரண்டு மகன்களும் இதே போன்று செயல்பட்டவர்கள். சீக்கியர்களின் புனித நூலை ஐந்தாவது வேதம் என்றும் சீக்கியர்கள் இந்துக்களே என்றும் கூறவும்  பரப்புரை செய்யவும் உதவியவர்கள். இந்தப் பரம்பரையில் வந்த அமிதாப் இயல்பாகவே சீக்கிய வெறுப்பில் வளர்க்கப்பட்டவர் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர்.                        
                                                                                                                                        (தொடரும்)
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. ஒரு தேசத் தலைவி கொல்லப்பட்ட நேரத்தில் யோசிக்காமல் உணர்ச்சிப் பெருக்கில் கூறியிருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன் !
    உணர்ச்சிப்பெருக்கிலும் கூறியிருக்கலாம். ஆனால் தமது குடும்ப நண்பர் என்ற முறையிலும், நண்பனின் அம்மா என்ற ஆவேசத்திலும் கூட கூறியிருக்கக் கூடும், அவர் தனது குற்றச்சாட்டுக்களுக்கு வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. அவர் மீதான வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது இன்னும் ஐயத்தை வலுப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்