உயிர்நுட்பவியல் போன்ற அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவருக்கான வேலைவாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.
1 . இந்தியாவில PHD
இந்தியாவில நீங்கள் PHD தொடர வேண்டும் என முடிவெடுத்தால் ஆபத்து அதிகம். IIT போன்ற சிறந்த அரசு கல்வி நிறுவனங்களில் கிடைத்தால் தாராளமாகத் தொடரலாம். அல்லது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு சில கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் JRF, SRF போன்றவற்றில் இடம் கிடைத்தால் நிலைத்துக் கொள்ளும் சாத்தியம் உண்டு. இதற்கு சிறந்த மதிப்பெண் சராசரியும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவும் வேண்டும். மற்றபடி நான் கேள்விப்பட்டவரையில் பல்கலைக்கழகங்களில் PHD செய்பவர்கள் மூக்கால் அழுகிறார்கள். சிலர் 5 வருடங்களுக்கு மேலாகியும் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்துவிடக்கூட வேண்டாமென்று எச்சரிக்கிறார்கள். மரபியலில் (Genetics) PHD முடிக்க 8 வருடங்கள் ஆகும் என்றும் கேள்விப்பட்டேன். இதில்லாமல் வழிகாட்டியின் (Guide) இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டும், கண்ணியமற்ற முறையில் நடத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். உளஅரசியலையும் சமாளித்தாக வேண்டும். என்னுடைய கல்லூரி விரிவுரையாளருக்குத் தெரிந்த பேராசிரியரொருவருக்கு PHD மாணவராக சேரவேண்டுமெனில் மகிழுந்து (Car) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமாம்.
2. வெளிநாடுகளில் மேற்கல்வி, ஆராய்ச்சியைத் தொடர்வது ;
நீங்கள் வசதியானவராக இருந்தால் மேலைநாடுகளில் ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளதைக்காட்டிலும் அதிகம். வெளிநாடு செல்லும் எண்ணமிருந்தால் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் சென்றுவிடுவது நல்லது. நீங்கள் முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அங்கே சென்று மீண்டும் ஒரு முறை முதுநிலைப்பட்டம் படிக்க வேண்டும். இங்கே 2 வருடங்களை வீணாக்க வேண்டாம்.
அல்லது நேரடியாக ஆராய்ச்சிக்கல்வியில் இடம் பெறவேண்டுமானால் முதுகலைப்பட்டம் பெற்ற பின்பு நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆராய்ச்சி குறித்து ஒரு அறிக்கையை உருவாக்க வேண்டும். அதில ஆராய்ச்சியின் தலைப்பு, நோக்கம், செய்முறை குறித்த வெள்ளோட்டமான விளக்கங்கள் இருக்க வேண்டும். இதை நீங்கள் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சிகள் எந்த கல்வி, ஆராய்ச்சி நிறுவங்கள் வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் அனுப்ப வேண்டும். உங்களது திட்டம் அவர்களுக்குப் பிடித்திருந்தால் உங்களை அள்ளிக் கொள்வார்கள். Stipend உடன் ஆராய்ச்சியையும், கல்வியையும் தொடரலாம். இதில் நன்கு பதிப்பெண்கள் பெற்றிருந்தவர்கள், வருடக்கணக்காக படித்து தமது அறிவைப் பெருக்கியும் விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெயருக்காக விண்ணப்பித்து அதிர்ஸ்டவசமாக இடம் கிடைத்தவர்களும் இருக்கிறார்கள்.
3. கல்லூரி விரிவுரையாளராவது;
பெரும்பாலானோரின் கடைசிப் புகலிடமாகவும், பலரின் விருப்பமான தேர்வாகவும் இருக்கிறது கல்லூரி விரிவுரையாளர் பணி. நிறைய தனியார் கல்லூரிகளில் எப்போதும் பணியிடம் காத்திருக்கும். ஓரளவு பாடம் குறித்த அறிவும், ஆங்கிலமும் இருந்தால் போதுமானது. இவைகளில்லாமலும் மாவாட்டிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சிரமமின்றி வேலையும் கிடைக்கும். ஊதியம் ரூ 6000 முதல் 8000 வரை கிடைக்கும். ஊதிய உயர்வு இருக்காது. ஒரு வேளை நீங்கள் துறைத்தலைவராக (HOD) உயரும்போது கிடைக்கும். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 வகுப்புகள் இருக்கும். வாரவிடுமுறை, பருவத்தேர்வு விடுமுறை என அனைத்து வகையான விடுமுறை நாட்கள் உண்டு. இருட்டும் முன்பே வீட்டுக்கும் போய்விடலாம். இது பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பணியாக இருக்கிறது. மாணவர்கள் எதாவது ஐயம் கேட்டால் சமாளிக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படியே பகுதி நேர PHD செய்யலாம்.
இவையல்லாமல் பொதுவான வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால்,
Medical Transcription
Medical Representative
Medical Coding
Pharma நிறுவங்களில் Marketing Executive
போன்ற பணிகள் உள்ளன. மேலும் சில உயிர்நுட்பவியல், இரசாயன நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், வேதிப்பொருகள், இரசாயனத் திரவங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு outsourcing செய்யும் சேவைத்துறை நிறுவனங்களில் வேலை கிடக்கும் வாய்ப்புகள் உண்டு.
பயோகான் போன்ற பெரும் நிறுவனங்களில் ஏறக்குறைய ரூ 9௦௦௦௦ வரை செலுத்தி பயிற்சி கொடுத்து வேலையும் கொடுக்கும் ஒரு திட்டம் இருந்தது. இது போன்ற நிறுவனங்களில் ரூ 3௦௦௦௦ - 50000 வரை கொடுத்து வேலைக்குச் சேர்கிறார்கள். சம்பளம் ரூ 6௦௦௦ வரையில் கிடைக்கும். வேலைப்பளு தாங்காமல் ஓடியும் போய்விடுகிறார்கள். இது போன்று முன்பணம் வாங்காமல் வேலைக்குச் சேர்க்கும் சில நிறுவனங்கள் நமது சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் கூடவே ஓரிரு வருட கட்டாய ஒப்பந்தமும் போட்டுக்கொள்ள வேண்டும்.ஒப்பந்தக் காலம் முடிந்து அவர்களின் விருப்பப்படிதான் நாம் தொடர்ந்து வேலை செய்வதும் அல்லது வெளியேறுவதும் நடக்கும். சட்டப்படி ஒப்பந்தம் கோரக்கூடாது எனினும் வேலையில்லாப்பட்டதாரிகளின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
Download As PDF
good blog...i have done msc.biotech..can you give me some references to do PhD in overseas..i have tried some foreign universities..no luck...can you help me on this...
பதிலளிநீக்குThanks for your visit and comment Anandan. I have explained what I knew in the second paragraph. Sorry I dont know how to help u & give reference to you. Perhaps none of my friends can answer this. Get the information about Universities or Research institutes in overseas where related researches of your interested topics are going on. There you have to send your report to the respective prof. who are involving in those research. If he is satisfied with your topic and other plans he would placed you for research. But as far as I know this is difficult. To send or apply to the respective prof or scientist u can google with your topic, previously conducted researches are published in websites like sciencedirect.com, pubmed, where you can find emails, in which through u can contact them. But u have to keep trying for long time. In my view better u can apply for MS in overseas (UK is easy to get) it will b one year. within that one year, u can get an idea about guide & requirements to continue your PHD somewhere.
பதிலளிநீக்குthanks sir..for your guidance..let me try it out ...thanks a lot again
பதிலளிநீக்குNo mention. I didn't give that much information, just said generally whatever i know. If u get anything i would be happy as a biotech graduate.
பதிலளிநீக்குbut don't call me sir and all!