அற்பம் !!

மாலை அலுவலகம் முடியும் தறுவாயில் ஒரு டீம் லீட்கள் சந்திப்பு நடக்க வேண்டியிருந்தது. அனைவரும் கூடினோம். மேலாளர் பேசத் துவங்கினார். 

பொங்கலுக்கு ஒரு நாள் மட்டும்தான் லீவ். லீவ் முடிஞ்ச அடுத்த ஒரு வாரத்துக்கு மார்னிங் ஒன் ஆர் அன்ட் ஈவ்னிங் ஒன் அவ்ர் வொர்க் பண்ணி காம்பன்செட் பண்ணனும். யாருக்காச்சும் ஏதாவது சொல்லணுமா ?
 

எங்களிடையே சலலப்பு தொடங்கியது தொடர்ந்தது. பின்பு மேலாளரே தொடர்ந்தார்.

ஆஃபீஸ்ல இருக்கற 40 பேர்ல 27 பேர் ஹிந்தூஸ்தான். 10 பேர் கிறிஸ்டியன், மூணு பேர் முஸ்லிம்ஸ். இத்தனை பேர் வேலையும் பத்துபேர் காம்பன்சேட் பண்ண முடியாது. இந்த ஈமெயில் ப்ரோஜக்ட் ஒரு வாரம் முன்னாடியே டெலிவரி பண்ண வேண்டியது. இப்பவே க்ளையண்ட் ஏத்தறான். அதனால டீம் லீட் 7 பேரும் கண்டிப்பா வந்தே ஆகணும் வேற வழியே இல்லை. கிறிஸ்துமஸ்க்கும் நியூ யெர்க்கும் சேர்த்து ஒரு வாரம்  வீட்லதான இருந்தீங்க.


.......

நான் நேந்து விட்ட விலங்கைப் போல அமர்ந்திருந்தேன் என்ன சொன்னாலும் தலையாட்டுவது தவிர ஒன்றும் செய்ய முடியாது. கழுதைக்கு வாழ்க்கைப் பட்டால் ...... என்ன செய்ய ?

ஆர்த்தி உங்களுக்கு ஓக்கேதான ?

.சார்...........

சொல்லுங்க..

எனக்கு ஊருக்குப் போக கடைசி பஸ் எட்டு மணிக்கு, அதுக்கு அப்புறம் ஒம்பதே முக்காலுக்குத்தான். போக ரொம்ப லேட்டாகிடும்.

நீ
ங்க அவினாசி தான ?

இல்ல சார் அவினாசிலிருந்து இன்னொரு பஸ் மாறணும். ..

ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ல.

முடியாதுங் சார்.

இல்லமா நீங்கதான் சீனியர், இல்லன்னா முடிக்க முடியாது.

"அவ்வளவு லேட்டா போனா எங்க வீட்ல தொரத்தி விட்றுவாங்க"
   


என்று அழாத குறையாக சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். அன்றுதான் அவளைப் பார்த்தேன்.

ஆர்த்தி வேறு டீம். நான் வேறு டீம் என்பதால் எப்போதாவது பேசவும் பார்க்கவும் முடியும். சிறிது நாட்களுக்குப் பின்பு கிடைத்த சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் மூலம் என்னுடன் நட்பாகி விட்டாள். அலைபேசி எண்கள் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருங்கியிருக்க வில்லை. நான் அவளுடன் பழகியதை அனைவரும் கிண்டலடிப்பார்கள். அது உண்மையில்லை என்ற போது
ம் அவர்கள் ஆர்த்தியை என்னுடைய ஆள் என்று என்னிடம் அல்லது என்னுடன் இணைத்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில மாதங்களில் நான் வேறொரு நிறுவனத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டேன்.

ஒரு நாள் இதே நிறுவனத்தில் வேலை பார்த்த நிரஞ்சனுடன் அலைபேசியில் பேசினேன். பலதும் பேசிய பின்பு, 


ஆமா ஆர்த்தி இன்னும் அங்கதான் இருக்கா என்றேன்.

ஆமாமா. லவ்வெல்லாம் ஓடிட்டிருக்கு.

லவ்வா யாரை ?


அவன் சொன்ன அந்த நபரின் பெயரைக் கேட்டதும் எரிச்சல் வந்தது. நமக்குப் பிடித்த ஒருத்தி வேறொருவனை விரும்புகிறாள் என்ற போது வரும் அதிர்ச்சி அல்ல. உங்களால் சகித்துக் கொள்ளவே முடியாத இயல்பைக் கொண்ட ஒருவனை அவள் விரும்பினால், அவள் ஏற்படும் பரிதாபம்  பச்சாதாபத்தினால் வந்தது.

யாரு ஃபெலிக்ஸ் ஆ அவனையா ? அது எப்பிடிடா ? எப்பிருந்து ?

என்னது இந்தியா சுதந்தரம் வாங்கிருச்சா !! ஹஹஹா !! அது வருசக் கணக்கா நடக்குது நீ இங்க இருந்தப்பவே இந்தப் படமெல்லாம் ஓடிச்சு. உன் ஃப்ரெண்டப் பத்தி உனக்கே தெரியலையா ?

இதெப்படி உனக்குத் தெரியும் ?

ம்கும். நாங்கல்லாம் யாரு ? யாரு என்ன பண்ணாலும் கண்டு பிடிச்சிருவம்.

அவன் யாரையோ லவ் பண்ணிட்டிருந்தான்னு தெரியும், அது இவளத்தான்னு தெரியாதே. ஒரு தடவை திடீர்னு இவளத் திரும்பிப் பார்த்தான். அவ்ளோதான் எனக்குத் தெரியும். அது சும்மாதான்னு நினைச்சு விட்டேன். ம்ம். அது சரி அவன எப்படின்னுதான் தெரியல. இவ தொட்டாலே அழுதிருவா, அவனப் பாத்தாலே நமக்கெல்லாம் பயமாருக்கும். வாயத்தொறந்தா ஒரு நல்ல வார்த்த வராதே.


டேய் !! நீ எந்த உலகத்தில இருக்க. இப்பல்லாம் பொண்ணுகளுக்கு இந்த மாதிரி பசங்களத்தான் புடிக்குது. யோக்கியனா இருந்தா எவ பாக்கறா ? இவளுங்களுக்கு அறிவே கிடையாது. எக்கேடோ கெட்டுப் போகட்டும். பட்டுத் திருந்தட்டும். எங்க வீட்டுப் பக்கத்திலயும் இது மாதிரி நெறயாப் பேரு அப்பனுக்குத் தெரியாமப் போய் கல்யாணம் பண்ணிட்டாளுங்க. கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு என்ஜாய் பண்றானுங்க அப்றம் இவளுங்களா புடிக்காம வந்திருவாளுக. அப்பன ஏமாத்திட்டு போறவளுக்கெல்லாம் இப்படித்தான் வேணும். அப்பத்தான் புத்தி வரும். 

 
இன்னொரு நாள் ஃபெலிக்ஸிடம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பிரதாய கேள்விகளுக்குப் பின் அவனாகவே கேட்டான்.

என்ன பாஸ் அப்றம் விஷயம் கேள்விப்பட்டு ஷாக்காயிட்டீங்களாமே ?

அப்படியெல்லாம் இல்ல. உலகத்தில நடக்காததா என்ன ?

உங்க ஃபிரண்ட கரெக்ட் பண்ணிட்டன்னு எம்மேல கோபப்படாதீங்க பாஸ். ஹி ஹி !!" உன்னுடைய ஆளை நான் மடக்கிட்டேன் பார்த்தியா என்ற நக்கல் தொனித்தது.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எப்படியோ நல்லா இருந்தா சரிதான். 

 
ஃபெலிக்ஸின் இலட்சியம் குடிப்பது, ரகளை பண்ணுவது, அரைமணிக்கொருமுறை ஐந்து பைசாவுக்கு பெறாத நடப்புக்களுக்கு ஆத்திரப்படுவது, மிகவும் அழகான பெண்ணை மணம் முடிப்பது மட்டுமே. அவன் உடற்பயிற்சிக் கூடத்தில் முறுக்கேறிய உடலும், சிடுமூஞ்சித்தனமும், எப்போதும் அவன் கை நீட்டிவிடக் கூடிய அபாயமும் இருந்ததால் அவனை அவனது பின்னால் மட்டுமே எங்களால் விமர்சிக்க முடிந்தது. அவன் வீட்டில் ஒரே செல்லப் பிள்ளை பணக்காரன் என்பதாலும் அவன் வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அவன் கிறித்தவன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு மருமகளும் மதம் மாற வேண்டும் என்ற விதிமுறையுடன் சம்மதித்திருந்தார்கள். இவள் சாதாரண நடுத்தரக் குடும்பத்துக் கவுண்டர் வீட்டுப் பெண் என்பதாலும் இன்னும் வீட்டில் சொல்ல பயப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் மணக்க விரும்பும் பெண்ணாக இருக்க வேண்டியவள் என்று வர்ணித்த அளவுக்கு ஆர்த்தி பேரழகியாகவோ வெள்ளை நிறமாகவோ இல்லாமல், இருந்தாள். காதலில் எதுவும் சாத்தியம்தான் என்று புரிந்தது. திருமணம் செய்தால் இவனது இயல்பு மாறி விடும் பக்குவமடையலாம் என்றும் நினைத்தேன்.

9 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு முறை நிரஞ்சனுடன் பேசினேன்.

டேய் விசயந் தெரியுமா ? அவங்க லவ்வப் பத்தி ? போன தடவையே சொல்லலாம்னு நெனச்சேன். வேற பேச்சுல மறந்திட்டேன்.

என்னாச்சாமா ?

புட்டுக்கிச்சாம்.

ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான ? இவங்கூடல்லாம் சரியா வராதுன்னு தெரியாதா ?

அதெல்லாம் இல்ல. இவன் ஸ்ட்ராங்காதான் இருந்தான். ஆர்த்திதான் வீட்டுக்கு பயந்துட்டாளாம். வேற இடத்துல கல்யாணமும் ஆயாச்சு. இப்ப கன்சீவா இருக்காளாம்.

........

என்னடா பேச்சக் காணோம் ?

இல்ல. ஃபெலிக்ஸ் கூட பேசினியா என்ன சொன்னான் ?

நான் ஃபெலிக்ஸ் கிட்ட கேட்டேன். எதுவும் பண்ணலியான்னு. ஒரு தடவை மட்டும் மேட்டர் முடிச்சிட்டானாம். ரெண்டு தடவை மிஸ்ஸாயிடுச்சாம். ஃபெலிக்ஸ் கிட்ட அப்பறேன்டா கவலப்படறன்னு சொன்னேன். நமக்கு தோலா முக்கியம் பழத்த சாப்டமா போனமான்னு இல்லாம. இவளுங்க நம்மள விட பெஸ்டா ஒருத்தங் கெடச்சா டாட்டா காட்டிட்டு போயிருவாளுக, நம்ம உக்காந்து ஃபீல் பண்ணணுமா ? ஒருத்திய லவ் பண்றயா அவ மேல கைய வைக்காம விடக் கூடாது. கைய வச்சபிறகு அவ போனாக் கூட கவலயில்ல. எல்லாப் பசங்ககிட்டயும் அப்படித்தான் சொல்லிட்டிருக்கேன்.
 


அதற்குப்பிறகும் கால் மணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்ன பேசினேன் என்பது மட்டும் நினைவில் இல்லை. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

  1. //இவள் சாதாரண நடுத்தரக் குடும்பத்துக் கவுண்டர் வீட்டுப் பெண்//
    //ஆர்த்திதான் வீட்டுக்கு பயந்துட்டாளாம்//
    "தர்ம" புரியின் பாதிப்போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. ஜாதிப் பிரச்சனையைப் பற்றி இங்கே சொல்ல வரவில்லை. போகிற போக்கில் தான் சொன்னேன். அவினாசி என்று குறிப்பிட்டிருக்கிறேன். தர்மபுரியில் வன்னியக் கவுண்டகள், இந்தப்பக்கம் கொங்குவேளாளக் கவுண்டர்கள்தான் அதிகம். அதை மனதில் கொண்டுதான் அப்படிக் குறிப்பிட்டேன். அவள் பயந்தவள் என்றுதான் முதல் பத்தியிலேயே சொல்லி விட்டேன்.

      நீக்கு
  2. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆண், பெண் இருவரின் அட்டிடியுட்மே கவலை கொள்ள வைக்கிறது. நான் வசிக்கும் அமெரிக்காவில் பொதுவாக மக்கள் சொல்வது.. செக்ஸ் வேறு. ரெலேஷன்ஷிப் வேறு. கேட்டாலே பத்திக்கொண்டு வரும். அதே தான் நம் ஊரிலும் நடக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆண், பெண் இருவரின் அட்டிடியுட்மே கவலை கொள்ள வைக்கிறது//
      பந்து அதேதான் நானும் சொல்ல வந்தேன். ஆண்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், பெண்களின் போக்கு மிகவும் கவலைப்பட வைக்கிறது. தங்களைப் பற்றி கேவலமாகவே நடத்துகிறவர்கள் என்று தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்

      நீக்கு
  3. இது உண்மையிலேயே அற்பம்தான்.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்