பெண்கள் கவர்ச்சியாக உடலைக் காட்டியவாறு உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைக் நடக்கிறது என்ரு 101 விழுக்காடுகள் உறுதியான கொள்கையை உடையவர்களுக்கு ஒர் சவால்.
பெண்கள் எந்த வகையில் உடை அணிந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்களுக்கு காமம் தோன்றுவது இயல்பே. அதற்காக பாலியல் ரீதியான தாக்குதல், சீண்டலை ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அதை இயல்பாகக் கடந்து செல்வதற்கு ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் எந்த வித வன்முறையிலும் ஈடுபடுவதில்லை என்பதைப் போலவே ஆண்களும் மாற வேண்டும் என்பதே அறம். கட்டுப்படுத்த முடியாதளவுக்கு காம உணர்வு உந்தித் தள்ளினால் வீட்டுக்குச் சென்று கை மைதுனம் செய்து கொள்ளவும். இதைக் கிண்டலுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே பரிந்துரைக்கிறேன்.
ஒரு பெண் தன்னை செக்ஸியாகக் காட்டிக் கொள்வதாலும் உடை அணிவதாலும் அவள் விருப்பமோ அனுமதியோ இல்லாமல் அவளைத் தொடக்கூடாது அத்து மீறக்கூடாது. விருப்பம் இல்லாத நிலையில் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள். விருப்பம் இருந்து இருவர் ஒன்றாக இருக்கும்போது மற்றவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே கண்ணியம்