இஸ்லாமை விமர்சிக்காத மதிமாறனின் எதுகை மோனை வசனம் ஒன்று ஃபேஸ்புக்கில் பகுத்தறிவுவாதிகளால் பகிரப்பட்டுவருகிறது.
யாராவது எதுகை மோனையாகப் பேசினால் அதைப் பகுத்தறிந்து விளக்குவது மதிமாறனின் இயல்பு. ஆனால் இம்முறை, தன்னுடையை வழமையான இஸ்லாமிய மதவெறியை விமர்சிக்காமல் தவிர்க்கும் பொருட்டு அவரே எதுகை மோனையாக பேசி நழுவியுள்ளார்.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில்,
எனக்கு விமர்சிக்க விருப்பம் இல்லை நேர்மையும் இல்லை.
எனது நோக்கம் இந்து மதம் விமர்சனம் மட்டுமே என்று விட்டுப் போக வேண்டும்.
ஆனால் இஸ்லாம் மதவாதத்தை மதவெறியை ஒன்றுமே இல்லாதது போல் பேசுவதுதான் சகிக்க முடியவில்லை.
மதிமாறன் இந்துத்துவாவை எதிர்த்துப் பேசுவது எல்லாம் இஸ்லாமியர் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பிறகெப்படி இஸ்லாம் மதத்தை விமர்சிப்பது ?
இஸ்லாமியர்களை விமர்சித்தால்/திட்டினால் வன்முறை நிகழ வாய்ப்பு மிகவும் குறைவு. இஸ்லாம் என்ற மதத்தையும் முகமது நபியையும் தன்னுடைய நேர்மையான பகுத்தறிவுப்படி திட்டக்கூட வேண்டாம், விமர்சனம் செய்தால் கூட போதும், மதிமாறனுக்கும் தலையோ கையோ இரண்டுமோ இருக்காது