எதிர்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்கும். ஆளும் கட்சியாக இருக்கும்போது விலைவாசியை உயர்த்தும்.
அது என்ன?
பாகிஸ்தான் என்றால் பாயும்.
சீனா என்றால் சிணுங்கும்.
அது என்ன ?
ஆட்சியில் இல்லாதபோது அரசைக் கேள்வி கேட்பது தேசபக்தி என்பான். ஆட்சியில் இருக்கும்போது அரசைக் கேள்வி கேட்பது தேசத்துரோகம் என்பான்.
அவன் யார் ?
அன்னம் தண்ணி புழங்க மாட்டான். மதம் மாறினால் கதறுவான்
அவன் யார் ?
எல்லாத்துக்கும் காரணம் நேருவும் காங்கிரசும்தான் என்பான்
எல்லாத்தையும் தொடங்கியது கருணாநிதியும் திமுகவும்தான் என்பான்.
அவன் யார் ?
சீன நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வான்
சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவான்.
அவன் யார் ?
அடித்தவனை விட்டு அடிவாங்கியவனைத் திட்டுவான்.
அவன் யார் ?
எல்லா ஊடகங்களிலும் வருவான். அவர்களையே வேசி ஊடகங்கள் என்பான்.
அவன் யார் ?
ஜாதியை ஆங்கிலேய சதி என்பான் திராவிட சதி என்பான். ஜாதிதான் பண்பாடு என்பான் ஜாதிதான் மதம் என்பான்.
அவன் யார் ?
விடுதலைப்போராட்டத்தில் போராடாமல் சும்மா இருப்பான். விடுதலைப்போராளிகளைக் காட்டிக்கொடுப்பான். 70 வருடங்கள் கழித்து போராளியாகக் கரடி விடுவான்.
அவன் யார் ?
தேசத்துரோகிகளுக்குவெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பான்.
அவனும் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவான்.
அவன் யார் ?
பாஜக.