பயங்கரவாத இயக்கங்களும் பயங்கரவாத அரசுகளும் ஒன்று பாமரர்கள் வேறு

ஒரு இயக்கமோ அல்லது ஒரு அரசாங்கமோ தான் சார்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்திற்கோ, இனத்திற்கோ, மதத்திற்கோ, நாட்டுக்கோ எதிரானவர்களாகச் சித்தரிக்கும் மக்கள் கூட்டத்தை இராணுவத்தைக் கொண்டோ, தற்கொலைத் தாக்குதலைக் கொண்டோ கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்குமானால்,  அது பயங்கரவாத இயக்கம் என்றோ பயங்கரவாத அரசு என்றோதான் அழைக்கப்படவேண்டும். 

அப்படி கொன்று குவிக்கும் அரசோ அல்லது இயக்கமோ தான் போராடுவதாகவும், காப்பாற்றுவதாகவும் காட்டிக் கொள்ளும் தமது மக்களிடமே கடும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும். அம்மக்களை  அச்சுறுத்தியோ அல்லது அவர்களின் நம்பிக்கையின் பேரில் மூளைச் சலவை செய்தோதான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். 

அம்மக்கள் கூட்டத்திலும் அந்த அரசாங்கத்தையோ அந்த இயக்கத்தையோ கடுமையாக வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். எனவே ஒரு மத, இனம், மொழி, நாடு சார்ந்த கடும்போக்கு அரசாங்கமோ இயக்கமோ இன்னொரு கூட்டத்தை கொன்று குவிப்பதை அடக்கி ஒடுக்குவதை வஞ்சிப்பதைக் கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் வெறுக்கக் கூடாது, அவர்களனைவரையும் எதிரிகளாகக் கருதுவதும் கூடாது. இதை பொருளாதார பிரச்சனைகளைத் திசை திருப்பும் சதியாகத்தான் கருத வேண்டும். 

உண்மையான எதிரி யார் ? உண்மையான பிரச்சனை என்ன ? என்றெல்லாம் மக்கள் அறியாதவாறு திசை திருப்பவே இது மாதிரியான "நாம்" "அவர்கள்" என்ற பிரிவினை வலுக்க வைக்கப் படுகிறது. விருப்பு வெறுப்பில்லாத கற்றலின் மூலம் இதை நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்குத் தடையாக இருப்பதே அவரவர் இனம் மொழி இடம் சார்ந்த வெறி என்று நம்புவது. இதைத் தாண்டி சிந்திக்கும்போதுதான் நம்மால் உண்மையின் அருகிலாவது செல்ல முடியும்.

நான் இந்த நாட்டைச் சார்ந்தவன். என்னுடைய நாட்டை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த மொழியைச் சார்ந்தவன். என்னுடைய மொழியை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த இனத்தைச் சார்ந்தவன். என்னுடைய இனத்தை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த பண்பாட்டைச் சார்ந்தவன். என்னுடைய பண்பாட்டை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த மதத்தைச் சார்ந்தவன். என்னுடைய பண்பாட்டை நேசிக்கிறேன். எனவே,

என்னுடைய நாட்டை, மொழியை, இனத்தை, பண்பாட்டை, மதத்தை தன்னுடைய கொள்கையாகக்கொண்ட என்னுடைய அரசு/எனக்காகப் போராடும் இயக்கம் எனது எதிரியாகக் கருதும் ஒரு தரப்புக்கு எதிராக என்ன நடவடிக்கையை, அது எத்தகைய கொடூரமாக இருந்தாலும், யாருக்கு எதிராக எடுத்தாலும் அதை என்னுடைய நாட்டின், இனத்தின், மொழியின், பண்பாட்டின், மதத்தின் பாதுகாப்புக்கு தேவை என்பேன் சரியென்பேன் என்று சொல்லத் தொடங்கினால் என்ன ஆகும் ? அதுதான் இங்கே நடக்கிறது.

அது போலவே, நான் எனது நாடு, இனம், மொழி, மதம், பண்பாடு ஆகியவை என்னை எதிரியாகக் கருதும் இன்னொரு தரப்பின் அரசின் பயங்கரவாதத் தாக்குதலினாலோ, இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதலினாலோ பாதிக்கப்பட்டால் அதற்காக எதிர்த்தரப்பின் அனைவருமே நமக்கு எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுவது தவறானது. அந்த உணர்வு வெற்றிகரமாகத் தூண்டப்படுவதால்தான் இங்கே பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்கின்றன. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்