புதுமனை புகுவிழா மந்திரம் ஓதுவது ஜாதித் தீட்டைக் கழிக்கவே

இந்து மதம் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை வழிபாடு விடயத்தில், ஆனால் சடங்குகளை பெரும்பான்மையினர் விடாபபிடியாகக் கடைப்பிடிக்கின்றனர். இது போன்ற சடங்குகளில் ஜாதியைக் காப்பாற்றும், குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு செய்யும் மனிதத்திற்கே ஊறு செய்யும் விதிகள் அடங்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இன்றியமையாத சடங்கு புதுமனை புகுவிழா அல்லது புண்ணியாச்சினை. 

பெரும்பாலும் வீடு கட்டுமானப் பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கைப்பட்ட கால்பட்ட இடம் என்பதால் அவர்களின் உழைப்பினால் விளைந்த வீடே ஆயினும் அவர்களைக் கேவலப்படுத்தும் சடங்கினை நடத்தியே புது வீட்டுக்குள் குடியேறுகிறார்கள் வீட்டின் சொந்தக்காரர்கள். இதில் இந்த ஜாதிதான் என்றில்லாம் எல்லா ஜாதியினரும் செய்யும் சடங்காகும். இந்தச் சடங்கு சக மனிதனைக் கேவலப்படுத்துவதோடல்லாமல் உழைப்பையும் இழிவு செய்கின்றது. 

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

இதைத் தெரிந்தேதான் மேல்ஜாதிக்காரர்கள் பார்ப்பனரை அழைத்து ஹோமம் வளர்த்தி புகுமனை புதுவிழா நடத்தி ஜாதித் தீட்டைக் கழிக்கிறார்கள். இது என் வீட்டிலும் நடந்தது. எனக்கு நேரிடையாகவே அனுபவமும் இருக்கிறது. சடங்குகளின் மீதுள்ள வெறுப்பினால் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத நான், இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று வருந்தினேன். 

எனது உறவினர்கள் இது போன்றதொரு புண்ணியாச்சினைக்குச் சென்று விட்டு வந்தார்கள்.

"எங்கு சென்றீர்கள்" என்றேன்.

குறிப்பிட்ட உறவினரின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு என்று குறிப்பிட்டார்கள்.

"அவர்கள் புது வீடு கட்டியிருக்கிறார்களா ?"  என்று கேட்டேன்.

"இல்லை பழைய ஊட்டைத்தான் கொஞ்சம் இடித்து கட்டியிருக்கியிருக்கிறார்கள்"

"அப்பறமேன் ? பழைய வீட்டுக்கு எதுக்கு புண்ணியாச்சினை ?" என்று கேட்டேன்.

"ஆமா சக்கிலியன் பறையனெல்லாம் வீட்டுக்குள்ள வந்து வேலை பாத்திருக்கான் அதான் புண்ணியாச்சினை பண்ணாங்க" என்று பதில் சொன்னார். பதில் சொன்ன உறவினர் ஒரு பெண். 
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. இது வேறா:) நான் நினைத்திருந்தேன், பெண்கள் பருவமடையும் சாதாரண நிகழ்வையே சாமத்தியச் சடங்கு என்று தங்கள் பகட்டை காட்டுவதற்காக போட்டிபோட்டு கொண்டு கொண்டாடுபவர்கள்,புது வீட்டு குடியேற்றத்தை கொண்டாடாமல் தவறவிடுவார்களா?அதனால் கொண்டாடுகிறார்கள் என்றல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இன்னும் எத்தனை இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை. எனக்கு என்ன அதிர்ச்சி என்றால் சும்மாதான் சாமி கும்பிடும் சடங்காக அல்லது நீங்கள் சொன்னது போல் பகட்டுக்காக என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் படிக்காத பாமரர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இச்சடங்கில் கலந்து கொள்வது ஜாதித் தீட்டைக் கழிக்க என்பது ஓரளவுக்குத் தெரிந்தே வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்