முன்னாள் சோவியத் ராணுவ வீரர் 33 வருடங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சோவியத் ராணுவம் 1979 லிருந்து 1989 வரை 10 வருடங்கள் ஆப்கானில் இருந்து முஜாஹிதீன்களுடன் போர் புரிந்தது. ஏறக்குறைய 5 இலட்சம் ஆப்கானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் போரில் வெற்றி பெற முடியாமல் தோல்வியுற்று வெளியேறியது. அதில் சோவியத்தின் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இறந்தனர். 35000 பேர் உடல் ஊனமடைந்தனர். 250 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
காணாமல் போன சோவியத் வீரர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு ஒரு வருடமாக ஆப்கானில் தேடுதலை நடத்தி வருகிறது. அதன் பயனாக 33 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களாக சோவியத் ராணுவத்தில் பணிபுரிந்த உஸ்பெகிஸ்தானைச் சார்ந்த பாச்சர்ட்டின் காகிமோவ் எனும் இவர் ஷாநிந்த் மாவட்டத்தில் 1980 செப்டம்பரில் நடந்த சண்டையில் தலைப்பகுதியில் காயமடைந்துள்ளார். அங்குள்ள மக்கள் இவரைக் காப்பாற்றி சிகிச்சை அளித்துள்ளனர். முழுக்க குணமடைந்ததும், அவர் வெளியேறவில்லை. அப்பகுதி மக்கள் அவரைத் தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். அவரும் தனது பெயரை 1993 இல் இஸ்லாமியராக மாறி ஷேக் அப்துல்லா என மாற்றி அங்கேயே நாடோடியாக வாழ்ந்து வந்தார்.
பாக்கர்ட்டின் காகிமோவ் - ஷேக் அப்துல்லா |
இவர் மனைவியை இழந்தவர் குழந்தைகளும் இல்லை. தனது குடும்பத்தினரைக் காண ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார். சோவியத் ராணுவம் அமெரிக்காவைப் போல படையெடுத்து ஆக்ரமிக்காத போதும், ஆப்கானின் சோவியத் ஆதரவு-அரசுக்கு ஆதரவாகவும் முஜாஹிதீன்களுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவைப் போலவே பல போர்க்குற்றங்களைச் செய்தது. கொலை, பாலியல் வன்முறைகள் உட்பட எல்லாவற்றையும் செய்தது. இனப்படுகொலையும் செய்தது. பத்து இலட்சம் ஆப்கானியர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம்.
ஆப்கானியர்கள் சோவியத்தின் மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள். இருப்பினும் ஒரு காயமடைந்த இராணுவ வீரனைக் காப்பாற்றி தம்முள் ஒருவனாகவும் அவரை வாழவைத்துள்ளனர் மேலும் அவர் அங்கேயே திருமணமும் செய்துள்ளார் என்பது நெகிழ்ச்சி. இது ரஷ்யாவின் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாகும்.
அவர் ருஷ்ய மொழி சிறிதே அறிந்தவர், உஸ்பெக் மொழியை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார். இவர் பற்றி முரண்பாடான செய்தியொன்றும் இருக்கிறது இவர் துப்பாக்கியைத் திருடிச் சென்று முஜாஹிதீன்களிடம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் ஒரு செய்தியாளர்.
இன்னொரு சோவியத் வீரர் குறித்த ஆவணப் படம்.
இன்னொரு சோவியத் வீரர் குறித்த ஆவணப் படம்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்