ஃபேஸ்புக்கில் தமிழ் உணர்வுக் குழுக்களும், இஸ்லாமியக் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. அவை போலியானவை என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன். அது ஒரிரு வருடங்களுக்கு முன்பே தெரிந்ததுதான் என்றாலும் அது இன்னும் புதிதான புகைப்படம் போல பல நூறு பேர்களால் பகிரப்படுகிறது
ஒரிரு புகைப்படம் ஈழ ஆதரவு குழுக்கள் மூலம் தமிழர்களிடையே பரப்பப் படுகிறது இதில் பல பிணங்கள் எரிந்து கரிக்கட்டையாகக் கிடக்கின்றன. இது ஈழப்போரில் நடந்த இனஅழிப்புப் போரின் தடயமல்ல. காங்கோவில் நடைபெற்ற ஒரு எரிவாயு வாகன விபத்தில் இறந்தவர்களுடையது இந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்று புரியும்.
வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்புகள் சில முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறித்தவர்கள் என்றும் தகவலைப் பரப்பி வந்திருக்கின்றனர்.
இன்னொரு புகைப்படம் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மார்பகத்திலிருந்து பாலருந்தும் குழந்தை. இதுவும் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை என்பது அந்தப் பெண்ணின் மங்கோலிய முகமே காட்டி விடுகிறது. இது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் புகைப்படம்.
இந்தப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் புகைப்படத்தின் மீதோ அல்லது அதற்கு மேலே ஏதாவது உணர்ச்சியூட்டும் கவிதைகளையோ அல்லது கருத்துக்களையோ எழுதி பகிர பார்ப்பவரும் உணர்ச்சி வயப்பட்டு உண்மையினை அறியாமலேயே பரப்பி விடுகின்றனர். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.
இந்தப் புகைப்படம் பர்மா (அ) மியான்மர் புத்த பிக்குகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பிணங்கள் என்று பகிரப்படுகிறது. ஆனால் இது உண்மையில் 2010 இல் சைனாவில் நடந்த புவி அதிர்ச்சியின் மாண்டவர்களில் உடல்களை திபெத்திய புத்தத் துறவிகள் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டது. இது போன்று முழுக்கை சட்டை அணிந்திருப்பவர்கள் திபெத்தியர்களே. பர்மியத் துறவிகள் இலங்கைத் துறவிகளைப் போல துணியை உடல் முழுக்கச் சுற்றி அணிந்திருப்பார்கள். .மேலும் பர்மிய முஸ்லிம்கள் வெள்ளை நிறத்தவர்களும் அல்ல.
இந்தப் புகைப்படம், 2006 இல் ஈழத்தில் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளில் ஒன்று. இது தமிழ்நெட்டில் வெளியானது. இது பர்மிய முஸ்லிம்கள் படுகொலை என்று பரப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தின் மேல் வலது மூலையில் பாருங்கள். Like My Page "Love Islam" - என்று தனது குழுவை இஸ்லாமியரிடம் ஃபேஸ்புக்கில் பரப்புவதற்கு இஸ்லாமிய உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஈழத்து பிணத்தை விற்கும் நக்கீரனுக்கு ஒப்பானது.
இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களின் நோக்கம் இறந்தவர்களையும் போராடுகிறவர்களையும் கேவலப்படுத்துவதாகும். தற்போது போராடி வரும் மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் சில படங்களை வைத்து வட இந்திய ஊடகங்களும், இலஙகை அரசின் ஊடகங்களும் மாணவர் போராட்டத்தின் நேர்மையையே கேள்விக் குறியாக்கி விட்டன. மாணவர்கள் போராட்டத்தின் போது வைத்திருந்த பதாகைகளில் இறந்த மக்களின் புகைப்படங்களை அச்சடிக்க்கப்பட்டிருந்தன. அதில் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் உடல்களும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களை, புலி ஆதர்வாளர்கள் தவ்றாக சித்தரிக்கின்றனர் என்று கிழித்து விட்டார்கள்.இது மாணவர்களின் போராட்டத்தை எந்தளவுக்கு கேள்விக்குட்படுத்தும் என்பது புரிகிறதா ? உண்மையிலேயே இந்தப் போலிகளது நோக்கம் படுகொலைகளை விற்று உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதன்றி வேறில்லை.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447
பதிலளிநீக்குhttp://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447
பதிலளிநீக்குதகவலுக்கு மிக்க நன்றி இணைத்து விட்டேன்
நீக்குஇவைப் போன்ற போலிகள் பலவும் பலவுமாக திரிக்கப்பட்டு மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. இணையம் விரவிக் கிடப்பதால் எது மெய் பொய் என உணரவே முடிவதில்லை. பலரும் அதனைக் கவனிப்பதும் இல்லை. ஆகையால் இத்தகைய புகைப்படங்களை நான் உடனடியாக ரிப்போர்ட், ஸ்பாம் செய்துவிடுவேன். அது மெய்யோ, பொய்யோ, இவ்வகையான ரீதியில் உணர்வை கிளப்புவதை விட, சிந்தித்து நியாயமான தகவல்களை பெற்று அதன் பால் நிற்க வேண்டும்.
பதிலளிநீக்குநல்ல பதிவு, இதை வாசிப்பவராவது திருந்தட்டும்.
இக்பால், சில புகைப்படங்கள் சமூகத்தையே புரட்டிப் போடும் வல்லமை படைத்தவை. இருப்பினும் இது போன்ற நரியைப் பரியாக்குவதும், பரியை நரியாக்குவதும்தான் தவிர்க்கப்பட வேண்டும்.சிந்தனை செய்யவிடாமல் உணர்ச்சியை மட்டும் தூண்டுகிறவையே இவை.
நீக்குஇது போன்ற தவறான படங்களால், வீணான மதவன்மம் வளர்கிறது. தற்போதைய பேஸ்புக் போன்ற சாதனங்களும் இவற்றிற்கு முக்கிய காரணங்கள்.
பதிலளிநீக்குஆம்
நீக்குஇவை போன்ற போலிகள் வரும்போது தங்களைப் போல் உள்ளவர்கள் உடனே அதே தளத்தில் கருதிட வேண்டும்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றிகள்
நீக்குநண்பர் தமிழானவன்,
பதிலளிநீக்குஇனவாதத்தை தூண்டி தங்களது பிரசாரத்தை செய்வதற்காக நிறைய பொய் தகவல்களை வெளியிடுகிறார்கள்.
நண்பர் வேகநரி நானும் அதைத்தான் சொல்கிறேன்
நீக்கு