ஹ்யூகோ சாவேஸ் - க்கு அஞ்சலிகள்


புற்றுநோயினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாவேஸ் இன்று இறந்தார். இன்றைய காலத்தின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர். இரு வருடங்களுக்கு முன்பு ஃபிடல் காஸ்ட்ரோவும் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது, இவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஃபிடல் இன்னும் 80 ஆண்டுகள் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று கூறினார். ஆனால் க்யூபாவில் சிகிச்சை பெற்று வந்த இவரே தற்போது இறந்து விட்டார். சில நாட்களாகவே இவரது உடல் நிலை குறித்து கவலைக்குரிய செய்திகளே வெளிவந்தன, இவரது ஆதரவாளர்களே இவரது உடல் நிலை குறித்த செய்திகளை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஒருவரை அமெரிக்கா எதிர்க்கிறது என்றால் அவர் தனது நாட்டின் மீது அதிகம் பற்று வைத்திருக்கிறார் என்று ஏறக்குறைய முடிவு செய்து விடலாம்.


 
அவர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்று ஒத்துக்கொள்கிறேன். எப்படி பல்வேறு தவறுகளுக்குப் பின்பும் புலிகளை ஆதரிக்கும் புலி ஆதரவாளர்களைப் போலவே இவரையும் ஆதரிக்கிறேன். குணம் நாடிக் குற்றம் நாடி மிகை நாடி மிக்க கொளல் என்பதற்கேற்ப பணம், ஆயுதம், உளவுத் தகவல், வழிகாட்டல் என எல்லாம் வழங்கி விட்டு இனப்படுகொலையில் கை நனைத்து விட்டு ஆவணப் படம் எடுப்பது ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று நாடகமாடும் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்காவைக் காட்டிலும் சாவேஸ் ஒன்று துரோகம் செய்திடவில்லை.


சாவேஸை இனப்படுகொலைக்காக எதிர்க்கும் புலி ஆதரவாளர்கள், புலிகள் ஈழப்படுகொலை நடக்கும் முன்பே ஈராக்கில் 10 இலட்சம் பேர்களாவது கொல்லப்படக் காரணமான அமெரிக்காவை, இங்கிலாந்தை எதிர்த்ததுண்டா ? அந்நாடுகளை சர்வதேச சமூகம் என்றுதானே போற்றி வந்தார்கள். இப்போது மட்டும் இலங்கையைத் தண்டிப்பதற்காகத்தான் ஐநாவில் தீர்மானம் கொண்டு வரவில்லை. இனப்படுகொலையில் பங்கெடுத்த இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்களிப்பை மறைத்து இலங்கை மட்டுமே குற்றம் செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமது அரசியல் வர்த்தக நலன்களுக்காகவே ஆவணப்படங்களை உருவாக்கி, மனித உரிமை ஐநா தீர்மானம் என்று இலங்கையை மிரட்டுகிறது.  2009 -இல் போர் முடிந்த பின்பு நடந்த இலங்கைஅதிபர் தேர்தலில் இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய இராணுவத் தளபதி பொன்சேகாவை ஆதரித்தவர்கள்தான் தமிழர்கள்.எப்படி ராஜபக்சேவுக்கு எதிராக பொன்சேகாவை ஆதரித்த தமிழர்களை விடவும் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ராஜபக்சேவை ஆதரித்த சாவேஸ் ஒன்றும் துரோகியில்லை.

அவருக்கு அஞ்சலிகள்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

 1. முதல் தடவையாக என்னுள் சாவேஸை பற்றி தாக்கத்தை ஏற்படுத்தியது உங்க கட்டுரை மட்டுமே நண்பர்.
  தாமதமாக உங்க பெறுமதியான கட்டுரை படிக்க நேர்ந்ததிற்கு வருந்துகிறேன்.
  திரு சாவேசுக்கு எனது அஞ்சலிகள்.
  //ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று நாடகமாடும் இங்கிலாந்து இந்தியா அமெரிக்காவைக் காட்டிலும் சாவேஸ் ஒன்று துரோகம் செய்திடவில்லை//
  முழு உண்மை. இதை தவிர இன்னும் இலங்கை தமிழர்களுக்கு கொடுமைகள் செய்த புலிகளின் கொடுமைகளைவிட சாவேஸ் ஒன்றும் தமிழர்களுக்கு கொடுமை செய்யவில்லை. புலிகள் செய்த கொடுமைகளை பட்டியலிட்டு அரசியல் அடைகலம் பெற்ற சிலரை தமிழர்களையும் நான் அறிந்திருக்கிறேன் நண்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் வேகநரி, அவர் நம்காலத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிடத் தகுந்த தலைவர். அவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் அதுவே அவருக்குச் செலுத்தும் அஞ்சலி. சாவேஸ் மஹிந்தவை ஆதரித்ததை வைத்து அவரை எதிர்ப்பதற்காகக் கொஞ்சம் உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கிறது

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்