திருமணச் சந்தையின் நிலவரம் அச்சமாக இருக்கிறது - இவர்கள் இப்படித்தான் - 3

என்னவாகப் போகிறது தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமணத்திற்கான சடங்குகளும் செலவுகளும் மிகப் பெரிய அளவில் பரிணமிக்கப்போகின்றன என்பது  மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டினரின் பேராசை தெரிந்த்த கதைதான். தற்போது அது முன்னேறி பெண் வீட்டுக்காரர்கள் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர்.

பெரும்பான்மையான பெண்கள் இன்னும் 50 வருடம் பின்னோக்கியே வாழவேண்டிய சூழலில் வசதியும் வாய்ப்பும் ஓரளவு வாய்க்கப் பெற்றவர்களோ, தமக்குக் கிடைத்த வாய்ப்பை வேறுவழியில் பயன்படுத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்குகளை தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், பாலியல் வன்முறை வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் என பட்டையைக் கிளப்புகின்றனர். இதே போல் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளையயும் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதையே சாக்காக வைத்து இது போன்ற வரதட்சிணைக் கொடுமை, தீண்டாமை, பாலியல் வன்முறை வழக்குகளெல்லாமே பொய்யாக சித்தரிக்கப்படுபவை என்று சொல்லி வருவதையும் நாம் காண்கிறோம்.

தற்போது கணவர் சங்கம் வைத்து ஆண்கள் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்தது திருமணம் அதன் செலவு குறித்து. இப்போது நடுத்தரக் குடும்பங்களில் மாப்பிள்ளை பார்ப்பவர்கள் மிகப் பெரிய தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் குறைந்த பட்சம் இரண்டு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் கணக்கு வேறு. இவர்கள் திருமணம் செய்து வைப்பதற்காகவே வளர்க்கப்படுகின்றனர். திருமணம் நடக்கும் வரை சும்மாயிருக்க வேண்டாமே என்று படிக்க வைக்க அனுப்பப்படுகின்றனர்.

படித்த முடித்தவுடன், ஏற்ற துணை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் படித்ததைக் கொண்டு ஒரு பணியைத் தேடிக்கொள்ளவும் முடியாது. கல்யாணம் ஆகப்போற பொண்ணு வேலைக்கு ஏன் போக வேண்டும் என்றுதான். இவர்களுக்குப் படிப்புச் செலவு, திருமணம், நகை, சீதனம், இன்ன பிற பொருட்கள், சீமந்தம், குழந்தை பிறந்தால் ஆகும் செலவு என ஏகப்பட்ட சடங்குகள். செலவுகள். இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு நிச்சயம் கடன் வாங்காமல் முடியாது அதை அடைக்க ஆகும் பல வருடங்கள் இல்லையென்றால் பரம்பரை சொத்து கொஞ்சம் விற்க வேண்டும். இதெல்லாம் பெண்கள் பக்கப் பிரசச்சனைகள்.

ஆண்களுக்கு வேறு பிரச்சனை. பாதிப்பேருக்கு நிரந்தர வேலையே தொழிலோ இல்லை. எல்லா நடுத்தரப் பெற்றோரும் அதிகமாக எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். முன்பெல்லாம் வரதட்சணை என்ற சொல் எல்லாரையும் அச்சுறுத்தும். தற்போது பெண் வீட்டுக்காரர்களின் விதிமுறைகள் மூச்சு முட்ட வைக்கிறது. 

50000 சம்பளம், சொந்த வீடு, சொத்து என அவர்களின் நிலைக்கேற்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் நிலைத்தகவல் போட்டிருந்தார்கள் இப்படி, வரதட்சணை கேட்பது தவறு ! ஆனால் சொந்த வீடு கார், ஒரு இலட்சம் சம்பளம் உள்ள பையன் வேண்டும் என கேட்பது தவறில்லையா என. அது உண்மைதான் கிட்டத்தட்ட.

போதாக்குறைக்கு ஜாதகம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்கள். ஜோதிடர்களுக்கும், தரகர்களுக்கும் செமயான வணிகம் அது. யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால், 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான். பல நவீன சடங்குகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒழித்துக் கட்ட வேண்டிய ஜாதகம், சீதனம் என தேவையில்லாத காலத்திற்கொப்பாத பெண்ணடிமைச் சடங்குகளையெல்லாம் இன்னும் கட்டிக் கொண்டு அழுகின்றனர்.  படித்த பெண்களே இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொண்டாலும் யாரும் கேட்பதாயில்லை. அதை நினைக்காமலிருந்தால் மனச்சுமை படத் தேவையில்லை அவ்வளவே.

முன்பு இலையில் அருந்தியது போய் பஃபே முறைக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் டம்ளருக்கு மாறியாகிவிட்டது. இனி இலை மட்டும்தான் மிச்சம். அதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினாலும் இன்னும் நவீனமாகிவிடும். ஆனாலும் ஜாதிக்குள் திருமணம், தாலிகட்டுவது, காரை சீதனமாகக் கொடுப்பது, அதை திருமண வரவேற்பிலேயே முன்னாடி நிற்க வைத்து ஒரு காட்டு காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் சொந்த ஜாதியில் பெண் கிடைக்காவிட்டால் வேறு ஜாதியில் பெண் எடுப்பதும் நடக்கிறது. மேலே போய் மலையாள நாட்டில் போய் வெள்ளைத் தோல் பெண்கள் எடுத்து வரும் மறத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதே போல், ஜாதகம் பொருந்தவில்லை எனினும், இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய்விட்டால் திருமணம் நடந்து விடுகிறது. ஜாதகத்தைக் கண்டுகொள்வதில்லை. இல்லையென்றால் இன்னொரு ஜோசியத்தைப் பார்த்து ஏதாவது ஒரு பரிகார பூஜையை நடத்தி விட்டால் போச்சு. ஜாதகம் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே. இன்னும் சில ஜோதிடர்கள் இரண்டு பேரை சேர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கபடி மாற்றியும் கொடுத்து விடுகிறார்கள். இப்படித் தேவைப்பட்டால் எந்த சம்பிரதாயத்தையும் சடங்கையும் மாறி செய்கின்றனர். ஆனால் அதே ஒரு பருவமடைந்த வேறு ஜாதியில் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட முறையில் மனமொன்றித் திருமணம் செய்வதை மட்டும் எதிர்க்கின்றனர்.

3 என்ற படத்தில் பாடல் பார்த்தேன். அதில் நாயகன் நாயகிக்கு சாராயக் கடையில் வைத்து தாலிகட்டுவான். இது  போன்றதுதான் சடங்குகளும். காதலனும், காதலும் ஒன்றாக மதுக்கடைக்குச் செல்வது வரை ஜாலி, என்டெர்டெயின்மென்ட் என்று எடுத்துக்கொள்வார்கள், அதே திருமணம் என்றால் தாலியைத்தான் கட்ட வேண்டும் என்ற கற்பிதம் இருக்கிறதே அதுதான், நம்மாளுகள் தேவையில்லாத சடங்கை விடுவதில்லை ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சீரழிவை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்.

என்து உறவினர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்ட பின்னர்தான் இதை எழுதத் தோன்றியது. தெரிந்த இரு குடும்பத்தினர் பற்றிச் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று இப்போதுதான் 4 -வது படிக்கிறது. அதற்கு இப்போதே 80 பவுன் தங்கநகை வாங்கி வைத்து விட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகும்போது, 200 சவரன் போட வேண்டுமென்பதினை இலக்காக வைத்திருக்கிறார்களாம். இன்னொருவரின் வீட்டில் இதே கதைதான் ஆனால் பெண் குழந்தை பிறந்த உடனே வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தங்கம் விற்கும் விலைக்கு யாரும் அடிபட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஆட்டம்தான் போடுகிறார்கள். ஆமா சீதனம் வாங்கிறது தப்பா இல்லையா என்ற விவாதமெல்லாம் போயே போச்சு. பெண்ணடிமைத்தனம் என்று அதிகமாகப் பேசுகிறோம். ஆணுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது திருமணத்தில். ஒரு ஆண் தான் விரும்பியபடி வேறு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றோரிடம் வாங்கிவிட முடிகிறதா ? இன்னும் முக்கால்வாசிப்பேர் ஜாதியை விட மாட்டார்கள். எனக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ?

பொண்ணப் பெத்தவனெல்லாம் இனித் துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான் -

இனியெல்லாம் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் -

இவையிரண்டும் திருமணச் சந்தையின் இருவேறு துருவங்கள்

என்னவோ புலம்பனும்னு தோணியது அவ்வளவுதான்.
 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

 1. பெயரில்லா21/10/12 3:39 முற்பகல்

  உண்மைதான். முழுக்க உண்மைதான்.

  இது வாடகைக்கு வீடு பார்க்கிற மாதிரி. தரகர் ஏற்றியது பாதி. இது போன்ற இருக்கப்பட்டவர்கள் ஏற்றிவிடுவது மீதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கடைசி பெஞ்ச் !! அதேதான் பொய்யும் பகட்டும் ஏக்கமும்தான் திருமணங்களில் காண முடிகிறது.

   நீக்கு
 2. பெயரில்லா21/10/12 6:26 பிற்பகல்

  ippadiye ponaal thirumanam enbadhu verum sadangagividum

  பதிலளிநீக்கு
 3. சமூகம் செல்லும் மோசமான பாதையை பற்றி அப்படியே சரியா சொல்லியிருக்கிறீர்கள்.
  //யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால் 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான்//
  ஜாதகம் பார்ப்பது மட்டுமா சீதனம்,மூடதனமான சடங்குகளை நிராகரிக்க ஆரம்பித்து திருமணம் செய்தவர்கள் இன்று தலை கீழாக மாறி அந்த மூடத்தனங்களை தங்களது உயர் அந்தஸ்தின் அடையாளமாக மாற்றுகிறார்கள். வெளிநாடுகளுக்கு செல்வோர் இன்னும் மோசம். சொந்தநாட்டிலேயே மறைந்து கொண்டு வரும் மூடத்தனமான முறைகளை எல்லாம் எடுத்து தூசு தட்டி பையில் போட்டு கொண்டுவந்து கண்ணும் கருத்துமாக வெளிநாடுகளில் பின்பற்றுகிறார்கள்.
  கல்வி எல்லாம் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.அல்லது கல்வி முறையில் பெரிய குறைபாடு இருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நரி !! அதேதான் சென்ற தலைமுறை முற்போக்குவாதிகள் தற்போது தூள் கிளப்புகிறார்கள்.கல்வியில் நம்க்கு என்ன கிடைத்து விடுகிறது. வேலைக்குத்தான் படிக்கறம், அது கூட கிடைப்பதில்லை. நானும் இவர்களுக்கு நடுவில்தான் சிக்கியுள்ளேன்.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்