விடுதலைப்புலிகளின் துரோகம் ??

தற்போது எரிக் சோல்ஹைம் வெளியிட்டிருந்த கருத்தின் மூலம் பிரபாகரனின் தவறான முடிவு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு வழிவகுத்தது என்று தெரியவருகிறது. ஆனால் எரிக் சோல்ஹைம் புலித் தலைவர்கள் சரணடையும் போதும் உடனிருந்தவர். அதன் பின்பும் அவர்கள் கொல்லப்பட்டார்களே. அதனால் இவர் சொன்னது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது.

2009 ஆம் ஆண்டில் போர் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் புலிகளின் தலைநகரான  கிளிநொச்சி வீழ்கிறது சிங்கள ராணுவத்திடம். அங்கிருந்து புலிகள் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். புலிகளின் தோல்வியானது கிளிநொச்சியின் வீழ்ச்சியின்போதே ஏறக்குறைய முடிவானது. அதுவரையிலும் தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகிறோம். கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வந்த புலிகள், 2008 - நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையை பிரபாகரன் நிகழ்த்தினார். அதன் பின்பு ஒரு மாதம் வரை கிளிநொச்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க புலிகளால் முடிந்தது.

முல்லைத்தீவில் புலிகள் முடங்கியதும், இராணுவத்தின் தாக்குதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. உலக அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை அரசு வற்புறுத்தி வந்தது. தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வந்தது. தீக்குளிப்புகள் நடந்தன. அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பும் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன. மனித அழிவுகளை நிறுத்த ஏதாவது செய்யப்படும் என்பது போன்ற  நிலைப்பாடு மேற்கு நாடுகளில் நிலவியது.

இந்நிலையில் எரிக் சோல்ஹைமின் இவ்வாறு கூறியுள்ளார்.

//ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
//


இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி சரணடைந்திருந்தால் கொல்லப்படாமலிருந்திருப்பார்களா ? உறுதியாகக் கூறமுடியாது. இறுதியில் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடந்தவர்கள்தான் கொல்லப்பட்டார்கள். புலிகள் தலைவர்கள் மட்டுமல்ல, இவர்கள் மன்னிப்புக்குரியவர்களாகக் கூறப்பட்ட பல பொதுமக்கள், போரில் ஈடுபடாத புலிகள் எடுத்துக்காட்டாக இசைப்பிரியா போன்றவர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென இந்தியா உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புலித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும்வரை சரணடையும் முடிவை எடுக்க வில்லை. சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்ட பின்னர்தான் போர் ஒரிரு நாளில் பெரும் மக்கள் கூட்டத்தின் பிணங்களின் குவியலுக்குப் பின்னர் முடியும் தறுவாயிலிருந்தது. ஆனால் இந்நிலை ஏற்படும் முன்னரே புலிகள் சரணடைந்தனர், ஆனாலும் அதன் பின்னும் பெரிய அளவிலான படுகொலைகள் நடைபெற்றது. இன்று வரையில் அரசியல் கைதிகள் கொலைகள் நடந்தேறி வருகின்றன.

இந்தப் போர் புலிகளை முற்றிலும் அழிப்பதற்காகவே நடைபெற்றது. இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகள் புலிகளை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்தது போலக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் புலிகளைக்காக்க விரும்பினார்களா என்பது கேள்விக்குறி. புலிகளைக் காக்க விரும்பினாலும், அது அவர்களுக்குத் தேவையானவரையில்தான். ஒரு வேளை இலங்கை அரசுடன் ஒரு ஒப்புதலுக்கு இவர்கள் வந்த பிறகு அவர்களுக்கு அதோ கதிதான்.  இவர்கள் சொல்லும்படி சரணடைந்திருந்தாலும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மனுக்கும் தூக்குதண்டனைதான் கொடுப்பார்கள். இல்லை அப்படியே கொன்றாலும் கொன்றிருப்பார்கள்.

இப்போது எரிக் சோல்ஹைம் புலிகள் நினைத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்கிறார். இவர் சொன்னது ஜனவரி மாதம் இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தது என்பது. 2009 ஜனவரி மாதத்தில்தான் கிளிநொச்சி வீழ்ந்தது. புலிகள் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தோல்வியை நோக்கியிருந்தாலும் அப்போதும் போராடி மீளும் வாய்ப்பு இருந்தது. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோ, இந்தியாவோ போரை நிறுத்தும் என்றும் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலிகளின் துரோகம்;

புலிகள் இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். இறுதியில் முல்லைத்தீவில் முடங்கிய போது இது அதிகமாக இருந்தது. தப்பிச் சென்றவர்களையும், செல்ல முயன்றவர்களையும் கொன்றனர். குழந்தைகளைப் பிடித்துக் கட்டாயமாக போருக்கு அனுப்பினர். இறுதியில் தம் உயிரைக் காக்கவே சரணடைந்தனர். இவையெல்லாம் உண்மை.

புலிகள் ஆரம்பம் முதலே உலகக் கொலைகாரன்களுடன் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். இந்தியாவிடம்தான் பயிற்சி பெற்றனர். இஸ்ரேலிடமும் பயிற்சி பெற்றனர். சர்வதேசம் என்று இவர்கள் நட்பு பாராட்டிய நாடுகள்தான் உலகின் பலநாடுகளின் மீது படையெடுத்தும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை நசுக்கியும் வந்துள்ளனர். குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் தன்னுடன் ஒத்துழைக்காத போது அந்நாட்டு  அரசுக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவும் அளிப்பவைதான் இந்த சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய வல்லரசுகள்.

புலிகள் இனவிடுதலைக்குப் போராடியதாகச் சொல்லிக் கொண்டாலும் மற்ற பயங்கரவாத இயக்கங்கள் நிகழ்த்திய அத்தனை இழிசெயலையும் பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தினார்கள் 25 வருடங்களாக, பாசிஸ இயக்கமாகவே நடந்து கொண்டார்கள்

மற்ற இயக்கத் தலைவர்கள் போராளிகள் கொல்லப்பட்டது.

இந்திய உளவுத்துறையிடம் 50 கோடியை வாங்கிக் கொண்டு, அநுராதபுரத்தில், 146 சிங்கள அப்பாவிகளைக் கொன்று குவித்தனர். இதை சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும், அரசைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதற்காகவும் எனவும் நியாயப்படுத்தினர். அப்பாவிகளின் மீதான புலிகளின் முதல் பயங்கரவாதத் தாக்குதல் இது.

பல பத்தாயிரம் இஸ்லாமியர்களை விரட்டி அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தது. தமிழ் இஸ்லாமியப் பிரிவினையை அதிகமாக்கியது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்களைக் கொன்றது, ராஜீவ், ப்ரேமதாஸா, லட்சுமண் கதிர்காமர் போன்றோர் இதன் மூலம் மிகப்பரவலான வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டனர், இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிலேயே தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்றதன் மூலம் புலிகள் எதிர்களுக்கு தங்கத்தட்டில் வைத்து ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டனர். தனக்கான ஆதரவையும் இழந்தனர். இதனால் ஈழத்தின் மீதான் அனுதாபம் மறைந்து, இந்திய ராணுவத்தின், ராஜீவின் கொடூர முகம் மறைக்கப்பட்டு புலிகளின் மீதான வெறுப்பு அதிகரித்தது. பயங்கரவாத முத்திரை ஆழமாக விழுந்தது.

இதெல்லாம் போக சிங்களப் பொதுமக்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தினர். பேருந்து, இரயில், பொது இடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல், மசூதி, புத்த விகாரைகளின் மீதான தாக்குதல் என எல்லாவற்றையும் செய்தனர். இது போன்ற எல்லாத் தாக்குதலையும் புலிகள்தான் செய்தார்கள் என்று கொள்ள முடியாது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க முடியாமல் தேர்தல் புறக்கணிப்பை நிகழ்த்தினர். இதன் மூலமாக சிங்கள இனவெறியர்களை ஆட்சியில் அமர வைத்தனர். ராஜபக்சேவிடம்  பணம் பெற்றுக் கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர் புலிகள் என்ற செய்தியும் உண்டு.

போர் தொடங்கிய பின்பு, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் மீது நடத்தப்பட்ட (தோல்வியடைந்த)தற்கொலைத்தாக்குதல்.

இதெல்லாமே தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்ப்பதா அல்லது குழி வெட்டுவதா ?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளுக்கு பல கடுமையான எச்சரிக்ககளை விடுத்தனர், சமாதான வழியில் தீர்வுகாண வலியுறுத்தினர். பின்பு புலிகளின் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதலை வைத்து பயங்கரவாத இயக்கமாக அறிவித்தனர். இலங்கை அரசுக்கு ஆயுதமும் நிதியும் வழங்கினர்.

இதற்குப்பின்னரும் புலிகள் இவர்களை நம்பி இருந்தனர். இந்தியாவுடன் போரை நடத்தியும், ராஜீவைக் கொன்றபிறகும் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் என்றே கூறி வந்தனர். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பின் மீது விமானத் தாக்குதல் நடத்துமளவிற்கு பலம் பெற்றிருந்த புலிகள், இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகள், சிங்கள ராணுவத்திடம் எப்படித் தோற்றுப் போனார்கள் என்பது பெரிய கேள்வி. இலங்கை அரசுக்கு உலக ஆதரவு ஆயுதம் படைகள் இருந்தது உண்மை. ஆனாலும் மிகவும் வலுவான புலிகளுக்கு அதை சமாளிப்பது என்பது முடியாத காரியம் இல்லை.

மரபுச் சமரில் முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து அதே வழியில் போரிட்டனர். கிளிநொச்சி வீழ்ந்த பிறகும் கரந்தடிப்போர் (கொரில்லாப் போர்) முறைக்கு மாறாமல் தந்திரோபாயப் பின்வாங்கல், தற்காப்புத் தாக்குலை நடத்திக் கொண்டிருந்தனர். கொரில்லாப் போருக்கு மாறாமல், தாக்குதலை நடத்தாமல் யாரோ இழுத்துப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் போலத் தோன்றியது. இதோ தாக்குவார்கள், அதோ தாக்குவார்கள் புலிகள் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இறுதிவரையிலும் இருந்த இடத்திலிருந்தே போராடி, தானாகவே தோற்று சிங்கள ராணுவத்தின் வேலையை எளிதாக்கினர்.

இதையெல்லாம் புலித்தலைவர்கள் சிந்திக்காமலா இருந்த இடத்திலிருந்தே போரிட்டிருப்பார்கள்.

பிரபாகரனுக்கு அவ்வளவு அதிகாரம் இருந்ததா என்பது குறித்து, மேற்கண்ட செயல்களெல்லாம் பிரபாகரனால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவைதானா ?  அல்லது வேறு யாருடையே யோசனை அல்லது உத்தரவின் பேரில் இதை செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வி. பிரபாகரனுக்குப் பின்னாலிருந்த அவரை ஆட்டுவித்தவர்கள் யார் இதெல்லாம் இன்னும் வெளிவராத ரகசியங்கள். இதனால்தான் பிரபாகரன் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரபாகரன் பிம்பத்தின் ஒளியில் பல துரோகிகள் ஒளிந்திருக்கிறார்கள். கருணாவை விட இவர்களின் பங்குதான் புலிகளின் தோல்வியை நிர்ணயித்திருக்கும்.

எரிக் சொல்வது போல் சரணடைந்திருந்தாலும் இப்போது நடப்பதுதான் நடந்திருக்கும். எரிக் யாருடைய பேராளராக இருக்கிறார். உலகம் முழுதும் போரை நடத்தும் வல்லரசுகளின் பேராளர். இவர்கள் கண்ணீர் வடிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல. 30 வருடப் போர் பல பேருக்கு வணிகமாகியிருக்கிறது. ஆயுதம் வழங்குவதிலிருந்து, அபிவிருத்தித் திட்டங்கள் வரைக்கும். தமிழர்கள், சிங்களர்கள் இந்தியா சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நார்வே எனப் பலர் இவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. நமக்குக் காட்டப்படுவதெல்லாம் பிரபாகரன், ராஜபக்சே இவர்களிருவர்தான். இவர்களின் கைகளால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்தான் (புலத்து) புலிகள். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள் புலித்தலைவர்கள், போராளிகள் மற்றும் மக்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

23 கருத்துகள்:

 1. பல அறியத் தகவல்கள். நன்றி தோழரே

  பதிலளிநீக்கு
 2. இவர்கள் என்றைக்கு ராஜீவ் காந்தியை கொன்றார்களோ
  அன்றைக்கே தெரிந்துவிட்டது இவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் மற்றும்
  பெரும்பான்மை தமிழர்களின் [த.நாடு, லங்கா ] ஆதரவும் இல்லை
  ஒரு பிரமிப்பான விஷயம் என்னன்னா, ஒத்த ஆள் இந்திய,லங்கா ராணுவத்தை
  எதிர்த்து இவ்வளவு நாட்கள் இருந்ததே மிகப் பெரிய விஷயம் இப்படிப்பட்ட மனிதர்
  ஈழத்தமிழர்களுக்காக கடைசிவரையில் போராடி தன் ஊயிரை விட்டதை
  நினைத்தால்,இவர் [பிரபாகரன்] போராளியா அல்லது ஏமாளியா ??!!!
  என்னைப்பொறுத்த வரையில் இவர் ஏமாளி என்றுதான் சொல்வேன் ஏன்னா
  கடைசி நேரத்தில் தன் இனத்தாரே காலை வாரிவிட்டுட்டாங்க...இப்படிப்பட்ட
  இனத்தை நம்பி இருந்தவரை ஏமாளி என்று சொல்லாமல் வேற எப்படி சொல்வதாம்...!!!!
  இந்த கட்டுரை நடுநிலையாக ஆழ்ந்து சிந்தித்து பகிரப்பட்டவருக்கு மிக மிக நன்றி.
  [பி.கு. ராஜீவ் இறப்புக்கு முன் நான் புலிகளின் தீவிர ஆதரவாளன் பிறகு இல்லை]--

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜீவைக் கொல்லாமல் விட்டிருந்தால், தற்போது சோனியா செய்ததையே அவரும் செய்திருப்பார். புலிகளை அழிக்குமளவிற்கு சிங்கள ராணுவத்திற்கு வலிமையும் கிடையாது. மற்ற நாடுகளின் உதவியின்றி வந்திருந்தால் பாதி ராணுவம் கூட மிஞ்சியிருக்காது. இது ஒரு காட்டிக் கொடுப்புதான், பிரபாகரனின் அறியாமை, துரோகம் எனப்பல காரணங்கள் உண்டு. இனமே காலைவாரிவிடவில்லை, பிரபாகரன் யாரை நம்பினாரோ அவர்கள்தான் திட்டம் போட்டு சிக்க வைத்தார்கள். ராஜீவைக் கொன்றதற்காக புலிகளை வெறுத்துவிட்டீரா ? ராஜீவ் கொலை செயயப்பட்டதால் உத்தமராக்கப்பட்டுவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது மன்மோகன் சிங்கிற்கு இருக்கும் ம்ரியாதை கூட அவருக்கு இல்லை. போபர்ஸ் ஊழல், போபால் ஆண்டர்ச்னைத் தப்பவிட்டது, சீக்கியர் படுகொலை, ஈழ ஆக்ரமிப்பு என ராஜீவின் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பிரபாகரன் சமாதானப் பேச்சுக்கு வரும்போது கொல்ல உத்தரவிட்டவர் ராஜீவ். சீக்கியர் படுகொலை குறித்து நான் கொஞ்ச்ம் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படிக்கவும்.

   சீக்கியர்

   நீக்கு
 3. ராஜீவ் கொல்லப்பட்டது தவறாக எனக்குப் படவில்லை. தமிழர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி மானபங்கப்ப்டுத்தி கொலை செய்த அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவிற்கு தகுந்த தண்டனைதான். ஆனால் அதன் பிறகும் புலிகள் ஏகாதிபத்தியங்களையும், இந்திஒயாவையும் நம்பினார்கள் பாருங்கள் அதுதான் மிகப் பெரிய தவறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அதே நிலைதான். ராஜீவ்காந்தியின் மீது எனக்கொன்றும் பெரிய கரிசனம் கிடையாது. ராஜீவ் கொலை புலிகளுக்கு பெரிய பின்னடைவாகி விட்டது. தமிழநாட்டிலிருக்கும் ஈழ அகதிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலைப் புலிகள் உருவாக்கி விட்டனர். ஆம் பின்பு ஏன் இந்தியாவையும் மற்ற நாடுகளையும் நம்பிக் கொண்டிருந்தார்கள் எனபதுதான் புரியாத புதிர்

   நீக்கு
 4. பெயரில்லா15/10/12 7:27 பிற்பகல்

  எத்தனை பேர்லதாண்டா முஸ்லீம்வெரியனுங்க தமிழ்மணத்துல பதிவுபோடுவீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ! நான் முஸ்லிம் இல்லை.நானொரு தமிழ் வெறியன் என்பதை என்னுடைய வலைப்பூவின் பெயரையும், புனைப்பெயரைப் பார்த்தாலே புரியும். நான் புலி ஆதரவாளனில்லைதான். ஈழம் குறித்து இன்னும் சில பதிவுகள் எழுதியிருப்பேன். படித்திருந்தால் தெரியும்

   நீக்கு
  2. பெயரில்லா16/10/12 1:56 முற்பகல்

   "நான் முஸ்லிம் இல்லை.நானொரு தமிழ் வெறியன் என்பதை என்னுடைய வலைப்பூவின் பெயரையும், புனைப்பெயரைப் பார்த்தாலே புரியும். நான் புலி ஆதரவாளனில்லைதான். ஈழம் குறித்து இன்னும் சில பதிவுகள் எழுதியிருப்பேன். படித்திருந்தால் தெரியும்"

   இப்படி எத்தனையோ கதைகளை பார்த்துவிட்டோம். காலம் தான் பதில் சொல்லும்.

   நீக்கு
 5. நான் ஒரு இலங்கையன் ... என்னை பொறுத்தவரை LTTE oru பயங்கரவாத அமைப்பே..இறுதியில் தெற்கில் உள்ள மக்கள் நாங்கள் ஏறும் பஸ் இப்பொழுது வெடித்துவிடுமோ என்ற பீதியுடனேயே செல்ல வேண்டிய அளவுக்கு அவர்களின் நாசம் வலுத்தது.. தெற்கில் என் தமிழ் நண்பர்கள் யாருமே பிரபாகனை நல்லவனாக ஏற்றதில்லை.. அனால் தமிழ்நாட்டில் எவ்வாறு அவன் ஹீரோ ஆனான் என்பது தன புரியவில்லை !

  பதிலளிநீக்கு
 6. அது சரி சாஹீப் அல்கைதா, தலிபான் என்ன போராட்ட இயக்கங்களோ.
  இன்றைக்கு எந்த நாட்டிற்கு போனானாலும் இந்த சனியன்களின் தொல்லைதான். எப்ப எங்கே குண்டு வைப்பங்கள் என்று தெரியாது. மிக கொடூரமான பயங்கரவாத இயக்கங்கள். (தலிபான், அல்கைதா)
  ஒரு மாதிரி ஒசாமா பின்லேடன் என்ற மத வெறி பிடித்த கொடூர பயங்கர வாதியை அமெரிக்கா கொலை செய்து விட்டது. அதே போல் எல்லா தலிபான், அல்கைதா பயங்கர வாதிகளை அமெரிக்கா கொலை செய்து விட்டால் எப்படி இருக்கும்.
  சுவர்க்கமே தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீவிரவாதி தீவிரவாதி தான் அவன் எந்த மதமாக இருந்தாலும் சரியே.. மேற்கு ஊடகங்கள் காட்டும் உசாமா தான் உசமாவின் உண்மையான முகம் என்றல் புஷ் இற்கு அடுத்த மிகப்பெரிய தீவிரவாதி அவனே என்று சொல்ல எனக்கு தயக்கம் இல்லை .. மேலும் நீங்கள் கூற வரும் சேதி தான் என்ன? பிரபாகரன் செய்து ஏற்றுக்கொண்ட கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா?

   //எப்ப எங்கே குண்டு வைப்பங்கள் என்று தெரியாது. மிக கொடூரமான பயங்கரவாத இயக்கங்கள். (தலிபான், அல்கைதா)// அப்படி என்றல் அவையும் LTTE போன்ற ஒரு தீவிரவாத அமைப்பாக தானே இருக்க வேண்டும் சகோதரரே ?
   தமிழர்களை காக்க உருவான இயக்கத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை .. ஆனால் , பின்னாளில் அதுவே பொது மக்களை கொல்வதை நியாயப்படுத்தும் காரணமாக ஒருநாளும் ஏற்றுகொள்ள முடியாது.

   நீக்கு
 7. ஆனால் சில முட்டாள் முஸ்லிம்கள் இன்றைக்கும் (எல்லோரும் அல்ல) இந்த கேவலமான பயங்கர வாத இயக்கங்களான அல்கைதாவையும், தலிபானையும் ஆதரிக்கின்றார்கள். ஏனென்று தெரியவில்லை.

  உலகம் முழுவதும் வெறுக்கின்ற இந்த பயங்கர வாத இயக்கங்களை ஏன் இந்த சில முட்டாள் முஸ்லிம்கள் ஆதரிக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா16/10/12 5:19 முற்பகல்

  மஸ்தான் சாகிபு நீ இஸ்லாமியவெறியன் இல்லீயா?

  பதிலளிநீக்கு
 9. அருமை சகோ வாங்க பழகலாம்

  பதிலளிநீக்கு
 10. விடுதலைப்புலிகள் கடைசிவரையில் போரில் முழுவீச்சில் எதிர்தாக்குதல் நடத்தாமல் போனதற்கான காரணங்கள் இன்றளவும் எவருக்கும் புரியாத மர்மம்தான். ஆனால் ஒரு இனத்திற்காக ஒரு தனிநாடு போன்ற சட்டதிட்டங்களோடு, இராணுவத்தைவிட சீரியதொரு படையோடு தீவிரவாத இயக்கம் என்ற எல்லையெல்லாம் தாண்டி கட்டமைத்த பிரபாகரனை துரோகி என்பதும், யாரோ ஆட்டுவித்தார்கள் என்பதும் நம்பமுடியாத வெறும் வீண் கற்பனையாகவே படுகிறது... புலிகளின் இயக்கம் பற்றியும், அவர்களின் விடுதலைப்போராட்டத்திற்கான வேர் பற்றியும், ஆரம்பம் முதலான சிங்கள ஆதிக்கத்தைப்பற்றியும் இன்னமும் நிறைய படியுங்கள்... உங்களது கருத்துக்களில் உங்களுக்கே மாற்றம் தெரியலாம்... (நான் தீவிர தமிழ்ப்பற்றாளன் மட்டுமே... புலி ஆதரவாளனல்ல!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசித்ததற்கும் கருத்துக்கும் நன்றி !! நான் பிரபாகரனைத் துரோகி என்று சொல்லவில்லை. அப்படிக் கடுமையான தொனியில் நான் பேச மாட்டேன். இவை வெறும் என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. பிரபாகரனைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்பதுதான் என் பிரச்சனை. முள்ளிவாய்க்கால் வரை அவர் வெளிநாட்டுப் புலிகளுடன் தொடர்பில் இருந்தார். குறிப்பாக ஃபிப்ரவரி மாதம்தான் கேபியை நியமனம் செய்தார்கள் என்று நினைவு. அதே போல் பிரபாகரன் ஆட்டுவிக்கப்பட்டார் என்று நான் ஏன் சொன்னேனென்றால் முஸ்லிம்கள் துரத்தப்பட்டது, ராஜீவ் படுகொலை என புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய முடிவுகளை யார் தீர்மானித்தார் என்பது. மற்றபடி 2000 வாக்கிலேயே புலிகள் ஏறக்குறைய தனிநாட்டை அமைத்து விட்டனர் அங்கீகாரம் மட்டும் இல்லாமல். புலிகள் அழிக்கப்பட்டதை நான் சதாம், கடாஃபி போன்றோரின் அரசுக்கு எதிரான உலக நாடுகளின் போராகவே பார்க்கிறேன். இன்னொரு உறுத்தல் இந்தியாவை அவர்கள் இறுதிவரை நம்பிக் கொண்டிருந்தது. புலிகளை விட வலிமை குறைந்த ஹிஸ்புல்லா, மாவோயிஸ்டுகள், தாலிபன்கள் உலக ராணுவத்திற்கே தண்ணி காட்டி வருகிறார்கள். சிங்கள ராணுவத்திடம் தோற்குமளவிற்கு புலிகள் ஏன் மாறினார்கள் என்பது முக்கியமான கேள்வி. மற்றபடி புலிகளின் தோற்றம் பற்றி விமர்சனம் இல்லை. சிங்களப் பேரினவாதம் குறித்துப் புதிதாகத் தெரிந்துகொள்ள எதுவுமில்லை என நினைக்கிறேன்.

   நீக்கு
 11. பிரான்ஸ் புலிகளுக்கிடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக புலி முக்கியமானவர் ஒருவர் கொல்லபட்டுள்ளாராம்.பிரான்ஸ்சில் இப்படி நடக்கிற அளவுக்கு பொலிஸ் என்ன செய்கிறதோ தெரியவில்லை.
  http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121109_franceparithikiled.shtml

  //சிங்கள ராணுவத்திடம் தோற்குமளவிற்கு புலிகள் ஏன் மாறினார்கள் என்பது முக்கியமான கேள்வி//
  ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியின் அசைக்க முடியாத கோட்டை என்று பத்திரிக்கைகள் புகழ்கின்றன நாங்களும் நம்புகிறோம். தேர்தல் முடிவில் அந்த கட்சி படு தோல்வி அடைகிறது. அது தான் அந்த கட்சியின் உண்மையான நிலை.
  வியாபாரத்திற்காக தமிழ் பத்திரிக்கைகள் ஒன்றை பத்தாக பெருப்பித்து எழுத தமிழ் என்பதிற்காக நாங்கள் மேலும் கற்பனை செய்து மகிழ உண்மை நிலை வேறு.
  Project Beacon என்று ஒரு புலிகளை அழிப்பதற்காக சிறப்பான திட்டம் ஒன்றை இலங்கை தீட்டி, அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளிடம் காட்டி பூரண ஆதரவை பெற்று சிறப்பான முறையில் செய்து முடித்ததாக அறிந்தேன்.
  சாயிபாவின் சிறப்புகள்,யேசு அழைக்கிறர் வகையாறா ஈமெயில்கழுடன் வந்த ஒன்று புலிகளை ஒழிக்க எந்த சிங்களவனாலும் முடியாது ராசபக்சே ஒரு தமிழன் தான் அதனாலே தான் அவனாலே செய்ய முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேக நரி எதிர்பாராத ஒரு கொலையைத் முன்ன்ரே அறிந்து தடுக்குமளவிற்கா பிரான்சு காவல்துறை செயல்பட முடியும் ? இலங்கை உளவுத்துறையின் திட்டமிடுதலாக இருந்திருக்கலாம் இல்லை குழுச்சண்டையாக இருக்கலாம், இரண்டாகவும் இருக்கலாம்.

   ஆஃகானிலும், ஈராக்கிலும் போடாத பெரிய திட்டத்தையா போட்டிருப்பார்கள். நான் சொல்ல வருவ்து புலிகள் மரபு வழிப்போரில் ஈடுபடாமல் இருந்திருக்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாளைக்கு இழுத்தடிந்திருக்க வேண்டும். உலக அளவில் போராட்டம் அதிகமாகியிருக்கும், புலிகளுக்கு ஆதரவும் கூடியிருக்கும். புலிகள் அழிந்த பிறகுதான் அவர்களுக்கு பல ஆதரவாளர்கள் புதிதாக்த் தோன்றினார்கள். அது அவர்களின் அரசியல் நல்னுக்காக இருந்தபோதிலும் கூட.

   நீக்கு
 12. நண்பர் தமிழானவன்.
  நேற்று 07.12.2012 இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கை பாரளுமன்றத்தில் சொன்னதை பார்த்தீர்களா?
  "இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டனர். ஜனநாயகத்தையும் தார்மீகத்தையும் மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்"
  இதில்லிருந்து என்ன தெரிகிறது என்றால் தீயது அழியும்.

  பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்