கையாலாகாதவன்

                        
                                                   இணையப் புரட்சி

தோட்டத்தில் உழைத்துக் களைத்தபின் நீ குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீரைக்
கொட்டாங்குச்சியில்  பருகி வாசலில் உன் செருப்பிடும் வழக்கமான
இடத்திற்கு சற்றுத் தள்ளி இலைபோட்டு பசியாறி  வெளியே
நிறுத்தப்பட்ட மனிதனைக் கண்ட பிறகும்
வீட்டில் முகப்பில் ஜாதியை எதிர்க்கத் துப்பில்லையாம் !
முகநூலின் முகப்பில் பெரியாராம் !
நட்புக்களின் திருவாயிலிருந்து புறப்படும் பெண் மீதான வசைகளை
சகித்துக் கொண்டு மௌனச் சாமியாராய் நடந்திடு !
பெண்ணியவாதியின் நிலைத்தகவலுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டிடு !
புரட்சி செய்திட இருக்கவே இருக்கின்றன முத்தொழில்கள்
விரும்பல் பகிர்தல்  கூட்டல்
மூன்றையும் செய்திடு வலைப்பூவில் பதிந்திடு
உள்ளத்தின் அரிப்பைச் சொரிந்திடு
மறக்காமல் நன்றியும் நவின்றிடு

                             முற்போக்குத் தோல்வியின் முனகல்

ஐந்திலக்க ஊதியமில்ல அரசாங்க வேலையுமில்லை
கொள்கைக்கு மட்டும் குறைவில்லை !
பின்பற்றவும் துப்பில்லை உதறிவிடவும் இயலவில்லை
படுத்தால் உறக்கம் வர மறுக்க  உண்டாலும் உடல் ஏற்க மறுக்க
அமெரிக்க கடிகாரத்திற்கு உடல் இயங்க மறுக்க
அன்னமிடும் அன்னையின் அன்பும் உடன்பிறப்பின் உரையாடலும்
விருந்தினர் வருகையும் உறவினனின்  உபசரிப்பும் கூட அச்சம் தருகிறது
அவைகளின் இறுதி நோக்கம் ஊதிய உயர்வைக குறித்து கேட்பதால் !
நண்பா நானும் உனைப்போலவே இருந்திருக்கலாமோ
பார்வையால் சொல்லால் புணர்ந்து கொண்டும்
வாரம் தவறாமல் ஊற்றிக் கொண்டும்  திரையரங்கை மொய்த்துக் கொண்டும்
எப்போதாவது கடவுளிடம் சென்றுவிட்டும்
பாழாய்ப்போனவைகளைப் படிக்காமல் நினைக்காமல் வருந்தாமல்
வண்ணத்திரையுடன்  நிறுத்தியிருக்கலாம்
போராளியாக நினைத்து கோமாளி ஆகியிருக்க மாட்டேன் பாவியாய்
உணர்ந்திருக்கமாட்டேன்
துவண்டிருக்க மாட்டேன்
மனசாட்சியிடம் தப்பியிருப்பேன்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 கருத்துகள்:

  1. அழகான பல உண்மைகளைச் சொல்லும் பதிவு.....

    பதிலளிநீக்கு
  2. நான் தமிழிலேதான் எழுதுகிறேன். வேறு மொழி தெரியாத காரணத்தால் அல்ல,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்போக்கன் அடுத்த பதிவுக்கான கருத்தை இங்கே போட்டுவிட்டீங்களா

      நீக்கு
    2. நீங்கள் தமிழில் எழுதுவது குறித்து மகிழ்ச்சிதான்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்