தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு நேர்ந்த கொடுமை

 
    

இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. தமிழ்நாட்டின் தனித்துவமான ஒரு நாளிதழின் ஆசிரியரான தினமணி வைத்தியநாதன் மதவெறிக்கும்பலின் அயோக்கியத்தனமான மருட்டலின் காரணமாக ஆண்டாளின் சிலை முன்பு நெடுஞ்சான்கிடையாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தினமணியில் செய்யாத தவறுக்காக பக்தர்கள் என்ற பெயரில் கூரு கெட்ட முட்டாள்களின் உளறல்களை கண்டனக் கடிதங்களைக் கூட ஜனநாயக அடிப்படையில் வெளியிட்டார். இதற்கும் மேல் தினமணியே மன்னிப்புக் கேட்கிறது என்றும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கப்பட்டது. இதற்குப் பிறகும் மதவெறிக் கும்பலின் கொட்டம் அடங்கவில்லை. அரசியல் அதிகாரம் மூலமாக தனது பதவிக்கு/பணிக்கு அச்சுறுத்தல் வருமென்பதால் வேறுவழியின்றி இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஊடகத்துறையினருக்கு இழிவை ஏற்படுத்தியிருக்கிறார். யாரைக் காலங்காலமாக ஆதரித்து வந்தாரோ அவர்களாலேயே இந்த இன்னல் நேர்ந்திருக்கிறது.  நம்புங்கோ இது சகிப்புத்தன்மையுடய மதம். கட்டுரை வெளியிட்டதால் இவர்கள் புண்பட்டார்களாம். அதற்கு ஆண்டாள் சந்நிதியில் இப்படி விழுந்து மன்னிப்புக் கேட்டதால் இவர்கள் புண் சரியாகி விட்டதாம். அற்புதம். இதைச் சுற்றி இத்தனை வெளக்கெண்ணைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

தினமணி நாளிதழின் ஆசிரியரான வைத்தியநாதன் அவர்களை எனக்கு சிறிதும் பிடிக்காது. அவர் மீதான மரியாதை உள்ள காரணம் கண்ணியமான முறையில் கருத்தை வெளிப்படுத்துவதும், தமிழைத் தனிப்பட்ட முறையில் போற்றுவதும் அதை தினமணியில் தொடர்ந்து செய்வதாலும்தான். இறைமறுப்பாளர்கள்/திராவிட அரசியல்வாதிகள் மீது வெறுப்பு இருந்த போதும் அதை அரசியல் ரீதியாக தினமலர் அளவுக்கு கீழ்த்தரமாக எதிர்வினை ஆற்றுவதோ அவதூறு பரப்புவதோ கிடையாது. அவர் இந்துத்துவவாதியாக இருந்த போதும் ஆன்மிகவாதியாக இருந்ததால் ஓரளவுக்கு என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சனையின் போதும் அவருடைய நியாயங்களை அங்கீகரித்தார். 

இவரை ஏன் பிடிக்காது என்றால் ஆன்மிகவாதியாக இருந்து கொண்டு மதவெறிப் பயங்கரவாதிகளான பாஜக, ஆர் எஸ் எஸ் வகையறாக்களை வெட்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் ஆதரிப்பவர். நேற்றும் கூட நீட் தேர்வுக்கு ஆதரவான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். ஆனால் மதவெறிப் பயங்கரவாதிகள் தனது எதிரிகளை எவ்வளவு கொடுமைப் படுத்துவார்களோ அதே அளவு வெறுப்புடன்தான் ஆன்மிகவாதிகளையும் அணுகுவார்கள். ஏனென்றால் ஆன்மிகவாதிகள் கொஞ்சமாவது மதம் கடந்த மனிதம், நேர்மை ஆகியவற்றை போதிப்பார்கள். அதெல்லாம்தான் மதவெறியர்களுக்குப் பிடிக்காதே. காந்தி என்ற ஆன்மிகவாதிக்கு கோட்சே என்ற மதவெறியன் கொடுத்த பரிசு நமக்குத் தெரியும்தானே ?

இதற்கு தினமணி வாசகர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இல்லை அவர்கள் கண்டனம் தெரிவித்தால் அதை தினமணி வெளியிடுமா ? பெருமாள் பக்தர்களுக்குக் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி உண்டாகுமா ?. செய்தித் தலைப்பே பித்தலாட்டம். ஆண்டாள் குறித்த சர்ச்சைக் கருத்தாம். கடவுள் என்பதே சர்ச்சை. ஆண்டாள் என்பதே சர்ச்சை, ஆண்டாள் கடவுள் என்பதும் சர்ச்சை. இதில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தாம். எங்கங்க போகுது இந்த நாடு ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்