ஃபரூக் படுகொலை - முகமதிய மதவெறியின் கோரத்தாண்டவம்


திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்ட இறை மறுப்பாளர் ஃபரூக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதக் கலவரம் குண்டு வெடிப்புக்குப் பெயர் போன கோவை தற்போது மதவெறிக் கொலைக்கும் பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்லாமை எதிர்த்து இறைமறுப்புப் பரப்புரை செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது

அவரது இறைமறுப்புக் கொள்கையைக் கேட்டு வெறுப்புற்ற அவரது நண்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொய் சொல்லி ஃபரூக்கை வரவைத்து வெட்டியும் குத்தியும் கொலைவெறியாட்டம் போட்டுள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான அவரைக் கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்களே. இதிலொருவன் மீது வழிப்பறிக் கொள்ளைக்கான வழக்கும் இருக்கிறதாம். இருந்தும் அவனை மதவிலக்கம் செய்யாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இறைமறுப்பு பேசினால் ஒருவனை உயிர்விலக்கம் செய்வதற்கு அந்த அயோக்கியனுக்கும் யோக்கியதை இருந்திருக்கிறது. 


மார்ச் 15 வியாழன் அன்று தனது வாட்ஸப் குழுமமான கடவுள் இல்லை-இல் பதிவிட்டிருக்கிறார் ஃபரூக். தனது குழந்தையின் கையில் கடவுள் இல்லை என்று மூன்று முறை எழுதிய பதாகையை ஏந்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைக்கண்டு வெறியான மதவெறியர்கள் அதற்கு அடுத்த நாள் கொலையை நிகழ்த்தியுள்ளனர். இதே ஒரு குழந்தை குல்லா போட்டுக் கொண்டோ பர்தாவைப் போட்டுக் கொண்டோ புகைப்படம் போட்டால் ஒரு இறைமறுப்பாளன் போய் நம்பிக்கையாளனை வெட்டத் துணிவானா ? மதி கெட்ட மதவெறி !

மதவெறியில் பித்தேறி வெறிகொண்ட 5 இஸ்லாமிய மதவெறி அடிப்படைவாதிகளால் கொடூரமான முறையில் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டார் ஃபரூக்.

                                             

தனது குழந்தைகளுடன் 

பிணமாக 


ஃபரூக் பிணமாக வெட்டுக்காயமும் குத்துக்காயங்களுடனும் - அளவற்ற அருளாளனின் வழிபாட்டுக்காரர்களின் அன்பு

                                          

இவரது சாவை விடவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இரண்டு விடயங்கள்

1. இவரை இவரது நண்பன் ஒருவனே தனது வாகனத்தில் எரிநெய் (பெட்ரோல்) தீர்ந்து விட்டதாகக்கூறி அழைத்திருக்கிறான். அதை நம்பிச் சென்றவரைத்தான் வெட்டிக் கொன்றுள்ளனர் அந்த மதவெறிக் கொலைகாரர்கள். (ஃபரூக்கின் தந்தை ஹமீது அளித்த பேட்டியில் கூறினார்)

2. துக்கம் விசாரிக்க வந்த இஸ்லாமியப் பெண்கள் ஃபரூக்கின் மனைவியிடம் கேட்ட கேள்வி. ஃபரூக் நபிகளையே எதிர்த்து வந்துள்ளார். இறைத்தூதர் பற்றி நூல் வெளியிடலாம் என்று இருந்தாராம். இஸ்லாமியராக இருந்து கொண்டு இதையெல்லாம் செய்யலாமா ? 

(எழவு கேட்க வந்த வீட்டில் இவ்வளவு வக்கிரமாகப் பேச முடியுமா முடியும் மதவெறி தலைக்கேறி இருந்தால்.)

ஃபரூக்கின் படுகொலையைக் கண்டித்து கேரள யுக்திவாதிகள் ஆர்ப்பாட்டம்

முதலில் கொலை நடந்த செய்தி வெளியானதும் இதை முஸ்லிம்கள் செய்திருக்க மாட்டார்கள், RSS - காரர்களில் செயலாக இருக்கலாம் என்றே பெரும்பான்மையினர் கருதினர், குறிப்பாக திராவிடர் கழகத் தலைமை. ஆனால் கொலை நடந்த இடம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி, மேலும் ஃபரூக்கிற்கு வேறு வகையில் எதிரிகள் இல்லை என்ற அனுமானத்தில் இது இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்திருக்கும் என்றும் பேசினர். பின்பு கொலை வழக்கில் இருவர் சரணடைந்த பின்னர்தான் இது அப்பட்டமான இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்த கொலை என்று உறுதியானது.

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாதம் வேறு

இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன ? இஸ்லாமியனை வெறுப்பது. அவன் இஸ்லாமியன் என்ற காரணத்திற்காக வெறுப்பது. அவன் மதவெறியன், மதத்திற்காக குண்டு வைப்பான், பயங்கரவாதம் செய்வான், மற்ற மதங்களை மதிக்க மாட்டான். தீவிரவாதம் என்றாலே அது முஸ்லிம்கள்தான். இதுமாதிரியான கருத்துக்களை ஒருவர் கொண்டிருந்தாலே அவர் இஸ்லாமோஃபோபியா கருத்துக்குப் பலியானவர் என்று பொருள்.


ஒரு சூழ்நிலையில் இஸ்லாமியன் செய்யும் செயலுக்கு அவர் மதத்தையோ சமூகம் மொத்தத்தையுமே குற்றம் சாட்டி விடும் மனப்பான்மையே இஸ்லாமோஃபோபியா. ஆனால் அதே செயலை மற்ற மதத்தவனோ, சமூகத்தவனோ செய்தால் அதை அவன் மதத்துடன் தொடர்புபடுத்தாமல் அவனைத் தனியான ஒரு குற்றவாளியாக சித்தரித்துக் கொள்வார்கள் இஸ்லாமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள். உலகம் முழுவதிலும் இந்த மனநோய் ஊடகங்களால் பரப்பப்பட்டது. இன்றும் வேறு வகையில் பரப்பப்படுகிறது. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் என்ற இல்லாத இயக்கம் தொடர்ந்து பத்து வருடங்களாக செய்திகளில் அடிபடுகிறது. அதை ஒட்டி முஸ்லிம்கள் மீது மறைமுகமான உளவியல் போர் நடைபெறுகிறது. இதுவே இஸ்லாமோஃபோபியா தீவிரவாதி என்றாலே முஸ்லிம் என்ற மனநிலைக்கு ஏறக்குறையமுஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருமே ஆட்பட்டுள்ளனர். இது முற்றிலும் தவறானது.  

இஸ்லாமோஃபோபியா மனநிலையை எதிர்த்து, இஸ்லாமியருக்கு எதிரான ஃபாசிசத்தை, வெறுப்பு மனநிலையை எதிர்த்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் போராடுகிறார்கள் தங்களால் இயன்ற வழிகளில் இஸ்லாமியருக்கு ஆதரவளிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்கள் இவர்கள் மீதான வன்மத்தை வளர்த்தே வெறுப்பை விதைத்தே ஒரு கட்சி இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் நடுவணரசிலும் தனது வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இஸ்லாமிய வெறுப்பாக இருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு, அபகரிப்பு, சிறு பெரும் கலவரங்கள், தனிநபர் படுகொலை தொடங்கி இனப்படுகொலை வரை இஸ்லாமிய சமூகம் சீரழவுக்கு ஆளாக்கியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமியர்களால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்குப் பிரச்சனை என்ற ரீதியில் அது மக்களை மதவெறியூட்டி வருகிறது. இந்த நிலையில்தான் அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மை எதிரியாக அந்தக் கட்சி இருக்கிறது. நம்மைப் போன்ற மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள், பிற்போக்கு மதவாத ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இது போன்ற சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விதைக்கும் கருத்துக்களையும், அரசியலையும், ஊடகங்களையும் எதிர்க்கின்றனர். கண்டிக்கின்றனர். சிறுபான்மையினரை அரவணைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கு ஜனநாயக முற்போக்குவாதிகளின் முழு ஆதரவு இருக்கிறது. 

பொதுவாகவே ஜனநாயகவாதிகள் என்றாலே இறைமறுப்புச் சித்தாந்தவாதிகளே இருப்பர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் மிகப்பெரும் இரு கட்சிகள், சிறு சிறு அமைப்புகள் யாவும் இறைமறுப்பு இயக்கத்தின்(திராவிடர் கழகம்) வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனநாயகவாதிகள் யாரும் இஸ்லாமியரின் மதவாதத்தை எதிர்ப்பவர்கள் இல்லை. ஒரு படி மேலே போய் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இந்து மதத்தின் பண்டிகைகளை ஏற்காமல் வாழ்த்து சொல்லாமல் எதிர்த்துப் பேசுகின்றவராக இருக்கின்றனர். இந்த வகையில் இந்த வகையிலும் பெரும்பான்மை சமூக்த்தின் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கின்றனர் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள். 

இஸ்லாமியரைக் குறிப்பிடும்போதே இஸ்லாமியத் தோழர்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதே நேரம் வேற்று சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் சக முற்போக்குவாதியக் கூட அப்படி விளிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். சில நேரம் சகோதரர்கள் என்றும் அழைப்பார்கள். அவ்வப்போது இவர்களின் பேசுவதும் முஸ்லிம்கள் கூடிய பொதுக்கூட்டத்தில்தான். பிரியாணி விருந்திலும் நோன்புக் கஞ்சி விருந்திலும் கலந்து கொண்டு பெரும்பான்மையினரின் கிண்டலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவார்கள். 

இப்படி இருக்கிறது முற்போக்குவாதிகள் முஸ்லிம்கள் இடையேயான உறவு. இந்த முற்போக்குவாதிகளில் அதிகமானோர் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்ததில்லை. காரணம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தால் எதிரிக்கு வேலை எளிதாகிவிடும். அதாவது இஸ்லாமிய மதவாத்தை விமர்சனம் செய்தால் அது இஸ்லாமோஃபோபியா ஆகிவிடும். எனவே பெரும்பான்மை இந்து மதவாதத்தை எதிர்ப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் வழி. இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகளின் அடையாளம். இந்த அளவீடுகளின் அடிப்படையில்தான் பெரியாரிய இயக்கங்கள் இயங்குகின்றனர். இந்த வகை இயக்கமான திராவிட விடுதலை கழக்த்தைச் சேர்ந்தவர்தான் படுகொலை செய்யப்பட்ட ஃபரூக். இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு இஸ்லாமிய மதவாதத்தின் நன்றி உணர்வு !

இந்த இஸ்லாமோஃபோபியாவை தனக்கு லாவகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மதவாதிகள். மதப்பரப்புரை செய்பவர்கள். இந்த அடிப்படைவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற சொற்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் அதைக் குறிப்பிடுகிறவர்கள் சொல்லவரும் பொருளுக்கு மாற்றாக ஒரு பொருளைச் சொல்கின்றனர். மத அடிப்படை வாதம் என்றால் நாங்கள் இஸ்லாமின்படி நடக்கிறோம், இஸ்லாம் காட்டிய நேர் வழியில் செல்கிறோம், ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமின் தவறாகாது, அது மாதிரி இஸ்லாம் சொல்லவில்லை இப்படித்தான் எங்களை நடக்கச் சொல்கிறது இஸ்லாம். நீங்கள் இஸ்லாமை அவதூறு செய்கிறீர்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமாகாது, இந்தத் தவறு செய்தவர் இஸ்லாமை சரியாக விளங்க வில்லை. அந்தக் குற்றவாளி முஸ்லிம் பெயர்தாங்கி. இஸ்லாமியமதவாதமே இல்லை மார்க்கம்தான் உள்ளது... இப்படிச் சொல்கிறார்கள். இந்த பதில்கள் அனைத்தும் இஸ்லாமோஃபோபியா மனநோயாளிகளுக்கானவை. இஸ்லாமோஃபோபியாவை எதிர்ப்பவர்களிடம் இந்த பதில்கள் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சொல்கின்றவற்றை ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதம் என்று சொன்னால் எல்லா முஸ்லிம்களையும் குறிக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

முற்போக்குவாதிகள் விமர்சனம் செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது மதவெறி என்ற கருத்தாக்கத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாமியர் சொல்லும் பதில் அவர்களுக்குப்புரியவில்லை. எனவேதான் இந்தத் தேவையில்லாத சச்சரவு.

மத அடிப்படைவாதம் என்பதை இஸ்லாமிய மதவாதிகள் கற்பித்திருக்கும் பொருளில் எடுத்துக்கொள்வதால்தான் இந்த கருத்துவேறுபாடு வருகிறது. தலைவன் என்ற சொல் தற்போது என்ன பொருள் தருகிறது ? ஒரு இயக்கத்தின் தலைவர், மதத் தலைவர், கட்சியின் தலைவர், அணியின் தலைவர் என்றெல்லாம் இருக்கின்றது இல்லையா ? அதே தலைவன் என்ற பொருள் சங்க இலக்கியத்தில் என்ன பொருள் தருகிறது. கணவன் அல்லது காதலன் இல்லையா ? இது இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வேறு பொருளைத் தருகின்றதைப் போலத்தான் மத அடிப்படைவாதம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மத அடிப்படைவாதி என்றால் மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து அதன்படி நடப்பவன் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் ? மத உணர்வை முன்னிறுத்தி செயலாற்றுகிறவன். மதத்தை முன்னிறுத்தி செயல் புரிகின்றவர். மதத்தைச் சார்ந்த மக்கள், மதநலன் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறவர் என்றே புரிந்து கொள்ளவேண்டும். இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்தனர் என்பதில் இந்து மதத்தில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்று புனித வாசகத்தைப் புரிந்து கொண்டுதான் இடித்தார்கள் என்றாகுமா ? இந்து மதவெறியர்கள் குஜராத் படுகொலையை நடத்தினர் என்றால் இந்துக்கள் அனைவரும் மதவெறியர்கள் என்றாகுமா ? இந்துமத அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை வெறுத்து ஒதுக்குகின்றனர் என்றால் அது எல்லா இந்துக்களையும் குறிக்குமா ? இவையெல்லாம் கிடக்கின்றன விடுங்கள்.


இஸ்லாமியர்கள் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர் பேசும்போது என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்து பயங்கரவாதிகள், காவி பயங்கரவாதிகள், இந்துத்துவவாதிகள் இன்னும் பிற இவையெல்லாம் எல்லா இந்துக்களையும் குறிக்கின்றனவா ? இல்லையென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவெறி என்பது எல்லா முஸ்லிம்களையும் குறிக்காது.

பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று எந்த இந்து வேதத்திலும் சொல்லப்படவில்லை. குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் இல்லை. மாட்டைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் என்று எந்த நூலும் குறிப்பிட வில்லை. அதற்காக மேற்ச்சொன்ன நிகழ்வுகளெல்லாம் இந்து மதவெறி இல்லை, இந்து மதவெறியால் நிகழவில்லை. இந்து அடிப்படைவாதத்தால் நிகழவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா இஸ்லாமியர்கள் ?. அதைச் செய்தவர்களெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்கள் நாம் இந்துக்கள் என்ற உணர்விலிருந்துதானே செய்தார்கள். அப்படித்தானே ஃபரூக் ஒரு இறை மறுப்பாளன் நான் நம்பிக்கையாளன் என்ற நிலையிலிருந்துதானே கொலை செய்தார்கள். மத நூலில் குறிப்பிட்டிருந்தால்தான் அது மத அடிப்படை வாதம் என்று சொன்னால் நீங்கள் உலகின் குற்றத்தில் பாதிசெயல்கள் மாற்று மத "பெயர் தாங்கிகளால்" செய்யப்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டி வரும்

ப்ரோட்டோகால்ஸ் - என்ற யூத மேலாதிக்கத் திட்டத்தை அறிவிக்கும் நூல் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஒரு முஸ்லிம் அவர் பெயர் ஆருர் சலீம். அந்நூலின் தலைப்பு "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" இங்கே யூத பயங்கரவாதிகள் என்பது அனைத்து யூதர்களையும் குறிப்பதில்லை என்றும் அவரே அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன புரிகிறது.

 மேலும்

முஸ்லிம்கள் கூறுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கும்போது,

ரோகிங்கியா முஸ்லிம்களை விரட்டும் பர்மாவின் பௌத்த வெறியர்கள்
ஈழ முஸ்லிம்களைத் தாக்கும் புத்த தேரவாதிகள்
இந்திய முஸ்லிம்களைத் தாக்கும் காவி பயங்கரவாதிகள்
ஈராக்கைத்தாக்கும், ஆப்கானைத்தாக்கும் அமெரிக்க மேற்கத்திய பயங்கரவாதிகள்
பாலஸ்தீனத்தைத் தாக்கும் யூதபயங்கரவாத இஸ்ரேல்
வீகர் அல்லது உய்குர் முஸ்லிம்களைத் தாக்கும் ஹாங் சீனப்பேரினவாதம்

இவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினரைச் சார்ந்த எல்லா மக்களையும் குறிக்காதுதானே. அது போலத்தான் இந்த இஸ்லாமியமதவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களும் கையாளப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் முற்றும் அறிந்த ஒரு மார்க்க அறிஞராகட்டும், புதிதாக இஸ்லாமைத் தழுவிய ஒருவராகட்டும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற "மத உணர்விலிருந்து" செய்யும் செயல் இஸ்லாமிய அடிப்படைவாதமே. இறைமறுப்பாளனான ஃபரூக்கைக் கொன்றதன் காரணம், கொலைகாரர்களின் தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்விலிருந்தே வந்தது. அதற்காக இஸ்லாம் கொல்லச் சொல்கிறது என்று பொருள் இல்லை. ஃபரூக் இஸ்லாமின் எதிரி நமது எதிரி, தனது நம்பிக்கைக்கு எதிரி என்றெல்லாம் எண்ணித்தான் அந்தக் கொலைகாரர்கள் அவரைக் கொன்றிருக்கிறார்கள்.


 அதற்குக் காரணம் மதவெறிதான். அவர்கள் மதவெறியர்கள்தான். மதத்திற்காகச் செய்ததால் இது மத அடிப்படைவாதக் கொலைதான்.  மத அடிப்படைவாதம் தவறுதான். இதை வைத்து மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இது மொத்த சமூகத்தைக் குறிக்கிறது என்று திசைதிருப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி முஸ்லிம், தனிப்பட்ட காரணங்களுக்காக செய்த தவறை வைத்து எல்லா இஸ்லாமியர்களைக் குறிக்கும்படி செயல்படுவது பேசுவது அரசியல் செய்வது இஸ்லாமோஃபோபியா மனநிலை என்றால், மதவெறியர்கள் மத அடிப்படையில் செய்த தவறை விமர்சனம் செய்யும்போது அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறிக்கிறது என்று மொத்த முஸ்லிம்களையும் இழுத்து வருவது திசை திருப்புவது இஸ்லாமிய மதவாதம். எனவே வெறும் நம்பிக்கைக்காக இஸ்லாமியர்களாக வாழ்கிறவர்கள் நாங்களும் மத அடிப்படைவாதிகளே என்று நம்பவேண்டாம், நீங்களாக வந்து பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நட்டம் உங்களுக்குத்தான்.

இஸ்லாமிய மதவாதிகள் நாத்திகர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் ? ஏனென்றால் இறைமறுப்பாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள். இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள். இஸ்லாமியர்களின் துணையாக இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய மதத்தை விமர்சனமே செய்ய மாட்டார்கள். இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துப்படி ஒரு மாற்று மத இறைமறுப்பாளன் என்பவன் இஸ்லாமிற்கு ஒரு படி முன்னோக்கி இருக்கிறான். அதாவது அவன் இஸ்லாத்தை நோக்கி இருக்கிறான். அவன் தன்னுடைய சொந்த மதத்தை தூக்கியெறிந்து விட்டான், அந்த மதம் சொல்லும் கடவுளை கருத்துக்களை உதறி விட்டான் என்றால் அவனை இஸ்லாமியனாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே பிறமத நாத்திகர்கள் மீது அவர்கள் அச்சமோ வெறுப்போ கொள்வதில்லை. பெரியார்தாசனைப் போல பல இறைமறுப்பாளர்களும் இஸ்லாமில் இணையலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவனை இஸ்லாமை விமர்சிப்பவனை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் வெறுப்புடனுமே எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவன் இஸ்லாமை அறிந்து விலகியவனிடம் இஸ்லாமிய மதவாதிகள் பதில் சொல்லமுடியாத கேள்விகள் இருக்கின்றன. இறைவனையே அவன் கேள்விக்குள்ளாக்குகிறான். அவனிடம் இவர்களின் மதம் தோற்று விட்டது. இவர்களின் நம்பிக்கை தோற்று விட்டது. எனவே இவர்கள் தோற்று விட்டார்கள். எனவே அந்த இறைமறுப்பாளனை வெறுக்கிறார்கள். சாதாரண நம்பிக்கையாளர்கள் அவனைச் சகித்துக் கொண்டு தங்களது நம்பிக்கைகளுடன் தொடர்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதிகள், மதவெறியர்கள் அவனைக் கொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் கருத்தால் வெல்ல முடியாது. அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கொலை செய்து சமூகத்திடம் ஒரு அச்சம் உண்டாக்கினால்தான் மற்றவர்கள் அவ்வழியில் செல்லாமல் தடுக்க முடியும்.

இது போன்ற மதவெறிக் கொலைகளைத் தடுக்க ஜனநாயக நாடுகள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இருப்பதிலேயே சிறுபான்மையினரான இறைமறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்காகவும், கொள்கைக்காகவும் தனிமனிதனாலோ மதவெறி இயக்கத்தினாலோ படுகொலை செய்யப்பட்டால் கொலைவெறி கொண்ட கொடுங்கோலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும். 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. மிக மிகக் கொடுமையான நிகழ்வு. தங்கள் கட்டுரை மிக மிக அருமை. இறுதிவரிகளை வழிமொழிகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் துளசிதரன்

      நீக்கு
  2. பகுத்தறிவாளர் பரூக் இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யபட்டதை கண்டித்த மிகவும் நல்ல பதிவு.
    இதில் மற்றய மதங்களுக்கும் இஸ்லாமுக்கும் உள்ள வேறுபாடு, துக்கம் விசாரிக்க வந்த இஸ்லாமியப் பெண்கள் பரூக்கின் மனைவியிடம் கேட்ட கேள்விகள். இஸ்லாமியராக இருந்து கொண்டு இறைதூதரை எதிர்பதை நினைத்தும் பார்க்க கூடாது என்று பரூக்கை கொடூரமா கொலை செய்ததின் மூலம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களை பயமுறுத்தியே பயத்தில் உறைய வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகநரி இதன் மூலம் அச்சமூகத்தின் மத்தியில் ஒரு நாத்திகன் உயிர் அச்சமின்றி வாழமுடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் துணிவுடன் இணையத்தில் தமது விமர்சனக்கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். பல இஸ்லாமியர்கள் அதை மௌனமாக வாசித்தும் வருகின்றனர். சமூகத்தில் இறுக்கம், அச்சம் கலையும் வேளையில் பல இறைமறுப்பாளர்கள் உருவாகி இருப்பார்கள். இறைமறுப்பாளர்களின் விமர்சனமன்றி ஒரு மதம் சீர்திருத்தம் பெறாது

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்