நீ என் நிறைவேறாத கனவு


உன் புகைப்படத்தைக் காண்கின்ற போதெல்லாம் 
ரசிக்க முடியாத கவிதை ஒன்றை எழுதி வைக்கிறேன்
ஓவியமாக உன்னை தீட்ட முனைந்து தோல்வியுறுகிறேன்
உன்னுடன் இருந்த சில விநாடிகளை பலமுறை நினைத்து
மீண்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்கிறேன்
அந்த தருணங்களின் இனிமையில் மூழ்குகிறேன்
உன் நினைவூட்டும் அழகிய வெறுமை உணர்வை 

மீண்டும் எதிர்நோக்கியே எனது தனிமையைக் கொண்டாடுகிறேன்
ஒரு முறை அழுது தீர்த்துவிட்டு மறக்கலாம் என்று நினைக்கிறேன்
மறந்து விடலாம் என்று மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும்
மீண்டும் உன்னையே நினைக்கிறேன்
 நீ என் நிறைவேறாத கனவு 
நினைத்து  மட்டும் பார்க்க முடிந்த நினைவு 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 கருத்துகள்:

 1. நினைத்து மட்டும் பார்க்க முடிந்த நினைவு
  ..
  >>
  மணங்களையும், மனங்களையும் சுமந்தப்படியா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ! மணங்கள், எண்ணங்கள், வண்ணங்கள் என அனைத்தையும்
   நன்றி ராஜி !

   நீக்கு
 2. நான் மிகவும் ரசித்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா15/7/13 9:20 பிற்பகல்

  I'm impressed, I have to admit. Rarely do I encounter a blog that's both equally educative and
  engaging, and let me tell you, you've hit the nail on the head. The issue is something too few folks are speaking intelligently about. I am very happy that I came across this in my search for something relating to this.

  Here is my web site background images css Repeat x

  பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்