பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள்

இதை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாலியல் வன்முறையையிலிருந்து தப்ப பெண்களுக்கான யோசனைகள் என்று பகிரப்பட்டு வருகிறது. இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது எனினும் ஒரு சில யோசனைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓரளவுக்கு உதவக்கூடியவையாகத் தெரிந்ததால் இதைப் பகிர நினைத்தேன்.

தனிமையில் செல்ல வேண்டிய நிலை வந்தால் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், முன் யோசனைகளுடனும் இருக்க வேண்டும். 
 

1) நடு இரவில் ஒரு பெண் அடுக்ககக் குடியிருப்பில் (apartment) இருக்கும் மின்னுயர்த்தியில் (lift) தனியாக ஒரு  அந்நிய ஆணுடன் செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

 நீங்கள் 13 வது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால், 1 லிருந்து 13 வரை அத்தனை பட்டன்களையும் அழுத்தி விடவும். இதனால் மின்னுயர்த்தி ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும். நீண்ட தனிமை தவிர்க்கப்படுவதால் நீங்கள் வன்முறையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்.

2) நீங்கள் உங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒருவன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது
?

முதலில் சமையலறைக்கு ஓடுங்கள். மிளகாய்த் தூளும், மஞ்சளும் எங்கிருக்கிறதென்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். கத்தியும் தட்டுக்களும் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் உங்களுக்கு மட்டுமே தெரியும். இவை பெரும் ஆயுதங்களாகப் பயன்படும். எதுவும் இல்லையென்றால் தட்டுக்களையும், இன்னபிற பாத்திரங்களையும், பொருட்களையும் அவன் மீது எறியுங்கள். அவை உடையட்டும். முடிந்தவரை அதிகமாக சத்தம் போட்டு அலறவும். சத்தம் பாலியல் வன்முறையாளனின் மிகப்பெரிய எதிரியாகும். ஏனென்றால் அவன் பிடிபடுவதற்கு விரும்ப மாட்டான். பிடிபடுவதற்குக் காரணமாக இருப்பது அலறலே. அதனால் அவன் அஞ்சுவான்.

3) இரவில் தனியாக ஆட்டோவிலோ டாக்ஸியிலோ போக வேண்டிய நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?


வாகனத்தில் ஏறும் முன்பு அவ்வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ளவும். பின்பு அலைபேசியில் உங்களது நண்பருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ நீங்கள் அக்குறிப்பிட்ட எண் உடைய வாகனத்தில் பயணம் செய்வதைத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அலைபேசியில் இத்தகவலைத் தெரிவிப்பது அந்த வாகன ஓட்டிக்கும் கேட்குமாறு தெளிவாகவே பேசுங்கள். ஒரு வேளை உங்களது அழைப்பை மறுமுனை இருப்பவர் எடுக்காவிட்டாலும், நீங்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசுவது போலவே நடியுங்கள். விவரமாக குறுந்தகவல் அனுப்ப மறக்க வேண்டாம். இதன் மூலம் நீங்கள் பயணிக்கும் வாகனம் பற்றிய தகவல் மற்றவருக்கும் தெரிந்து விட்டதால், ஏதாவது தவறு நடந்தால் தனக்குப் பிரச்சனை வரும் என்று அந்த வாகன ஓட்டுநருக்குப் புரிந்து விடும். எனவே உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த ஓட்டுநருக்கு ஏற்பட்டு விடும். உங்களின் மோசமான எதிரியாக இருக்க வேண்டியவர் உங்கள் பாதுகாவலராக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

4) ஓட்டுநர் வேறு பாதையில் திருப்பி ஓட்டிச் சென்றாலோ அல்லது ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தது போலவோ நீங்கள் உணர்ந்தாலோ என்ன செய்வது ?

உங்கள் கைப்பையின் கைப்பிடியையோ அல்லது துப்பட்டாவைக் கொண்டோ அவன் கழுத்தை இறுக்கியவாறு பின்னால் இழுங்கள். இதனால் அவன் மூச்சுத் திணறி நிலைகுலைவான். இல்லாத பட்சத்தில் சட்டையின் கழுத்துப் பட்டையை இழுக்க வேண்டும்.

5) இரவில் யாரோ பின்தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

அருகிலிருக்கும் கடைகளிலோ அல்லது வீட்டிலோ சென்று உங்கள் இக்கட்டான நிலையைச் சொல்லுங்கள். இரவில் கடைகள் எதுவும் திறந்திருக்காவிடில், ஏடிஎம் இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள் அங்கே கட்டாயமாக பாதுகாவலர் இருப்பார். அவர்களும் ஏடிஎம் இலிருக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவே உங்களை மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவார்கள்.

நன்றி: ஃபேஸ்புக்

 1) What should a woman do if she finds herself alone in the company of a strange
male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?

Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press
all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.


2) What to do if a stranger tries to attack you when you are alone in your
house, run into the kitchen.

Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.
And where the knives and plates are. All these can be turned into deadly
weapons. If nothing else, start throwing plates and utensils all over.
Let them break. Scream. Remember that noise is the greatest enemy of a
molester. He does not want to be caught.

3} Taking an Auto or Taxi at Night.

Experts Say: Before getting into an auto at night, note down its registration
number. Then use the mobile to call your family or friend and pass on the
details to them in the language the driver understands .Even if no one
answers your call, pretend you are in a conversation. The driver now knows
someone has his details and he will be in serious trouble if anything goes
wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker
is now your de facto protector!

4}What if the driver turns into a street he is not supposed to - and you
feel you are entering a danger zone?

Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap
around his neck and pull him back. Within seconds, he will feel choked
and helpless. In case you don’t have a purse or stole just pull him back
by his collar. The top button of his shirt would then do the same trick.

5} If you are stalked at night.

Expert Say: enter a shop or a house and explain your predicament.
If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers
always have security guards. They are also monitored by close circuit television.
Fearing identification, no one will dare attack you.

After all, being mentally alert is the greatest weapon you can ever have.

Please spread it to all those women u care & spread awareness as dis is d least we can do for a social & moral cause and fr d safety of women.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

 1. பெயரில்லா28/4/13 2:09 முற்பகல்

  மிக அருமையான யோசனை, கூடவே விசில் ஒன்றை வைத்திருப்பதும் நல்லது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் சரியே. விசில் என்பது பெண்களுக்கான தற்காப்பு என்ற விழிப்புணர்வு பரவலாக்கபட்ட பின்பு அது பயன்படும். நன்றி !

   நீக்கு
 2. பெண்களுக்கு பயனுள்ள தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 3. இன்று உங்கள் தளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தலைப்புகளை படிக்க நேரம் கிடைத்தது. ஆச்சரியமாக அதிசயமாகவும் இருக்கின்றது. ஆதாரங்களும் ஆர்ப்பாட்டமின்றி அநேக தெளிவான கட்டுரைகளை படைக்கும் உங்களை நினைக்கும் போது பெருமையாகவும் உள்ளது.

  இதே பாணியில் தொடர என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோதி நான் ஆச்சரியப்படும் வகையில் எழுதும் நீங்கள் என்னை பாராட்டியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு வலைஞனாக இது எனக்குப் பெருமையே. நன்றி !!

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்