வெளியே வந்த பூனை - நாம் தமிழர் கட்சியினரின் அடுத்த இலக்கு கீற்று


 தமிழர்களின் முதன்மை எதிரியான திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சிக்காரர்கள், அந்தக் கருத்துப்புரட்சியின் முதல் இலக்காகக் கீற்று இணையத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அது கீற்று இணையத்தின் தற்போதைய முகப்பின் "screen shot" ஆகும். அதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக பெரியாரியவாதிகளால் வெளியிடப்பட்ட எதிர்ப்புக்கட்டுரைகளாகும். இதை வைத்து தமிழர்க்கு எதிரான திராவிடத்திற்கு கடை விரிக்கிறது கீற்று தளம் என்று சொல்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் வலுவாக இருக்கக் கண்டு அதற்கு பதில் சொல்லாமல் அவதூறு மழையைப் பொழியத் தொடங்கியுள்ளனர்.

கீற்று இணையத்தைப் பற்றி எல்லோர்க்கும் தெரிந்ததுதான். இவர்கள் ரமேசை தெலுங்கர் என்று வசை பாடுகிறார்கள். இதற்குமுன் இவர்கள் கீற்றுவைப் பார்த்ததே இல்லையா என்று தெரியவில்லை. கீற்றுவைப் போல மாற்று அரசியல் கருத்துக்கள் புழங்கிய இணையம் வேறு உண்டா எனத் தெரியவில்லை. மார்க்சிய வாதிகள், பெரியாரியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், தலித்தியம், இசுலாமியர் எனப் பலவையினரும் தமது கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். அங்கு அதிகமாக வெளியானதே தமிழ் சார்ந்த, தமிழீழம், மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்டுரைகள்தான். கீற்று ரமேசே விடுதலை புலிகளின் ஆதரவாளர்தான், இதனால்தான் தமிழ்தேசியவாதிகள் எழுதிய பல அபத்தமான கட்டுரைகள்,  விடுதலைப் புலிகளை மிகைப்படுத்திப் பேசும் கட்டுரைகள் போன்றவைதான் அங்கே அதிகமாக உலவுகின்றன.

போதாக்குறைக்கு தமிழ்த்தேசியவாதிகள் புகழும் யூத இன எழுச்சி என்ற பெயரில் இசுரேல் ஆதரவுக் கட்டுரைகள் கூட சில அதில் உண்டு. இதைத் தமிழ் இன உணர்வின் பெயரால் கீற்று வெளியிட்டிருந்தது. இதெல்லாமே ஏற்றுக் கொள்ளமுடியாதைவையாகும். என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இசுரேலை ஆதரிக்கவெல்லாம் நடுநிலையாளர்களால் முடியாது. ஈழ ஆதரவாளார்களினால் ஈழத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக  யூதர்களைப் புகழ்ந்து அவர்களைப் போல ஈழத்தமிழரும் எழுச்சி பெறல் வேண்டும் என்ற நோக்கில் இசுரேல் என்ற மனிதகுலப் பகைவரான ஒரு நாட்டைப் புகழும் கட்டுரை கூட வெளியிடப்பட்டதாக நினைவு. இதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதில் புலி எதிர்ப்பு என்றும் ஒரு பகுதியும் உள்ளது. ஆனாலும் மற்ற புலி எதிர்ப்பாளர்களின், தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் இணையத்தளங்களில் வெளியிடப்படுவது போன்று கடுமையான விமர்சனங்கள் அதில் இல்லை. நானே ஒரிரு முறை ஐயமுற்றேன் கீற்று இணையத்தில் வெறும் தமிழ்தேசியக் கட்டுரைகளே வெளிவருகின்றன என்று. அதில் சீமானைப் புகழும் கட்டுரைகள் கூட இடம் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அவர் தெலுங்கராகத் தெரியவில்லை. ஈழ ஆதரவு, புலி ஆதரவுக் கட்டுரைகள் கீற்று இணையம் அளவுக்கு வந்திருக்குமா வேறு எங்காவது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

சீமானும் ஜெயாவுக்கு ஆதரவாக மாறியதிலிருந்து சீமானையோ நாம் தமிழர் கட்சியையோ குறிப்பிட்டு விமர்சித்து பெரிய அளவில் கட்டுரைகளோ யாரும் கீற்றுவில் எழுதியிருக்க வில்லை. தற்போது கட்சியின் ஆவணம் வெளியிடப்பட்ட பின்புதான் அதற்கெதிரான எதிர்கட்டுரைகள் வரத் தொடங்கின. முதலில் மணிசெந்தில் மட்டும் ஒரு எதிர்கட்டுரை வெளியிட்டார். அதற்குப் பின்பு சீமானின் தமிழக அரசியல் இதழில் பேட்டி கொடுத்ததை மறுத்தார். நாங்கள் பெரியாருக்கு எதிரி இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியம் பேசி கோவை பெரியார்திக தலைவர் தெலுங்கர் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாண வேளாள ஜாதி ஆதிக்கம் நிரம்பிய ஈழத்துத் தமிழ்த்தேசியவாதிகளை நினைவூட்டுகிறார்கள். வாழ்க தமிழ் தேசியம்.

எதிர்வினைக்கு பதில் சொல்வதற்கு இயலாமல் கீற்று ரமேசை தெலுங்கர் என்றும், ப்ரியாதம்பியை மலையாளி என்றும் வசைபாடுவது கண்டனத்திற்குரியதாகும்.
 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

 1. தமிழ் தேசியவாதிகளில் சில மரபு தேசியவாதிகள் இஸ்ரேலை கூட வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள் அத்தகையவர்களை கண்டித்திருப்பது பாராட்டத்தக்கது.

  நாம் தமிழர் கட்சி ஒரு பாசிச கட்சியாக வளரக்கூடும் அல்லது ஒழிந்துப் போகலாம். ஒழிந்து போனால் மக்களுக்கு நல்லது நமக்கும் வேலை மிச்சம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி அம்பேத். ஆம் அவர்கள் இஸ்ரேலைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள்தான். நாம் தமிழர் பாஸிசமாக வளரவோ, அழிந்தோ போகக்கூடாது, தமது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்