வடகொரியர்களின் கண்ணீர் !!

வடகொரியா என்ற நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது. 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை, ஏழை நாடு, ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலின் காரணமாக அணு ஆயுதத்தை உருவாக்கிக் கொண்டது. பத்து இலட்சம் துருப்புக்களைக் கொண்ட வலுவான ராணுவம் என்பதைத் தவிர்த்து. ஒரு தலைவருக்காக இத்தனை பேர் தரையில் விழுந்தும், கதறியழுததும் இது வரையில் நான் கண்டதில்லை. இது போலியாகத் தயாரிக்கப்பட்ட காட்சிகள் என்றும் சிலர் கூறுகிறார்கள் மக்கள் தரையில் விழுந்து அழுவது மன்னர்கால அடிமைத்தனத்தை நினைவூட்டும் கலாச்சாரம். அவர்களை மிரட்ட எடுத்திருக்கக் கூடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜோ இல் இறந்த செய்தியைக் கேட்ட ஜான் மெக்கெய்ன் இவ்வாறு கூறினார், "கிம் ஜோ இல்லாத உலகம் இனிமேல் நன்றாக இருக்கும். அவர் நரகத்தில் ஒசாமா, கடாபி, ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்திருப்பார்" என்றார். இதன் மூலமே நான் அவர் ஓரளவுக்காவது தமது நாட்டின் மீது அக்கறையுள்ளவராகவே இருந்திருப்பாரென்று நம்பத் தொடங்கினேன். அவர் அமெரிக்காவின் எதிர் என்பதால்தான் சர்வாதிகாரி உலகமே வெறுக்கும் தலைவர், அணுஆயுதத்தைக் கொண்டு உலகையே மிரட்டினார் என்றெல்லாம் மேற்கத்தைய ஊடகங்களால் தூற்றப்பட்டார். இராணுவ ஆட்சி, வெளியுலகத் தொடர்பு துண்டிப்பு, மனித உரிமை மீறல், வறுமை, அணு ஆயுத அபாயம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருன்தனர். இருப்பினும் இத்தனை மக்கள் கதறியழுவதும் ஏங்குவதையும் பார்த்தால் இது வரை இவர் குறித்தும் வடகொரியா குறித்தும் அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கு வெட்கப்பட்டேன்.மேலும் அவரது இறுதி ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் இன்னும் நேர்த்தி என்றாலும் அதை வர்ணிப்பது இவ்விடம் சரிப்படாது. இராணுவத்தினரும் கூட அழுகிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம்தான். சமீபத்தில் பார்த்த நெகிழ்ச்சியான துயரமான காட்சி இதுதான். ஃபிடல் காஸ்ட்ரோ, ஹுகோ சாவேஸ் ஆகியோரும் இறப்பை சந்திக்கப் போகிறார்கள் என்பது எனக்கு இன்னும் துக்கத்தைத் தருகிறது. 

இறுதியாக வட கோரிய ஊடகங்கள் போலியாகத் தயாரித்த காட்சிகள் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் அது குறித்த ஒரு புகைப்படம் 
மேலிருக்கும் புகைப்படத்தில் இடது ஓரமுள்ள 5 பேரையும் இரண்டாவது புகைப்படத்தில் காணவில்லை. கார் நகர்ந்துள்ள தொலைவைக் கொண்டு வடகொரிய செய்திகள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்