உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 3ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கிய கதைதான் இந்த படிப்புகள், அவை தரும் வேலைவாய்ப்புகள் குறித்த விளம்பரங்கள். இது போலத்தான் உயிர்நுட்பவியலும் விளம்பரப்படுத்தப்பட்டது. கொஞ்சம் அதிகமாக மேலே போய் தகவல்தொழில்நுட்பத்துறைக்கு அடுத்த அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை என்ற்வாறு செய்திகள் நிரம்பி வழிந்தன. பல்மருத்துவர், பலகாரக்கடைக்காரர் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் "நல்ல கோர்ஸ் எடுத்திருக்கீங்க தம்பி" என்று கூறியதிலிருந்தே எந்தளவிற்கு இது போய்ச்சேர்ந்திருந்தது என்பதையும் கண்டேன். ஆனால் படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் தேறாது என்பதைக் கண்டுகொண்டோம். 

நான் இரண்டாமாண்டு படித்தபோது, முதுகலைப்பட்டம் முடித்து பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த senior ஒருவர் "75% வச்சிருக்கேன். வேல ஒண்ணுமே இல்லடா. தயவு செஞ்சு வேற எதாவது படிச்சுத் தொலைங்க" என்று புலம்பிச் சென்றுவிட்டார். போதாக்குறைக்குக் கல்வி ஆலோசகரான ஒருவர் வந்து எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை அளிக்கும் உயர்கல்வி குறித்த ஆலோசனை வகுப்பொன்றை நடத்தி, உயிர்நுட்பவியல் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது, எனவே வேறுபடிப்புகளைத் தேர்வு செய்யுங்கள் என்று குண்டைப் போட்டுவிட்டுச் சென்று விட்டார். இளங்கலையில் life science  படித்த் சிலர் MBA - வை தேர்ந்தெடுத்துத் தப்பிவிட்டார்கள்.

அடுத்த கூத்து, இள்நிலை (BSc) தாவரவியல் (Botany) பிரிவில் படிப்பதற்கு அதிகம் பேர் சமீபகாலங்களில் ஆர்வம் காட்டாததினால், சென்னை மாநிலக்கல்லூரியிலும், கிறித்தவக் கல்லூரியிலும் சில பாடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்துவிட்டு தாவர உயிரியியல் மற்றும் தாவர உயிரிநுட்பவியல் (Plant Biology & Plant Biotechnology)  என்று மாற்றி வைத்துவிட்டார்கள். 

பொதுவாக life science  பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை கல்லூரிக்காலங்களில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்ற ஆவல் இருக்கும். பின்பு முதுகலைப் பட்டம் முடிப்பதற்குள் அது போய்விடும். காரணம் PHD மாணவர்களின் அனுபவங்களைக் கண்டும் கேட்டும் பயந்து விடுவார்கள். ஏதாவது பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டப் படிப்பில் இடம் கிடைத்தால் அது எதிர்காலத்தில் ஆராய்ச்சி, அல்லது வேலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம். அதுவும் ஒருவிதமான உண்மையற்ற கருத்துதான் என்று பின்னாட்களில் நண்பர்களின் அனுபவத்தினால் சொல்லக்கேட்டேன். 


நம் நாட்டில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்றால் ஒரு அனுபவம் வாய்ந்த பேராசிரியர் நமக்கு வழிகாட்டியாக (guide) இருக்க வேண்டும். அவர் பல்கலைக்கழகத்திலோ அல்லது அரசு, தனியார் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தால் நன்று. அவருக்குக் கீழேயே நமது ஆராய்ச்சியைத் தொடங்கலாம். இது போன்ற நிறுவங்களில்தான் JRF ( Junior Research Fellow ), SRF(Senior Research Fellow) மற்றும்  PHD  மாணவர்களுக்கான் உதவித்தொகையும் கிடைக்கும். வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைத் தொடர்வது போல. இது போன்ற வாய்ப்புகள் குறைந்தபட்ச்மாக் நாம் பல்கலைக்கழகத்தில் முத்கலைப்பட்டப் படிப்பில் இடம் பெற்று அதிலேயே முடித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்களில் தேர்ச்சி பெற வேண்டும். 


உயிர்நுட்பவியல் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்தது டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வாகும். இந்தியா முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதை எழுதுவார்கள். வெவ்வேறு மாநிலங்களிலுள்ள பல்வேறு பல்கலைக்கழக்ங்களில் சில் இடங்கள் மட்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் இந்தியா முழுக்க முப்பது இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு இந்திய அளவில் பல்லாயிரம் பேர்கள் எழுதுவார்கள். அத்ற்கு ரூ. 1000 வரை செலவாகும்

அடுத்ததாக் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுகள் இரு பிரிவாக நடக்கும். பல்கலைக்கழக்த்தின் சார்பாகவும், மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் என இருவேறு தேர்வுகள் நடக்கும். இரண்டிலும் 20 இடங்கள் மட்டுமே. இதற்கும் ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையில் எழுதுவார்கள். அறிவியல் பிரிவில் இத்தனை பேர் போட்டியிடும் படிப்பு உயிர்நுட்பவியல் மட்டுமே ! அடுத்ததாக பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி  அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்ற வரிசையில் நுழைவுத்தேர்வுகளில் போட்டி இருக்கும். இவைகளில் பெரிய மனிதர்களின் பரிந்துரைகளின் மூலம் இடங்களைப் பிடித்து விடுவார்கள், வெறும் கண்துடைப்பிற்காக நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறார்கள் என்ற செவிவழிச்செய்தியும் உண்டு. 

இதற்கு மேலும் இதையெல்லாம் தாண்டி இதில் இடம் கிடைக்க 80 - 85 % அளவிலான மதிப்பெண் சராசரியாக இருக்க வேண்டும். துறைசம்பந்தமான நுட்பமான அறிவும் கொண்டிருக்க வேண்டும். நுழைவுத்தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற வேண்டும். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்