தஸ்லிமா நஸ்ரின் விரட்டியடிப்பு, அப்ப ஜனநாயகம் ? அதுவும்தான் !

கடந்த மாதம் வியாழக்கிழமை வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா அஜந்தா, எல்லோரா பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்தார். அதை அறிந்த ஆல் இன்டியா மஜ்லிஸ் - இ - இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சார்ந்த சயித் இம்தியாஸ் அலி என்ற முன்னாள் என்டிடிவி இன் நிருபர்/சட்டப் பேரவை உறுப்பினர் தலைமையில் ஔரங்காபாத் விமான நிலையத்தின் வெளியே நின்று ஏறக்குறை 500 பேர்களுடன் வந்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவர் விமான நிலையத்திலேயே இருந்து அடுத்த விமானத்தில் மும்பை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இதைப் பற்றி வருந்திய தஸ்லிமா ஒரு பெரும் ஜனநாயக நாட்டில் இங்கனம் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். 

அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலும் அவர் தனது கருத்து காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் எங்கும் தனித்துச் செல்ல இயலாது. பாதுகாவலர்களுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் தம் மகிழ்ச்சிக்காக எங்கும் தனித்துச் செல்ல முடியாத துயரநிலையாகக் கருதுகிறார். 

நான் பல வருடங்களாக கனவும் கண்டேன் அது பலிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். அஜந்தாவின் சிறப்புகளையும், எல்லோராவின் மாயாஜாலங்களையும் பார்க்கபோகிறேன் என்று நினைத்தேன். நான் இந்தியா கொண்டிருக்கின்ற பல வரலாற்று அற்புதங்களை கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றைக் காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் என் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இழந்திருக்கிறேன். இங்கே இந்தியாவில் ஆயுதமேந்திய பாதுகாவலர்களைக் கொண்டிருக்கிறேன். தனிச்சிறப்பான அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 2007 இல் என் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இது தொடர்கதையானது. நான் நிகழ்ச்சிகளில் எங்காவது கலந்து கொள்ளப் போகிறேன் என்றால் அது செய்தியாகிவிடும். விளம்பரமாகி விடும். நான் தாக்குதல் அச்சமின்றி கலந்து கொண்டிருப்பேன். ஆனால் தாக்குதல் முதன் முறை நடந்த பின்னர் அது தொடர்கிறது. ஒரு தொற்று நோயைப் போலப் பரவி விட்டது. நான் எனது மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்ய முடிவதில்லை. விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. என்னுடைய பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டியிருக்கிறது. எங்கே, எதற்கு, எப்போது என்றெல்லாம்.  பின்பு அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வர். 

நான் அஜந்தா செல்வதை யாருக்கும் அறிவிக்க வில்லை. விமானப் பயணம் தொடர்பாக நான் கொடுக்க வேண்டிய அனைத்து உண்மையான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் அதை மகாராஷ்ட்ராவிற்கு அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி எனது பாதுகாப்பை உறுத் செய்தனர். நான் மகாராஷ்ட்ராவில் பாதுகாவலர்களைப் பெற்று விட்டேன். தங்குவதற்கு விடுதியிலும் பதிந்து விட்டேன் என்னுடன் வருபவரது பெயரில். துணையாக எனது பெயரை சேர்த்துக் கொண்டேன். என்னுடன் துணையாக வந்த இளம்பெண் எனது மகள் போன்றவர். ஜூலை 29 ஆம் நாள் நான் டெல்லியிலிருந்து ஔரங்காபாத் சென்றேன். அங்கே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதே ஒரு அதிகாரி என்னைத் தடுத்தார். 

"இங்கே நிலைமை சரியில்லை. உங்களுக்கு எதிராக 500 பேர் நீங்கள் தங்கப் போகிற விடுதியின் முன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய வரவு மிகவும் இரகசியமாக டெல்லி காவல்துறையால் மராட்டிய காவல்துறைக்கு அனுப்பப்பட்ட செய்தி கடும்போக்குவாதிகளுக்கு எப்படித் தெரிந்தது ?. அந்த அதிகாரிக்கும் எப்படி இந்த செய்தி கசிந்தது என்று தெரியவில்லை. தாங்க முடியாத வேதனையுடனும், உதவியற்றவளாகவும் உணர்ந்த நான் அவரிடம் நான் 

"இப்போது என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார். 

எப்போது ? எப்படி ? என்றேன். 

நாளை காலையில் டெல்லிக்கு ஒரு ஏர் இன்டியா விமானம் இருக்கிறது.

நாளைக் காலை வரை என்ன செய்வது ? நான் எங்கே தங்குவது ?"

விமான நிலையத்தில்.

பின்பு நான் ஏர் இன்டியா பயணச்சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று மும்பைக்கு இரண்டு சீட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அதற்குள் போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள்ளும் வந்து விட்டார்கள். என்னுடைய பாதுகாப்பு அதிகாரி எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். நான் அங்கிருந்து செல்லும் போது 200 பேர் காது கிழியும் அளவுக்கு "தஸ்லிமா திரும்பிப் போ" "தஸ்லிமா ஒழிக" "இறைவன் மிகப் பெரியவன்" என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். மும்பைக்குச் சென்ற பிறகு எங்காவது கலவரம் நடந்திருக்கிறதா என்று இணையத்தில் பார்த்து விட்டு இல்லையென்று நிம்மதியடைந்தேன். இது அவர் எழுதிய அஜந்தா எல்லோர அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதி. முழுவதும் படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

ஒரு தனி நபர் அதுவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஒடி ஒளிய வேண்டிய நிலையில் இருக்கிறார். இங்கே கருத்துரிமைக்கான பாதுகாப்பு என்பது அந்த அளவில் இருக்கிறது . சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு வட மாநிலங்களில் தலைப்புச் செய்தி அளவுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே பெரிதாக எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. 

இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மதவாதிகள்/மதவெறியர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பவர்கள் மதவாதிகள். ஆனால் இறைமறுப்பாளர்களை மட்டும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். மதத்தை விமர்சிப்பவர்கள், மதவாதத்தை எதிப்பவர்களுக்கு படுகொலையைத்தான் பரிசளிக்கிறார்கள். 


ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதவாதிக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா ? உலகத்தின் எல்லா இஸ்லாமல்லாத நாடுகளுக்கும் செல்கிறார். அங்கே யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. அதே போல் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் இஸ்லாமல்லாத ஜனநாயக நாட்டில் கூட சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியவில்லை. நிம்மதியாக நடமாட முடிவதில்லை.

இஸ்லாமிய மதவாதிகள், விவாதத்துக்கு வா நேரடி விவாதத்துக்கு வா என்று அழைக்கிறார்கள். அதே விவாதத்தை இணையத்தில் நடத்துவது வீண் என்கிறார்கள். இணைய விவாதம் வீண் என்று சொல்கிறவர்கள் இணையத்திலிருந்து வெளியேறி களத்தில் மட்டும் இயங்குவதில்லை, தொடர்ந்து இணையத்திலேயேயும் இயங்குகிறார்கள், ஏன்?. இஸ்லாமிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே இல்லை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை இஸ்லாமிய எதிரிகள் என்று வகைப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானவராக அவரை நிறுத்தி விடுகிறார்கள். கருத்தை விமர்சனம் செய்ய முடியாத பட்சத்தில் அவர் எதிரி ஆக்கப்படுகிறார்.

ஏன் இஸ்லாமை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஏன் எங்கள் மீது வன்மம் என்றும் கூட நினைக்கக்கூடும். இஸ்லாமியர்கள் தாங்கள் உண்டு தங்கள் மதம் உண்டு என்று வாழ்வதில்லை, அதைப் பரப்புரை செய்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வெறும் மார்க்கமாக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி அறிவியல் ரீதியாக விவாதிக்கும் துணிச்சல் தங்கள் மதத்தில் இருப்பதாகக் கருதினால் எல்லாவகை எதிர்க்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய போராட்டங்களால் அல்ல. வன்முறைகளால் அல்ல. ஆனால் என்ன செய்கிறார்கள் ? எங்கே அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அங்கே விமர்சனம் செய்பவரை அவதூறு செய்கிறார், வெறுக்கிறார், விதண்டாவாதம் செய்கிறார், இஸ்லாமிய எதிரி, துரோகி என்கின்றனர். மற்றவர் மீதான வெறுப்பை விதைக்காத வரை விமர்சனம் என்பது எந்த ஒரு எல்லையும் அற்றது. 

இவர்கள் மதத்தை மட்டும் பரப்புரை செய்வதில்லை, அது சார்ந்த சட்டத்தையும் (ஷரியத்) உலகத்திற்கே பொதுவானதாகக் காட்டுகின்றனர். படைப்புக் கொள்கையை மறுக்கும் பரிணாமக் கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இப்படி அறிவியல் அறிஞர்கள் போல் விவாதம் செய்பவர்கள், அதே போல் இஸ்லாமை அறிவியல் பூர்வமாக வரலாற்றுத் தரவுகளுடன் விமர்சனம் செய்பவர்களுடன் எதிர் விவாதம் செய்யும் போது அதை எப்படி எதிர்கொள்கின்றனர். அவரை இஸ்லாமிய சமூகத்தின் எதிரியாகப் பிரகடனம் செய்து விடுகின்றனர். இறை மறுப்பாளர்களின் கருத்துக்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றது, மனதைப் புண்படுத்துகிறது, மத நிந்தனை செய்கிறது என்ற அயோக்கியத்தனமான கருத்துக்களைக் கொண்டு வந்து பாமர மக்களைத் துணைக்கு அழைத்து இறைமறுப்பாளர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியராகப் பிறந்து இறைமறுப்பாளராக மாறியவர்கள், மதவாதத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்த நிலைதான்.

யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்
ரஷ்ய கன்னிகாஸ்த்ரி இஸ்லாத்தைத் தழுவினார்
அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாத்தை ஏற்றார்
பாபர் மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை ஏற்றார்
பெரியாரியவாதி ஏகத்துவத்தை ஏற்றார்
ஐரோப்பாவில் இஸ்லாம் வளர்கிறது
அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது
ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுகிறது
இஸ்லாமை நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் பெண்கள்

என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது ? அந்தக் குறிப்பிட்ட நபர் இஸ்லாமை ஏற்பதை அந்த நாட்டின் அரசோ அல்லது சமூகமோ தடை செய்வதில்லை. யாரும் இஸ்லாத்தைப் பரப்பக்கூடாது என்று போராடவில்லை. பிறகு ஏன் இஸ்லாமிய மதவாதிகள் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு ஜனநாயகம் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் சுதந்திரத்தை இறைமறுப்பாளர்கள் பயன்படுத்தி மதத்தை விமர்சித்தால் அதற்கெதிராக போராடுவார்கள். தமக்கு அதிகாரம் உள்ள நாடுகளில், பகுதிகளில் சட்டத்தின் மூலமாகவே மத எதிர்ப்பைத் தடுத்து வைப்பார்கள். 

மதவாதம் அற்ற நாடுகளில், அதாவது சட்டத்தில் மதம் என்பது தனிமனித உரிமையாக உள்ள நாடுகளில், மதம் என்பது தனி நபர் சார்ந்தது. அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ? இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதச் சட்டம் நடைபெறும் நாடுகளில் எந்தளவுக்கு இறைமறுப்பாளர்களுக்கு இருக்கிறது. நான் கேட்பது இஸ்லாமிலிருந்து விலகி இறைமறுப்பாளராக வாழ்பவர்க்கு. இறைமறுப்பை பரப்புரை செய்பவர்க்கு. இல்லையென்றால் அதற்கு இஸ்லாமைத்தானே விமர்சிக்க வேண்டும் ? 


நான் ஃபேஸ்புக்கில் விவாதமொன்றில் ஒருவரிடம் இந்தக் கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமைப் பரப்புவதைப் போல் இஸ்லாமிய நாடுகளில் வேறு கொள்கையைப் பரப்பு முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இஸ்லாமை அவர்கள் சட்டமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் பிழைக்கபோன இடத்தில் உங்கள் சித்தாந்தத்தைச் சொன்னால் யார் சம்மதிப்பார்கள் என்றார். இஸ்லாமியர்களும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிழைக்கத்தான் சென்றார்கள். படியளக்கச் செல்லவில்லை. அங்கே அவர்கள் தமது சித்தாந்தத்தைப் பரப்பவில்லையா ? நான் கேட்பது மதவாத நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மதத்திலிருந்து விரும்பாமல் வெளிவருகிறவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை ?

இஸ்லாமியப் பரப்புரை எப்படித் தொடங்குகிறது. சிலைகள் யாவும் கடவுளல்ல. இணை வைத்தல் கூடாது. படைப்பினங்களை வணங்கக் கூடாது. இஸ்லாமைத் தவிர அனைத்து மதங்களும் சிலையை வைத்து வணங்குகின்றன. அதைத்தான் முதலில் மறுக்கிறது இஸ்லாம். இஸ்லாம் பரப்புரையே மற்றவர்களின் முதல் நம்பிக்கையான (மாற்று மதங்களின்) "அவர்களின் கடவுள்" உண்மையான கடவுள் இல்லை நாங்கள் சொல்வதுதான் உண்மையான கடவுள். ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் நடுவில் நின்று உங்கள் நம்பிக்கை பொய் நாங்கள் சொல்வதுதான் மெய் என்கிறார்கள். உங்கள் கடவுள் வெறும் சிலை அது கடவுள் இல்லை" என்கிறார்கள். பிழைக்க வந்த நாட்டில் அங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறோம் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் இஸ்லாமிய மதவாதிகள் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள்.  அது எப்படி சாத்தியமாக இருக்கிறது, மிக இயல்பாக இருக்கிறது ? அந்த நாட்டின் ஜனநாயகமும் அதனால் பண்பட்ட அந்நாட்டினரின், அச்சமயத்தவரின் சகிப்புத்தன்மையின் காரணமாகத்தானே. 

அதே நேரம் இவர்களை சுதந்திரமாக மதம் பரப்பச் செய்ய அனுமதிக்கும் ஜனநாயகத்தை, அதைப் பின்பற்றும் மேற்கத்தியப் பண்பாட்டை விமர்சனமும் செய்கிறார்கள். விபச்சாரம், அவிழ்த்துப் போட்டு அலையும் கலாச்சாரம் என்பார்கள். அவிழ்த்துப் போடும் சுதந்திரம் இருப்பதால்தானே அவர்கள் வேறுமதத்தையும் தழுவும் சுதந்திரமும் இருக்கிறது. 

இவர்கள் தமது மதக்கருத்துக்களைத்தான் எல்லா நிகழ்வுகளின் மீதும் கருத்துக்களாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. உணர்வு (இஸ்லாமிய) என்ற வார இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கல்லூரியில் விரிவுளையாளரும், கல்லூரி மாணவியும் திருமணம் செய்திருந்த செய்தியைப் போட்டு அதில் விமர்சனமும் இருந்தது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி கற்பது இதுமாதிரியான செயல்களைத் தூண்டும். எனவே இருபாலருக்கும் தனித்தனியான கல்வி நிலையங்களைக் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று முடித்திருந்தார்கள். இது மாதிரிதான் சமூகத்தில் நிகழும் பலவகையான நிகழ்வுகளில் தமது மதம் சொல்லும் கருத்துக்களைச் சொல்லி அதைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். 

காதல் தவறானது, கலப்புத் திருமணம் தவறானது போன்ற தனி மனித உரிமைகளுக்கு எதிரான மதக் கருத்துக்களை சொல்கிறார்கள்  காதலர் தினம் விபச்சாரம், கற்புக்கொள்ளை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலக் கூடாது என்கிறார்கள். ஆக இவர்கள் இப்படியெல்லாம் விமர்சனம் செய்வது தான் சாராத சமூகத்தையும் சேர்த்துத்தான். இதே போல் இஸ்லாமிய எதிர்ப்பாளர் தரப்பு பர்தாவை விமர்சனம் செய்யும் போது மொத்த சமூகத்தையும் சமூகப்பெண்களையும் வன்மம் கொண்டும் வெறுப்பு கொண்டும்வி மர்சனம் செய்கிறீர்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ?

இதே போல் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவன் நின்று கடவுள் இல்லை, முகமது தூதர் இல்லை என்று சொல்லிவிட்டு தனது விளக்கத்தைத் தொடர முடியுமா ?. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. ஒருவன் மத நிந்தனை செய்துவிட்டான் என்ற புரளியைக் கிளப்பி விட்டாலே போதும். வங்க தேசம், பாகிஸ்தான் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவன் உயிருடன் இருக்க மாட்டான். ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இஸ்லாமிய மதத்துக்கு மட்டும் இந்த சலுகை ?. உங்களை எப்படி புண்படுத்தாமல் விமர்சிக்க முடியும். நாங்கள் அறிவியல் பூர்வமானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று சொல்பவர்கள் ஏன் "மதத்தைப் புண்படுத்தும்" என்ற நேர்மையான விவாதத்திற்கு எதிரான கருத்தைப் பயன்படுத்த வேண்டும் ?

இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை. ஏனென்றால் மதவாதிகளுக்காக தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியதே இடதுசாரிகள் என்றிருக்கையில் அதற்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும். கருத்தை எதிர்கொள்ளும் பொறுமையோ பக்குவமோ மதவாதிகளுக்கு இருந்ததே இல்லை. இங்கே மதச்சார்பின்மை என்பதே போலி மதச்சார்பின்மை என்றும், மதச்சார்பின்மைவியாதிகள் என்றும், சிக்குலரிஸ்டுகள், சூடோ செக்குலரிஸ்டுகள் என்றும் நல்ல பெயர் வாங்கியவர்கள்தான் மதச்சார்பின்மை பேசுகிறவர்கள். அப்படி இருக்க மதவாதிகள் மட்டும் எப்படி இருப்பார்கள். மத உணர்வைத் தூண்டி அரசியல் செய்கிறவர்களாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் இது பெரிய செய்தியாகவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம். தஸ்லிமாதான் மிகவும் வேதனைப்படுகிறார்.

      நன்றி

      நீக்கு
  2. உண்மைகளை தோலுரித்து காட்டியுள்ளீர்கள். மிகவும் அருமையான கட்டுரை.
    //ஆக இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை.//
    ஆம் இஸ்லாமிய மதவெறியர்கள் கொட்டமடித்து கொண்டாடும் நாடாக இந்தியா மாறிவருவது கொடுமையான விஷயம். இஸ்லாமிய மத வெறிக்கு திராவிட பகுத்தறிவாளர்களின் பக்கபலம் வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திராவிடப் பகுத்தறிவுவாதிகள் இஸ்லாமிய மதவாதத்தை எதிர்ப்பதில்லை. இந்துத்துவா இல்லாததையும் கூட இந்துத்துவா என்பார்கள். இதனால்தான் மதவாதமற்ற, ஜாதியற்ற இந்துக்களையும் கூட மதவாதிகளாக மாற்றுகின்றனர். இவர்களுடன் தோழமை கொண்டிருப்பதால் இஸ்லாமிய மக்களையும் சேர்த்து வெறுக்கும் அளவுக்கு இது நடக்கிறது. ஆனால் இஸ்லாம் மதத்தைக் கூட விமர்சிக்க வேண்டாம், இஸ்லாமிய மதவாதத்தைக் கூட விமர்சிக்க மறுக்கிறார்கள். இடதுசாரிகளும்தான். இது கசப்பான உண்மைதான்.

      நீக்கு
  3. //மதம் என்பது தனி நபர் சார்ந்தது அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ?//

    அருமை.உங்க நேர்மையான,நீதியான சிந்தனைகளுக்கு தலை வணங்குகிறேன் தமிழானவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க மீதான பாராட்டு என்பது இந்த பதிவை படித்து தமிழில் மதங்கள் பற்றி, இந்தமதம் பற்றி எழுதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் மனதில் இருந்து உண்மையாகவே வந்ததையே தெரிவித்தேன் நண்பரே.
      திராவிட பகுத்தறிவாளர்களும், பல தமிழ் கம்யூனிஸ்ட்களும் இஸ்லாமிய மதவாத பிரசாகர்களின் பி டீம்மாகவே செயல்படுகிறார்கள்.

      இஸ்லாமிய மதவாதிகளின் அயோக்கியதனங்களை எதிர்த்து ஒரு இஸ்லாமிய மத நம்பிக்கையுள்ள, அதே நேரம் நியாயவாதியான ஒருவரால் தனது கருத்தை சுதந்திரமாக தமிழில் வைக்க முடியுமா? ஆண் இஸ்லாமியர் நிலையே பரிதாபம். பெண் இஸ்லாமியர் நிலை? முகத்தை மட்டுமல்ல வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
    2. நீங்கள் பாராட்டியது எனக்குப் புரிந்தது. நன்றி. நீங்கள் இன்னொன்றையும் தயை கூர்ந்து புரிந்து கொள்ள முயல வேண்டும். ஏன் இஸ்லாமை/இஸ்லாமியரை விமர்சிக்கத் தயங்குகிறார்கள் என்றால் அவர்கள் உலகின் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கூட, தமிழ்நாட்டில் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். போர், வன்முறை, இனப்படுகொலை, கலவரம், தனிநபர் தாக்குதல் இப்படியாகப் பல. இதற்கு அவர்கள் இஸ்லாமியராக இருப்பது காரணம் அல்ல, அரசியலே காரணம். ஒரு பிரிவு இஸ்லாமியர் மீது இன்னொரு பிரிவு இஸ்லாமிய இயக்கமோ, இஸ்லாமிய அரசுகளோ கூட மறைமுகமாக நேர்முகமாக தாக்குதல் நடத்துகின்றன. அவர்கள் மீது உலகளாவிய அளவில் வெறுப்பு + அச்சம் (இஸ்லாமோஃபோபியா) உள்ளது. எனவே இஸ்லாமின் மீதான விமர்சனம் என்பது அவர்கள் மீதான வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தும் என்பதனாலேயே கம்யூனிஸ்ட்டுகள் மாதிரியானவர்கள் தவிர்த்தார்கள். இந்த உண்மை எனக்கும் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக மதவாதத்தை விமர்சனம் செய்யாமல் இருந்தது சரி என்று சொல்ல வரவில்லை.

      இஸ்லாமை/ இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்யாத காரணத்தால் அவர்கள் போலி மதச்சார்பின்மை வாதிகள் என்ற அவப்பெயரையே பெற முடிந்தது. பிறவியிலேயே இந்து மத எதிர்ப்பாளர்களான திராவிடவியலாளர்கள் தமது கொள்கைகளை காலத்திற்கேற்ப புதுப்பிக்காமல் வாக்கு வங்கி அரசியலில் முஸ்லிம், கிறித்தவப் பண்டிகைகளை மேடையிலே கொண்டாடி சாதாரண இந்துக்களை எரிச்சல் படுத்தினர். இப்போது காலம் மாறிவிட்டது. இஸ்லாமிய மதவாதக் கருத்துக்களை இஸ்லாமியர், திராவிட, கம்யூனிஸ்டுகள் உட்பட பல தரப்பினரும் விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டனர். பல இடங்களில் காணமுடியும்

      நீக்கு
    3. சில பல கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் அவர்கள் மாதிரியானவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமாசிக்காக விட்டது மாபெரும் தவறு.கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்பவர்கள் வெட்கபட வேண்டியது.
      அவர்ககள் இஸ்லாமிய மதத்தை விமர்சிக்காம விட்ட தவறுகளின் காரணங்களினாலும் தான் பெரும்பாலான இஸ்லாமியர்கள் மற்றய மதங்களை சேர்ந்தவர்கள் போல் நவீனமடையாம, பழையகால கடும்போக்கு சிந்தனையிலேயே இன்றும் நிற்கின்றனர்.
      இஸ்லாமியர்கள் தங்களது இஸ்லாமிய மதசட்டங்கள் கொண்ட நாடுகளை விட்டு வெளியேறவே விரும்புகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. பிறமத மக்களின் நாட்டிற்கு வந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு இஸ்லாமே உலக மதம் என்றும், குரான் பிரதிகளை அவர்கள் மொழியில் மொழிபெயர்த்து அவர்களுக்கே வழங்குவது, தங்களது அல்லாஹ் உலகத்திற்கான பொது சட்டம் எழுதிவைத்துள்ளார் என்றும் அதை பிற மதத்தினர் பின்பற்ற வேண்டும், மற்றும் பெண்கள் என்பவர்கள் மூடி கொண்டு பர்தாவுடன் இருக்க வேண்டும் இப்படியான செயற்பாடுகள் மூலம் மற்றவர்களின் கேலிக்கும் கடும் வெறப்புக்கும் ஆளாகிறார்கள்.இதற்கெதிராக நீதியான நவீன சித்தனை கொண்ட இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்தால் அவ்வளவே தான். அவர் மத துரோகி.இஸ்லாமிய பெயர் தாங்கி.அவா உயிருக்கு உத்தரவாமில்லை. நீதியான கருத்தை தெரிவித்தவர் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தால் தேவடியாள், கல்லால் அடிச்சு கொல்ல வேண்டும் என்பார்கள்.
      இப்போதெல்லாம் இஸ்லாமிய நாடுகளை விட்டு தப்பியோடிவருபவர்கள் பலர் தங்களது மதம் கிறிஸ்தம் என்றே பதிவு செய்து விடுகின்றனர் எல்லாம் பாதுகாப்பிற்கா தான்.

      நீக்கு
    4. ஆமாம். 20 வருடங்கள் முன்பு வரை நிலை வேறாக இருந்தது. அவர்கள் மிகவும் தாராளமாகத்தான் இருந்தார்கள். மார்க்கத்தை மிகவும் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் பரவி இப்படியாகிவிட்டது.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்