அடடே மதி மீண்டும் அசத்தல்


தினமணியின் கேலிச்சித்திர ஓவியர் அடடே மதி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள முதல் பக்க கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். ஏதோ ஒரு காங்கிரஸ் காரன் பேசுவதைப் போன்று வரைந்துள்ளார். சும்மா எதற்கெடுத்தாலும் இந்துத்துவா இந்துத்துவா என்று கத்துகிறார்களாம். நக்கலடிக்கிறார் அடடே மதி. காங்கிரஸ் காரர்கள் மட்டுமா கத்துகிறார்கள், இடது சாரிகள் வலது சாரிகள் என எல்லா சாரிகளும்தானே கத்துகிறார்கள் புலம்புகிறார்கள். இந்த நக்கலின் மூலம் நடப்பது இந்துத்துவா ஆட்சி இல்லை என்று சமாளிக்கிறாராம்.


இவர் நேற்றைக்கு வரைந்த கேலிச்சித்திரத்தைப் பார்க்கலாம். இது தினமணியின் நடுப்பக்கத்தில் வந்தது. வழக்கமாக முதல் பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்தில்தான் நீண்ட வசனம் இருக்கும். நடுப்பக்கத்தில் படமே ஒரு கருத்துச் சொல்வது போல் இருக்கும். இப்போது நடுப்பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்திலும் ஒரு நீண்ட வசனத்தை புகுத்தியுள்ளார். என்ன செய்ய ? கேலிச்சித்திரத்திலேயே கருத்துச் சொல்லும் அளவிற்கு மதிக்கு மதி நுட்பம் போதவில்லை போலும். தின மாடு என்ற நாளிதழ் வருமளவிற்கு நாடே மாட்டைப் பற்றி விவாதிக்கிறதாம். இந்தப் படத்தில் மட்டும் ஒரு சராசரிக் குடிமகனைப் போல் அலுத்துக் கொள்கிறார். ஏன் உலகத்திலேயே மாட்டிறைச்சி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கு இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று ஏகத்துக்கும் ரகளை செய்து, கொலை செய்து அசிங்கப்பட்டு நிற்கும் RSS பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார். மாட்டுக்கறி விற்கும் பாஜக அரசியல்வாதியாலேயே மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டு நாடே காறித்துப்பிய போதும், இரண்டு பேர் சண்டையை வேடிக்கை பார்க்கும் வழிப்போக்கனாக மாறி அசத்துகிறார்  அடடே மதி. எப்படிப் பேசுவார் அவருக்கு பிடித்த இயக்கத்தைப் பற்றி அவரே எப்படி விமர்சிப்பார் என்கிறீர்களா ? மறைமுகமான மாட்டுக்கறி எதிர்ப்பு, மறைமுகமான மோடி விமர்சன எதிர்ப்பு, மறைமுகமான இந்தித் திணிப்பு ஆதரவு என்று அனைத்தும் பாஜகவிற்கு மறைமுகமான ஆதரவு தரும் தேன்தடவிய விசக் கருத்துக்களையே கட்டுரைகளாக நடுப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது தினமணி.
அடுத்தது அப்துல் கலாம் பற்றிப் பார்ப்போம். அப்துல் கலாம் மறைவின்போது அடடே மதி வெளியிட்ட கருத்து மிகவும் பிரபலமானது.  ஒரு கடையடைப்பு இல்ல, கல்வீச்சு இல்ல, சாலை மறியல் இல்ல அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததை பெருமைப்படுத்திப் போட்டிருந்தார். எப்போதும் இல்லாதவகையில் தினமணியில் ஒரு நாள் அப்துல் கலாம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். அதே போல் அப்துல் கலாமின் பிறந்த நாளின் போதும் ஒரு சிறந்த கருத்து வெளியிட்டார். அதுவும் பெரும்பான்மையினரால் ஏற்குமளவிற்கு இருந்தது. அப்பேர்ப்பட்ட அப்துல் கலாமின் ரசிகரான பக்தரான அடடே மதி அப்துல் கலாமிற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பொங்கியது இவ்வளவுதான். ஆயிரம் இருந்தாலும் அப்துல் கலாம் இல்லையா என்று நினைக்காதீர்கள். அப்துல் கலாமாகவே இருந்தாலும் பிறப்பால் அவர் முஸ்லிம் இல்லையா ? என்று கேட்காமல் கேட்கிறது பாஜக அரசு. அதற்குக் கோபப்பட வேண்டிய மதி, அந்த நிலையில் கூட பாஜகவின் மதவெறியைப் பற்றிப் பேசாமல் ஜாதிக் கட்சித் தலைவர் என்று ரிவர்ஸ்கியர் போடுகிறார். இதே காங்கிரஸ் செய்திருந்தால் பேயாட்டம் போட்டிருப்பார். ஸ்டாலின் குறித்த மீம்ஸ் வரை சமூக நிகழ்வுகளின் அப்டேட் ஆக இருக்கும் அடடே மதி ராகுல், கருணாநிதி, கெஜ்ரிவால் போன்ற பாஜக அல்லாத தலைவர்கள், கட்சிகளை பெயர் சொல்லியே நக்கலடிப்பார். ஆனால் பாஜகவை மட்டும் பெயரையே சொல்ல மாட்டார். மோடியின் பெயரை சொல்லி கேலிச் சித்திரம் வரைந்தாலும் மக்கள் மோடியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைப் போலவே வரைவார். நாடே மோடியை மீம்ஸ்களில் வெளிநாட்டுப் பிரதமர் என்று கிண்டலடிப்பதையெல்லாம் அவர் அறியாமலா இருப்பார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மறைக்கவே, அப்துல் கலாமை புகழ்ந்தார்கள், மோடியை அவருடன் ஒட்ட வைத்து இணையதளங்களில் வருங்காலா பிரதமரும், வருங்கால ஜனாதிபதியும் என்று ஆரம்பித்தார்கள். அப்துல் கலாமைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயரை வைத்தார்கள். அப்துல் கலாம் வேலை முடிந்ததும் கலாம் வசித்த வீட்டை, ஒரு சுற்றுலாத் துறை அமைச்சருக்கு ஒதுக்கிவிட்டு, அப்துல் கலாம் பயன்படுத்திய பொருட்களை விமானத்தின் மூலமாக அப்துல் கலாமின் சகோதரரிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். அந்த சுற்றுலாத்துறை அமைச்சர் யார் தெரியுமா ? மகேஸ் சர்மா, அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டவர், அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும் "தேசபக்தர்" என்று வெறியைக் கக்கியவர். முஸ்லிமாக இருந்தாலும் தேசபக்தனாக இருப்பவர் என்பது எவ்வளவு பெருமை இல்லையா ?  எத்தனை தேசவிரோத செயல்களைச் செய்தாலும் இந்துவாக இருந்தாலே போதும், தேசபக்தன்தான். இப்பேர்ப்பட்ட ஆளுக்குத்தான் அப்துல் கலாமின் இல்லம். இவ்வளவுதான் இவர்களின் இலட்சணம் எல்லாம். பாஜகவின் தீவிர ஆதரவு நாளிதழான தினமணி இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறது. 

மகேஸ் ஷர்மா
என்ன செய்வது தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் சரி அடடே மதியும் சரி. காந்தியவாதிகளாக இருக்கிறார்கள், ஆனால் கோட்ஸே கட்சியைத்தான் ஆதரிக்கிறார்கள். பிறகெங்கே இருக்கும் நடுநிலையும் நேர்கொண்ட பார்வையும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்