சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் தகர்க்கப்படும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் !

1915 - இல் முதன்முதலில் சிங்களப்பேரினவாதிகளால் இழப்பைச் சந்தித்தவர்கள் இசுலாமியர். தற்போது இனவாத அரசியலின் இலட்சக் கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பின்பும் சிங்களப் பேரினவாதமானது பல வடிவங்களிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அவ்வகையில் இசுலாமியப் பள்ளிவாசல்கள் புத்தமதப் பிக்குகளால் தகர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்களப் பௌத்தப்பேரினவாதம் அரசின் மறைமுக ஆதரவு மற்றும் தூண்டுதலினால் மீண்டும் தனது கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது. இப்படி பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை இசுலாமியரின் மீது தனது தாக்குதலைத் தொடுக்கும் அதே வேளையில் தமிழ் முசுலிம்களை இன்னொரு சிறுபான்மையினரான தமிழரிடமிருந்து பிரிக்கும் அரசியலையும் செய்து வருகிறது. சிங்களப் பேரினவாத அரசியலின் ஒரு பகுதியாக முஸ்லிம் தமிழர் பிரிவினையைத் தூண்டும் வேலையைச் செய்கிறது.

போர் முடிந்து 3 ஆண்டுகளான பின்பும் போர்க்காலத்திருந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் வெள்ளை வேன்களில் அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்படுகின்றனர். அரசின் கைப்பாவைகளாக இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது இருப்பினும் எதிர்பார்த்தபடியே எந்தத் தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. போதாக்குறைக்கு உலக நாடுகளிலிருந்து அழுத்தம் போர்க்குற்ற விசாரணை என பல வகையிலும் அச்சுறுத்தல். முன்பு விடுதலைப் புலிகள் இருந்த பொதோ அவர்களைக் காரணம் காட்டியே எல்ல செயலையும் நியாயப்படுத்தி வந்த சிங்கள அரசு தற்போது தனது பித்தலாட்டங்களுக்கு காரணம் காட்ட ஒரு எதிரி இல்லாமல் தவிக்கிறது. புலிகளின் முடிவின் பின்னரே மகிந்தவின் குடும்ப அரசு தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர், முஸ்லிம் என அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தனது ஒடுக்குமுறையைத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாகத்தான் போர்க்காலத்தில் இருந்தது போலவே பத்திரிக்கையாளர், அரச எதிர்ப்பாளர்கள் காணாமல் போதல் என்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மகிந்தவுக்கு எதிரான மனப்பான்மை வலுத்து வருகிறது.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க ஒரே வழி மக்களை ஒன்று படாமல் பிரித்து வைத்திருப்பதுதான். இதற்காக சிங்களப் பேரின பௌத்தமதவாத வழியில் செயல்பட்டு வருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களான மாவீரர் கல்லறைகளை அழித்தது போன்ற செயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் வாழிடங்கள் வழிபாட்டிடங்கள் மீதான கலாச்சார அழிப்பு மற்றும் பேரினவாத விரிவாக்கம் போன்றவற்றைச் செய்கிறது. இதன் விளைவாகத்தான் புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி வருகிறது. புத்தர் சிலைகளை நிறுவும் இராணுவம் !! என்ன ஒரு முரண் நகை. இன ஒற்றுமை நிலவும் இடங்களில் அதாவது சிறுபானமை தமிழர்கள் முஸ்லிம்களின் இடங்களில் இதை செய்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் முஸ்லிம்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு புத்த மதப் பிக்குகளே தலைமை தாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முஸ்லிம்களின் சார்பாக அவர்களை பிரதிநிதிப்படுத்த மகிந்தவின் ஆதரவாளராக சில முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளனர். புலிகள் மீதான போர்களின் போது கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆயிரக் கணக்கான தேவாலயங்களும், கோவில்களும் இடிக்கப்பட்டன. தற்போது அரசே பல்வேறு வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை, தர்காக்களை இடிக்கிறது. 


அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளாக தம்புல்லவில் பள்ளி வாசல் புத்த பிக்குகளால் தாக்கப்பட்டது, பின்பு அரசு அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுரத்தில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட செயலில் அரசுதான் காரணம் என்ற வதந்தியும் இருக்கிறது, காத்தான்குடியிலும் ஒரு மசூதி கொளுத்தப்பட்டுள்ளது.தம்புள்ள பள்ளிவாசல் தகர்க்கப்படும்போது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்கவில்லை, 2000 பேர்கள் வரையிலான கும்பல் புத்த பிக்குகளின் தலைமையில் வந்து இதை அரங்கேற்றியுள்ளது. பட்டப்பகலில் தொழுகை நடக்கும்போதே இது நடந்துள்ளது,
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்