தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்
அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானை ஆக்ரமித்தபோது இவர்கள் பாகிஸதானின் வடமேற்குப் பகுதிகளில் தஞசம் புகுந்தவர்களுடன் சேர்ந்து உருவானதே இவர்களின் இயக்கம். முன்பு தாலிபன் ஆதரவாளர்களாக மட்டும் இருந்த இக்குழுக்கள் தம்மை தாலிபன்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவரகளுக்கு மாற்றாக நிறுவிக கொண்ட இவர்கள் அங்கு தமது ஆட்சியையும் நிறுவிக் கொண்டனர். அவ்வப்போது இராணுவத் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். 2005 - ல் பாகிஸ்தான் இவர்களைத் தடை செய்தது. பின்பு பாகிஸ்தான் இராணுவம் இவர்கள் மீது போர் தொடுத்தது முதல் அதிபயங்கரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
தாலிபான்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி
ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியதிலிருந்தே இவர்களின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். தியோபந்தி ( Deobandi ) சுன்னி இசுலாமியப் பிரிவு இவர்களின் அடிப்படைவாதமாக உள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில் தியோபந்தி பிரிவு தொடங்கப்பட்ட இடம் தற்போதைய இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள சாஹரன்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்திய துணைக்கண்டடத்தில் சுன்னி மரபினைப் பரப்பும் மதரசா தொடங்கப்பட்ட இந்நகரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. ஹிந்தியிலும் உருதுவிலும் இது "தேவ்பந்த்" (Devband) எனப்படுகிறது. அடுத்த ஆச்சரியம் இவர்களின் தோழமை அமைப்புகள காசுமிரில் இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும் இவர்கள் ஈடுபடவில்லை. காசுமிர் ஜிஹாத் தங்களின் இலட்சியத்திற்கு உதவாது என்கிறார் தாரிக். இவர்களின் எதிரிகளின் பட்டியலில் உள்ளவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இசுரேல் மற்றும் பாகிஸ்தான் அரசும் இவர்களின் முதன்மையான எதிரி. மேலும் ஷியா முஸ்லிம்களையும் தமது எதிரிகளாக் அறீவித்துள்ளது. இந்தியாவின் "ரா" உதவி பெறும் அமைப்பாக தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பை பாகிஸ்தான் அரசு பரப்புரை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
பாகிஸ்தான் இன்னும் இசுலாமியமயமாக வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். ஷாரியா தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்பதில்லை. ஜிஹாதிகளின் பொதுவான நோக்கங்களான் மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து இசுலாமிய நாடுகளின் விடுதலை, முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஷாரியத்- ஐ நடைமுறப்படுத்துவது என்பதே இவர்களின் கொள்கை. பாக். மட்டுமின்றி உலகளாவிய புனிதப் போரும் அடங்கும். இவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைமுறைப்படுத்தியுமுள்ளனர். வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெண்கள் பள்ளிகளைத் தகர்ப்பது, பெண்களுக்குக் கிடைக்கும் அரசு நிதிகளைக் கிடைக்காமல் செய்வது, முகச்சவரம் செய்வதைத் தடை செய்வது இவர்களின் சட்டங்கள். மேலும் ஷியா முஸ்லிம்களை கண்ணியமற்ற முறையில் நடத்துவதும் இவர்களின் நடைமுறை. மேலும் சிறுபான்மையினரான் கிறித்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியரை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவது இவர்களது கொள்கையிலுள்ளது. இவர்க்ளின் அட்டூழியத்தால் இதுவரையில் 3 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர். துப்பாக்கியும் புனிதப்போருமே உலகில் அமைதியைக் கொண்டு வரும் சமாதானம் பேச்சுவார்த்தைகள் உதவாது என்பது இவர்களின் சாரம்.
பாகிஸ்தான் அரசுக்கு உதவி
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இழப்பீடாக TTP இயக்கம் பாகிஸ்தான் அரசுக்கு 20 மில்லியன் டால்ர்கள் அளிக்க முன்வந்தது. மாறாக் பாகிஸ்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை மறுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. பின்பு பாகிஸ்தான் அரசு வெளிநாட்டின் உதவிகளை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்றது.
ஆஃப்கானிஸ்தானின் எல்லையோரங்களிலுள்ள பாகிஸ்தானின் கிராமங்களில் அமெரிக்க, நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துகின்றன. மேலும் தாலிபன்களின் தலைமறைவாக் இருப்பதற்கு பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளே புகலிடமாக விளங்குகின்றன. தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானில் நடத்தும் போருக்கும் இங்கிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருக்கும் தாலிபன்களை ஒடுக்குவதற்கு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தாலிபன் அமைப்புகளும் ஆஃப்காகானிலும், பாகிஸ்தானிலும் போரை நடத்தி வருகின்றன. தாலிபன்களுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியாவும் உதவிகள் செய்து (பாகிஸ்தானுக்குப் போட்டியாக) தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. இதனால் தாலிபன்கள் அங்கு பணிபுரியும் இந்தியர்களை கடத்துவது, கொல்வது போன்ற நிகழ்வுகளும் நடந்தன. இந்திய தூதரக்த்தின் மீதான தாக்குதலையும் நடத்தினர்.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகள் பொதுமக்களின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலினால் பலரைத் தாலிபான்களின் சேரவைத்துள்ளது. தாலிபன்களுக்கெதிரான் போரின் பெயரால் திருமண வீடுகள் தொடங்கி இழவு வீடுகள் வரை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெறுவதால் வெறுப்புற்ற ஆஃப்கானியர்கள் தாலிபன்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் நடக்கும் அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள், பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு நிலை இவற்றால் வெறுப்புற்ற பாகிஸ்தானின் சில் இயக்க்ங்கள் தாலின்களை ஆதரிக்கின்றன. இவ்வாறாக பெருமளவிலான் ஆதரவைப் பெற்றுள்ள் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானின் ஆற்றல் வாய்ந்த இயக்கமாக பல்லாயிரம் வீரர்களைக் கொண்டுள்ளதாக வளர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 20000 - க்கும் மேலான வீரர்களைக் கொண்டுள்ள இயக்கமாகும்.
பாகிஸ்தானின் அமெரிக்க முதலீடுகளைக் குறிவைத்து தாக்குவதில் கவனம் செலுத்தும் TTP யின் ஆற்றலுக்கு ஓர் உதாரணம், கடந்த 2009 - ல் டிசம்பர் 28 - ல் கராச்சி நகரில் ஒரு பேரங்காடிகள், வணிக வளாகங்கள் கொண்ட ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கடைகள் அழிக்கப்பட்டு ஏறக்குறைய 10000 பேர் வெலையிழந்தனர்.
தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் - தலைவர் ஹகிமுல்லா மெசுத்
இவர்கள் தம்மை தாலிபான்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் ஆஃப்கானின் தாலிபன்களிலிருந்து வேறுபட்டுத் தனித்தே செயல் படுகின்றனர். தாலிபன்களின் தலைவரான முல்லா ஓமரின் தலைமையிலல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதன் தலைவரான் பையத்துல்லா மெசுத் கொல்லப்பட்டார். பின்பு ஹகிமுல்லா மெசுத் என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டார்.தாலிபன்கள் இயக்கங்கள் தலைவர்கள் கொல்லப்படுவதால் எவ்விதப் பின்னடைவையும் அடைவதில்லை. பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டும், பிடிபட்டும் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. தலைவர்கள் கொல்லப்படுவதாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் தாலிபான்களை அடக்க முடியாது என்பதே தற்போது நிலவரமாக உள்ளது.
Download As PDF
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்