பீப்லி லைவ் திரைப்படம், அமிர்கான், மற்றும் விதர்பா தற்கொலைகளும் விதவைகளும்





அமிர்கானின் சொந்த தயாரிப்பான "பீப்லி லைவ்" இதழாளராக இருந்து இயக்குநரான அனுஷா ரிஸ்வியால் எடுக்கப்பட்டு வெளியான சில நாட்களுக்குள்ளாகவே மிகப் பெரும் வெற்றியடைந்து விட்டது. வெறும் 10 கோடி செலவில் (தயாரிப்பு மற்றும் வெளியீடு உட்பட) வெளியான இத்திரைப்படம் மிகப்பெரும் இலாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இந்த திரைப்படத்தில் "நாதா" எனும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த நடிகர் பாலிவுட்டில் பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். மேலும் இத்திரப்படம் அமிதாப் பச்சனுக்கு அவருடைய பிறந்த ஊரை நினைவூட்டியதாம்.


இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இது வழக்கமான பாலிவுட்டின் பாணியிலிருந்து, மாறி கிராமப்புற இந்தியாவின் விவ்சாயிகளை அவர்களின் துயரங்களைப் பற்றிச் சொல்லும் கதை. இதில் எந்த பிரபல பெரிய நடிகர்கள் இல்லாமல் சாமானிய மனிதர்களையே நடிக்க வைத்துள்ளனர். இதுபோன்ற திரைப்படங்க்ள் மக்களிடம் வரவேற்பைப் பெறுவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். என்றாலும் இது இந்த விதமான விளைவுகளயும் ஏற்படுத்துவதில்லை. படத்தைப் பார்த்து விவசாயிகளின் நிலையறிந்து யாரும் கவலைப்படப் போவதில்லை. படம் நன்றாக இருக்கிறது, அமிர்கான் சமூக நலம், எத்தனை கோடிகள் இலாபம் ஈட்டியது என்று வழக்கமான கருத்துக்களே மீளும்.


இந்தத் திரப்படத்தைத் தடை செய்யக் கோருகின்றனர் விதரபா விதவைகளின் அமைப்பினர். இவர்களின் கருத்துப்படி பீப்லி லைவ் திரப்படத்தில் விவசாயிகள் தவறாக் உண்மை நிலைக்கு மாறாக சித்தரிக்கப் பட்டுள்ளனர். படத்தில் வரும் நாதா என்ற விவசாயி தன்னுடைய சிறு நிலமும் பறிபோகின்ற நிலைக்கு ஆளாகின்றார். அரசாங்கத்திற்கு அடைக்க வேண்டிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் நாதா அரசு அறிவிததுள்ள திட்டத்தின்படி தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு பண உதவி கிடைக்கும் என்பதற்காக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இதை அவரது சகோதரர் ஊக்குவிக்கிறார். இப்படியாக கதை செல்கிறது. 

விதர்பா விவசாயிகளின் உண்மை நிலையோ இதிலிருந்து மாறுபட்டது. அவர்கள் வறுமைக்கும் தற்கொலைகளுக்கும் அரசின் தவறான கொள்கைகளும் ஏமாற்றும் மோசடிகள் மேலும் உலகமயம் என்னும் எமனும் காரணம். இந்தியாவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் மராட்டியம். உலகமயம் காரணமாக தவறான் விவசாயம், விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது விதை, உர நிறுவனங்களீன் இலாபமே முதன்மையாகக் கடைப்பிடிக்கும் அரசு, பிடி பருத்தி, இதன் மூலமாக உள்ளதையும் இழந்தவ்ர்கள் தான் விவசாயிகள். ஆனால் இத்திரைப்படம் அரசின் உதவித் தொகைக்காக தற்கொலை செய்துகொள்வதாகக காட்டுவதினால் விதர்பா விதவைகளின் இயக்கம் எதிர்க்கும் போராட்டதில் ஈடுபட்டுள்ளது.

மேலும் தற்கொலைகளை தற்கொலையாகக் கூட அங்கீகரிக்காத அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும். தவறான கொள்கை வகுப்பாளர்களையும் இத்திரப்படம் ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் தவறான திட்டங்களினாலேயே விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகின்றனரேயன்றி அரசின் உதவிக்கு ஆசைப்பட்டு யாரும் சாவதில்லை என்றும் கூறுகின்றனர். அமீர்கானின் சமூக ஆர்வத்தினை மதிக்கும் அதே வேளையில் திரைப்படத்தின் ஒரு பகுதி தற்கொலைக்குக் காரணமானவர்களின் தவறை மறைக்கிறது. கதையை முடிவு செய்யும் முன் உண்மை நிலையினை அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார் விதர்பா ஜனஅந்தோலன் சமிதி (VJAS) அமைப்பின் தலைவர்.



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்