இந்தியனே வெளியேறு - கற்களால் காறி உமிழ்ந்த காசுமிர் - போராட்டக் காட்சிகள்

கடந்த ஒரு மாத காலமாக காசுமிரில் நடந்து வரும் போராட்டங்கள் உச்ச நிலையை எட்டியுள்ளன. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய போராட்டம் ஒரு மாததிற்கும் மேலாக நடை பெற்று வந்த போராட்டம் ஊரடங்கு உத்தரவு , கண்டதும் சுடும் உத்தரவு மூலமும் தணிக்க முயல்கிறது இந்தியா.
காசுமிரில் என்ன்தான் நடக்கிறது என்று அறியாதவாறே ஊடகங்கள் இதுவரையிலும் செய்திகளை வெளியிடுகின்றன். காசுமிரைப் ப்றறிய செய்திகளெனில் தீவிரவாதிகள் ஊடுருவல் துப்பாக்கிச் சண்டை இதைத் தவிர்த்து வேறொன்றும் இருக்காது. காசுமிர் இந்தியாவின் மிக அதிகமான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள இடமாகும் அதன் பரப்பளவு மக்க்ள் தொகை ஆகியவற்றின் தேவைக்கு மிக அதிகமாக ஏறக்குறைய 5 இலட்சம் படையினர் அங்குள்ளனர். காசுமிர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சைனாவின் அக்கிரமிப்பில் உள்ளது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிலுள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு மாததிற்கும் மேலாக போராட்டங்கள் தொடரகின்றன.


பெரும்பான்மையான காசுமிரிகள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்தும் விடுதலையைக் கோருகிறார்கள். இந்தியாவோ மீண்டும் மீண்டும் இது பாகிஸ்தானின் சதி என்றே கூறி வருகிறது. ஆனால் இது காசுமிரின் விடுதலைக்கான போராட்டமாகவே நடைபெற்று வருகிறது. இது வரை 50 (காசுமிர் மக்கள்) பேர் வரையிலான உயிரிழப்புகளும், பல காவல்துறையினருக்குப் படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன். ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப் படடதிலிருந்து வெடித்த போராட்டம் தொடர்நது நடைபெறுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசால் ஏமாற்றப்பட்டும்,  20 வருடங்களுக்கும் மேலாக் இராணுவத்தின் அடக்கு முறையிலும் அவதியுறும் மக்கள் அவ்வப்போது மிகப் பெரும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். வழக்கம் போலவே இந்திய அரசு பாகிஸ்தானின் சதி, ISI - ன் தூண்டுதல், பிரிவினைவாதம் போன்ற சொற்களையே பயன்படுத்தி ஒடுக்கி வருகின்றது. ஆனால் இது போன்ற வன்முறைகள் காவலதுறை, இராணுவத்தினரின் அடக்கு முறையின் எதிர்விளைவாகவே இது தோன்றியுள்ளது.

அடிப்படை தேவைகளுக்கான சாலைகளைப் பயன்படுத்தக் கூட இராணுவ சோதனைகள், யாரையும் எதன் பொருட்டும் எந்நேரமும் வீடு புகுந்து கைது செய்யும் அதிகாரம், காவல்துறை கொட்டடிக் கொலைகள், போலி மோதல் கொலைகள்,அப்பாவிகளைக் கொலை செய்துவிட்டு தீவிரவாதிகளாகக் கணக்குக் காட்டுவது, பொய் வழக்கு மிரட்டல்கள், சித்ரவதைகள், கணக்கற்ற மாந்த உரிமை மீறல்கள், காணாமல் போகடிக்கப்படும் இளைஞர்கள், விதவைகளாகும் பெண்கள், அநாதைகளாகும் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற இராணுவ அடக்குமுறைகளை சந்திக்கும் உலகின் அனைத்து நாட்டு மக்களைப் போலவே காசுமிரும் விதிவிலக்கின்றியே எதிர்கொள்கிறது. இந்த அடக்கு முறை எல்லை மீறுகின்ற நிலையில் போராட்டம் வெடிக்கிறது. இதை அரசு இயந்திரம் அடக்க முற்படுகையில் வன்முறை வெடிக்கிறது. இந்த போராட்டங்களில் உயிரிழப்பு அதிகமாக, அதிகமாக போராட்டம் தீவிரமடைகிறது.எனவேதான் குழந்தைகள், பெண்கள், முதியவர் அனைத்துத் தரப்பினரும் தெருவில் இறங்குகின்றனர்.

இதில் பாகிஸ்தானின் தூண்டுதல், இசுலாமியர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்கள் என்பதெல்லாம் உயிரைக் கொடுத்துப் போராடும் காசுமிரிகளை அவதூறு செய்வதற்கே. மற்ற பெரும்பான்மை இந்திய பாகிஸ்தானிய இசுலாமியரால் ஏற்றுக் கொள்ளப்படாத சூஃபி மரபினைப் பின்பற்றும் காசுமிர்களை அவர்களின் போராட்டததில் இசுலாமிய மதவாததை விதைத்தது பாகிஸ்தான், இந்து மதவாதத்தை விதைத்தது இந்தியா.காசுமிர் விடுதலையை பாகிஸ்தானின் இசுலாமிய பிரிவினையாக இந்தியா குற்றம் சுமத்தும் வேளை, பாகிஸ்தான் இந்துப் பயங்கரவாத இந்தியாவிற்கெதிரான இசுலாமியரின் விடுதலைப் போராட்டமாக் சித்தரிக்கிறது. இசுலாமியர்களான் காசுமிரிகள் மட்டும் விடுதலையைக் கோரவில்லை, மற்ற வடகிழக்கு மாநிலங்களான் மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம் மாநிலங்களிலும் இது போன்ற பிரிவினைவாதக் கோரிக்கைகள் நீடிக்கின்றன.

இதெல்லாம் போக போராட்டம் நீறு பூத்த நெருப்பாக இருந்தே பின் வெடித்துள்ளது. காசுமிரின் விடுதலைப் போராட்டம் அடுதத தலைமுறையினருக்கும் மாறியுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெற வில்லை. சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் இணைந்தே பாதுகாப்புப் படையினரின் மீது கல் வீசுகின்றனர்.  இந்த இளைஞர்கள் வேலையற்ற பணம வாங்கி கொண்டே கல் வீசுகின்றனர் என்பதற்கு மாறாக கைபேசிகளையும் முதலாக அதி நவீன மின்னணு சாதனங்களையும் , கொண்டுள்ள , பிராண்டெட் ஜீன்ஸையும், காலணிகளியும் அணிந்த நாகரிக இளைஞர்கள்.


காசுமிரின் கல்லெறியும் போராட்டக் காட்சிகள் சில
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்