ஒரு மனிதரின் தாக்கம் அவர் வாழ்ந்த நாள்களில் இருந்ததைக் காட்டிலும் அவர் இறந்த நாளில் அதிகமாக இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பதைப் பொறுத்தும் அந்தத் தாக்கம் மாறுபடும். அதன் மூலம் அவரை வெறுத்தவர்கள் கூட அவரது நியாயத்தைப் புரிந்து கொள்ள வாய்க்கும். இந்நிலையில் இந்திய துணைக்கண்டத்தில் ஏன் உலக அளவில் அறிமுகம் ஆகியிருந்த அக்டோபர் 2 - இல் பிறந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற
தேசபக்தர், விடுதலைப் போராளி, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்துத்துவர், ஆன்மிகவாதி இன்ன பிற ஆளுமை கொண்ட ஒருவர் தற்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட பெரும்பான்மையான மதத்தைச் சாராத ஒருவரால், அக்குறிப்பிட்ட மத இயக்கத்தைச் சாராத ஒருவரால் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?
அதாவது
ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ
அல்லது
கம்யூனிஸ்ட் கொள்கையாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ
அல்லது
கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ
அல்லது
அண்ணல் பாபாசாகேப் ஆதரவாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ
அல்லது
திராவிடர் கழகத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ
கொன்ற பிறகு அதற்கு தான் நம்பிய சித்தாந்த நூலின் வரிகளைக் காரணம் காட்டியிருந்தாலோ தற்போதைய நிலவரம் என்னவாக இருந்திருக்கும் ?
அந்த இயக்கம் இன்னும் தடை செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் பின்பற்றிய மதமோ கொள்கையோ தவறாமல் காந்தி கொலையின்போது முன்னிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது தங்கள் பெயரால் பிற சமூகத்தவர் மீது எத்தகைய கொடூர வன்முறையை ஏவினாலும் படுகொலைகள் செய்தாலும் இம்மியளவும் பதறாமல் இருக்கும் பெரும்பான்மை சமூகம் பொங்கிக் கொண்டிருக்கும்.
அதனால்தான் இன்னும் அவர் கொலை செய்யப்ட்டதற்கான காரணங்களை முன்னிறுத்தாமல் அவரது கொள்கைகளையும் அரசியல் செயல்பாடுகளை மட்டும் முன்னிறுத்துவதன் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய முடியுமோ அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள்
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்